Monday, November 8, 2010

இன்னுமொரு சூப்பர் பேட்டி

பேட்டி தருவதும், பேட்டி எடுப்பதும்தான் எத்தனைத் திறன் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது.? விஜயசாரதி என்ற ஒரு மேதாவி காம்பியரர் சன் டிவியில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்தான் 'நீங்கள் கேட்ட பாடல்' என்ற ஒரு நிகழ்ச்சியை சன்டிவியில் நடத்தி வந்தார். (இப்போதும் வருகிறதா அந்த நிகழ்ச்சி?) அந்த நிகழ்ச்சியை தமிழ் தெரிந்தவன் எவனும் காதை கழற்றி வைத்துவிட்டுதான் பார்க்கவேண்டும். ஏதாவது ஒரு இடத்தை மையமாக வைத்து அந்த நிகழ்ச்சி தொகுக்கப்படும். உதாரணமாக திருநெல்வேலி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த மேதாவியின் தொகுப்பு இப்படி இருக்கும்..

"இதோ பின்னாடி நீங்க பார்க்குறீங்களே இதுதான் தாமிரபரணி ஆறுன்னு சொல்றாங்க.. இதுல தண்ணியெல்லாம் ஓடுது. இங்க பாத்தீங்கன்னா இதுல மக்கள்லாம் குளிக்குறாங்க. அப்புறம் இந்த தண்ணிய குடிக்கலாமாம். இங்க இருக்குற மக்கள் அப்படித்தான் பண்றாங்க.. அப்புறம் இந்த தண்ணிய இந்த டிஸ்ட்ரிக்ட்ல விவசாயத்துக்கெல்லாம் பயன்படுத்துறாங்களாம். கேட்குறதுக்கே ஆச்சரியமா இருக்குல்ல.. ஆத்துக்கு ரெண்டு பக்கத்துலயும் மணல் கிடக்குது. ஆத்துக்குள்ள மீன்லாம் கிடக்கும்னு சொல்றாங்க.. அந்த மீனை பிடிச்சு சமைச்சு சாப்பிடவும் செய்யுறாங்க. ரொம்ப வித்தியாசமா இருக்குல்ல.. நீங்க இங்க வந்தீங்கன்னா கண்டிப்பா இதப் பாக்க மிஸ் பண்ணாதிங்க. வாங்க இப்ப நிகழ்ச்சிக்குப் போகலாம்.."

இந்த மேதாவிதான் (கண்ணியம் கருதி இந்தச் சொல்லோடு நிறுத்திக்கொள்கிறேன்) தீபாவளி அன்று ரஜினிகாந்தை சன் டிவிக்காக பேட்டி எடுத்தார். என்ன கொடுமை.? பேட்டி எடுக்க வாய் மட்டும் இருந்தாப் போதும் என்பது சன் டிவியின் முடிவு போலத் தெரிகிறது. சன் டிவியில் நாம் ஒன்றும் இலக்கியத்(?) தரமான, ரசனையான பேட்டியை எதிர்பார்க்கவில்லை எனினும் ஒரு அடிப்படை சுவாரசியத்தோடு, ஜனரஞ்சகமாகவாவது இருக்கவேண்டாமா?

rajinikanth

விஜயசாரதியின் கேள்விகள் இப்படி இருந்தன..

"சூப்பர் ஸ்டார்னா சூப்பர்ஸ்டார்தான். வேற யாரும் இருக்கமுடியாதுல்ல சார்? இந்த சூப்பர்ஸ்டாரா இருக்குறது எப்படி சார் இருக்குது.?"

இரண்டு கேள்விகள் கழித்து இன்னொன்று..

"சூப்பர் பவர்னா சூப்பர் பவர்தான். இங்க வேற யாரும் இல்லல்ல சார். இந்த சூப்பர் பவர் எப்படி சார் இருக்குது?"

அதாவது இந்த மாதிரி சூப்பர் பவர் உள்ள காரெக்டர் பண்ணிய அனுபவம் எப்படியிருக்குதுன்னு கேட்கிறாராம். அடுத்து ஒரு கேள்வி.

"ரோபோட் மாதிரி நடிச்சிருக்கீங்கள்ல சார்? எப்பிடி சார் நடிச்சீங்க? அந்த அனுபவம் எப்படி சார் இருக்குது?"

அடுத்து,

"நீங்க ஸ்பீடா இருக்குறீங்கதானே சார். படத்துல ஸ்பீடா வேகமா அப்படி இப்படி பண்றீங்க சார். அதெப்படி சார் ஸ்பீடா பண்றீங்க.?"

"நீங்க டான்ஸ்லாம் ஆடியிருக்கீங்கள்ல சார்? எப்பிடி சார் ஆடினீங்க?"

"ஃபைட் பண்ணியிருக்கீங்கள்ல சார்? எப்படி சார் ஃபைட் பண்ணினீங்க?"

ஈஈன்னு கேனத்தனமா சிரிச்சுகிட்டு ஒரே கேள்வியை பல ஆங்கிள்ல சரமாரியாக் கேட்டு ரஜினியை நெளியவைத்தார். ரஜினியும்தான் பாவம் என்ன பண்ணுவார். திக்கித் திணறி எப்படியெல்லாமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கேள்வியாவது உருப்படியா இருக்கணுமே.. ம்ஹூம். எப்பிடி சார் நடிச்சீங்க? எப்படி டான்ஸ் ஆடினீங்கன்னெல்லாம் ஒரு நடிகரை பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? இப்படித்தான் என எழுந்து ஆடித்தான் காண்பிக்கவேண்டும் போலிருக்கிறது. கஷ்டம்தான்.

ஒரு சிறுகதை எழுத்தாளரைப் பார்த்து 'எப்படி சார் கதை எழுதுனீங்க?'ன்னு கேட்டா அவர் என்ன பண்ணுவார்.? அதோடு விடாமல் ரெண்டு கேள்விக்கு அப்புறம் மீண்டும், 'அதெப்படி சார் நாலு பக்கத்துக்கு எழுதுனீங்க?'ன்னு இன்னொரு வாட்டி கேட்டா எப்படியிருக்கும்? நம்ப எழுத்தாளர்களெல்லாம் அப்படி ஒன்றும் நடிகர்கள் மாதிரி பொறுமைசாலிகள் இல்லைன்னு நினைக்கிறேன். 'சப்'புன்னு செவிட்டுல ஒண்ணு விட்டுடுவாங்க. இவருக்குப் பின்னாளில் ஏதும் 'சாரு' மாதிரி எழுத்தாளரை பேட்டி எடுக்கும் சூழ்நிலை வராமல் இருக்கக் கடவதாக.

அது மட்டுமில்லாமல் இன்னும் சில ப்ரில்லியண்ட் கேள்விகள் எல்லாம் கேட்டார். அதில் சில சாம்பிள்ஸ்..

"இப்ப ஏன் சார் உஸ் உஸ்லாம் (கம்மியான குரலில், உதட்டில் கையை வைத்து சைகை காண்பித்து) படத்தில் பண்றதில்லை.?" (அதாவது ஏன் சிகரெட் பிடிக்கிறதில்லை எனக் கேட்கிறாராம்.)

"ஒரு படம் முடிஞ்சப் பிறகு இமயமலைக்குப் போறீங்கள்ல சார்? எப்பிடி சார் இருக்குது?"

"அமிதாப்ஜி கபர்தார்னு சொன்னார்னு பங்ஷன்ல சொன்னீங்கள்ல சார்? அது ஏன் சார்? அது எப்படி சார் இருந்தது.?"

“நீங்க குட்டிக் கதையெல்லாம் சொல்லுவீங்கதானே சார்? ஒரு கதை சொல்லுங்களேன்..”

"நீங்க சூப்பர்ஸ்டார். சன் பிக்சர்ஸ் ஒரு சூப்பர் நிறுவனம். படம் ஒரு சூப்பர் படம். இது எப்பிடி சார் இருக்குது?"

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்...

.

34 comments:

இனியா said...

nalla velai... naan paakkalai... kodumaithaan.

இனியா said...

அட... நரசிம் பேட்டி மாதிரி இன்னுமொரு
கலகம் ஆரம்பம் என்று நினைத்தேன் ... நல்ல வேளை...

அமுதா கிருஷ்ணா said...

பார்க்காமல் தப்பித்தேன்..

ILA(@)இளா said...

அந்தக் கொடுமையான பேட்டிய போட்டு ஏங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க. கேள்வி கேட்கத் தெரியாம .. ஆவ்வ்வ்.. ஒரு வேளை டெம்ப்ளேட் கேள்விகளையே கேட்டுகிட்ட இருந்த பார்த்தசாரதிக்கு, திடீர்னு இந்தப் பேட்டி வந்ததும், தடுமாறாம என்ன செய்வார்.

கார்க்கி said...

ஹிஹிஹிஹி

நான் பார்க்கல.

ஆன பேட்டி ஒளிபரப்பும் முன்பே சன் டிவிக்கு வேற ஆளா கிடைக்கலன்னு ட்வ் ட்விட்டுட்டு எஸ் ஆயிட்டேன்

அறிவிலி said...

ஆதி,

எபபடிங்க நீங்க இப்படியெல்லாம் பதிவெழுதறீங்க?

எப்படிங்க நீங்க இப்படி டிவில வரதையெல்லாம் பதிவுக்கு மேட்டரா மாத்தறீங்க?

Vijay Armstrong said...

//'சாரு' மாதிரி எழுத்தாளரை பேட்டி எடுக்கும் சூழ்நிலை வராமல் இருக்கக் கடவதாக. //

ஏங்க?..அப்படி ஒரு சூழ்நிலை வரட்டுங்க..எப்படிதான் இவங்களைத் தண்டிப்பது.

தமிழ் பிரியன் said...

சேம் ஃபீலிங்!
நானும், ஆயில்யனும் பார்த்துட்டு இதை மாதிரி தான் பேசிக்கிட்டோம்.

philosophy prabhakaran said...

பாவம் அவரை திட்டாதீங்க... ரஜினி மாதிரி ஒருத்தரை பேட்டி எடுக்கும்போது அவரிடம் டெம்ப்ளேட் கேள்விகளை எழுதிக்கொடுத்து அதை மட்டுமே கேட்க சொல்லியிருப்பார்கள்... அதையே அவரும் கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்...

வானம்பாடிகள் said...

சிக்கிட்டானா அடிமை:)))))

சிவா said...

சொல்ல முடியாது!!! ரஜினி தனியா கூப்பிட்டு ராடு விட்டாரோ என்னவோ!!!

அனுஜன்யா said...

விஜய சாரதிக்குத் திறமை கொஞ்சம் கூட இல்லாமல் இருக்கலாம். அதற்காக அஃறிணையில் விளிப்பதா? உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை ஆதி :(

அனுஜன்யா

அலைகள் பாலா said...

செம காமெடி

சுசி said...

அப்பாடா..

சுசி said...

இன்னுமொரு அப்ப்ப்ப்ப்பாடா..

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸாரி அனுஜி,

திருத்திவிட்டேன். எவ்வளவுதான் அடிப்படை கண்ணியத்தோடு எழுதவேண்டும் என நினைத்தாலும் எப்போதாவது இப்படி நேர்ந்துவிடுகிறது. மன்னியுங்கள்.

Gopi Ramamoorthy said...
This comment has been removed by the author.
வழிப்போக்கன் - யோகேஷ் said...

neenga mattum illai......... petiya patha ellarudaiya commentum athuthan...

Balaji saravana said...

அந்த பேட்டி பார்த்த ஒரு மணிநேரம் சுத்த வேஸ்ட் :(

விக்கி உலகம் said...

ஏம்பா அவனே பாவம் ஏதோ கேக்கணுமேனு கேக்குறான்.

பின்ன நம்மள மாதிரி என்ன சார் படம் முடிஞ்சிடுச்சி. ஹிட்டும் ஆயிடுச்சி, சரி எப்போ ரசிகர்கள் மீட்டிங்கு மற்றும் அடுத்த அரசியல் ஸ்டப் என்னனு கேக்க முடியுமா ?
அவனுங்களுக்கு என்ன முக்கியமோ அதத்தான் கேக்க முடியும்>

Dalton said...

Why blood?....Same blood!

மோகன் குமார் said...

Good that I did not see it.

Dalton said...

// இனியா said...
அட... நரசிம் பேட்டி மாதிரி இன்னுமொரு
கலகம் ஆரம்பம் என்று நினைத்தேன் //

ஏன் இந்த கொலை வெறி?

நர்சிம் said...

//பேட்டி தருவதும், பேட்டி எடுப்பதும்தான் எத்தனைத் திறன் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது.?//

ஹுக்க்க்கும்.. ரைட்ட்டு.

எம் அப்துல் காதர் said...

பார்த்து பொறுமை இழந்து போனது நிஜம்

நையாண்டி நைனா said...

நான் பார்கலையே....

எனக்கு தெரியும்....

என்னிக்கு அந்த மூ______ தமன்னா கிட்டே கேட்டான் பாரு ஒரு கேள்வி..." நீங்க ஒரிஜினல் பீசு_____"

அன்னிக்கோட விட்டேன் இந்த பேட்டி பாக்குறதை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

http://www.youtube.com/watch?v=4gCMfvYjufA

Check what this idiot is asking AR. Are you Ashwarya Rai or Ray.

Kodumai.

sakthi said...

உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ::))

Mohan said...

அந்தப் பேட்டியிலேயே நச்சுன்னு இருந்த ஒரு விசயம்:

விஜயசாரதி: வெளிநாட்டுக்காரர்களிடமிருந்து நாம் என்ன சார் கத்துக்கிடனும்?
ரஜினி: அவர்களைப் போல் நாமும் பங்சுவாலிட்டியைக் கடைபிடித்தால் நம் நாட்டை அடிச்சுக்கவே முடியாது.
விஜயசாரதி: ஏன் சார்! நீங்க கூட தினமும் ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே செட்டுக்கு முன்னாடியே வருவீங்கன்னு கேள்விப்பட்டேன்.
ரஜினி: அதனாலதான் நான் இந்த இடத்தில இருக்கேன்:-)

பாலா சக்திதரன் said...

பாத்த உங்களுக்கே அப்படினா, பதில் சொன்ன ரஜினி நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். இதுல தேவை
இல்லாத கேள்விகளை Edit வேறு செய்திருப்பார்கள்.

Karthick B said...

So there are many people who got irritated by seeing this interview as like me ! He he he

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இனியா.
நன்றி அருணா.

நன்றி இளா. (வேற ஆளா கிடைக்கலை என்பதே என் கேள்வி)

நன்றி கார்க்கி.
நன்றி அறிவிலி.

நன்றி விஜய் ஆர்ம்ஸ்ட்ராங். (அதுவும் சரிதான்)

நன்றி தமிழ்பிரியன்.
நன்றி வானம்பாடிகள்.
நன்றி பிரபாகரன்.
நன்றி சிவா.
நன்றி அனுஜன்யா.
நன்றி பாலா.
நன்றி சுசி.
நன்றி யோகேஷ்.
நன்றி பாலாஜி.
நன்றி விக்கி.
நன்றி டால்டன்.
நன்றி மோகன்.
நன்றி நர்சிம்.
நன்றி காதர்.
நன்றி நையாண்டிநைனா.
நன்றி அனாமிகா.
நன்றி சக்தி.
நன்றி மோகன்.
நன்றி சக்திதரன்.
நன்றி கார்த்திக்.

விக்னேஷ்வரி said...

உங்க லேபில் தான் என் கமெண்ட். நல்ல வேளை நான் பேட்டி பார்க்கலை.