Friday, November 12, 2010

வாழ்த்தோமேனியா

அலுவலகத்தில் நல்ல புரிதலுள்ள ஒரு நண்பர் இருக்கிறார். எந்த பிரச்சினைகளும் அவரை அவ்வளவாக பாதிக்காது. சும்மானாச்சுக்கும் கூட காரணமேயில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பார். அவரோடு மட்டும் நில்லாமல் அந்த மகிழ்ச்சியை எல்லோருக்கும் பரப்பிக்கொண்டேயிருப்பார். அதாவது இரவில் 'இரவு சொர்க்கம், ஐ ஃபீல் ஹாப்பி' என்று SMS அனுப்புவார். காலையில் 'காலை ரொமாண்டிக்காக இருக்கிறது' என்று தகவல் வரும். ஏதாவது உணவு ரசனையாக இருந்துவிட்டால் கூட 'மட்டன் கோலா உருண்டை ஒரு அற்புத உணவு. உலகம் வாழ இனிமையாக இருக்கிறது' என்று செய்தி தருவார். இது மாதிரி ஆட்கள் கொஞ்சம் அரிதே.

நேற்று அவர் ரொம்ப சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னாச்சு என்று கேட்டபோது அருகே வந்து காதில் முணுமுணுத்தார். "..இந்த மாதிரி ஒரு பெண். அவரை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இன்னும் சொல்லக்கூட இல்லை. ஆனா ஏன்னு தெரியலை. அந்த எண்ணம் வந்ததிலிருந்து ஐ ஃபீல் வெரி சேட்.. சம்திங் கோயிங் டு பி ய பிக் த்ரெட்"

நான் சிரித்தேன். உண்மையில் அவர் ஒரு பெரிய பிரில்லியண்ட்தான் இல்ல.?

--------------------------

வலையுலகில் இருக்கும் பிரச்சினைகளில் பெரும் பிரச்சினையாக ஒன்று உண்டு என்று என்னைக் கேட்டால் இதைச் சொல்வேன். ஒரு பதிவருக்கு நாம் எதெற்கெல்லாம் வாழ்த்துகள் சொல்லவேண்டியது நேர்கிறது? அவர் பிறந்த நாள், திருமண நாள், கல்யாணம், காதுகுத்து போன்ற அவரது வீட்டு விசேஷங்கள், பதவி உயர்வு, அப்ரைசல் போன்ற அவரது அலுவலக விசேஷங்கள், புதிய வாகன பிராப்தி, பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ தினங்கள் இப்படி ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது. பிறகு பதிவுலகம் சார்ந்து அவர் 50, 100, 200 என மைல் கல் இடுகைகளை எழுதும்போது வாழ்த்த வேண்டியதிருக்கிறது. பிறகு மூத்த பதிவர்கள் சில இடுகைகளைக் குறிப்பிட்டுப் பாராட்டும் போது, சில படைப்புகள் பத்திரிகைகளில் வரநேர்ந்தால், பதிவுலகில் நடக்கும் போட்டிகளில் அவர் படைப்புகள் பரிசுகள் வென்றால், பதிவுலக அவார்டுகள் கிடைக்கும் போது.. என காரணங்கள் நீள்கின்றன. இது கொஞ்சம் முற்றி சமயங்களில் கொசுவுக்கெல்லாம் குடை பிடிப்பது போல பின்னூட்டங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தாலே வாழ்த்த நேர்கிறது. அவர் ஒரு வாரம் எழுதாமல் இருந்துவிட்டு மீண்டும் வரும் போது வாழ்த்தி வரவேற்க வேண்டியதாகிறது. இப்படியாக இன்னும் பல காரணங்கள். ஒரு பதிவருக்கே இவ்வளவு வாழ்த்துகள் எனில் நாம் வழக்கமாக குறைந்தபட்சம் ஒரு 30 பதிவர்களை ஃபாலோ செய்து படிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். எத்தனை முறை வாழ்த்த வேண்டியது வரும்.? நினைத்தாலே மயக்கமாக இருக்கிறது. பதிவர்கள் மட்டுமல்லாது, குழுமங்கள், ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற பொதுத் தளங்களில் உடனிருக்கும் நண்பர்களையும் கணக்கில் சேர்க்கவேண்டியதாகிறது. தூக்கத்தில் கூட 'வாழ்த்துகள், வாழ்த்துகள்'னு புலம்ப வேண்டியதாயிருக்கிறது. இதற்கு நடுவில் கஷ்டப்பட்டு யோசித்து, புனைவுகளைப் புனைந்து, கட்டுரைகளை வரைந்து எப்போ நானெல்லாம் கலைமாமணி அவார்ட் வாங்குறதுனு சமீபத்தில் ஒரு நண்பர் புலம்பிக்கொண்டிருந்தார்.

அவர் புலம்புவது கிடக்கட்டும் ஒருபக்கம், உங்களுக்குச் சிரமம் வைக்காமல் என் பிறந்தநாளும் (இன்று), திருமணநாளும் இரண்டு நாள் கேப்பில் வருவதால் ரெண்டுக்கும் சேர்த்து மொத்தமாக வாழ்த்திவிடுங்கள். தொலைபேசி அழைப்புகள், SMSகள், மெயில்கள் குறிப்பாக நான் பாஸ்வேர்டைக் கூட மறந்து தொலைத்துவிட்ட 'ஃபேஸ்புக்'கில் வாழ்த்திக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி.

---------------------------

நாட்டுக்கு(?) ரொம்ப அவசியமான ஒரு கருத்துக் கணிப்பைத் தொடங்கியிருக்கிறேன். மேலே வலதுபுறம் கேள்வியைப் பார்த்துவிட்டு மறக்காமல் ஓட்டு போட்டுவிட்டு போங்கள். எனக்கென்ன.. ஓட்டுப்போட்டால் உங்களுக்குதான் நல்லது. ஹிஹி.. (ஐபி நோட் பண்ணி யார் என்ன ஓட்டு போட்டார்கள் என கண்டுபிடித்துவிடுவேன். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே ஓட்டுப்போடுங்கள்)

---------------------------

'வ' குவாட்டர் கட்டிங்

இப்போதைய சாய்ஸில் இருந்த இரண்டு படங்களில் ஒன்று. ஆங்கிலத்தில் வித்தியாசமான தளங்களில் நாம் நிறைய படங்களைக் காணலாம். தமிழில் அதுபோன்ற முயற்சிகள் ஒருவகையில் இல்லை என்றே சொல்லும் நிலை நிலவுவதால் இது போன்ற புதுமையான கதைகளையும், கதைக்களன்களையும் ரொம்பவும் வரவேற்கவேண்டும் என நான் விரும்புவேன். அப்படியானதொரு கதைதான் இது. ஆனால்.. ஆனால்.. ஆனால்.. பார்த்தவர்கள் கருத்து ஏதும் சொல்லத் தோன்றாமல் எந்தச் சுவரில் போய் மோதிக்கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே வெளியே வந்தார்கள். நானும் அந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு இதை எழுத 4 நாட்கள் ஆகிவிட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

----------------------------

சென்ற வாரத்தில் ஒரு நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமலும் இருக்கையிலேயே "மறந்துட்டீங்களா.. அப்படியே போய் ஸோப் பவுடர் வாங்கிட்டு வந்துடுங்க.." ரமா வாசலிலேயே மறித்தார். ஏற்கனவே அலுவலக டென்ஷன், மேலும் சற்று நேரம் கழித்துச் செல்கிறேன் என்று சொல்லியும் கேட்காமல் இம்சை செய்ததில்.. கடுப்பாகி, "இந்தச் சின்னச் சின்ன விஷயங்களெல்லாம் பக்கத்து கடைகளில் அவசரத்துக்கு வாங்கிக்கொள்ளலாம் இல்லையா? எல்லாவற்றுக்கும் என்னையே எதிர்பார்த்தால் எப்படி? " என்று துவங்கி ஒரு லெக்சர் கொடுத்தேன். மறுநாள் காலை காபி வரவேயில்லை. கிச்சனை நோக்கி வினவியதற்கு உள்ளிருந்து இப்படி பதில் வந்தது.

"பால் காய்ச்சியிருக்கிறது. டிகாக்ஷனும் ரெடி, ஷுகரும் பக்கத்தில்தான் இருக்கிறது.. எல்லாவற்றுக்கும் என்னையே எதிர்பார்த்தால் எப்படி?"

.

28 comments:

பரிசல்காரன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஆதி!

இளங்கோ said...

// தூக்கத்தில் கூட 'வாழ்த்துகள், வாழ்த்துகள்'னு புலம்ப வேண்டியதாயிருக்கிறது. //

Hahaha..

வாழ்த்துகள், வாழ்த்துகள்.. :)

வெறும்பய said...

பிறந்த நாள் வாழ்த்துகள்...

அமுதா கிருஷ்ணா said...

ரமாக்கு ஒரு ஓ...

அன்புடன் அருணா said...

வாழ்த்து வாங்குறதுக்கு இப்படில்லாம் பதிவு போடலாமா??? ரைட்டு!
பிறந்த நாள் வாழ்த்துகள்+திருமணநாள் வாழ்த்துகள் பூங்கொத்தோடு!
அந்தக் கடைசி காஃபி போடும் விஷயம் அசத்தல்ஸ்!!

நேசமித்ரன் said...

பிறந்த நாளுக்கும் மீண்டும் பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள் ஆதி!

V.Radhakrishnan said...

கலக்கல் விசயங்கள். வாழ்த்துகள் ஆதி.

என். உலகநாதன் said...

ஆதி,

பிறந்த நாள் மற்றும் மண நாள் வாழ்த்துகள்.

நீங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று நீடுடி வாழ மனமாற வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்,
என்.உலகநாதன்

sriram said...

பி.நா மற்றும் ம.நா வாழ்த்துக்கள் ஆதி (நெறய வாழ்த்துக்கள் சொல்ல வேண்டி இருப்பதால் எனர்ஜி சேவ் பண்றேனாக்கும்).

யாராவது ஒரு வெப்சைட் க்ரியேட் பண்ணால் நல்லா இருக்கும். அதில் நம்மைப் பற்றிய விவரங்களையும், யார் யாருக்கு எப்போ என்னென்ன வாழ்த்து அனுப்பனும்னு பதிவு செய்து விட்டால் ஆட்டோமேட்டிக்காக வாழ்த்து போயிடணும். இப்போ இருக்குற வெப்சைட்கள் நமக்கு ரிமைண்டர் இமெயில் மட்டுமே அனுப்புகின்றன.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்களைப் பற்றி எதற்கு இவ்ளோ பெரிய அலசல் என வாசித்துக் கொண்டே வந்தால்...:)))!

பிறந்த நாளுக்கும், வரவிருக்கும் மண நாளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!!

//எல்லாவற்றுக்கும் என்னையே எதிர்பார்த்தால் எப்படி?"//

ரமாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்:)!

MSK said...

பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்துகள் ஆதி அண்ணா..

இனியா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஆதி!

வெங்கட் said...

என்கிட்ட விட்டிருந்தா இதை
5 பதிவா போட்டு இருப்பேனே..!!

போச்சு.., 5 பதிவு போச்சு..!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி..!!

அறிவிலி said...

பிறந்த நாளுக்கும் அடிமையான நாளுக்கும் வாழ்த்துகள்.

424 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

பிறந்த நாள் வாழ்த்துகள். ரெண்டு நாள் கழிச்சி திருமண நாள் வாழ்த்துகள். ஆனாலும் திருமணம் ஆனப்புறம் சொந்தப் பிறந்தநாளை கவனம் வச்சிருக்கறது கொஞ்சம் odd இல்லை ஆதி:))))))

ILA(@)இளா said...

பிறந்த நாள் வாழ்த்துகள்!

ILA(@)இளா said...

பாஸ்டன் ஸ்ரீராம்- இதுக்கெல்லாம் வழி யோசிச்சாச்சுங்க. சங்கம்-சுவரொட்டியின் தரவுகளை நிரலிகளைக் கொண்டு மாத்திட்டிருக்கேன், ஒரு/2 வாரத்துல தயாராகிரும். in English, i have just take the sangamwises.blogspot.com to comvert as DB to wish automatically thro scripts. Will be done in COuple of weeks.

வானம்பாடிகள் said...

சொல்ல மறந்துட்டேன். வலப்பக்க மூலைல இந்த பிலிம் எல்லாம் வேணாம்னு ஒரு ஆப்ஷன் சேர்த்தா மொத ஓட்டு என்னுது:))

சுசி said...

மொத்தமா வாழ்த்துக்கள் ஆதி.

ரமா ரமாதான்.

philosophy prabhakaran said...

வாழ்த்துவதில் என்ன வலி இருக்கிறது... இன்னும் ஒரு வருஷத்திற்கு சேர்த்து இப்பவே சொல்லிவிடுகிறேன்... வாழ்த்துக்கள்...

க.பாலாசி said...

கடைசி மேட்டருக்கு ஒரு ‘ஹ’..ஹா...

அனைத்து நாளுக்கும், அனைத்திற்கும் வாழ்த்துக்கள்...

Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள் ஆதி!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நேர்மையாக நான் நினைப்பதை வாக்காகச் செலுத்திவிட்டேன் - வேறென்ன, லேசா மிஸ் பண்ணுவோம்தான் :)

Balaji saravana said...

வாழ்த்துக்கள் ஆதி!

Anonymous said...

//(ஐபி நோட் பண்ணி யார் என்ன ஓட்டு போட்டார்கள் என கண்டுபிடித்துவிடுவேன். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே ஓட்டுப்போடுங்கள்)//

This is cheating. ha ha. We are not scared. I voted for the 2nd option. ha ha ha.

At last, did you make your own coffee or what?

ஹுஸைனம்மா said...

வாழ்த்தோமேனியா - இதே டோன்ல நான் (கொஞ்சமா பயத்துடன்) எழுதின ஒரு பதிவு: வாழ்த்துவோம் வாருங்கள்.#விளம்பரம்.

வாழ்த்துகள் - ரமாவுக்கு. இப்பத்தான் அடிச்சு ஆட ஆரம்பிச்சிருக்காங்க. வெரிகுட். ஐ’ம் ஸோ ஹாப்பி. இப்படியொரு நல்ல, புத்திசாலி மனைவி கிடைத்ததற்காகவே, திருமண நாள் வாழ்த்துகள்!!

BTW, ரமா சுதாரிக்க ஆரம்பிச்சதுக்கும், நீங்க பிளாக் எழுதுறதை நிறுத்திடலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சதுக்கும் ஏதாவது ‘லிங்க்’ உண்டா? :-))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துச் சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

☼ வெயிலான் said...

// நான் பாஸ்வேர்டைக் கூட மறந்து தொலைத்துவிட்ட 'ஃபேஸ்புக்'கில் வாழ்த்திக்கொண்டிருக்கும் //

அடப்பாவி! நானும் பேஸ்புக்ல தான் வாழ்த்துச் சொல்லியிருக்கேன்!