Sunday, November 28, 2010

நந்தலாலா - அரிதானது

தமிழ் சினிமாவுக்கு இன்னும் அதிர்ஷ்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது போலும். கொஞ்ச காலமாக நல்ல ரசனையான சினிமாக்களைக் காணமுடிகிறது. சில கமர்ஷியல் குப்பைகளுக்கு மத்தியில் இது போன்ற படங்கள் திக்கித் திணறியாவது வெளியாவதற்குக் காரணம் நாம் போன பிறவியில் யாருக்காவது தவித்த வாய்க்கு தண்ணீர் தந்திருப்போமாய் இருக்கும்.

நந்தலாலா இது வரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு புதிய வடிவம். இயல்பான மனிதர்களின் தேடல் ஒரு அழகியலோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியன அந்தத் துறைகளின் உச்சமாக இருக்கக்கூடும். புதிய வகையான காட்சியமைப்புகளைக் காணமுடிவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. காமிராவின் பார்வைக்கு வெளியே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி பின் அவற்றையும் பார்வைக்குள் கொண்டுவரும் காட்சிகள் அழகு. இதனால் கொஞ்சம் மெதுவாக செல்லும் காட்சிகளின் பாதிப்பு மறக்கிறோம். இயக்கமும் இன்ன பிறவும் ஆகச்சிறந்த பங்களிப்புகளாக இந்தப் படத்தில் மலர்ந்திருக்கின்றன.

ஒவ்வொரு பயணமும் ஒரு குட்டி வாழ்க்கை. பயணம் குறித்த பல ஆங்கிலப் படங்கள் இருப்பினும் சமீபத்தில்தான் சிலவற்றைத் தமிழில் பார்க்கிறோம். அவற்றில் அன்பேசிவம் ஒரு அழகிய உதாரணம். பயணம் என்ற ஒரே காரணம் மட்டுமே இவ்வகையான படங்களை ஒரே தராசில் வைத்துப் பார்த்துவிடக்கூடிய சுதந்திரத்தை நமக்குத் தரமுடியாது. பயணத்துக்கே உரிய சிறப்பு அது. ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஆங்காங்கே மெலிதாக பிசிறு தட்டினாலும் அவற்றிற்கும் கூட இந்தத் தமிழ்ச்சூழலும், இந்தச்சூழலிலிருந்தே வந்த இயக்குனரும்தான் காரணமாக இருக்கமுடியும் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

nandhalala1_800_030708 ஒரு சின்னஞ்சிறுவனும் மற்றும் ஒரு மனப்பிறழ்வு கொண்ட ஒரு மனிதனும் இணைந்து தங்கள் அம்மாக்களைக் காண பயணிக்கிறார்கள். எந்த முன்முடிவுகளுக்கும் உட்படாமல் வாழ்க்கை அதன் போக்கில் போகிறது. பயணத்தில் ஏராளமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். மனதை வருடிச்செல்கின்றன அடுத்தடுத்த காட்சிகள். இது ஒரு சுதந்திரமான கதை வடிவம். அந்தச் சிறுவனுக்குப் பதிலாக வேறு ஒரு இளம்பெண்ணை நாம் பொருத்திப்பார்க்கலாம். அந்த மனிதனுக்குப் பதிலாக ஒரு முதியவரை பொருத்திப்பார்க்கலாம். பயணத்தின் காரணம் வேறாக இருக்கலாம். இடையில் வந்து போகும் மனிதர்களாக வேறு வேறானவர்களை கணிக்கலாம். முடிவுகளை இன்னும் இயல்பாக புனைந்து பார்க்கலாம். அப்படியானதொரு அகன்ற வாய்ப்பைத் தரக்கூடிய கதைகளம் இது. மிஷ்கினின் இந்தப் படத்தில் இவையெல்லாம் எப்படி அமைந்திருக்கின்றன, இந்தக் கதாபாத்திரங்கள் எவ்வாறு நம் மனதோடு நெருங்கிவருகின்றன என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை விட தவறவிடாமல் ஒருமுறை பார்த்துவிடுங்களேன். ஏனெனில் இது போன்ற படங்கள் அரிதானவை.

நடிப்பில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் சிறப்பானவை. ஒரு குளோஸப் காட்சி கூட இல்லாத சிறிது நேரமே வரக்கூடிய ஒரு காரெக்டருக்கு ரோகிணி போன்ற ஒரு சிறந்த நடிகையை வீணடித்திருக்க வேண்டாமோ.? நன்றி மிஷ்கின்.

.

25 comments:

ரிஷி said...

Hmm good. Sikiram parkanum boss

பார்வையாளன் said...

வித்தியாசமான பார்வை !!

தமிழ்ப்பறவை said...

நல்ல பகிர்வு...

கனாக்காதலன் said...

நல்ல விமர்சனம் !

சிநேகிதன் அக்பர் said...

உங்களது விமர்சனம் படம் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது. காத்திருக்கிறோம் படம் வருவதற்கு.

பழமைபேசி said...

திரைப்படம் பார்ப்பது மிகவும் குறைவு... எனினும் இந்தப் படம் பார்க்க ஆசையாக இருக்கிறது!

பதிவர்களின் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி இருக்கும் அதிர்வுதான் காரணம்!!!

வானம்பாடிகள் said...

படம் எப்படிங்கறது ஆளாளுக்கு விமரிசனத்துல அசத்துறதிலிருந்து தெரியுது.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

நல்ல விமர்சனம்...

Cable Sankar said...

:))

பிரதீபா said...

வயித்தெரிச்சலா இருக்குங்க.. நீங்கெல்லாம் அப்பப்போ தியேட்டர் போயி இப்படி நல்ல படம் பாக்கறத நெனச்சா.. நான் விமர்சனம் படிக்கலைங்க, எப்பவாச்சும் படம் பாப்பேன்ல, பாத்துட்டு வந்து கண்டிப்பாப் படிக்கறேன்.

philosophy prabhakaran said...

// காமிராவின் பார்வைக்கு வெளியே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி பின் அவற்றையும் பார்வைக்குள் கொண்டுவரும் காட்சிகள் அழகு //
நல்லா சொன்னீங்க...

நாய்க்குட்டி மனசு said...

திரைப்பட விமர்சனம் என்பது எழுதுபவர் விரும்பும் ஒரு விஷயம் அதிகமாக கையாளப்பட்டிருந்தால்
அதற்கேற்ற மாதிரி வருகிறது. பொன்னான மூன்று மணி நேரத்தை செலவழிக்க தகுதியான படம் தானா?

Sai said...

"தமிழ் சினிமாவுக்கு இன்னும் அதிர்ஷ்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது போலும். கொஞ்ச காலமாக நல்ல ரசனையான சினிமாக்களைக் காணமுடிகிறது. சில கமர்ஷியல் குப்பைகளுக்கு மத்தியில் இது போன்ற படங்கள் திக்கித் திணறியாவது வெளியாவதற்குக் காரணம் நாம் போன பிறவியில் யாருக்காவது தவித்த வாய்க்கு தண்ணீர் தந்திருப்போமாய் இருக்கும்."
இது மாதிரியான உணர்ச்சிவசப்படல்கள்தான் சில சமயங்களில் வலைப்பதிவு விமர்சனங்கள் கடுப்படிக்க காரணம்.

அமுதா கிருஷ்ணா said...

பார்க்கணும்...

Pandiselvam said...

70 % of the film is Copied from Kikujiro.

சத்ரியன் said...

சனிக்கிழமை வரைக்கும் என்னை இருக்க விடுங்கப்பா. அதுக்கு முன்னாடி, என்னால படத்துக்கெல்லாம் போக முடியாது.

முத்துசிவா said...

நந்தலாலா Vs கிகுஜிரோ!

http://www.envazhi.com/?p=21845

சுசி said...

கண்டிப்பா பாக்கணும் நானும்.

வித்தியாசமான விமர்சனம் :))

சிவா என்கிற சிவராம்குமார் said...

அப்படியே வழி மொழிகிறேன்!

Karthik said...

Review romba nallarukku. :-)

அத்திரி said...

நல்ல விமர்சனம்... அண்ணே தாம்பரம் வித்யா விலா பாத்தீங்க

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ரிஷி.
நன்றி பார்வையாளன்.
நன்றி தமிழ்பறவை.
நன்றி கனாக்காதலன்.
நன்றி அக்பர்.
நன்றி பழமைபேசி.
நன்றி வானம்பாடிகள்.
நன்றி யோகேஷ்.
நன்றி பிரதீபா.
நன்றி கேபிள்.
நன்றி பிரபாகரன்.
நன்றி நாய்குட்டிமனசு.
நன்றி சாய்.
நன்றி அமுதா.
நன்றி பாண்டிசெல்வம்.
நன்றி சத்ரியன்.
நன்றி முத்துசிவா.
நன்றி சுசி.
நன்றி சிவா.
நன்றி கார்த்திக்.
நன்றி அத்திரி.

Raghav said...

மிக அருமையான படம்தான். நந்தலாலான்னு பெயர் போடும்போது திரைல வர்ற நாணல் பானைசோற்றுக்கு ஒரு பதம். Cinematography இசை இந்த இரண்டுமே நந்தலாலாவை தொட்டிலிட்டு இருக்கும் அம்மாவின் சீலை. Characterization நல்லா இருக்கு. அவர் அவர் வேலைகளை அவர் அவர் திரையில் செவ்வனே செய்கிறார்கள். மிஸ்கின் - உண்மையிலேயே சிலிர்க்கவெய்கிறார். சிறுவனின் அம்மா காலில்விழும்போதும் சரி, நீ mental என்று சிறுவன் சொல்லும் போதும் சரி. எப்பா!!! திரைவந்து ஒப்பாரி வெயகும் directer -கள் தயவுசெய்து கவனிக்க வேண்டியது

ஆனால்... ஆனால்...ஆனால்...

இது நல்ல படமா???

விவேக் பாணியில் extra large ஓட்டைகள்... படம் முழுக்கவே நிரம்ப நிரம்பி இருக்கின்றன :(
ஒரு அலைபாயுதே, வெயில்... ஏன் அஞ்சாதே பார்த்த திருப்தி வேண்டாம் ஒரு குருவி அசல் பார்த்தா அத்ரிப்தியை கிட்டத்தட்ட நெருங்கவெய்கிறது. அதே சமயம் அந்த எண்ணம் எழாமல் தடுப்பது படம் வித்யாசமானது என்பது தான்.

திரைஅரங்கில் வெயில் அஞ்சாதே அளவு தான் (திருச்சியில்) கூட்டம் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வரம் கழிந்து தான் போனேன். "கூட்டத்தை" பார்த்து நிச்சயம் நல்ல படம் தான் என்று நம்பினது கூட அத்ரிப்திகு காரணமோ இல்லை அய்ங்கரன் நமக்கு இட்டது 'இது போதும்' என்பதாலோ இல்லை மிச்ச்கினிடம் நிரம்ப எதிர்பார்த்ததோ யாமறியோம்...

மொத்தத்தில் அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா கண்ட விஷ்ணுவர்தநிடமிருந்து சர்வம் கண்ட effect தான் என் அளவில்.

மிஸ்கின் மறுபடியும் இதுபோன்ற வித்தியாசமான படம் எடுத்தல் நிச்சயம் பார்ப்பேன். இந்த படத்தை நீங்கள் குறிபிட்டது போல் விதியாசபடுதி எடுத்தாலும் நிச்சயம் பார்பேன்.

Raghav said...
This comment has been removed by the author.
பிரதீபா said...

எனக்குப் படம் ரொம்ப பிடிச்சுதுங்க ஆதியண்ணே :)