Monday, December 6, 2010

கரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்

'மணற்கேணி' என்ற பெயரில் சிங்கை தமிழ்ப் பதிவர்களும், தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் பிரம்மாண்டமான ஆய்வுக்கட்டுரைப் போட்டி உண்மையில் தமிழ் இணையவெளியில் ஒரு பெரும் முயற்சி. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளின் கீழ் சமர்ப்பிக்கப்படும் தரமான கட்டுரைகள் தமிழ்த் தொண்டாக/ சமூகத் தொண்டாக அமையும் என்றால் அது மிகையாகாது. போட்டிக்கான இறுதிநாள் நெருங்கிவருவதால் (டிசம்பர்-31) அனைவரையும் கட்டுரைகளை விரைந்து சமர்ப்பிக்கும்படி போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். விபரங்களுக்கு வலது புறம் விளம்பரத்தைக் கிளிக் செய்யுங்கள். பரிசாக சிங்கப்பூர் பயணம் காத்திருப்பதால் உங்கள் கட்டுரையை தீட்டும் முன்பு உங்கள் பாஸ்போர்ட்டை தீட்டிவைத்துக்கொள்ளுங்கள்.

____________________

ஒரு வழியாக 'முக்கி தக்கி' 5 லட்சம் ஹிட்டுகளைக் கடந்த பதிவராக நாமும் ஆகிவிட்டோம். அப்படியே பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் 500 ஐத் தாண்டிவிட்டது. இந்த இனிய வேளையில் அதற்குக் காரணமான உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'இது ஒரு சாதனைடா'ன்னு சொன்னா கண்ணன் என்னைப் பார்த்து நக்கலாக சிரிக்கிறான்.

____________________

பிறவற்றைப் போலவே வரலாறும் நம்மை நாமே செதுக்கிக்கொள்ள இன்றியமையாத ஒன்றாகும். அதுவும் இப்போதைய நம் சூழல் எப்படி யாரால் உருக்கொண்டது? அதில் நன்றுக்கான செழும்பங்காற்றியவர்கள் யாரார்? தீதுக்கு யார் காரணம்? என்றெல்லாம் அரசியல் அறிந்துகொள்வதும் அத்தகைய சமீபத்திய நம் தலைவர்களை தெரிந்துகொள்வதும் ஒரு அடிப்படைத் தேவையென்று கூட சொல்லலாம். புத்தகங்களை கையில் தூக்கத்தான் கையெழுவதில்லை நமக்கு. குறைந்த பட்சமாக அரிதாக வரும் 'அம்பேத்கர்' போன்ற சினிமாக்களையாவது ஆதரித்து ஏற்போம். அம்பேத்கர் ஒன்றும் எந்திரனல்ல, எங்கெங்கினும் காணக்கிடைக்க.. மனிதன், ஆகவே காணக்கிடைப்பது அரிதுதான். திரையரங்குகளையும், காட்சி நேரங்களையும் முன்னறிந்து தேடிச்செல்லுங்கள்.

____________________

சமீபத்தில் நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததையொட்டி குழந்தையைப் பார்த்துவிட்டு நண்பருக்கு வாழ்த்துச் சொல்லிவர மருத்துவமனைக்கே சென்றிருந்தேன். பார்த்துவிட்டு கிளம்பும் தருவாயில் நண்பர் மருத்துவமனை பில் செட்டில் பண்ணும் பணியில் இருந்தார். நானும் அருகில் சென்றபோது அந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது. நண்பரும், மருத்துவமனை சிப்பந்தியும் பேசிக்கொண்டது அங்கு நடந்த சிகிச்சைகளுக்கான கட்டணம் குறித்துதான் என்பதை அந்த மருத்துவமனைச்சூழல் மட்டும் இல்லையென்றால் சத்தியமாக யாராலும் நம்ப முடியாது.

அவர், 'இவ்வளவு ஆகியிருக்கிறது சார். அதற்கு இவ்வளவு, இதற்கு இவ்வளவு. எல்லாம் குறைச்சுப்போட்டு ரவுண்டாக இவ்வளவு ஆக்கியிருக்கிறோம் சார்..'.

அதற்கு இவர், 'கொஞ்சம் பாத்துப் போட்டுக்குடுங்க சார்.. நாளைப் பின்ன திரும்பவும் உங்ககிட்ட வரவேண்டாமா?'.

அவர், 'விலைவாசியெல்லாம் கூடிப்போச்சு சார், முன்னமாதிரி இல்ல.. இதுக்கு மேல கட்டுப்படியாகாது சார்..'.

அதற்கு இவர், 'அதெல்லாம் நீங்க நினைச்சா பண்ணமுடியும் சார்.. கொஞ்சம் நல்லாப் பாருங்க..'

உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது.

___________________

வானேகுதல்

தங்கக் கூண்டிலிருந்து விடுபடுகிறது

சிறு பறவையொன்று

இனி இரைக்கு போட்டியிருக்கலாம்

இருப்பே கேள்வியாகலாம்

ஆயினும்

அது

தன் சின்னஞ்சிறு சிறகுகளால்

அளைந்துகொண்டிருப்பது வானை.

___________________

முன்னெப்போதோ தந்த கடன் இரண்டாயிரம் ரூபாயை நண்பர் ஒருவர் இன்று திருப்பித்தந்தார். எனக்கு அது மறந்தே போய்விட்டதால் எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. அடாடா.. வீட்டுக்கணக்கில் வராத வரவு என்பதால் புத்தகமா? நண்பர்களுடன் சிட்டிங்கா? என திட்டமிட்டுக்கொண்டே மாலை வீட்டுக்கு வந்தேன். வந்ததும் வராமலும் ரமா பாக்கெட்டுக்குள் கையை விட்டார். அவர் நார்மலாக அப்படிச் செய்பவர் அல்ல. நான் அதிர்ந்து நிற்க அவர் நினைத்தது கிடைத்தவிட்ட மகிழ்ச்சியில் ‘ஹெஹெஹே..’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.

‘எப்பிடிம்மா இது?’ என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே கேட்டேன்.

‘கரப்பான் பூச்சி மேல வந்து விழுந்தது. அப்பவே தெரியும் இன்னைக்கு எதிர்பாராத பணம் வரும்னு..’

அவ்வ்வ்வ்.. என்னாங்கடா இது.?

.

38 comments:

Muthukumar said...

:-))))))))))))))))))

vinu said...

அவ்வ்வ்வ்.. என்னாங்கடா இது.?

ripeeetttu

SELVENTHIRAN said...

வானேகுதல்
தங்கக் கூண்டிலிருந்து விடுபடுகிறது
சிறு பறவையொன்று
இனி இரைக்கு போட்டியிருக்கலாம்
இருப்பே கேள்வியாகலாம்
ஆயினும்
அது
தன் சின்னஞ்சிறு சிறகுகளால்
அளைந்துகொண்டிருப்பது வானை.
___________________

அடப்பாவி மனுஷா.... கொன்னுட்டியே...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முத்துகுமார்.
நன்றி வினு.
நன்றி புதுமாப்பிள்ளை. :-)

sriram said...

ஐநூறுக்கும் ஐந்து லட்சத்துக்கு வாழ்த்துக்கள் ஆதி.. பிரபல பதிவர் ஸ்டேட்டஸிலிருந்து மிகப் பிரபல பதிவர் ஸ்டேட்டஸுக்குப் போயிட்டீங்க.. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

//நாளைப் பின்ன திரும்பவும் உங்ககிட்ட வரவேண்டாமா?'. // நண்பர் ஒரு முடிவோடதான் இருக்கார் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சிவா என்கிற சிவராம்குமார் said...

நல்ல தொகுப்பு! அதிலும் அந்த கவிதை சூப்பர் சார்! எனக்கு ஒரு பழமொழி நியாபகம் வந்தது "படகு கரையில் பாதுகாப்பாக இருக்கும்; ஆனால் அதற்காக படகு கட்டப்படவில்லை"

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தொகுப்பு!

வானம்பாடிகள் said...

கலக்ஸ் ஆதி. வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல பகிர்வு.

கனாக்காதலன் said...

அருமையான பகிர்வு. கவிதைமிகவும் அருமை.

கனாக்காதலன் said...

அருமையான பகிர்வு. கவிதைமிகவும் அருமை.

Cable Sankar said...

un vidhi.. கரப்பான் பூச்சியில இருக்கு பாரேன்.

MSK said...

கவிதை செம.. chanceless..

MSK said...

கரப்பான் பூச்சிக்கு இவ்ளோ பவரா!!
இனிமேல் கரப்பான் பூச்சிய வீடு முழுக்க வளர்க்கணும்.. :)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

2000 Poche........

வெறும்பய said...

மேலே சொன்னது மருத்துவ மனை தானா.. இல்லை ஏதாவது காய்கறி கடையா..

கரப்பான் பூச்சி மேலே விழுந்தா காசு வருமா..?????

சொல்லவே இல்ல..

Sukumar Swaminathan said...

தேங்ஸ் பாஸ்.. அப்போ இனி வீட்ல நிறைய கரப்பான் பூச்சி வளர்க்க வேண்டியதுதான்...

புன்னகை said...

வாழ்த்துக்கள் ஆதி...
//தன் சின்னஞ்சிறு சிறகுகளால்
அளைந்துகொண்டிருப்பது வானை//
Wowwwww!!! :-)

வடகரை வேலன் said...

ஆதி,

ஆகச்சிறந்த கவிதைப்பா.

மகிழ்வாயிருக்கிறது. மெருகேறி இருக்கிறது உன் எழுத்துக்களில்.

மிக்க மகிழ்ச்சி.

Balaji saravana said...

கவிதை கலக்கல் ஆதி :)
கரப்பான் பூச்சி கூட உங்கள காட்டிக் கொடுக்குதே ;)

அனுஜன்யா said...

தங்கக் கூண்டிலிருந்து
வெளியேறும் சிறுபறவையை
'அரே வா!' என்று
வானம் அழைக்கிறது.
வானமும் வசப்படட்டும்.

அனுஜன்யா

சங்கவி said...

//‘கரப்பான் பூச்சி மேல வந்து விழுந்தது. அப்பவே தெரியும் இன்னைக்கு எதிர்பாராத பணம் வரும்னு..’//

இப்படி எல்லாம் இருக்கா...

Mohan said...

நான் தங்கியிருக்கிற இடத்தில் கரப்பான் பூச்சி அதிகமாக இருக்குன்னு,அதை ஒழிக்கறதுக்கு எனக்கு 2000 செலவு ஆச்சு:-)

இளங்கோ said...

//வானேகுதல்//
Nice lines..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அடப் பாவி மக்கா. நல்ல கவிதை. தனியா போட்டிருக்கக் கூடாதா?

புதுகைத் தென்றல் said...

கரப்பான் பூச்சிகூட உங்களுக்கு எதிரா வேலை பாக்குதே ஃப்ரெண்ட். ஒண்ணியும் செய்ய முடியாது. :( :)

புதுகைத் தென்றல் said...

இந்தப் பதிவுல கவிதை எழுதியிருக்கீங்க. வேறென்னென்னவோ சொல்லியிருக்கீங்க. ஆனா ஹைலைட்டே ரமா மேட்டர்தான். :)

(அடுத்த வாட்டி சென்னை வரும்போது ரமாவை கண்டிப்பா சந்திச்சிடணும்)

பார்வையாளன் said...

'அம்பேத்கர்' போன்ற சினிமாக்களையாவது ஆதரித்து ஏற்போம் "

நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டேன்..

நல்ல கூட்டம் இருந்தது..

என் கேள்வி என்னவென்றால், சமூக விரோதிகளை , வன்முறையாளர்களை கதாநாயகன் ஆக்கி எடுக்கப்படும் படங்களை பற்றி ஆர்வமாக எழுதும் பத்திரிக்கைகள், அம்பேத்கார் போன்ற மகத்தான மனிதரின் படத்துக்கு உரிய இடம் கொடுக்காதது ஏன் ?
தீமையை பற்றி பேசத்தான் விருப்பம் அதிகமா?

அமுதா கிருஷ்ணா said...

வாழ்க கரப்பான்..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//‘கரப்பான் பூச்சி மேல வந்து விழுந்தது. அப்பவே தெரியும் இன்னைக்கு எதிர்பாராத பணம் வரும்னு..’
அவ்வ்வ்வ்.. என்னாங்கடா இது.?//


.அவ்வ்வ்வ்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீராம். (என்னை 'பிரபல பதிவர்' அடிக்கடி சொல்வதில் உங்களுக்கு அப்படி என்னைய்யா ஒரு சந்தோஷம்? :-))

நன்றி சிவா.

நன்றி TVR.

நன்றி வானம்பாடிகள்.

நன்றி ஸ்டார்ஜன்.

நன்றி கனாக்காதலன்.

நன்றி கேபிள்.

நன்றி MSK. (ஹிஹி)

நன்றி யோகேஷ்.

நன்றி வெறும்பய. (இப்ப தெரிஞ்சுடுச்சுல்ல.. ஜாக்கிரதை)

நன்றி சுகுமார்.

நன்றி புன்னகை.

நன்றி வேலன். (அரிதான உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது அண்ணன். தொடர்ந்து வாசிக்கிறீர்கள்தானே.?)

நன்றி பாலாஜி.

நன்றி அனுஜன்யா. (என்ன இரட்டுற மொழிதலா? நமக்குள்ள எதுக்கு இது? ஹிஹி)

நன்றி சங்கவி.

நன்றி மோகன்.

நன்றி இளங்கோ.

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர். (வாவ்.. கவிதை எழுதிய மகிழ்ச்சியை விட உங்கள் பாராட்டு அதிக மகிழ்ச்சி)

நன்றி புதுகைத்தென்றல். (கண்டிப்பா வாங்க ஃப்ரெண்ட்)

நன்றி பார்வையாளன்.

நன்றி அமுதாகிருஷ்ணா.

நன்றி ஜெஸ்வந்தி.

துளசி கோபால் said...

ஆமாங்க அது உண்மைதான்.

எங்க பாட்டி வீட்டில் கரப்பானை அடிக்க விடமாட்டாங்க.

அது சம்பத்துப் புருகு ( தெலுங்குச் சொல்)

செல்வம் கொண்டுவரும் பூச்சி(யாம்)!!!!!

sriram said...

//என்னை 'பிரபல பதிவர்' அடிக்கடி சொல்வதில் உங்களுக்கு அப்படி என்னைய்யா ஒரு சந்தோஷம்? :-))//

உண்மையை உரக்கச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை ஆதி..

கேபிள் - யூத்து, வானம்பாடிகள் - பாலாண்ணா, நர்சிம் - பாஸ், டுபுக்கு ரங்கா - வாத்யார் அது போல எனக்கு நீங்க - பிரபலம்.. :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி துளசி மேடம்.

நன்றி ஸ்ரீராம். :-))

birundha said...

supper

அன்புடன் அருணா said...

வானேகுதல் அருமையோ அருமை!

பாலா அறம்வளர்த்தான் said...

கொஞ்சம் லேட் ஆனாலும் சொல்லிக்கறேன்.

கவிதை அருமை ஆதி. ஜ்யோவ்ஜி சொன்னது போல தனியாப் போட்டிருக்கக் கூடாதா?

பிரதீபா said...

மிகப் பிரபல பதிவர் ஆய்ட்டீங்க-ரொம்ப சந்தோஷம். அதுக்கு அடையாளமா ஒரு சிறப்புக் கவிதை எங்களுக்கு ட்ரீட்டாண்ணே?
கரப்பான்பூச்சி விழுந்தா பணமாம்ல? அக்காவுக்கு மட்டும் எப்படித் தான் தினுசு தினுசா ஆட்டையப் போடற ஐடியா தோணுதோ !!