Saturday, December 4, 2010

எயிதிகினேருப்பேன்.. கவலய வுடு..

இது கொஞ்சம் சுயபுராணப் பதிவு. முன்னாடியே சொல்லிட்டேன், அப்பாலிக்கா படிச்சுப்புட்டு மூக்கச் சிந்தப்பிடாது.

குட்டியூண்டு தேர்தல் வச்சாலும் வச்சேன், பாசமுள்ள கொஞ்ச பேரு கொதிச்சுப் போயிட்டாங்க.. அதான், "நா எழுதுறத நிப்பாட்டினா.. எப்பிடி ஃபீல் பண்ணுவீங்க?"ன்னு கேட்டேனே.. தேர்தல் வச்சதுக்கு காரணமே இந்தக் கேள்வி அல்ல.. உண்மையில் நம்மை எத்தனை யுனிக் ரீடர்ஸ் படிக்கிறாங்கன்னு பாக்குறதுக்குதான். ஓட்டு போட்டது 258 பேர். என்னைய கழிச்சுப்பார்த்தா 257 பேர். ஹிஹி.. 50% ஆளுங்க ஓட்டுப்போடலைன்னாக் கூட சுமார் 500 பேர் படிக்குறாங்க.. ஹைய்ய்யா.. சக்சஸ்.!

அப்பாலிக்கா அந்தக் கேள்வியில உண்மை இல்லாமலும் இல்ல.. நாமளும்தான் ரெண்டரை வருசமா எலக்கிய சேவை செஞ்சிகினுருக்கமே.. போதுமோ? பாவம் மக்கள்னு அப்பப்ப இரக்க சிந்தனை வந்துபோவுது. சரிதான் கேட்டுதான் பாத்துருவமேனுதான் கேட்டேன். பாருங்க முன்னமே சொன்ன மாதிரி கொதிச்சுப் போயிட்டாங்க.. நிஜமாலுமே ஒரு அஞ்சாறு போன் அழைப்பு வந்துடுச்சுங்க. மெயிலுகளும் ஒரு அஞ்சாறு இருக்கும். பாருங்க, பேரு சொன்னா சுயபுராணமாப் போயிடும். சொல்லாங்காட்டி ஹிஹி.. பொய்யிதானே இதும்பீங்க.. என்னா பண்றதுன்னு ரோசனையா இருக்குது. முதல்ல சும்மாங்காட்டி ஓட்டுப்போட்டுட்டு அமைதியாப் போயிடுவாங்கன்னுதான் நினைச்சேன். அதனால இந்த மாதிரி எல்லோரும் இத சீரியஸா எடுத்துகிட்டு கேப்பாங்கன்னு நா நினைக்கலை. தற்செயலா இப்பிடி ஆனதுங்கூட நல்லதுதான்னு வையுங்களேன்.

ஏம்ணா, அவங்க 'நீங்க தொடர்ந்து எழுதத்தான் செய்யணும்'னு சொல்லி நம்ப மேல உள்ள பாசத்தை சொன்னாலும் அதிலும் சிலரு நம்பளப் பத்தி உருப்படியான 'ரிவ்யூ' வச்சதும் கொஞ்சம் ஆச்சரியமாவும், சந்தோசமாவும் இருந்திச்சு. பிரபல கவிஞர் ஒருத்தர் முன்வச்ச கருத்துகள் ரொம்பவே திருப்தியா இருந்துச்சு. நானே மறந்து போன பழைய பதிவுகளக் குறித்தும் விமர்சனங்கள் வச்சு நா ஏன் தொடர்ந்து எழுதணும்னு காரணமும் வேற சொன்னாரு. ஆங்.. அப்ப சரி, அவரு சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்னு நினைச்சுகிட்டேன். ஆனாலும் சிலர் சொன்னதுல உள்காரணம் இல்லாமயும் இல்ல. பக்கத்துல கருப்பா ஒருத்தன் இருக்கங்காட்டியும் நாம சிவப்பா தெரியுவோம்ங்கிற ரகசிய ஆசைதான் அது. சரி கழுத இருந்துட்டுதான் போவட்டுமே..

அதுலயும் தராசு, புதுகைத்தென்றல் ரெண்டு பேரும் இத சீரியஸா நினைச்சுகிட்டு பதிவே போட்டு நம்மை போவக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது.. உள்ளுக்குள்ள நெகுழுது.

HOW DO YOU FEEL IF, I STOP BLOGGING.?

ஹைய்யா.. ஒரு விக்கெட் போச்சுது : 24 (9%)

ஒண்ணியும் ஆவாது. வேறெதுவாவது உருப்படியா படிப்போம்  : 69 (26%)

லைட்டா மிஸ் பண்ணுவோம்  : 59 (22%)

உண்மையிலேயே ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கும்பா.. அப்படி ஏதும் ஐடியா இருந்துச்சுன்னா விட்டுடுங்க ப்ளீஸ்..  : 106 (41%)

Votes so far: 258

ஓட்டுப்போட்டு 'உண்மையிலேயே ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கும்பா.. அப்படி ஏதும் ஐடியா இருந்துச்சுன்னா விட்டுடுங்க ப்ளீஸ்..' னு சொல்லி நம்ப மீது பாசத்தை புழிஞ்சு கொட்டினது 106 (41%) பேரு. 'ஒண்ணியும் ஆவாது. வேறெதுவாவது உருப்படியா படிப்போம்'னும் 'லைட்டா மிஸ் பண்ணுவோம்'னும் சொல்லி நியாயத்தின் பக்கம் நேர்மையா நின்னவங்க 128 (48%) பேர். இவங்களையும் நம்ப கூட சேத்துக்கலாம் பிரச்சினையில்ல. ஆனா ‘ஹைய்யா.. ஒரு விக்கெட் போச்சு’துன்னு ஜாலியா குதிச்ச 24 (9%) பேரு மட்டும் கையில கிடைச்சா.. ஆவ்வ்.. முட்டை மந்திரிச்சு ‘விரலி’ய ஏவி விட்டு காதை கடிச்சு வைக்கச் சொல்லப்போறேன். ஜாக்கிரதை.

ஒரு ரெண்டு வாரத்துக்கு கொஞ்சம் பிஸியாப் போயிடுச்சு, அதான் பிளாக்கு பக்கம் வரமுடியாமப் போச்சு. திரும்பவும் இந்த வாரத்துலயிருந்து ஃபுல் டைம் வர ஆரம்பிச்சுடுவேன். ஜாலி பண்ணலாம். எயிதிகினேருப்பேன்.. கவலய வுடு.. இன்னா.?

.

15 comments:

இராமசாமி said...

:)

இராமசாமி said...

antha 41% la neenga entha % otu potingana :)

ம.தி.சுதா said...

எது எப்படியென்றாலும் எனை ரசிக்க வைத்த அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

MSK said...

welcome back.. ;)

ஆயில்யன் said...

// பாவம் மக்கள்னு அப்பப்ப இரக்க சிந்தனை வந்துபோவுது//

ப்ச் இதுதான் பாஸ் உங்ககிட்ட எங்களுக்கு புடிக்காத விசயம் :)

சரி சப்ஜெக்ட்டுக்கு வாங்க எம்புட்டு நாளாச்சு குவாலிட்டி மேனேஜ் - பதிவு போட்டு

Karthik said...

Raittu annaathe, nanga pachikine iruppom. :-)

புதுகைத் தென்றல் said...

:)

தராசு said...

ம், இப்பிடி நல்ல புள்ளையாட்ட இருக்கணும்

Cable Sankar said...

ippadi. எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிகினா என்னா அர்த்தம்பா.. :))

கனாக்காதலன் said...

:)

கனாக்காதலன் said...

:)

கார்க்கி said...

எல்லாத்துக்கும் உம் மேல‌ செம‌ ல‌வ்வு நைனா. அதான் ல‌வ்வ‌ர்ஸ் பேசுற‌ மாதிரி மாத்தி மாத்தி சொல்லிக்கிறாங்கோ.. ந‌ம்ம‌ டாவு தூர‌ப்போடான்னா கிட்ட‌ வான்னு அர்த்த‌ம் மாமு.

சிவா என்கிற சிவராம்குமார் said...

ஓகே. கவலைய விட்டாச்சு!

ஆதிமூலகிருஷ்ணன் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

பிரதீபா said...

:)