Sunday, December 5, 2010

ரத்த சரித்திரம் -விமர்சனம்

தலைப்பிலும், விளம்பரங்களிலும், ப்ரொமோக்களிலும் தெளிவாக இது ஒரு வன்முறைத் தாண்டவம் எனச் சொல்லப்பட்டுவிட்டது. அதன் பின்னும் போய் அடா.. எவ்ளோ ரத்தம், எத்தனை கொலைகள் என சலித்துக்கொள்வதில் அர்த்தமில்லை. வன்முறைக்கு வசதியான அரசியல்வாதிகளும், ரௌடிகளும், துரோகங்களும் நிறைந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

எனக்கு பல வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு குழு சிலரை வெட்டிக்கொலை செய்ய, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகள் சில வருடங்கள் கழித்து நேரம் பார்த்து பழிவாங்கினார்கள். விடுபட்டவர்களின் பழிவாங்கல் என இந்தக்கதை மறுபடி மறுபடி பல வருடங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. அதைப்போல ஒரு பழிவாங்கல் தொடர்கதைதான் இந்தப் படத்தின் கதையும்.

ஒரு அரசியல்வாதி தவறான ஆட்களின் சுட்டுதலால் அதுவரை நண்பராக இருந்த ஒருவரையும் அவரது முதல் மகனையும் கொலைசெய்கிறார். கொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (பிரதாப்) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அரசியல் அவனை அரவணைக்கிறது. எதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது. அவனுக்கும், அவனது மனைவிக்கும் இடையேயான காட்சிகள் மனதைத் தொடுவதாக, அவனது மனிதத்தை வெளிப்படுத்துவதாக, ஒரு புலியின் நியாயத்தை அதன் பார்வையில் சொல்வதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால் ஒரு திருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (சூர்யா) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போராட்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.

normal_MDSU100501-M பிரதாப் பாத்திரத்தில் விவேக் ஓபராயும், சூர்யா பாத்திரத்தில் நம் சூர்யாவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள் என்பதைவிடவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இன்னும் சரியாக இருக்கும். சில காட்சிகளை சற்று வலுவேற்றி, தளர்வு செய்தால் அவர் ஹீரோவாகவும், இவர் வில்லனாகவும் ஆகிவிடக்கூடிய மாதிரியான கதாபாத்திரங்கள். தமிழுக்கும், ஹிந்திக்கும் இந்த வேறுபாடு செய்யப்பட்டும் கூட இருக்கலாம். ரத்தச் சகதிக்குள்ளும் அதற்கான, அவரவர்களுக்கான நியாய, தர்மங்கள், உணர்வுப் போராட்டங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நெகடிவ் காரெக்டரில் விவேக்கையும், வெறிகொண்ட கண்களுடன் ஒரு வேங்கை போலத் திரியும் சூர்யாவையும் ரசிக்கமுடிகிறது. சண்டைக் காட்சிகளில் சூர்யாவோடு நாமும் உடம்பை முறுக்கிக்கொள்கிறோம். ஒளிப்பதிவாளர் கொலைக் களத்துக்கே நம்மையும் கொண்டுசென்றிருக்கிறார்.

டிபிகல் ராம்கோபால்வர்மா சினிமா. வேண்டியவர்கள் பார்த்துக்கொள்ளலாம். 

.

போனஸ் : சிக்குபுக்கு

இந்தப் படம் நம் லிஸ்டில் இல்லையென்றாலும் நண்பர்களின் தொல்லையால் செல்லவேண்டியதாகிவிட்டது. படத்தைப் பற்றி சொல்லச் சொன்னால் நான் சமீபத்தில் இவ்வளவு மொக்கையான படத்தைப் பார்த்ததில்லை என்றுதான் சொல்வேன். ஒரு ட்ராக்கில் ஆர்யா- ஷ்ரேயா ஜோடியின் பயணம். படு திராபை. ஷ்ரேயா சகிக்கலை. இந்த அழகில் ஒரு பாரலல் ட்ராக்கில் 1985, அங்கேயும் ஒரு ஆர்யா- ஒரு மொக்கை ஹீரோயின் ஜோடி. காதல். நண்பன். தியாகம். வசனம். போலீஸ் ட்ரெயினிங்கில் கேனை மாதிரியான ஒரு ஃப்ரெண்ட், பத்தாதுன்னு இன்னொரு கேனையாக சந்தானம். லாஜிக், கேரக்டரைசேஷன் என எப்படிப் பார்த்தாலும் கடுப்பேற்றுகிறார்கள்.

remote_image20100620-4450-1y607wc-0 நம் ஹீரோக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே போய்ச்சேரவும், நினைத்தால் ரிஸைன் பண்ணிவிட்டு திரும்ப வரும்படியாகவும் ஒரு வேலை இருக்கிறது தெரியுமா உங்களுக்கு? அதுவும் வீரம் நிறைந்த அரசுப்பணி. அதுதான் ஆர்மி ஆஃபீஸர் வேலை. இதிலும் அப்படியே.. கொஞ்சம் வித்தியாசமாக இதில் அதை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று காட்டியிருக்கிறார்கள். அதற்காக வேண்டுமானால் கொஞ்சம் பாராட்டலாம். அப்படியே பசுமையான ஊட்டியையும், இன்னும் பல லொகேஷன்களையும் அதன் இயல்போடு படமாக்கியிருக்கும் சினிமாட்டோகிராஃபருக்கு மட்டும் நம் வாழ்த்துகளைச் சொல்லி நிறைவு செய்கிறேன். வணக்கம்.

.

17 comments:

கனாக்காதலன் said...

நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி !

தமிழ்ப்பறவை said...

//பிரதாப் பாத்திரத்தில் விவேக் ஓபராயும், சூர்யா பாத்திரத்தில் நம் சூர்யாவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள் என்பதைவிடவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இன்னும் சரியாக இருக்கும்//
செம....:)

விக்னேஷ்வரி said...

பாவம் ஆதி நீங்க. ரெண்டு மொக்கைப் படமா...

SurveySan said...

பாட்டில்லையோ? இசை பத்தி ஒன்னியும் சொல்லல?

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

சுசி said...

சூர்யாவுக்கும் ஆர்யாவுக்குமாக இரண்டு படங்களும் பார்க்கலாம் போல..

Cable Sankar said...

க்ளாஸிக் பார்த்திருக்கிறீர்களா ஆதி?

philosophy prabhakaran said...

என்ன நண்பரே இது... அம்பேத்கர் படத்தை பாருங்கன்னு எல்லாரையும் ரெகமன்ட் பண்ணிட்டு நீங்க மட்டும் ரத்த சரித்திரம், சிக்கு புக்கு எல்லாம் பாத்திருக்கீங்களே... இந்த ரெண்டு படங்களையும் அடுத்த வாரம் கூட பாத்துக்கலாம்... ஆனா அம்பேத்கர் படத்தை பாக்கலன்னா அடுத்த வாரம் தூக்கிடுவாங்களே...

முரளிகுமார் பத்மநாபன் said...

ஹாய் ஆதிண்ணா, நலமா? ரக்தசரித்திரம் கில்பில் வகையறா... நான் மிகவும் எதிர்பார்ப்போடு பார்க்கக் காத்திருக்கும் படம் அது..

வர்மாவின் ஷாட்களில் சினிமா விரும்பிகள் கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்றிருக்கும், என்பது என் கருத்து.

நன்றி சரியான விமர்சனத்திற்கு

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஒண்ணு ரத்தம் இன்னொண்ணு மொக்கயா.......

சிவா என்கிற சிவராம்குமார் said...

ரத்த சரித்திரம் பாக்கணும், சிக்கு புக்கு ஹ்ம்ம்...

நர்சிம் said...

ரைட்ட்ட்டு

புதுகைத் தென்றல் said...

ஆந்திராவின் பரிதால ரவியின் கதை தான் இந்தப்படம். அவரின் மனைவியும் உயிரோடுதான் இருக்கிறாராம்.

RAMYA said...

ம்ம்ம் விமர்சனங்களா...

ரத்த சரித்திரம் படம் பேரே பயந்து வருது:(

சிக்கு புக்கு பேரு நல்லா இருக்கு... :)

விமர்சனம் நல்லா இருக்கு.. ரைட்டு முடிவு பண்ணியாச்சு.

எது பாக்கணும்... எது பார்க்கக் கூடாது...

கார்க்கி said...

பிலாசஃபி பிரபாகரன் கேட்டது கேட்குதா?

SELVENTHIRAN said...

ஷ்ரேயா சகிக்கலை //

யோவ்...!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கனாக்காதலன்.
நன்றி தமிழ்பறவை.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி சர்வேசன்.
நன்றி TVR.
நன்றி சுசி.
நன்றி கேபிள்.
நன்றி பிரபாகரன். (பாக்கணும்ங்க..)
நன்றி முரளிகுமார்.
நன்றி யோகேஷ்.
நன்றி சிவா.
நன்றி நர்சிம்.
நன்றி தென்றல்.
நன்றி ரம்யா.
நன்றி கார்க்கி.
நன்றி செல்வா.