Wednesday, December 8, 2010

'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்

நானும், நண்பர் பரிசல்காரனும் இணைந்து நடத்திய 'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' வெற்றிகரமாக நடந்து முடிந்து போட்டி முடிவுகளை ஏற்கனவே நண்பர் பரிசல்காரனின் வலைத்தளத்தில் கண்டிருப்பீர்கள். வெற்றி பெற்று மூன்று சிறப்புப் பரிசுகளையும், இரண்டு ஆறுதல் பரிசுகளையும் கீழ்க்கண்ட கதைகள் பெறுவதை அறிவீர்கள்.

தலா ரூ.400 மதிப்புள்ள புத்தகப் பரிசைப் பெறும் மூன்று சிறப்புக் கதைகள் - (தலைப்பின் அகர வரிசைப்படி..)

அதே நாள் அதே இடம் – சத்யா

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? – பார்வையாளன்

பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்

தலா ரூ.250 மதிப்புள்ள புத்தகங்களுடன் ஆறுதல் பரிசுகளைப் பெறும் இரண்டு கதைகள்

கமான்.. கமான்.. காமினி – வித்யா

வைர விழா - R V S

பரிசு பெறும் கதைகளில் ஒன்றை எழுதிய பார்வையாளன் தாம்பரத்துக்கு அருகிலேயே இருப்பதால் நாளை நேரில் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆகவே மற்ற நான்கு நண்பர்களுக்கும் அறிவித்ததைவிட அதிக மதிப்பிலான கீழ்க்கண்ட புத்தகங்கள் இன்று கூரியர் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் என்னாலும் சிறிது தாமதம் செய்யப்பட்டுவிட்டது. பொறுமையுடன் இருந்தமைக்கு வெற்றியாளர்களுக்கு நன்றி. புத்தகம் தங்களை அடைந்ததும் தயவுசெய்து ஒரு அடையாளப் பின்னூட்டம் அல்லது மெயில் தாருங்கள்.

சிறப்புப் பரிசுக்கான புத்தகங்கள் (தலா ரூ. 705) :

1. கி.ராஜநாராயணன் : கோபல்ல கிராமம்

2. கி.ராஜநாராயணன் : கோபல்லபுரத்து மக்கள்

3. சுஜாதா : தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)

4. கல்யாண்ஜி : கல்யாண்ஜி கவிதைகள்

ஆறுதல் பரிசுக்கான புத்தகங்கள் (தலா ரூ.375) :

1. கி.ராஜநாராயணன் : கோபல்ல கிராமம்+ கோபல்லபுரத்து மக்கள்+ அந்தமான் நாயக்கர் : மூன்று நாவல்கள் அடங்கிய ஒரே தொகுதி

2. கல்யாண்ஜி : கல்யாண்ஜி கவிதைகள்

இத்துடன் ஐவருக்குமே நண்பர் பரிசல்காரன் எழுதிய 'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்' என்ற சிறுகதைத் தொகுப்பும் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கிறது.

பரிசுத்தொகைக்கான பங்கை இரண்டிலிருந்து வலுக்கட்டாயமாக மூன்றாக மாற்றி ஒரு பங்கை உரிமையோடு ஏற்றுக்கொண்ட போட்டி நடுவர்களுள் ஒருவரான நண்பர் வெண்பூவுக்கு நம் நன்றி (அவர் கேட்டுக்கொண்டபடி குறிப்பிடாது இருக்கமுடியவில்லை). போட்டி குறித்து கேள்வியுற்று பாராட்டியதோடு மட்டுமல்லாது பரிசுக்கான புத்தகங்களை 15% சிறப்புக்கழிவுடன் அனுப்பித்தந்த ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ திரு. வேடியப்பனுக்கு நம் நன்றி.

மீண்டும் ஒரு முறை கலந்துகொண்டவர்கள், நடுவர்கள், பின் நின்றவர்கள், ஆதரவளித்தவர்கள், பாராட்டியவர்கள், தகுந்த விமர்சனங்களை முன்வைத்தவர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நண்பர் பரிசல்காரன் சார்பிலும், என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். நன்றி.

.

29 comments:

நர்சிம் said...

வாழ்த்துகள்

எம்.எம்.அப்துல்லா said...

இத்துடன் ஐவருக்குமே நண்பர் பரிசல்காரன் எழுதிய 'டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்' என்ற சிறுகதைத் தொகுப்பும் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கிறது

///


கலந்துகிட்டவங்களுக்கு பரிசை மட்டும் குடுங்க.கூடவே தண்டனையெல்லாம் குடுக்காதிங்க

:))

Vidhoosh said...

அப்போ கலந்து கொண்டவங்களுக்கு ஒரு பார்டிஷிபேஷன் சர்டிபிகேட் கூட கிடையாதா?

இந்தப் புத்தகங்கள் ஏற்கனவே இருந்தால்?

கனாக்காதலன் said...

வாழ்த்துக்கள் ஆதி.

பாரத்... பாரதி... said...

வாழ்த்துக்கள்

பாரத்... பாரதி... said...

//அப்போ கலந்து கொண்டவங்களுக்கு ஒரு பார்டிஷிபேஷன் சர்டிபிகேட் கூட கிடையாதா?//

இராகவன் நைஜிரியா said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

புத்தகத் தேர்வு அருமை. வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

ஸ்ரீதர் நாராயணன் said...

புத்தகங்கள் நல்ல செலக்‌ஷன் ஆதி. மிக்க நன்றி :)

வி.பாலகுமார் said...

வாழ்த்துகள்.

மாதேவி said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

வெறும்பய said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

Joseph said...

போட்டியை அறிவித்த விதம், நடத்திய விதம் , முடிவுகளை அறிவித்தது இதெல்லாம் அருமை என்றால் இந்த பரிசு புத்தக தேர்வு மிக மிக அருமை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நர்சிம், அப்பு, விதூஷ், கனாக்காதலன், பாரதி, இராகவன், உழவன், டிவிஆர், ஸ்ரீதர், பாலகுமார், மாதேவி, வெறும்பய, ஜோஸப்.. அனைவருக்கும் நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@விதூஷ்

என்ன மேடம் கிண்டலுக்கும் ஒரு அளவில்லையா? நாங்க என்ன இன்ஸ்டிடியூஷன் வச்சு கதை எழுதறவங்களுக்கு சர்டிபிகேட்டா கொடுத்துகிட்டிருக்கோம்.? :-))

பரிசுகள் ஒரு அடையாளச் சின்னமாக மதிக்கப்படவேண்டியவை என்றே எண்ணுகிறோம்.

RVS said...

நன்றி ஆதி! சரக்கு வந்து சேர்ந்தவுடன் மெயில் அனுப்பறேன்!
(வாத்யார் புக் முதல் பரிசு பெற்றவர்களுக்கு போய்டுச்சு.. ஆறுதலா இல்லைதான் இருந்தாலும் பரிசுகள் அடையாளத்திற்க்கே என்பதை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி )
வெற்றிகரமாக நடத்தி முடித்த உங்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும், வெற்றிக்கனியை சுவைத்தவர்களுக்கும், வெண்பூ, வேடியப்பன் மற்றும் நடுவர்களுக்கும் "அட்டே......ன்ஷன்" அடித்து ஒரு ராணுவ சல்யூட்!!

பாலா அறம்வளர்த்தான் said...
This comment has been removed by the author.
பாலா அறம்வளர்த்தான் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

கார்க்கி said...

good job

congrats

வானம்பாடிகள் said...

போட்டிமட்டுமல்ல புத்தகங்களும் டாப்பு:)

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்....

Dubukku said...

வாழ்த்துகள் ஆதி. இப்போதான் கவனிச்சேன்...நீங்க சேர்மாதேவி பக்கமா...ரொம்ப நெருங்கிட்டீங்க...எனக்கு அம்பாசமுத்திரம்...ஊர் பாசக்கார கூட்டமா நீங்க... சக ஊர்காரரைப் பார்ப்பது ரொம்ப சந்தோஷம்:)))

வழிப்போக்கன் - யோகேஷ் said...

Congrats for you & parisal for completing this event in a good memorable note...
(Sorry for my english comments...)

Karthik said...

Awesome work this is. Congrats everyone.

ராமலக்ஷ்மி said...

வழங்குபவருக்கும் பெறுபவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் :)!

ஆதிமூலகிருஷ்ணன் said...

RVS, பாலா, கார்க்கி, வானம்பாடிகள், வெற்றி, டுபுக்கு (வாங்க சீனியர், நானும் ரெண்டரை வருசமா எயிதிகீச்சிகினுருக்கேன். இப்பதான் உங்க கண்ணுக்கு படுறேன் போல.. ஹிஹி), யோகேஷ், கார்த்திக், ராமலக்ஷ்மி.. நன்றி அனைவருக்கும்.!

Dubukku said...

சீனியர்.....சீனியர்....- நம்மூர் அக்மார்க் நக்கல்ஸ் அப்பிடியே
அண்ணாச்சி காலக் காட்டுங்க நான் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......சரண்டர்....நாந்தேன் சாரி... விசாலமான படிப்பறிவில்லாம பாமரனாய் இருந்துட்டேன் ...திருத்திக்கிறேன்

வித்யா said...

பரிசுப் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன்.

மிக்க நன்றி உங்களுக்கும் பரிசலுக்கும் அருமையான வாய்ப்பொன்றை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு.