Thursday, December 9, 2010

ரசிகன் : சைலேந்திர பாபு

நேரிலோ, சினிமாவிலோ, பிற ஊடகங்களிலோ அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேயில்லாமலும் கூட சில நிஜ ஹீரோக்களை ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலேயே நமக்கு சட்டென்று பிடித்துப் போகின்றது.

தற்போதைய கோவை போலீஸ் கமிஷனர் டாக்டர். சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.

இவரை ஒன்றிரண்டு முறை சில டிவி பேட்டிகளில்தான் பார்த்திருக்கிறேன். அதிலேயே என்னை அவர் ரசிகனாக்கிக் கொண்டார். அவரது பேச்சில் வெளிப்படை, உண்மை, அழுத்தம், கம்பீரம், தயக்கமற்ற தன்மை, சுகமான கிராமீயத் தமிழ் என ஈர்க்கப் போதுமான அனைத்துமே இருக்கின்றன. சமீபத்திய கோவை என்கவுண்டரின் உற்சாகத் தொடர்ச்சியாக இந்தப் பகிர்வு நிச்சயமாக எழுதப்படவில்லை. அதைப் பற்றிய மாற்றுக்கருத்துகள் நமக்கு இருக்கலாம்.

Syl

சமீபத்திய ஒரு பேட்டியில் சினிமாக்களில் காட்டப்படும் ஸ்பெஷல் விளக்குகளுடன் கூடிய விசாரணை அறைகள் பற்றிக் கேட்டபோது, மெல்லிய புன்னகையுடன் 'அது அவர்களின் கற்பிதங்கள், தமிழகத்தில் இருக்கும் சுமார் 1000 காவல் நிலையங்களில் அதுபோல எங்குமே கிடையாது' என்றார். உங்களை எது இப்படியான சீருடைப்பணிக்குத் தூண்டியது என்ற கேள்விக்கு, மிடுக்கான உடையுடன் வந்து தன்னை ஈர்த்த, 'NCC' குழுவையும் பார்த்துக்கொண்ட தன் பள்ளியாசிரியர்தான் என்றார். அவர் இவரை அந்த உடையை அணிந்துவரச்செய்து 'சைலேந்திரபாபு' என்று கம்பீரமாக மொழிந்த அந்த நாளையும் நினைவு கூர்ந்தார்.

Msc., (அக்ரி) படித்து வங்கி அதிகாரியாக பணியைத் துவக்கிய சைலேந்திரபாபு பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வென்று அஸிஸ்டெண்ட் சூபரிண்டண்ட்டாக காவல் பணியைத் துவங்குகிறார். பின்னர் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாகவும், சென்னை சிட்டியின் துணை, மற்றும் இணை கமிஷனர் பதவிகளிலும் பணியாற்றி, திருச்சியில் டிஐஜியாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது கோவையின் கமிஷனராக இருக்கிறார். இதற்கிடையே 'தமிழக சிறப்பு அதிரடிப்படை' ஐஜியாகவும் சில காலம் பணியாற்றி இருந்திருக்கிறார். குழந்தைகள் தொலைந்து போதலின் பின்னணி, அதற்கான நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வுப்பணியும் மேற்கொண்டுவருகிறார்.

Sylendra-Babu-Sathyamangalam-4

கராத்தே, நீச்சல், துப்பாக்கிசுடுதல் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.  உடலைப் பற்றி பேசும் போது, 'உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அற்புதக் கருவி. இதைக்கொண்டு எதையும் சாதிக்கலாம். நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் விஷயமே..' என்கிறார். இந்தச் செய்தியை, விழிப்புணர்வை குழந்தைகள், இளைஞர்களிடத்தே கொண்டுசெல்வதிலும் பெரும் ஆர்வமிருக்கிறது அவருக்கு. தமிழிலும், இலக்கியத்திலும் பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறார். 'உடலினை உறுதி செய்', 'நீங்களும் ஐபிஎஸ் அதிகாரியாகலாம்' 'Be Ambitious' போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

தலைவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கள் காவல் பணியின் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற பெருமையோடு இந்தக்குறளை எடுத்தாள்கிறார் தன் பேச்சில்..

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
   (குறள் -560)

இந்த ஹீரோவைப் பற்றிய மேல் தகவல்களுக்கு www.sylendrababu.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.

.

20 comments:

சிசு said...

இந்தவாட்டி மொத வடை எனக்கு...:)

சிசு said...

நிஜமாகவே இவர் ஹீரோ தான்...
நல்ல பதிவு ஆதி... இப்படி சட்டுன்னு முடிந்து போனதில் சின்ன வருத்தமே... (இந்த இடுகை அளவுக்கு)

சங்கவி said...

இவர் 1992ல கோபியில் இருந்தார்.. அப்ப எங்க விடுதியின் முன்பு தான் போலீஸ் ஸ்டேசன் நிறைய முறை பார்த்து இருக்கிறேன் இவரின் மிடுக்கான நடையை...

கர்நாடக தமிழர் பிரச்சனை வந்த சமயம் அது என்று நினைக்கிறேன்... அப்போது எங்களின் ஹீரோ இவர்தான்...

ரிஷபன்Meena said...

சைலேந்திர பாபு பாராட்டத் தகுந்த அதிகாரி. தொப்பையே இல்லாமல் மிடுக்காக இருப்பார்.

கோவை சம்பவத்தில் என்கவுண்டர் மிகத் தேவையான ஒன்று.

அமுதா கிருஷ்ணா said...

ரிஷபன் சொன்னது போல் தொப்பை இல்லாததற்கு பாராட்டு நிச்சயம்..

Balaji saravana said...

//அதிலேயே என்னை அவர் ரசிகனாக்கிக் கொண்டார் //
;)

புதுகைத் தென்றல் said...

போலிசும் தொப்பையும் பிரிக்க முடியாது எனும் நினைப்பை உடைத்து உண்மையாக உழைக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நானும் இவரைப்பற்றி படித்திருக்கிறேன்.

விக்கி உலகம் said...

போலிசு தொப்பை என்பது வருமானத்தாலோ(சைடு), இலவச உணவுகளாலோ மட்டும் வருவதில்லை(நம்பிட்டீங்கல்ல!) மாறாக சரியான நேரத்திற்கு சாப்பிடாதது மற்றும் உடல் பயிற்சி இல்லாதது தான் காரணம்.

குசும்பன் said...

ஆதி இவரை பார்க்கும் பொழுது எல்லாம் எனக்கு உங்க நினைப்பு வரும் ஆதி. அதே கம்பீரம், அதே மிடுக்கு. என்ன? ஒரே ஒரு வித்தியாசம் அவரு மருதமலை அர்ஜூன் மாதிரின்னா, நீங்க மருதமலை வடிவேலு அவ்வளோதான்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிசு, சங்கவி, ரிஷபன், அமுதா, பாலாஜி, தென்றல், விக்கிஉலகம்.. நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@குசும்பன்,

கோ இன்ஸிடெண்ட். எனக்கும் அவரப்பாக்கும் போது உங்க நினைப்புதான் வரும். ஒரே ஒரு வித்தியாசம், அவரு அர்ஜுன், நான் வடிவேலுன்னா நீங்க வடிவேலுவோட ஆயா மாதிரி.

பார்வையாளன் said...

ஒருவர் உயர்வுக்கு காரணம் அவர் தன் வேலையை எப்படி செய்கிரார் என்ப்தை பொறுத்தது என வள்ளுவர் சொன்னது நினைவுக்கு வருகிறது

middleclassmadhavi said...

இவர் எங்கு பணி செய்தாலும் அங்கு முத்திரை பதிப்பார்; நம் ஊரை விட்டு மாற்றலாகிப் போகிறாரே என்று நல்லவர்களை வருத்தப்படவைப்பார்

கனாக்காதலன் said...

நல்ல பகிர்வு. நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

காவேரி கணேஷ் said...

அருமையான பகிர்வு

அத்திரி said...

அண்ணே இவரு நல்ல போலீசா??? கெட்ட போலீசா??

ஈரோடு கதிர் said...

மிக நல்ல மேடைப் பேச்சாளரும் கூட!

நண்பன் said...

அன்புள்ள ஆதிக்கு..

மிக நல்ல பகிர்வு..

திரு சைலேந்திர பாபு அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன்..

அவருடைய இணையத்தளம் உங்கள் மூலம் அறிந்ததற்கு... நன்றிகள் உரித்தாகுக..

ஆதிமூலகிருஷ்ணன் said...

பார்வையாளன், மாதவி, கனாக்காதலன், டிவிஆர், காவேரிகணேஷ், அத்திரி, கதிர், நண்பன்..

நன்றி.