Tuesday, December 21, 2010

அனுபவம் பேசுகிறது

2 முதல் 4 வயது வரையிலான பிள்ளைகள் வைத்திருப்போருக்கான எச்சரிக்கை :

* பைக்கில் முன்புறம் குழந்தையை வைத்துக்கொண்டு சில விநாடிகள்தானே என்று பராக்கு பார்ப்பதோ, கவனமில்லாமல் இருப்பதோ ஆபத்து. ஹேண்டில் பாரை அவர்கள் திருப்பிவிடக்கூடும். நிறுத்தப்பட்ட வண்டியானாலும் இஞ்சினை அணைத்து சாவியை எடுத்துவிடுங்கள்.

* பைக் பயணம் முடிந்து பிள்ளைகளை இறக்கிவிடும் போது கண்கொத்திப் பாம்பாய் சைலன்ஸரைத் தொட்டுவிடாமல் செல்கிறார்களா என்பதைக் கவனிக்கவும். தொடக்கூடாது என்பதை ஆணித்தரமாக வற்புறுத்தாதீர்கள். சில பிள்ளைகளுக்கு அதன் பின்னர்தான் அதைத் தொட்டுப்பார்க்கும் ஐடியாவே வரக்கூடும்.

* இந்த வயதில் பொம்மைகளை எறிந்துவிட்டு பல பிள்ளைகளும் நம் மீது தோள்களிலும், வயிற்றிலும், முடிந்தால் தலையிலும் ஏறி விளையாடுவார்கள். டிவி பார்க்கும் போது, படுத்துக்கொண்டே படிக்கும் போது என கவனம் தப்பிவிடாதீர்கள். பிள்ளையையும், உங்கள் கண்கள், தொண்டை போன்ற சென்சிடிவான உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

* தூள் மற்றும் கூழ்ம நிலையில் இருக்கும் பொருட்கள் அனைத்திலும் கவனமாக இருங்கள். முகப்பவுடர், கடலைமாவு, பற்பசை போன்ற பரவாயில்லை ரகம் ஒருபுறம் இருந்தாலும் மிளகாய்ப்பொடி, எறும்புப்பொடி, மருந்து ட்யூப்புகள் போன்ற ஆபத்தான ரகமும் இருக்கிறது. இவை அவர்களிடம் மிகவும் ஆர்வம் தூண்டும் ஒரு பொருட்களாகவும், எளிதில் கைகள், முகம், வாயில் பரவக்கூடிய பொருட்களாகவும் இருக்கின்றன.

* ஊசிகள், தீப்பெட்டிகள், கண்ணாடிப் பொருட்கள் போன்ற பொருட்களின் ஆபத்து தெரியாத நிலையில் அவற்றை கையாளும் லாவகம் இந்த வயதில் வந்துவிடுகிறது. ஆகவே இது போன்ற பொருட்களின் மீது கவனம் அவசியம்.

* செல்போன், ரிமோட் போன்ற பொருட்களை அவர்களிடம் இருந்து உங்களால் தவிர்க்கவே இயலாது. அவை உடைந்து தொலைந்தால் கூட பரவாயில்லை என்ற நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள். அது உடைந்தால் கூட பரவாயில்லை. மாஸ்டர் ரீசெட் ஆகக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. நீங்களும் என்னைப்போல பேக்கப் எடுத்துவைக்காத பேக்காக இருந்தால் போனில் இருந்த 800 எண்களையும் தொலைத்துவிட்டு யாரையும் திட்டக்கூட முடியாமல் ஒருமணி நேரம் மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருக்க நேரிடும்.

* டிவி, கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை எறிதாக்குதலில் இருந்து காப்பாற்றுவது உங்கள் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயம். அட்லீஸ்ட் நீங்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள்.

* கதவுகள், ஜன்னல்கள், பீரோ, சூட்கேஸ்கள் திறந்துமூடுகையில் பிள்ளைகள் அருகிலிருந்தால் டபுள் கவனம் தேவை. அதுவும் இந்த வயதில் கதவுகளையும், தாழ்களையும் அடைக்கவும் திறக்கவும் அறிந்திருப்பார்கள். சரியானபடி செய்கிறார்களா என்பதை பல தடவைகள் உறுதி செய்துகொள்ளுங்கள்.

* தரைத்தளங்களில் இருப்போர் கழிவுநீர்ப் பாதைகள், சாலை, தெரு வாகனப் போக்குவரத்து போன்றவற்றிலும், மாடிகளில் இருப்போர் படிக்கட்டுகள், பால்கனி விளிம்புகளிலும் கவனமாக இருங்கள்.

.

34 comments:

MSK said...

me the first

MSK said...

//அனுபவம் பேசுகிறது//

:)))

கனாக்காதலன் said...

:)

சுசி said...

சுபாவுக்கு சுத்திப் போடுங்க ஆதி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அனுபவம் பேசுகிறது//


enna aachchu

Balaji saravana said...

சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கோ ;)

புன்னகை said...

ரொம்பப் பாவம் ஆதி நீங்க!

வெறும்பய said...

ரொம்ப அவஸ்தை பட்டிருபீங்க போலிருக்கே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனுபவப்பாடம் :)

பதியவேண்டிய விசயம் தான்..

புதுகைத் தென்றல் said...

செல்போனில் 800 காண்டாக்ட் போன போது உங்க எக்ஸ்பிரஷனை ரொம்ப ரசிச்சேன். :)))

நிஜமாவே சின்ன சின்ன விஷயங்கள் தெரிஞ்சிருந்தும் அசால்ட்டா இருப்பவர்களுக்கு இந்த அனுபவங்கள் ஒரு பாடமே.

அனுஜன்யா said...

லாவகம் இல்லை. இலாகவம். என்னை ஒரு மோதிரக் கை குட்டியதால் இதனைத் தெரிந்து கொண்டேன். (இலகு என்பதில் இருந்து தோன்றிய வார்த்தையோ?)

சுபாவுக்கு : இதெல்லாம் போறாது. இன்னும் இன்னும் ....

அனுஜன்யா

Anonymous said...

பல பெற்றோருக்கு தேவையான நல்ல டிப்ஸ்

குசும்பன் said...

இப்பொழுதான் வயசுக்கு தகுந்த மாதிரி ஒரு பதிவு எழுதியிருக்க.

வாழ்த்துக்கள் தகப்பா!

குசும்பன் said...

//பிள்ளையையும், உங்கள் கண்கள், தொண்டை போன்ற சென்சிடிவான உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். //

வின்னர் படத்தில் வடிவேலு கால அகட்டிவெச்சிக்கிட்டு விட்டத்த பார்த்து காத்து வாங்கிட்டு தூங்குவது எவ்வளோ சுகம் என்று சொல்லிவிட்டு தூங்குவது போல் மறந்துகூட தூங்கிவிடக்கூடாது.

அப்புறம் செலவே இல்லாம கு.க நடந்து முடிஞ்சிடும்.

முடிஞ்சவரை கிரிக்கெட் விளையாடும் பொழுது போட்டுக்கும் சேப்கார்ட் மாதிரி போட்டுக்கிட்டு கூட தூங்கலாம்!

குசும்பன் said...

டேப்டாம் மேல ஒன்னுக்கு அடிப்பதை எப்படியா தடுப்பது? ஏதும் யோசனை சொல்லேன்.

லேப்டாப்புக்கு எல்லாமா "கவர்" போட முடியும்?

நர்சிம் said...

முக்கியமான ஒன்று.. குழந்தையை பக்கத்தில் வைத்துக்கொண்டு போனில், ஆபிஸ்ல இருக்கேன் ஆஸ்பத்திரில இருக்கேன் என்று சொல்லாதீர்கள்.. ஏண்டா ( டாவுக்கு பக்கத்துல நாமளா டி சேர்த்து டாடின்னு சொல்றான்னு நினைச்சுக்கணும்)பொய் சொல்றன்னு சொல்லக்கூடும்... ;););)

உமாபதி said...

solla vendiya karuthukkal. Anaithu thaimarkalum ariya vendiyathu

nanri

Karthik said...

Hahaha ovvoru advice-kku pinnal irukkara kathaiyum purinjikka mudithu. :-))

ஹுஸைனம்மா said...

உங்களை இப்படிப் பொறுப்பானத் தகப்பனாக மாற்றிய ரமாவுக்கு வாழ்த்துகள்!! இதற்காக ரிஸ்க் எடுத்து, தைரியமாக சுபாவை உங்கள் பொறுப்பில் விட்டிருக்கிறாரே!!

ஈரோடு கதிர் said...

எனக்கு இவ்வளவு அனுபவம் இல்லாவிட்டாலும், நானும் கொஞ்சம் அனுபவஸ்தன்தான்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

MSK,

கனாக்காதலன்,

சுசி,

TVR,

பாலாஜி (ஹிஹி),

புன்னகை,

வெறும்பய,

முத்துலக்ஷ்மி,

தென்றல் (நாம இம்சை படுறோம்னா முதல்ல சந்தோசப்படுவீங்களே),

அனுஜன்யா (ஓகே, மாத்திடுறேன். பை தி வே.. நீங்க மோதிரம் போட்டிருக்கீங்களா?)

வர்மா,

குசும்பன் (இலைமறை காய்மறையா சொல்ல ட்ரை பண்ணினா போட்டு உடைச்சுடுவியே வெக்கங்கெட்ட மாமா.. அப்பாலிக்கா லாப்டாப்பில் ஒண்ணுக்கு அடிச்சா ஒண்ணியும் செய்யமுடியாது. எனக்கு டெஸ்க்டாப் என்பதால் கீபோர்டை கழற்றி வெயிலில் காய வைத்துவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். அதில் ஏறி டான்ஸ் ஆடுவான். அதற்காக. பல தடவைகள் இப்படி ஆகியிருக்கின்றன)

நர்சிம் (ஹிஹி),

உமாபதி,

கார்த்திக்,

ஹுஸைனம்மா (ஓஹோ, இதுக்கு பேர்தான் பொறுப்போ?)

கதிர்..

அனைவருக்கும் நன்றி.

வானம்பாடிகள் said...

ப்ச்! அனுபவம் போறலை. ங்கொய்யால நீ ஆன வரைக்கும் உசாரா இருந்துதான் பாரேன். நான் எப்படி ஆப்பு வைக்கிறேன்னு விதவிதமா வைப்பாய்ங்க:))

அன்புடன் அருணா said...

/நீங்களும் என்னைப்போல பேக்கப் எடுத்துவைக்காத பேக்காக இருந்தால் போனில் இருந்த 800 எண்களையும் தொலைத்துவிட்டு யாரையும் திட்டக்கூட முடியாமல் ஒருமணி நேரம் மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருக்க நேரிடும்./
ஹாஹாஹாஹா!!!!
குழந்தைங்க நலம்தானே????

Jaleela Kamal said...

ஓ தான் அனுபவம் பேசுகிறதா?

நல்ல பகிர்வு

நாடோடி இலக்கியன் said...

அநியாய‌த்துக்கு ப‌ய‌முறுத்துறீங்க‌ளே...ம்ம் திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை ப‌டிச்சே அட‌ங்கியிருக்க‌ணும்.

:)))))))))

காவேரி கணேஷ் said...

உண்மையான அனுபவஸ்தன்.

அமுதா கிருஷ்ணா said...

அசத்தலான அனுபவங்கள்..

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

பிரயோசனமுள்ள எழுத்துக்கள் நன்றி'பா...

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த அக்கறையுடன் அனுபவம் பேசியிருக்கிறது:)! நன்று.

மாதேவி said...

இவ்வளவு சூட்டியா. அனுபவியுங்க:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்களும் என்னைப்போல பேக்கப் எடுத்துவைக்காத பேக்காக இருந்தால் //

:)))))))

ஹே ஹே

ஒரே ஒரு குழந்தையை வெச்சுக்கிட்டு நீங்க படற பாடு இருக்கே ஆதி

அய்ய்ய்ய்ய்ய்ய்யோ........ :))))))

தராசு said...

சுபா,

உங்கிட்ட இருந்து நான் இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வானம்பாடிகள் (இதுவே முடியலை. இன்னுமா?),

அருணா (குழந்தைங்க இல்ல குழந்தை. நலமே!),

ஜலீலா,

இலக்கியன்,

காவேரி கணேஷ்,

அமுதா,

மனோ,

ராமலக்ஷ்மி,

மாதேவி,

அமித்துஅம்மா (எங்கே ரொம்ப நாளா ஆளைக்காணோமே.. உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. உங்களைப் போலவே சின்ன அம்மிணியையும் காணோம்.),

தராசு (யோவ்)..

அனைவருக்கும் நன்றி.