Thursday, December 23, 2010

கனவுகளிலிருந்து தப்பிச்செல்தல்

நிலையற்ற தன்மையையும், இன்ப துன்பங்களையும் நிகழ்த்திச் செல்வது இந்த வாழ்வு மட்டுமல்ல, எனக்குள்ளே இருக்கும் நானும்தான். எனக்காக மட்டுமே நான் தினமும் உருவாக்கும் இந்தக் கனவுகள் எனக்குப் பிடித்தமானதாக மட்டுமே இருப்பதில்லை. ஆகவே இரண்டு நான்கள் இருப்பது உறுதியாகிறது. உள்ளிருக்கும் நான் உருவாக்கினாலும் அதை அனுபவிக்க நேருவதென்னவோ நான்தான். டிராமா, செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன், போர்னோ என நான் உகந்து உள்ளிருந்தாலும் இந்த ஹாரர் த்ரில்லரை மட்டும் அனுபவிக்கமுடியவில்லை. பயந்து நடுங்கிப் போய்விடுகிறேன். நல்லவேளையாக இப்போதெல்லாம் கனவிலிருக்கிறேன் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல, அதிலிருந்து மீளும் உபாயமொன்றையும் அறிந்துவைத்திருக்கிறேன். நான் பதறி வெளியேறுவதைக் கண்டு நான் சிரித்துக்கொண்டிருப்பேனோ? எதுவாயினும் பழிக்குப் பழியாய் உள்ளிருக்கும் என்னை பயமுறுத்த நான் ஏதாகிலும் செய்வேன் விரைவில்.

ஓவியம் : நிலா

17 comments:

பிரதீபா said...

அடி பலமோ? :) பாவம்.

பிரதீபா said...

//இரண்டு நான்கள் இருப்பது உறுதியாகிறது// - ஒன்னு ப்ளைன்; இன்னொன்னு பட்டர்.

பிரதீபா said...

//இந்த ஹாரர் த்ரில்லரை மட்டும் அனுபவிக்கமுடியவில்லை. பயந்து நடுங்கிப் போய்விடுகிறேன்//- இருக்காதா பின்னே? இது உங்களுக்கு மட்டுமில்லை ஆதியண்ணே, பல ரங்கமணிகளுக்கு இதே மாதிரி தான். எங்கே, கண்ணாடி முன்னாடி போயி நின்னு சொல்லிக்குங்க பாப்போம், "நீ தைரியசாலி, பயப்படக் கூடாது"

பிரதீபா said...

//எதுவாயினும் பழிக்குப் பழியாய் உள்ளிருக்கும் என்னை பயமுறுத்த நான் ஏதாகிலும் செய்வேன் // - ஓடுங்க, அது நம்மை நோக்கித் தான் வருது.

பிரதீபா said...

என்னங்க ஆதியண்ணே, ஒருத்தரையும் காணோமே?

♠ ராஜு ♠ said...

ஒத்துக்க மாட்டோம்!
Enter தட்ட மறந்துட்டீங்களா..?

♠ ராஜு ♠ said...

நிலையற்ற
தன்மையையும்,
இன்ப துன்பங்களையும்
நிகழ்த்திச் செல்வது
இந்த வாழ்வு மட்டுமல்ல, எனக்குள்ளே
இருக்கும் நானும்தான்.
எனக்காக மட்டுமே
நான் தினமும்
உருவாக்கும் இந்தக்
கனவுகள் எனக்குப்
பிடித்தமானதாக மட்டுமே இருப்பதில்லை.
ஆகவே இரண்டு நான்கள் இருப்பது உறுதியாகிறது.
உள்ளிருக்கும் நான் உருவாக்கினாலும் அதை அனுபவிக்க நேருவதென்னவோ நான்தான். டிராமா,செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன், போர்னோ
என நான் உகந்து உள்ளிருந்தாலும் இந்த ஹாரர் த்ரில்லரை மட்டும் அனுபவிக்கமுடியவில்லை.
பயந்து நடுங்கிப்
போய் விடுகிறேன்.
நல்லவேளையாக
இப்போதெல்லாம் க
னவிலிருக்கிறேன் என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல, அதிலிருந்து மீளும் உபாயமொன்றையும் அறிந்துவைத்திருக்கிறேன்.
நான் பதறி வெளியேறுவதைக்
கண்டு நான் சிரித்துக்கொண்டிருப்பேனோ? எதுவாயினும்
பழிக்குப் பழியாய் உள்ளிருக்கும் என்னை பயமுறுத்த
நான் ஏதாகிலும் செய்வேன் விரைவில்.

இப்பிடீருந்தாதான் கவிதையாம்!

Balaji saravana said...

//ஏதாகிலும் செய்வேன் விரைவில் //
அட்டகாசமான "ஹாரர் தொடருக்கு" முன்னுரையா இத எடுத்துக்கலாமா ஆதியண்ணே?
இல்ல ஒன்லி பில்ட் அப் மட்டும் தானா ;)

க.பாலாசி said...

என்னடாது படம் எங்கயோ பாத்தமேன்னு நினைச்சேன்.. சூப்பர் நிலா.. போனாப்போவுது போஸ்ட்டும்.. :-)))

ஈரோடு கதிர் said...

||போனாப்போவுது போஸ்ட்டும்.. :-))) ||

ரொம்ப குசும்பு பாலாசி!

தராசு said...

இது இன்னாதிது,

கவுஜயா, இல்லை வேற எதுனாச்சுமா,

இன்னாவோ போ, ஆனா ஷோக்கா கீதுப்பா

அமிர்தவர்ஷினி அம்மா said...

படத்துக்காக கவிதை (உரைநடை) எழுதுனீங்களா?

வானம்பாடிகள் said...

டக்கரு

புன்னகை said...

Wow!!!!! :-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

பிரதீபா, (ப்ளைன், பட்டர்.. :-)))))))

ராஜு, (நான் இப்ப கேட்டனா? :-))))

பாலாஜி, (எப்பிடில்லாம் சிந்திக்கிறீங்கையா? ஒண்ணு எழுதிட்டா போச்சி :-)))))

பாலாசி, (போனா போவட்டுமா? யோவ்.. :-)))))

கதிர்,

தராசு,

வானம்பாடிகள்,

அமித்துஅம்மா,

புன்னகை..

நன்றி.. நன்றி.!!

ரோகிணிசிவா said...

க்யுட் படம் & எண்ணச்சிதறல்கள் இன்செப்சன் எபக்ட் ?

cheena (சீனா) said...

அட நிலா வரைஞ்சதா - செல்லக்குட்டிக்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - நட்புடன் சீனா