Saturday, December 25, 2010

குறி தவறிய மன்மதன்அம்பு

எப்போதும் ஒரே மாதிரி பண்ணிக்கொண்டிருக்காமல் ஏதாவது வித்தியாசமான வடிவங்களை முயற்சிக்கலாமே என்று சிலர் பிசுறு பிடித்து அலைவதுண்டு. நான் கூடத்தான் நேற்று கவிதை மாதிரி ஒன்றை, அல்லது கவிதையாகியிருக்கவேண்டிய ஒரு விஷயத்தை அப்படியே போட்டுத்தான் பார்க்கலாமே என்று போட்டேன். (நீங்கள் யாரும் படித்தீர்களா என்பது வேறு விஷயம்). நல்ரசனை என்று ஒரு வார்த்தையை கமல்ஹாசன் பயன்படுத்திவருகிறார். வித்தியாசமான வடிவங்கள் அல்லது புதிய வடிவம் என ஏதாவது செய்வதில் ஒரு ஆர்வம் இருந்துகொண்டேயிருக்கும் போதும் ஒரு படைப்பாளிக்கு  வழக்கமான சிலவற்றையும் செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது பல்வேறு காரணங்களால். அல்லது அந்த வழக்கமான விஷயங்களின் உள்ளேயும் ஏதாவது வெரைட்டி செய்து பார்க்கவேண்டியதுமிருக்கிறது. ஏனெனில் அவர்கள் முதலில் திருப்தி செய்யவேண்டியிருப்பது அவர்களுக்குள் இருக்கும் முதல் ரசிகனை. அவ்வகையில் கமல்ஹாசன் ஒரு ரசிகன். ஒவ்வொரு படைப்பினையும் அவர் அவருக்குப் பிடித்தே உருவாக்குகிறார். ஆனால் அது ரசிகனுக்குப் பிடிக்கிறதா என்பதுதான் கேள்வி. அங்கேதான் ஒரு நாணயம் சுண்டப்படுகிறது.

ஆர்மி ஆபீசர், அதற்கான 'ஒரு சோறு' காட்சி, இறந்துபோன மனைவி, ஆள்மாறாட்ட அல்லது கிரேஸி ஸ்டைல் காமெடி, காம்ரேட் சிந்தனையைக் காட்டும் வசனங்கள் என நிறைய பார்த்துவிட்ட காட்சிகள் இந்தப்படத்திலும் இருப்பது ஒரு கமல் ரசிகனாக ஒரு சோர்வைத்தந்ததை மறுக்கமுடியாது. அதோடு கமல்-திரிஷா காதலில் அழுத்தமின்மை (அந்தப் பாடலைத்தான் வெட்டிவைத்துவிட்டார்களோ?), மாதவன் –சங்கீதா இணைப்பில் அழுத்தமின்மை போன்றவையும் குறைதான். இருப்பினும், எல்லாவற்றையும் மீறி கமலஹாசனையும், அவர் படங்களையும் ரசிக்கக் காரணங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. ரமேஷ் அரவிந்த், திரிஷா, உஷாஉதூப், சங்கீதா என ஒவ்வொரு கிளைக் கதைகளுடன் கூடிய பாத்திரங்கள் அருமை. அவற்றில் நம் நடிகர்களின் பங்களிப்பு சிறப்பு. கமல்ஹாசன் ஒரு தேர்ந்த வசனகர்த்தா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். திரிஷா- சங்கீதா, திரிஷா- மாதவன், கமல்- திரிஷா இடையேயான பல இடங்களில் வசனங்கள் மிகவும் ஆழமானவை, ரசனைக்குரியவை.

Manmadhan-Ambu-Stills-3

கொலோஸியமில் கமல் காளையுடன் மோதும் காட்சியில் டபுள் ஆக்ஷனுக்கு பயன் படுத்தும் லேயர் முறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். என்னிடமிருந்து இந்த ஒரு விஷயம் மட்டும் தப்பவே முடியாது. யாருகிட்ட.? ஹிஹி.. அந்தக் காட்சியைப்போலவே படம் முழுவதும் ரோம், வெனிஸ், கடல், கப்பல் என ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனின் பங்கு சிறப்பானது. காட்சிகள் கண்கள் நிறையச்செய்தன. மொத்தமாக சினிமா மனம் நிறையச்செய்ததா என்று கேட்டால் மட்டும் தயங்க வேண்டியதிருக்கிறது.

ஒரு ரசிகனாக நான் கமல்ஹாசனிடமிருந்து எதிர்பார்ப்பது ஹேராம், அன்பே சிவம் போன்ற அரிய வகை சினிமாக்களை. அல்லது பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற ரசனையான காமெடி சினிமாக்களை.. இவ்வகையான மன்மதன் அம்புகளை அல்ல. யாரையும் விட கமல்ஹாசன் எழுச்சியிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் விரைந்து மீள்பவர். தீபாவளி முடிந்த அடுத்த நாளே அடுத்த தீபாவளிக்காக காலண்டரைப் பார்த்துக்கொண்டு காத்திருக்கத் துவங்கும் சின்னஞ் சிறுவனைப்போன்றதுதான் என் நிலைமை. வெற்றிப்படமோ, தோல்விப்படமோ, பிடித்த படமோ, பிடிக்காத படமோ.. அதேதான் எனதும், இதோ அடுத்த படத்துக்காக காத்திருக்கத் துவங்குகிறேன்.

.

25 comments:

Cable Sankar said...

ரைட்டு..

பா.ராஜாராம் said...

அம்பு தைத்ததோ இல்லையோ, உம்ம பிரசென்டேசன் தைக்கிறது, ஓய்! :-)

பாஸ்கர் said...

சார், நீங்கள் அநியாயத்திற்கு நியாயமா இருக்கிறீர்கள். நன்றி. குறுந்தகடில் தான் படம் பார்க்க வேண்டும்.

philosophy prabhakaran said...

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதுகிறீர்கள்... ஒன்றும் விளங்கவில்லையே...

விக்கி உலகம் said...

நான் எப்படி எடுத்தாலும் நீ பாத்துதான் ஆகணும்னு யார் முடிவு பண்ணாலும் - பாக்கறவங்க முடிவே இறுதியானது.

Karthik said...

Ayyo padam mokkaiya? :-(

புருனோ Bruno said...

//நல்ரசனை என்று ஒரு வார்த்தையை கமல்ஹாசன் பயன்படுத்திவருகிறார். வித்தியாசமான வடிவங்கள் அல்லது புதிய வடிவம் என ஏதாவது செய்வதில் ஒரு ஆர்வம் இருந்துகொண்டேயிருக்கும் போதும் ஒரு படைப்பாளிக்கு வழக்கமான சிலவற்றையும் செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது பல்வேறு காரணங்களால். அல்லது அந்த வழக்கமான விஷயங்களின் உள்ளேயும் ஏதாவது வெரைட்டி செய்து பார்க்கவேண்டியதுமிருக்கிறது. ஏனெனில் அவர்கள் முதலில் திருப்தி செய்யவேண்டியிருப்பது அவர்களுக்குள் இருக்கும் முதல் ரசிகனை. அவ்வகையில் கமல்ஹாசன் ஒரு ரசிகன். ஒவ்வொரு படைப்பினையும் அவர் அவருக்குப் பிடித்தே உருவாக்குகிறார். ஆனால் அது ரசிகனுக்குப் பிடிக்கிறதா என்பதுதான் கேள்வி. அங்கேதான் ஒரு நாணயம் சுண்டப்படுகிறது.
//

சூப்பர்

நீங்கள் இலக்கியவாதியாகிக்கொண்டிருக்கிறீர்கள்

nigdyn said...

same feeling!!!!

SanjaiGandhi™ said...

பதிவில் இருக்கும் படத்துக்கும் தலைப்புக்கும் எதும் தொடர்பிருக்கா மாமா? :)

sivakasi maappillai said...

//இதோ அடுத்த படத்துக்காக காத்திருக்கத் துவங்குகிறேன்//


அடுத்த படமும் இதைவிட மொக்கையாத்தான் இருக்கும்... காத்திருங்கள்

Funny Collections said...

100% Genuine & Guarantee Money Making System. (WithOut Investment Online Jobs).

Visit Here For More Details :

http://bestaffiliatejobs.blogspot.com

பிரதீபா said...
This comment has been removed by the author.
பிரதீபா said...

http://www.speedysigns.com/images/decals/jpg/H/41/357.jpg

அறிவிலி said...

@Sanjay :-)))

Margie said...

/*என்னிடமிருந்து இந்த ஒரு விஷயம் மட்டும் தப்பவே முடியாது. யாருகிட்ட.? ஹிஹி..*/

:-)

Margie said...

/*யாரையும் விட கமல்ஹாசன் எழுச்சியிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் விரைந்து மீள்பவர்.*/

எங்க குதிரை-ய விட சீக்கிரம் எந்திரிச்சுடுவரா?

பார்வையாளன் said...

நீங்கள் வலியுறுத்தும் நேரேஷன் ஸ்டைல், தொடர்பு தன்மை என எதுவும் இல்லாத இந்த குப்பையை விட, அதை பற்றி நீங்கள் எழுதி இருப்பது சீராகவும், நேர்த்துயாகவும் இருக்கிறது..

.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல் பத்தி மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது ஆதி.

விக்னேஷ்வரி said...

படம் எப்படி இருந்தாலும் கமலுக்காகப் பார்க்கத் தான் போறேன். ஆனாலும் எல்லா இடத்திலும் தேடித் தேடி விமர்சனம் வாசிக்கத் தோணுது. உங்களின் மனோ நிலை தான் எனதும். இது நல்லாயில்லைன்னா அடுத்ததுக்குக் காத்திருப்போம். அம்புட்டு தான்.

சீனி said...

கமல் வசனகர்த்தாவாக பல இடங்களில் மின்னுகிறார். தாங்கள் சொன்னது போல் திரிஷா கமல் காதலில் அழுத்தம் இல்லை. சங்கீதா மாதவன் இணைப்பு என்னமோ மேட்ரிமோனியல் மாதிரி இருந்துச்சு. கடைசி அரைமணி நேரம் ரியல் ஃபன்னி வயறு குலுங்க சிரித்தேன். படம் முழுவதும் அப்படி இருந்திருந்தால் இது நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் ஏமாற்றமே.

Ravi said...

See this link - Kamal flashback - http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0

எம்.எம்.அப்துல்லா said...

இந்த விமர்சனத்தைத் தாங்கள் தமிழில் எழுதி இருக்கலாமே???

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேபிள், பாரா, பாஸ்கர், பிரபாகரன், விக்கி உலகம், கார்த்திக், ப்ரூனோ, நிக்டின், சஞ்சய், சிவகாசி, பிரதீபா, அறிவிலி, மார்கீ, பார்வையாளன், அமித்துஅம்மா, விக்னேஷ்வரி, சீனி, ரவி, அப்துல்லா (யோவ்..)..

அனைவருக்கும் நன்றி.!

மோகன் குமார் said...

//இந்த விமர்சனத்தைத் தாங்கள் தமிழில் எழுதி இருக்கலாமே??? //

:)))))

இரசிகை said...

mm...

kamal-kkaaha kaathirukkalaam.