Wednesday, December 28, 2011

சவால் போட்டி : பரிசளிப்பு விழா : விடியோ

கடந்த 18.12.11 அன்று சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நிகழ்ந்த, யுடான்ஸ், ஆதி, பரிசல் இணைந்து நடத்திய 'சவால் சிறுகதைப்போட்டி -2011' வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவின் காணொளித் தொகுப்பு.

விழா பற்றிய கட்டுரையைப் படிக்க இங்கு செல்லலாம்.

பிற்சேர்க்கை :


காணொளியில் ஏதோ கோளாறு காரணமாக 20:13 லிருந்து 21:40 வரை ஐயா ராஜசுந்தரராஜன் அவர்கள் பேசுவது தடைபட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகிறோம். அதன் பின்பும் கூட‌ ஒன்றுமில்லை. ஒளிப்பதிவாளர் பெயரும், போட்டோவும் வருகிறது. ஹிஹி.!

Monday, December 26, 2011

மணிக்குட்டி

லேசா போனடிக்கித சத்தம் கேட்டு அடுக்காளையிலயிருந்து ஓடியாந்து தேடிப்பாத்தேன். தலவாணிக்கி கீழ கிடந்துருக்கு போனு.. அதான் சத்தமே கேக்கல.. எடுத்து யாருனு பார்த்தேன். தெங்காசியிலருந்து தமிழரசி..

எடி.. தமிழு.. எப்பிடியிருக்க? அத்த எப்பிடியிருக்கு?”

எல்லாரும் நல்லாயிருக்கம் மயினி. நீங்க எப்பிடியிருக்கீங்க.?”

எனக்கென்ன, நல்லாத்தான் இருக்கேன். என்ன திடீல்னு போனு? ஒரே அலுவசியமால்லா இருக்கு?”

ஒண்ணுமில்ல மயினி, சும்மாதான்..””

“அட, பரவால்ல.. சும்மா சொல்லு.. விசியமில்லாம கூப்புடமாட்டியே நீயி””

“நல்ல விசியம்தான் மயினி. +2வுல நா எடுத்த மார்க்குக்கு கோட்டாவுல எனக்கு இன்ஜினியங் சீட்டு கிடச்சிருக்கு. ஃபீஸ் மட்டும் கட்டுனாப் போதும். நானாவது படிச்சு நல்லா வரணும், அம்மாவ பாத்துக்கணும் நினைக்கேன்.. அம்மாதான் படிச்சது போதும்னு போட்டுப் பிடிவாதம் பிடிக்கா.. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க மயினி.. தமிழரசியோட குரல் அழுவத மாதிரி ஆயிப்போச்சு.

அதுக்கு ஏம்டி அழுவுற? நம்ப குடும்பத்துல பெயிலாவாம படிக்கிததே பெரிய அதிசயம். நீ நல்லா படிச்சி காலேஜிக்கிப் போனா நல்லதுதான.. நீ கவலப்படாத, அத்தக்கிட்ட போனக் குடு, நா பேசுதேன்..

நா சின்ன வயசுல லீவுக்கு தெங்காசிக்கு தொரச்சியத்த வீட்டுக்கு அடிக்கடி போவேன். மாமா செத்துப்போனப்பொறம்தான் குடும்பம் கொஞ்சம் நொடிச்சிப்போச்சி. இருந்தாலும் தொரச்சியத்த நல்ல வலுவான ஆளு. ரெண்டு பொண்ணுகள வச்சிகிட்டு ஒருவழியா தனியாவே அதுகள படிச்சி ஆளாக்கிட்டா. அதுலயும் தமிழரசி படிப்புல நல்ல கெட்டிக்காரி. இப்பிடியா நம்ம குடும்பத்துல பெரிய படிப்பு படிச்சது யாரு இருக்கா? இப்பிடி படிக்கித புள்ளைய மேல படிக்க வச்சாத்தான நல்லது. அப்புறம் அத்தகிட்ட நல்லபடியா சொல்லி, கொஞ்ச நேரம் பேசிட்டு, முடிஞ்சா அடுத்த வாரம் நேர்ல வாறேன்னு சொல்லிட்டு போன வச்சேன்.

அப்போதான், “யக்கா.. ன்னு இழுவையான சத்தம் கேட்டுது. யாரு இந்த நேரத்திலங்கிற நினப்போட கதவத் தொறந்தேன்.

மணிக்குட்டிப்பய கையில ஒரு பெரிய பையோட நின்னுகிட்டிருந்தான் வாசல்ல. முதல்ல நானும் ஒண்ணும் பெருசா நினைக்கலன்னாலும், உள்ள வந்து கட்டில்ல உக்காந்தவனோட மூஞ்சி போற போக்கப்பாத்ததும் தெரிஞ்சி போச்சு ஏதோ பிரச்சினைன்னு. வழக்கம் போல சித்தப்பாக்கிட்ட ஏதும் எசலியிருப்பான்னு நினைச்சிகிட்டு,

என்னல, பையத் தூக்கிட்டு வந்திருக்க?” ன்னேன்.

அந்த ஊட்ல இருக்கதுக்கு எங்கயாவது போய் மருந்தக்குடிச்சிட்டு படுத்துரலாம்னு வருதுக்கா

அட லூசுப்பயலே.. என்ன பிரச்சனன்னு கேட்டா இப்பிடியா கொள்ளயில போறவம் மாதி பேசுவ ?”

அடுத்ததக் கேக்கதுக்கு முன்னாடி ஏதோ சொல்லவந்தவன் குவுக்குனு அழுதுட்டான். ச்சேய்னு ஆயிப்போச்சு எனக்கு. அதுவும் இந்த ஆம்பளைப்புள்ளைக அழுறதப்பாக்க எரிச்சலாத்தாம் வருது. போவுது சவம், அவ்வ வந்தப்புறம் பேசிக்கிலாம்னு உட்டுட்டு அடுப்புல வச்சிருந்த புளிக்கொழம்ப பாக்கப்போனேன். அது தீயி அணஞ்சுப்போயி கிடந்துது. இன்னும் செத்த நேரத்துல அவ்வ வந்தாச்சின்னா முதல்ல சோறு சோறுன்னு பறக்கும். சோத்தப்போட்டப்புறம்தான் மத்தப்பேச்சி. இவம் வேற திடீல்னு வந்துருக்கான். வடிச்சது போதுமான்னு சட்டிய தொறந்து பாத்தேன். பத்தலைன்னா கையளவு பழயது கெடக்கு நமக்கு போட்டுக்கவேண்டியதுதான்.

இந்தப்பய மணிக்குட்டி எந்தம்பிதான். தம்பின்னா ஒண்ணுவிட்ட தம்பி. அவ்வ அப்பாவும் எங்கப்பாவும் கூட, கூடப்பொறந்த பொறப்பில்ல. சித்தப்பா பெரியப்பா புள்ளைகள்தான். ரெண்டு வீட்லயும் பொம்பளைக தவித்தி ஆம்பளைக ஒண்ணு ஒண்ணுதாங்கிறதால ஆரம்பத்துலயிருந்தே ஒண்ணாமண்ணா இருந்திருக்காங்க. அண்ணனக் கேக்காம ஒரு காரியம் பண்ணாது சித்தப்பா.

நாலு புள்ளைக.  ஒரு பொண்ணு, ரெண்டு ஆணுன்னு எல்லாத்துக்கும் கல்யாணம் ஆயி மிச்சமிருக்கது இந்த மணிக்குட்டிப்பய மட்டும்தான். அவனுக்கும் கூட கொஞ்ச நாளா, சித்தப்பா பொண்ணு பாத்துக்கிட்டுதான் அலையுதாரு. கலியாணம்னாலும் கலியாணம் பொம்பளைக்கு பத்தொம்போது ஆகவுடலை, அதுக்குள்ள முடிச்சாச்சு. ஆம்பளைகளுக்கும் இருவத்திரெண்டு, இருவத்திமூணுதான். கேட்டா அதது காலாகாலத்துல சட்டுப்புட்டுனு முடிச்சிப்புடணும்பாரு.

நல்ல வேளை எங்கப்பா அப்படியில்ல, எனக்கும் எந்தங்கச்சிக்கும் இருவத்திமூணு வயசுக்கு மேலதான் பண்ணிவச்சாரு. பெரியண்ணனுக்கு முடிக்கதுக்குள்ள முப்பது வயசாயிப்போச்சு. சின்னவனுக்கும் அப்படித்தான்.
ஒரு வேளை இந்தக் கலியாணப்பேச்சுலதான் அவரோட ஏதும் எசலிட்டு வந்துருப்பானோ இவன்? இருக்கும் இருக்கும்,பாக்குத பொண்ணல்லாம் வேணாம் வேணாம்னு சொல்லிகிட்டிருக்கானாம்னு அம்மா சொன்னாளே போனவாட்டி வந்தப்போ.

அடுக்காளையில இருந்து நடுவீட்ட எட்டிப்பாத்து, எல.. குழம்ப எறக்கிட்டேன், சாப்புடுதியா? இல்ல அத்தான் வந்துரட்டுமா?” ன்னு சத்தங்குடுத்தேன்.

டிவி பாத்துக்கிட்டிருந்தவன், அத்தான் வந்துரட்டுமேன்னான்.

சரின்னு மத்த வேலைகள பாக்க ஆரம்பிச்சேன்.

பொறவு, செத்த நேரத்துலயே அவ்வ வந்துட்டாவ.. ரெண்டு பேருக்கும் சேத்து தட்டப்போட்டு சோத்தப்போட்டேன். சாடைமாடையா அவ்வ எங்கிட்ட என்னா விசியம்?’னு கேக்க நா தெரியாதுன்னேன். சாப்புட்டு முடிக்கவும் நைஸா அவங்கிட்ட பேச்சுக்குடுத்தாவ.

என்ன மாப்ள? மாமா கூட ஏதும் சண்டயா?”

எடுத்தவுடனே, இனிமே நா இங்கயிருந்தே வேலைக்கி போய்கிடுதேம் அத்தானோவ்.. ன்னான்.

அது கெடக்கட்டும், போயிக்கலாம். மொதல்ல என்னா விசியம் அதச்சொல்லு..

வீட்ல இருக்க நீதியில்ல அத்தான். ராவும் பகலும் ஒரே ரோதனையா இருக்கு. எந்த நேரமும் ஒரே ஏச்சு பேச்சு. நா கடை வேலைக்கிப் போயி வார சம்பளத்துல பாதி எனக்கே செலவாயிருது. மிச்சத்த குடுக்கத்தாம் செய்யிதேன். அப்பிடியும் ஒரே ஏச்சுபேச்சுதாம். எனக்கும் ஒரு ஆறு மாசமா இந்த வலதுகால்ல தொடையிலருந்து கீழ வரைக்கும் ஒரே ஒளைச்சலா இருக்கு. என்ன எளவுன்னே தெரியல. சரியாவே வரமாட்டிங்குது, ரொம்ப நேரம் நிக்க, நடக்க முடியலக்கா.. திருநோலிக்கு போயி பெரியாஸ்பத்திரில காமிக்கணும் ரூவா தாங்கன்னா தரமாட்டிக்காவோ. அதுக்கும் இந்த வயசுல அப்பிடி என்ன எளவு வரும் ஒனக்கு? தின்னுப்போட்டு சும்மாக் கிடக்கமுடியலயான்னு ஒரே பேச்சுதாம்.. இந்தப்பேச்செல்லாம் கேக்கவேணான்னுதாம் விடிஞ்சு போனா அடஞ்சி இருட்டுனப்புறம்தான் வீட்டுக்கே போறேம்.. இழுத்தவம் வர்றமாதியிருந்த அழுவையை அடக்கிக்கிட்டு..

ஏதோ அவ்வ பாத்த ரெண்டு பொண்ணுவள வேண்டாம்னு சொல்லிப்புட்டனாம். அதுக்குத்தாம் இந்தப்பாடு படுத்துதாவோ. நீங்களே சொல்லுங்கத்தானோ.. எனக்கு இன்னம் இருவத்திமூணு வயசுக்கூட முழுசா ஆவல. அதுக்குள்ள என்ன கலியாணம்?இன்னம் ரெண்டு வருசம்போட்டும்னு சொன்னதுக்கு எல்லாருஞ்சேந்து அந்த வரத்து வருதாவோ. பாக்க லெச்சணமா இருக்கவேண்டாம், ஆனா கரிவண்டு மாதியாவது இல்லாம இருக்கணும்லா. எனக்குப் புடிச்சாத்தான புடிச்சிருக்குனு சொல்லமுடியும்.?”

அட இவஞ்சொல்லுததும் சரிதாம். புள்ளையப் போட்டு இந்தப் பாடு படுத்துதாவளேன்னு எங்களுக்கு கஷ்டமாப்போச்சு. நீ கொஞ்ச நாளு இங்கேர்ந்தே வேலைக்கி போலே.. நா சித்தப்பாகிட்ட பேசிகிடுதேன்னு சொல்லிபுட்டேன்.

மறுநாளே பெரியசித்தி போனப்போட்டு அவம் அங்க வந்தானான்னு கேக்கவும், நா இங்கதாம் இருக்கான், அதிருக்கட்டும் ஏம் இந்தச்சின்னப்பயலப்போட்டு இந்தப்பாடு படுத்திதியோ எல்லாரும்?’னு வெவாரத்தை ஆரம்பிச்சேன். அடக்கோட்டிக்காரி,அவனுக்கு பரிச்சிகிட்டு வராத. போன வையி நா வாரேம்னு அடுத்த வண்டிக்கே கிளம்பி வந்தா. வந்ததும் வராததுமாய் குடுத்த காப்பியக்குடிச்சுப்போட்டு ஒரு வெவாரமும் சொல்லாம அவஞ் சட்டத்துணியல்லாம் எடுத்து அவம் பையிலயே போட்டு எடுத்துகிட்டு கிளம்பிப்போயிட்டா. நானும் சரி போவுது, நாமென்ன பண்றது?’னு விட்டுட்டேன்.

அன்னிக்கி சாய்ங்காலமே ஒரு சோலியா அம்பைக்குப் போயிட்டு வரம்போது புதுக்குடியில அம்மாவ எட்டிப் பாத்துட்டுப்போலாம்னு வீட்டுக்குப்போனேன். வாசல்லயே மயினிக்காரி நின்னுகிட்டிருந்தா. அவா யாரு மேல என்னா ஆங்காரத்துல இருந்தாளோ தாயி, என்னப்பாத்து வான்னு ஒரு வார்த்தக் காதுல உழாத மாதி சொல்லிப்புட்டு எருத்துப்பிறைக்குள்ள போயிட்டா. இந்தளவுக்காவது மவராசி வான்னு கேட்டாளேனு நினைச்சிகிட்டு உள்ளப்போனேன்.

போனதுமே எடுத்த எடுப்பிலயே அம்மா இதத்தான் கேட்டா.

இந்த மணிக்குட்டிப்பய நாலு நாளா ஓம்வீட்லயா இருந்தாம். ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம்லா நீயி? இங்க அவனக்காணம்னு தேடிகிட்டிருந்துருக்காவோ.. ன்னாள்.

நாலு நாளு எங்க இருந்தாம்? நேத்து ஒரு நாளுதான் இருந்தாம். நா எதும் வழக்கம்போல சித்தப்பாக்கூட எசலியிருப்பான்னு நினச்சேன். உங்கிட்ட சொல்லுததுக்குள்ளதா இன்னிக்கி காலையில பெரியசித்தி வந்து அவந்துணிமணியல்லாம் எடுத்துட்டுப்போயிட்டாளே..

சரி போயித்தொலையிது விடு. இனிம வந்தான்னா ஊட்டுக்குள்ள சேக்காத..

ஏம்மா, அப்பிடி என்னதான் பிரச்சின?”

முதல்ல லேசா யோசிச்சவ அப்பறமா சொன்னா.. அந்த வெறுவாக்கெட்ட கதைய ஏங்கேக்கிற நீயி? ஒரு வருசமா பாக்குத பொண்ணையெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிகிட்டிருந்துருக்கான் இந்தப்பய. கையி வலிக்கிது, காலு வலிக்கிது சொல்லிகிட்டு கொஞ்ச நாப் போட்டும், கொஞ்ச நாப் போட்டும்னு சொல்லிகிட்டேயிருந்துருக்காம். வேங்குத சம்பளத்த ஒத்தப் பைசா ஊட்ல குடுக்குறதில்லையாம். ரூவாப் பூராத்தையும் கையில சேத்துவச்சிகிட்டு சுத்திகிட்டு திரியுதாம்னு முதல்ல நினச்சிகிட்டிருந்துருக்காங்க.. அப்பறமாத்தான் தெரிஞ்சதாம் இந்தப்பயலோட வண்டவாளம்..

அப்ப, மயினிக்காரி நாங்க இருந்த நடுஊட்டுக்குள்ள வரவும் ஏற்கனவெ ரகசியம் மாதி மெதுவா பேசிகிட்டிருந்தவ நைஸா பேச்ச மாத்துனா. இவளுக்கு இந்த எளவெல்லாம் தெரியாண்டாம் என சைகையில சொன்னா. தலையாட்டிக்கிட்டேன். பொறவு அவ அடுக்காளையிலயிருந்து மாட்டுக்கு வைக்க கழனித்தண்ணிய எடுத்துகிட்டு போனப்புறம் விசியத்துக்கு வந்தா.

அங்க பெரிய ஊட்டுக்கு எதுத்தமாதி மூணாவது ஊட்ல ஒரு பொம்பளை இருக்கா பாத்திருக்கியா நீயி.?

வைக்கப்படப்புக்கு பக்கத்துல முன்னாடி சாய்ப்பு எறக்குன வீடா?”

அதேதா. அந்தப்பொம்பளை கூட இந்த மூதேவி பழக்கம் வச்சிக்கிட்டிருந்துருக்காம். பாரேன் அநியாயத்த.. இருக்கதுல இவந்தான் நல்லப்பய ஒரு சீரெட்டு, தண்ணி பழக்கம் கிடையாதுன்னு நினைச்சிகிட்டிருந்தமே.. இந்தப் பய செய்ற காரியமா இது?”

அடக் கருமம் புடிச்சவனே.. அவளுக்க கலியாணம் ஆயி ஒரு புள்ளை கூட இருக்காமில்ல..

ஆமாமா, அவ புருசம் எங்கியோ வெளியூர்ல இருக்கானாம். ஒரு வருசத்துக்கு மேல இது நடந்துருக்கு. ஏழு மணிக்கு வேலை விட்டு வந்தா பத்து மணி வரைக்கு ரோட்ல டீக்கடையில உக்காந்துட்டு தெருவுல அரவம் கொறஞ்சதும் நேரே அவ ஊட்டுக்குள்ள போயிருவானாம். பொறவு பன்னெண்டு, ஒரு மணிக்கு வெளியவந்து நம்ப ஊட்டுக்குள்ள குதிச்சி தார்சாவுல படுத்துக்குவானாம். ரூவாயெல்லாம் எங்க போயிருக்கும்னு இப்பதாம் தெரியுது..

ச்சே.. இது தெரிஞ்சிருந்தா நேத்து நா அவன வீட்டுக்குள்ள நடையே ஏத்தியிருக்கமாட்டேனே..

எனக்கே அரசல்புரசலா காதுக்கு வந்துது. அவ்வொளும் வெளிய தெரிஞ்சி நார்றதுக்கு முன்னாடி அவனுக்கு ஒரு கலியாணத்த முடிச்சிரணும்னு பாக்காவோ.. நீ யாருகிட்டயும் சொல்லிறாத. நம்ம மாப்ளைக்கி தெரியாண்டாம்

ஆமா, இதச்சொல்லிட்டாலும். ஏற்கனவே எளக்காரம் பண்ண எதுடா கிடைக்கும்னு அலைவாவோ. இது தெரிஞ்சா இன்னும் தொக்காப்போயிரும். ஆனாலும் எனக்கு மனசு ஆறல.. இந்தச் சவத்துப்பயல பிஞ்ச செருப்பாலயே நாலு சாத்து சாத்த வேணாம்.? ஏம் புள்ளைகளுக்கெல்லாம் இருவது வயசுலயே கலியாணம் பண்ணிவைக்கணும்னு சித்தப்பா குதிக்காருன்னு இப்பதாம் புரியுது. செல குடும்பத்துக்கு அதாம் சரிப்படும்போல.

செத்த நேரம் இருந்துட்டு பொறவு கிளம்பினேன்.

அன்னையிலயிருந்து நேரா இருவதாவது நாளு, பதினோரு ரூவா அழப்புச்சுருளோடு கல்யாணப்பத்திரிக்கைய எடுத்துக்கிட்டு சித்தப்பா ஏம்வீட்டுக்கு வந்துட்டாரு.

பத்திரிக்கைய அவ்வொகிட்ட நீட்டி, மணிக்குட்டிப்பயலுக்கு கல்யாணம் வச்சிருக்கேம் மாப்ள. பொண்ணு நம்ப தெங்காசி தொரச்சியக்கா பொண்ணுதான்.. ன்னாரு.

நா பட்டுனு யாரு தமிழரசியா.. அது மேல படிக்கப்போவுதுன்னுதே, சித்தப்பா?”

படிச்சி என்ன பண்ணப்போவுது? அக்கா தனியாளு.. நாமதான ஒத்தாசையா இருக்கணும், தர்றியான்னேன்.. சரின்னுட்டா. நீங்க‌ ரெண்டு பேரும் முத நாளே வந்துருந்து முன்ன நின்னு கலியாணத்த நடத்திப்புடணும்..ன்னாரு.

நாங்க ரெண்டு பேரும் பத்திரிக்கைய வாங்கிகிட்டு சிரிச்சிகிட்டே சரின்னு தலையாட்டினோம்.

.

(இந்தக்கதை நடப்பு அதீதம் மின்னிதழில் வெளியாகியுள்ளது. நன்றி அதீதம்.)

Tuesday, December 20, 2011

எங்கள் தாழ்வாரத்துக்கு வந்த பறவை -சவால் போட்டி பரிசளிப்பு விழா


கடந்த ஞாயிறு 18.12.11 அன்று மாலை, சென்னை, டிஸ்கவரி புக் பேலஸில் ‘சவால் சிறுகதைப்போட்டி-2011’ல் வென்ற கதைகளுக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதை அறிவீர்கள்.

டிஸம்பர் மாத சனி, ஞாயிறுகளில் சென்னையில் நிகழும் எழுத்து சார்ந்த
நிகழ்வுகளின் அடர்த்தியின் ஊடாகவும் இந்தச் சிறிய விழா அதற்குரிய சிறப்புடன் நிகழ்ந்தேறியது. வழக்கமாக பதிவர் சந்திப்புகளில் தென்படும் உண்மைத் தமிழன், லக்கிலுக், அதிஷா, டாக்டர் ப்ரூனோ, காவேரிகணேஷ் போன்ற முகங்கள் இல்லாமலிருந்தது ஒரு சிறிய குறை. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திரைப்பட இயக்குனர்கள் பத்ரி, கேபிபி.நவீன், சிபி சந்தர் போன்றோர் மேடையை அலங்கரித்து, சிறப்புரை வழங்கி, பரிசளித்து விழாவை சிறப்பித்தனர்.பார்வையாளர்கள் வரிசையில், மேடைக்கு வரச்சொல்லி நாம் வற்புறுத்த இயலாத ஐகான்கள் ரமேஷ் வைத்யா, ராஜசுந்தரராஜன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ஆயினும் அவர்கள் பரிசுகளை வழங்கி, ஓரிரு நிமிடங்கள் பேச முன் வந்தமைக்கு எங்களை அதிர்ஷ்ட சுனாமி அடித்துவீழ்த்தியது மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.

முதலில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய கேபிள்சங்கர் எளிமையாக ஓரிரு வரிகளில் முடித்துக்கொண்டார். பின்னர் பேசவந்த பத்ரி, நவீன், சிபி சந்தர் ஆகிய மூவருக்குமே அது ஒரு சிறுகதைப்போட்டியின் பரிசளிப்பு விழா என்பதையும் விட, இணையம் சார்ந்த ஒரு நிகழ்வு என்பதே பிரதானமாக இருந்திருக்கும் என்பதை உணரமுடிந்தது. இணையம் சார்ந்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இதைப்போன்ற போட்டிகள் பெருகி எழுதும் ஆர்வத்தைத் தூண்டவேண்டும் என்றும், யுடான்ஸ் அதற்கான பங்களிப்பைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்றும் வாழ்த்தினார்கள். பெருகிவரும் சினிமா, ஊடகத்தேவையை பூர்த்திசெய்ய திறமையாளர்கள் இணையத்தில் இருந்து வருவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்கள்.

பின்னர் போட்டி குறித்து பேசவந்த, போட்டியின் நடுவர்களுள் ஒருவரான அப்துல்லா, கதைகளை எழுதியவர்களையும், போட்டிக்குழுவையும் பாராட்டி அமர்ந்தார்.

அதன் பின் பரிசளிப்பு துவங்கியது. முதல் பரிசை ரமேஷ் வைத்யா வழங்கினார். இன்னொரு முதல் பரிசை ராஜசுந்தர்ராஜன் வழங்கினார். அதன் பின் வந்த பரிசுகளை பத்ரி, நவீன், சிபி சந்தர், சுரேகா, அப்துல்லா, ஆதிமூலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

வெற்றியாளர்களில் ஆர்விஎஸ் தன் பெண்ணுடன் வந்திருந்தார். பினாத்தல் சுரேஷ் சார்பில் பரிசினை பெற்றுக்கொள்ள அவர்தம் சகோதரியர் வந்திருந்தனர். நவநீதன் தன் மனைவியாருடன் வந்திருந்தார். கார்த்திக் பாலாவும் நேரில் வந்திருந்து சிறப்பித்தார்.

தவிர ஜேகே, நந்தாகுமாரன், இளா, சிபி.செந்தில்குமார் ஆகியோர் தங்கள் பரிசுகளை தங்கள் சார்பாக நண்பர்கள் பெற்றுக்கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்ததால் அவர்களுக்காக முறையே நைஜீரியா ராகவன், ஓஆர்பி.ராஜா, கேபிள் சங்கர், பரிசல்காரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவர்களது பரிசுகளும், ஏனைய வெற்றியாளர்களான சன், வெண்புரவி, இராஜேஸ்வரி, கோமாளி செல்வா, சரவணவடிவேல்.வே, ஸ்ரீமாதவன் ஆகியோரது பரிசுகளும் விழாவுக்கும் பின்னர் கூரியரில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வெற்றியாளர்களின் பரிசுகள் அவர்களின் இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும் என்ற விதிமுறை இருந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜேகேவுக்கு மட்டும், அவர் விரும்பிக் கேட்டுக்கொண்டதின் பேரிலும், அவருக்கு இந்திய முகவரி இல்லை என்பதாலும் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை அவரைச் சென்றடைய சில வாரங்கள் ஆகலாம். அவரும், பிறரும் பரிசுகள் தங்களை அடைந்ததும் ஒரு அடையாளப் பின்னூட்டம், அல்லது மின்னஞ்சல் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசை கேபிள்சங்கர் வழங்கினார்.

அதன் பின் நன்றி கூறி விழாவை நிறைவு செய்ய பரிசல்காரன் முயன்றபோது முதல் பரிசை வென்ற ஆர்விஎஸ் தன்முனைப்பில் மேடைக்கு வந்து போட்டி குறித்த தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இப்படியெல்லாம் இவர் எழுதிக்கொண்டிருப்பது அவரது தமிழாசிரியருக்குத் தெரிந்தால் என்னவாகும்? என்று சுய எள்ளல் செய்துகொண்டார். அவரது உரை சுவைபடவும் சுருக்கமாகவும் இருந்தது.

அதன்பின் பரிசல், உரிமையோடு ரமேஷ்வைத்யாவை அழைக்க அவரும் மேடையேறினார். ஒரு வழியாக அரண்மனை மாடங்களுக்கும் கூட ஆசைப்படாத அந்தப் பறவையை இந்தக் குட்டித் தம்பிமார்களின் குடிலுக்குள் சற்றுநேரம் சிறைபிடித்தோம். ஒரு ஆழமான, அன்பான உரையை அவ்வளவு சுருக்கமாகத் தந்து மகிழ்வித்தார். அது அன்றைய நிகழ்வின் உச்சமாக இருந்தது. இந்தப் போட்டியை நடத்தி இத்தனைச் சிரமங்களை மேற்கொண்டதன் சோர்வு மறந்து குதூகலமாக உணர்ந்தோம்.

பின்னர் பரிசல்காரன் நன்றியுரையாற்றினார். தெளிவாக யுடான்ஸ் உரிமையாளர்கள், போட்டியாளர்கள், வெற்றியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், டிஸ்கவரி வேடியப்பன்,  விழாவுக்கு வந்தவர்கள், ஆதிமூலகிருஷ்ணன் என யாரையும் விட்டுவிடாமல் ஒரு தெளிவான நீண்ட நன்றியுரை ஆற்றினார். அதிலேயே ராஜசுந்தரராஜனின் ’நாடோடித்தடம்’ என்ற புத்தகம் அதன் நடையாலும், தமிழாலும் தன்னை எப்படிச் சில நாட்களாக சிறைபிடித்திருக்கிறது என்பதைக் குறித்தும் பகிர்ந்துகொண்டார். அந்தப் புத்தகத்தை அனைவருக்கும் சிபாரிசு செய்தார். அதைத் தொடர்ந்து விரும்பி மேடையேறிய ராஜசுந்தரராஜன், அந்த நாவல் குறித்து சில அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அதில் பயன்படுத்திய சொற்கள் பலவும் ஏற்கனவே பழந்தமிழில் பயன்படுத்தப்பட்டவைதான் என்றும், ஒரு காரணத்துக்காகவே அது அப்படி தெளிதமிழில் எழுதப்பட்டதாகவும், அப்படியே எல்லோரும் முயற்சிக்கவேண்டிய அவசியமில்லை என்பதாகவும் ஒரு கருத்தை முன்வைத்தார்.

அதன் பின் விழா நிறைவடைய.. அவ்வளவு நேரம் விழாவை விடியோ பதிவு செய்துகொண்டிருந்த நான், கடைசி நிமிடத்தில் ’நானும் குழுவில் இருக்கிறேன்’ என்பதை உணர்த்தும் ஆசையில், சடாரென மைக்கைப் பிடித்து அனைவருக்கும் நன்றி கூறி விழாவினை முடித்துவைத்தேன்.

அவ்வளவு நேரமும் விழாவினை சுவாரசியம் கெடாமல் அழகாகத் தொகுத்து வழங்கியது இனிய நண்பர் கார்க்கி. அவருக்கு அது புதிய மேடையாயினும் சிறப்பாக செய்திருந்தார்.

டிஸ்கவரி வேடியப்பன். விழாவின் பின்னணியில் இருந்த இன்னுமொரு முக்கியமான நபர். இடமளித்து, விழா ஏற்பாடுகளை செய்து, பரிசுப்புத்தகங்கள் மீது தகுந்தக் கழிவு வழங்கி.. என, அவரது விழா போன்ற ஒரு தனி ஈடுபாட்டுடன் பங்குபெற்றார். எல்லாவற்றுக்கும் மேலாக குழுமம் வழங்கிய பரிசோடு, வெற்றியாளர்களுக்கு டிஸ்கவரியின் பங்களிப்பாக 1220 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை கூடுதலாக வழங்கினார். அவர் வழங்கியவை, புத்தகங்கள் வெளியிட்டுள்ள பதிவர்களையும், அவர்தம் பதிப்பகங்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு ’பதிவர்கள்’ எழுதியவையாக இருந்தது இன்னுமொரு சிறப்பு. வேடியப்பனுக்கு விழாக்குழு சார்பில் நன்றி.

*

அறிவிக்கப்படதையும் விட அதிக மதிப்பிலான புத்தகங்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. ரூ. 3000 மதிப்புள்ள புத்தகங்கள் பிரித்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், ரூ. 8220 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக ரூ.1115 (2 பரிசுகள்),
இரண்டாம் பரிசாக ரூ. 665 (2 பரிசுகள்),
மூன்றாம் பரிசாக ரூ. 490 (2 பரிசுகள்),
ஆறுதல் பரிசாக ரூ. 460 (8 பரிசுகள்)..
மதிப்புள்ள புத்தகங்கள் தரப்பட்டன, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கி.ராஜநாராயணனின் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, பிரபஞ்சனின் ‘தாழப்பறக்காத பரத்தையர் கொடி’, விக்கிரமாதித்யனின் ‘விக்கிரமாதித்யன் கவிதைகள்’, கலாப்ரியாவின் ‘உருள் பெருந்தேர்’, பாஸ்கர் சக்தியின் ‘கனக துர்கா’, வண்ணதாசனின் ’கனிவு’, அழகியபெரியவனின் ‘நெரிக்கட்டு’, அ.கா.பெருமாளின் ‘சுண்ணாம்பு கேட்ட இசக்கி’, தமிழ்கமனின் ‘வெட்டுப்புலி’ ஆகிய புத்தகங்கள் பரிசுப்பொதியில் இடம்பெற்றிருந்தன.

’யுடான்ஸ்’ குழுமம் வழங்கிய தொகையோடு நடுவர்களாக பங்கேற்ற அப்துல்லா, அனுஜன்யா ஆகியோரும் வலிந்து ஒரு தொகையை வழங்கி இந்த நிகழ்வின் புரவலர்களாகியிருக்கின்றனர். சென்ற ஆண்டு நடுவராக பணியேற்ற வெண்பூ இப்படிச்செய்தது நினைவிருக்கலாம். இதிலிருந்து நடுவர்களாக பங்கேற்று பணியாற்றுகையில் பங்கேற்பாளர்களின் மீது ஒரு பரிவு ஏற்படுவதாக கணிக்கமுடிகிறது. நடுவர்களில் ஒருவரான ஸ்ரீதர் நாராயணனின் பணி அவர்களுக்குள் ஒருங்கமைவு செய்துகொள்வதில் துவங்கி, எங்களுக்கு ஆலோசனை வழங்கியது வரை போற்றுதலுக்குரியது. அவரும் பரிசுப்பங்களிப்பில் இணைய மிக விரும்பினார். சில காரணங்கள் கருதி மன்னிப்புக்கேட்டுக்கொண்டு மறுத்தோம். பொறுத்துக்கொண்டார்.

’டிஸ்கவரி’ வழங்கிய புத்தகங்களில் கேபிள் சங்கரின் ‘மீண்டும் ஒரு காதல்கதை’, யாத்ராவின் ‘மயிரு’, சுரேகாவின் ‘நீங்கதான் சாவி’, கேஆர்பி.செந்திலின் ’பணம்’, நிலாரசிகனின் ‘வெயில்தின்ற மழை’ ஆகியன இடம்பெற்றிருந்தன.

*

மீண்டும் ஒரு முறை கரம்கோர்த்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!

(விழாவில் எடுக்கப்பட்ட விடியோ விரைவில் பதிவேற்றப்படும். இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் விடியோவிலிருந்து பதிவு செய்யப்பட்டவை என்பதால் சற்றே தரத்தில் குறைவிருக்கலாம்.)
.

Saturday, December 17, 2011

மௌனகுரு -விமர்சனம்

முதல் நாளே பார்க்கும் அளவுக்கு இப்ப என்னா?ன்னு கமல்ஹாசன் படத்துக்கே நினைப்பேன். அதனால் இந்தப் படத்துக்கு ஒண்ணும் அவசரமில்லை. ஆயினும் ஏதோ கொஞ்ச நாளா படமே பார்க்காத ஃபீலிங் இருந்ததால் திடீரென கிளம்பிவிட்டேன்..

ஊரில் அம்மாவோடு இயல்பாக ஸ்ட்ரைட் பார்வேர்டாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் அருள்நிதி. தவறே செய்யாத நிலையிலும் தன்னை விசாரிக்காமல் அடிக்கமுயலும் ஒரு போலீஸ்காரரை இவர் திருப்பியடித்துவிட பிரச்சினை கொஞ்சம் தீவிரமாகி கல்லூரியை விட்டு நிறுத்தப்படுகிறார். பின்னர் அம்மாவுடன் சென்னையில் வாழும் அண்ணன் வீட்டுக்குச் செல்கிறார் அருள். அவரது அண்ணன், தம்பியை சிபாரிசின்பேரில் வேறொரு கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். அருள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கத்துவங்குகிறார்.

இன்னொரு பக்கம் ஒரு அடாவடியான உதவிகமிஷனர் ஜான்விஜய் தற்செயலாக சாலையில் விபத்துக்குள்ளாகும் காரைப் பார்க்கிறார். யாருமே இல்லாத சாலை. காரில் கோடிக்கணக்கில் பணம். உயிருக்குப் போராடும் காரில் வந்தவனை கொலை செய்துவிட்டு தன்னோடு அப்போது உடனிருந்த இன்ஸ்பெக்டர், ஏட்டுவுடன் பங்கு போட்டுக்கொள்கிறார். அவர்களும் அரைகுறை மனதுடன் சம்மதிக்கிறார்கள். பின்பொருநாள் அதைப்பற்றி அவர் அவர்களுடன் போனில் பேசுவதை ஒரு விலைமாது படமெடுத்துவிட பிரச்சினை சிக்கலாகிறது.

அருளின் ஹாஸ்டலில், ஏற்கனவே திருடும் பழக்கமுள்ள ஒரு மாணவனால் அந்த வீடியோகாமிரா திருடுபோக, ஒரு எதிர்பாராத நிகழ்வில் அதைத் தேடிக்கொண்டிருந்த அந்த போலீஸ் கும்பலின் கையில் அருள் சிக்கிக்கொள்கிறார். அவர்கள் அவரை என்கவுண்டர் செய்ய முயல்கையில் அவர் தப்பி விடுகிறார். அதன்பின் அதற்கு அவர் காரணமில்லை என்று அந்தக்கும்பலுக்குத் தெரியவருகிறது. தேவையேயில்லாமல் ஒரு ஸ்ட்ரைட் பார்வேர்டையும் சிக்கலுக்குள் கொண்டுவந்ததால் அவர்களுக்கு இன்னும் தலைவலி. ஆகவே அவரை பைத்தியக்காரப் பட்டம் கட்டி ஹாஸ்பிடலில் தள்ளுகின்றனர். இதற்கிடையே ஒரு நேர்மையான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த விலைமாதுவின் கொலை கேஸை விசாரிக்கத்துவங்கி ஒவ்வொன்றாக முடிச்சு நீண்டுகொண்டே போகிறது. அருள் மனநல காப்பக நிலையிலிருந்து எப்படி மீள்கிறார், வில்லன்களை பிடித்தாரா? என்பது படத்தின் கிளைமாக்ஸ்.


சமீபத்தில் எந்த விமர்சனத்திலும் இப்படி விலாவாரியாக நான் கதை சொன்னதுபோல ஞாபகம் இல்லை. இந்தப் படத்தில் இன்னும் நான் சொல்லாத பல கிளைக் கதைகளும் கூட இருக்கின்றன. ஏன் இதை எழுதினேன் என்றால் இவ்வளவு கதையம்சம் உள்ள படங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. இப்போதெல்லாம் அரைமணி நேரம் படம் பார்த்தபின்னும், அதுவரை என்ன கதை சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்டால் விழிக்கவேண்டியதாயிருக்கிறது. எல்லா விஷயங்களையும் தாண்டி “எங்களுக்கு கதைகளை புத்தகத்தில் படிக்க நேரமும் பொறுமையும் இல்லை, ஆகவே அதைப் பார்ப்பதற்குதான் தியேட்டருக்குச் செல்கிறோம்” என்பதே மறந்துபோய்விடுகிறது. அதற்காக ஏராளமான கிளைக்கதைகளைப் போட்டு நிரப்பி குழப்பித் தள்ளிவிடவும் கூடாதுதான். இந்தப் படத்தில் அப்படியல்லாமல் நிறைவாகக் கதை சொல்லியிருக்கிறார்கள்.

எளிதாக கொலைகள் செய்யும் உதவிகமிஷனர் ஜான்விஜய் கும்பல் ஹீரோவை மனநல காப்பகத்தில் அடைப்பதும், அவரும் அதிலிருந்து இரண்டு முறை தப்புவதுமாக கொஞ்சநேரம் கடுப்படிக்கிறது. சில பல கொலைகளும் தாராளமாக நடக்கின்றன. இவை தவிர முடிந்தவரை சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக நடப்பது போன்றே காட்சிகளை உணரமுடிகிறது.

அருளின் அண்ணன் பல வருடங்களுக்கு முன்னால் வீட்டை விட்டுச்சென்று காதலியை மணந்துகொண்டு வசதியாக வாழ்பவர். நன்கு செட்டிலான பின் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மாவை அழைக்கும் மனநிலையில் இருந்தவர். தம்பியை வீட்டில் தங்கவைக்கமுடியாத அண்ணனின் வீட்டில் அவரது மைத்துனியோ நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார். மனைவியின் உறவுகள் சகஜமாக வந்து போகிறார்கள். இன்றைய குடும்பங்களில் பெண்களின் டாமினேஷன் எப்படி இருக்கிறது என்பதை இயல்பாக பதிந்திருக்கிறார்கள். அண்ணனின் மனைவியால் அருளுக்கு ஏதும் பிரச்சினை வருமோ என்று எதிர்பார்த்தால் அப்படி ஏதும் இல்லை. ஆனால் நாம் எதிர்பார்த்தபடி அண்ணனின் மைத்துனியுடன் காதல் மட்டும் மலர்ந்துவிடுகிறது. இந்தக் கேஸை துப்பு துலக்கும் உமா ரியாஸ் ஒரு கர்ப்பிணி. காக்கி சேலையில் அவர் வயிற்றைத் தள்ளிக்கொண்டு சலிப்பும் இல்லாமல், அதே நேரம் தீவிரமும் காட்டாமல் கடமையை இயல்பாக, செவ்வனே செய்வது தமிழுக்குப் புதிதாக இருக்கிறது. ஜான்விஜயுடன் இருக்கும் போலீஸ்காரர்கள் தவறு செய்யத் தயங்குவதும், பின்னர் மாட்டிக்கொள்ளும் சூழல் வருகையில் பயப்படுவதும் இயல்பு. கடைசியில் உமா ரியாஸ் எல்லாவற்றையும் கண்டுபிடித்தபின்பும், குற்றவாளிகளைக் விடுவித்து, அருளைக் காப்பாற்றமுடியாத நிலை ஏற்படுவது எதிர்பாராத டிவிஸ்ட். அருள்நிதி வாயையேத் திறக்காமல் வசனம் பேசுவதுதான் கொஞ்சம் இம்சையாக இருக்கிறது, இந்த லட்சணத்தில் இறுதிக்காட்சியில் கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு வசனம் பேசுவதுபோல ஒரு காட்சி. சுத்தம்.!!

மற்றபடி மெனக்கெடும் ஒளிப்பதிவு, அலட்டும் பாடல்கள், கடாபுடா சண்டைகள் என்றெல்லாம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குனர் சாந்தகுமார் மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள்.!

.
-------------------------------------------------------

சவால் சிறுகதைப்போட்டி பரிசளிப்பு விழா

மற்றும் பதிவர் சந்திப்பு

பிரபலங்கள் பரிசல்காரன், கேபிள் சங்கர், கார்க்கி, அப்துல்லா முதலான பலரும் கலந்துகொள்கிறார்கள். அனைவரும் வருக.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : வரும் ஞாயிறு 18.12.2011

.

Wednesday, December 14, 2011

சவால் போட்டி - பரிசளிப்பு விழா


யுடான்ஸ்+பரிசல்+ஆதி இணைந்து நடத்திய ’சவால் சிறுகதைப்போட்டி -2011’ வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அறிவீர்கள். வெற்றிபெற்ற கதைகளின் பட்டியலையும், மேல் விபரங்களையும் இந்தப்பதிவில் காணலாம்.

இந்நிகழ்வு வெற்றிகரமாக நடக்க உறுதுணையாக இருந்த நண்பர்கள், பங்கேற்பாளர்கள், வெற்றியாளர்கள், கடும்பணி மேற்கொண்ட நடுவர்கள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், அப்துல்லா என அனைவருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் எங்கள் மனப்பூர்வமான நன்றியையும், அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, ஒரு சிறிய நிகழ்ச்சியாக வரும் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை, கேகே நகர் ‘டிஸ்கவரி புக் பேலஸி’ல் ஏற்பாடாகியிருக்கிறது. அதுவே ஒரு இனிய பதிவர் சந்திப்பாகவும் அமையும் என்றும் நம்புகிறோம். நிகழ்ச்சி நிரல் :

6.00 : வரவேற்பு

6.25 : வரவேற்புரை - கேபிள் சங்கர்

6.30 : பரிசளிப்பு நிகழ்வு
(பிரபல, மூத்த பதிவர்கள் வெற்றியாளர்களுக்கு பரிசுப் பத்தகங்களை வழங்குவார்கள்)

6.45 : போட்டி மற்றும் கதைகள் குறித்த ஒரு பார்வை - எம்எம்.அப்துல்லா
(இரண்டு போட்டிகளிலும் நடுவராக இருந்தமையாலும், மற்ற நடுவர்கள் வெளியூர்க்காரர்கள், வருவது சந்தேகம் என்பதாலும் அப்துல்லாவை கேட்டிருக்கிறோம். அவர் கொஞ்சம் பிஸியானவர் என்பதால் நம்ப முடியாது. ஆகவே அவர் வராவிட்டால், யாராவது A4 சைஸ் பேப்பரில் கண்டெண்ட் குறித்து குறிப்பாக பாராட்டி எழுதிக் கொண்டுவந்தால் அதைப் பார்த்து, தணிக்கை செய்தபின் வாசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே வருகிறவர்கள் எதற்கும் தயாராக வரவும்.. ஹிஹி ஹிஹி)

6.55 : நன்றியுரை - பரிசல்காரன்

7.00 : நிறைவு

நிகழ்ச்சித் தொகுப்பாளர் - கார்க்கி

பதிவர்கள், இணையத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி.

அன்புடன் -

கேபிள் சங்கர் 
ஜோஸப் பால்ராஜ்
பரிசல்காரன் 
ஆதிமூலகிருஷ்ணன்

.

Tuesday, December 13, 2011

கல்லு மனசும், கரையும் மனசும்


ஏற்கனவே என்ன வந்தாலும் கல்லு மாதிரிதான் நம்ம மனசு இருக்கும். அதும் பத்தாததுக்கு ‘எதையும் தாங்குத இதயம்வேணும்னு சொன்ன அண்ணன்மாரையும் படிச்சு வளந்தது வேற.

எங்க சித்தப்பா ஒருத்தர் சொல்லுவாரு.. “என்ன வந்தாலும் கல்லு மாதிரி இருக்கணும்லே.. தீயின்னு சொன்னா வாயி சுடாது.. இப்போ அப்பா ஆக்சிடண்ட்ல செத்துப்போனா என்ன பண்ணுவே.. வருத்தமெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனா கலங்கிறப்பிடாதுலே.. சொல்லப்போனா சந்தோசப்படலாம்.. நல்லவேளை, அன்னிக்குன்னு கூட அம்மாவையும் கூட்டிட்டு போவாம இருந்தாரேன்னுதான் நினைச்சு சந்தோசப்படணும். அப்படியே ஒருவேளை ரெண்டு பேரும் போயிருந்தா என்ன நினைக்கணும்.. நல்லவேளை நம்பள சின்னக்குழந்தையா நடுத்தெருவுல விட்டுறாம இந்த அளவுக்கு வளர்த்தப்புறம் போனாவளேனு நினைக்கணும்

அந்த மாதிரியும் இருக்கமுடியுமான்னு தெரியலை. அவரு சொன்ன மாதிரி நினைச்சுகிட்டே போனமுன்னா உலகமே ஆனியன் மாதிரி ஒண்ணுமே இல்லைன்னு ஆயிப்போயிரும். எந்தத் துக்கமும் ஒண்ணும் பண்ணாது. சோதனை வராத ஆளு யாரு?. வீட்ல, ஒறவுல, நட்புல, வேலயிலன்னு என்ன வந்தாலும் ரெண்டடி தள்ளி நின்னு ‘கெக்கெக்கென்னு சிரிக்கமுடியும். என்னால சிரிக்கமுடிஞ்சிருக்கு.

ஆனா பாருங்க.. ஆத்து வெள்ளத்துல எதித்துவந்தவன், வயக்காட்டு வாய்க்கால்ல வழுக்கி விழுந்தமானிக்கு ஒண்ணுமில்லாத விசயத்துக்கெல்லாம் மனசு பொசுக்குனு போயிருது. ஏதாவது நல்ல பாடலைக் கேட்கிறப்போ, மனசு உருகிப்போகுது. ஒரு நல்ல சினிமாவுல ஒரு நல்ல காட்சியப் பார்த்தா மனசு பொறுக்கமாட்டேங்குது.

சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்ல செருப்பைத் தொலைச்சிட்டு அழுற பையனை பாத்தா ஸ்க்ரீனுக்குள்ளாரப்போயி, பரவாயில்லடா தம்பி, அழுவாதடா செல்லம்னு சொல்லணும் போல இருக்குது.

டைட்டானிக்ல அவளைப் பலகையில போட்டுட்டு தண்ணிக்குள்ள கிடக்கான் அவன். ஒரு போட்டு வர்ற மானிக்கி இருக்குது. படுபாவிப்பய.. இவ்வளவு பண்ணினான், இன்னும் கொஞ்ச நேரம் தம்முகட்டிக்கிட்டு இருந்துருக்கக்கூடாதா..னு வாய்விட்டு புலம்புறதாயிருக்குது.

பார்ன் ஐடெண்டிடில ஸ்னைப்பரை வீழ்த்துற காட்சியில ஹீரோவப் பார்த்து இரண்டு மடங்கு இதயம் படபடக்க, ‘மனுஷன்னா இவன்லாய்யா மனுஷன்னு சொல்லத்தோணுது.

ஹோட்டல் ருவாண்டாவுல அவன் சப்ளைஸ் வாங்கப்போறப்போ.. ‘இந்தக் கேடு கெட்ட உலகத்துல நாம இருந்தாத்தான் என்ன? செத்தாத்தான் என்ன?ன்னு தோணிடுது.

நல்ல சினிமாவுக்கான வீச்சு இப்படித்தான் இருக்கும், இருக்கணும். சரி அதை விடுங்க.. அப்ப மேல சொன்ன கல்லு மனசு கான்செப்ட் இதுக்கு ஏன் பொருந்தலை?
.

Friday, December 9, 2011

செழியனின் ‘உலக சினிமா’


எதெல்லாம் பார்த்துட்டோம்.. எதெல்லாம் இன்னும் பார்க்கலை.. எதெல்லாம் டிவிடி இருக்குன்னு செக் பண்றதுக்காக ஒரு லிஸ்ட் போட்டேன். உங்களுக்கும் ஒருவேளை உதவியா இருக்கலாமே என்று இங்கே தர்றேன். என்ன? அட.. நான் போட்ட லிஸ்ட் இல்லீங்க, நான் அம்மாம்பெரிய அப்பாடக்கர்லாம் இல்லைங்க. ’உலக சினிமா’ங்கிற விகடன் பிரசுர புத்தகத்தில் செழியன் அறிமுகப்படுத்தியிருந்த உலக சினிமாக்களின் வரிசைதான் இது..

1. Children of Heaven -1997
2. Life is Beautiful - 1997
3. The Way Home - 2002
4. The Road Home - 1999
5. Cinema Paradiso - 1988
6. Run Lola Run - 1998
7. Maria Full of Grace - 2004
8. Together - 2002
9. Central Station - 1998
10. Pickpocket - 1959
11. The Pianist - 2002
12. Hotel Rwanda - 2004
13. The Cyclist - 1987
14. City Lights - 1931
15. The Return - 2003
16. Meghe Dhake Tara - 1960
17. A Short film about Love -1988
18. Rabbit Proof Fence - 2002
19. The Battle of Algiers - 1966
20. Carandiru - 2003
21. Citizen Kane - 1941
22. Good bye Lenin - 2003
23. Rashomon - 1950
24. Postmen in The Mountains - 1999
25. La Strada - 1954
26. The Day I Became a Woman - 2000
27. E.T - 1982
28. The 400 Blows - 1959
29. Khamosh Pani - 2003
30. The Last Emperor - 1987
31. Kikujiro - 1999
32. Death on a Full Moon Day - 1997
33. Talk to Her - 2002
34. At Five in the Afternoon - 2003
35. City of God - 2002
36. In the Mood for Love - 2000
37. Moolaade - 2004
38. Pather Panchali - 1955
39. No Man's Land - 2001
40. Gandhi - 1982
41. Battleship Potemkin - 1925
42. Salaam Bombay - 1988
43. Osama - 2003
44. Raging Bull - 1980
45. Where is My Friend's Home - 1987
46. Ballad of a Soldier - 1959
47. Landscape in the Mist - 1988
48. Be with Me - 2005
49. The Postman - 1994
50. Dancer in the Dark - 2000
51. Cries and Whispers - 1972
52. The Runner - 1985
53. Tokyo Story - 1953
54. Blow-up - 1966
55. Spring, Summer, Fall, Winter and Spring - 2003
56. Ali Zaoua - 2000
57. Hiroshima My Love - 1959
58. The Colour of Pomegranates - 1968
59. Paradise Now - 2005

லிஸ்ட் போட்டதுதான் போட்டேன்.. புக்கு எப்படி இருக்குனும் கையோட சொல்லிடறேன்..

கொஞ்ச நாளைக்கு முன்னாலயே படிச்சதுதான். ஒவ்வொரு கட்டுரையின் துவக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது. படங்கள் ஏற்படுத்திய உணர்வுகளை விவரிப்பார் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தால் செழியன், படத்தின் கதையை மட்டும் விளக்கமாக எழுதிவிட்டு படம் மற்றும் இயக்குனர் பற்றிய தகவல்களை தந்து தன் கடமையை முடித்துக்கொண்டுள்ளார். அவை நிச்சயமாக பயனுள்ள தகவல்கள்தான் எனினும் ஒரு வாசிப்பனுவத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். ஒருவேளை கதைகளைப் படித்து, படத்தைக் கண்டு அதன் தாக்கத்தை வாசகர்கள் அவர்களே அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டாரா தெரியவில்லை.

லிஸ்டின் சில படங்களைப் பார்த்திருக்கிறேன். அவை தந்த உணர்வுகளை, இன்னொரு பார்வையாளன் எப்படி உணர்ந்திருக்கிறான் என்று ஆவலோடு புத்தகத்தைப் புரட்டிய எனக்கு கதை விவரிப்பும், தகவல்களும் போதவில்லைதான்.. இருப்பினும் இப்படியொரு அரிதான லிஸ்டுக்கும், சீரிய முயற்சிக்கும், உழைப்புக்கும் செழியனுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.!

.

Wednesday, November 30, 2011

மயக்கம் என்ன -விமர்சனம்


தடிமாடு மாதிரி நாலு பசங்க, கூட மூணு பொண்ணுங்க.. இவங்க எந்த நேரமும் பாசத்தைப் புழிஞ்சுக்குவாங்க. பீச்சுல ராத்திரி இருட்டுனப்பிறகு போய் தண்ணியடிச்சு, படுத்து உருண்டுகிட்டு வானத்தைப் பாத்து மல்லாக்க படுத்து சிந்திப்பாங்க. அப்பால ஒரே ரூம்ல கசமுசான்னு படுத்துத் தூங்குவாங்க. அதுல ஒருத்தி மட்டும் ஹால்லயே தூங்கினா அவளைப் பொறுப்பா தூக்கிவந்து இந்தக்கும்பலோட போட்டு தூங்க வைப்பாரு ஒரு பாசப்பெரியவரு.. இதெல்லாம் எங்கேய்யா நடக்குது? ஒருவேளை மேல்தட்டுல நடக்குமோ என்னவோ? ஒரு படம், ரெண்டு படம்னா இதையெல்லாம் பார்க்கலாம். ஏதோ இயல்பான கல்ச்சர் மாதிரி எல்லாப் படத்துலயும் பார்க்கணும்னா?

நல்ல வேளையா அது இல்ல படத்தோட கதை. அந்தக் கும்பல்ல ஒருத்தன் டேட்டிங் (அதாங்க.. அதுவும் நம்ப கல்ச்சர்தான், தெரியாதா?) பண்ண புதுசா கூட்டிவரும் பெண்ணை இன்னொருத்தன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்குறான். அவந்தான் படத்தோட ஹீரோ. ஓஹோ.. அதுவும் கதை இல்லைங்க. அப்போ? அவர் ஒரு ஃபோட்டோகிராபர். ஃபோட்டோக்கலையில் சாதிக்கவேண்டும் என்று போராடுகிறார். என்ன செய்கிறார் அப்படி?  அதான் சொன்னேனே.. பீச்சுல மல்லாக்க படுத்து சிந்திக்கிறது.. லவ் பண்றது.. அதெல்லாம் சின்ஸியராக பண்ணுகிறார். போனாப்போகுதேனு மதேஷ்னு அந்தத்துறை சார்ந்த ஒரு ஃபோட்டோகிராபரை அணுகி உதவியாளராக சேர்த்துக்கொள்ள வேண்டுகிறார். அவரோ மறுத்துவிடுகிறார். அடாடா, போச்சு.. வாழ்க்கையே முடிஞ்சுபோச்சு.. மனக்கலக்கத்துல அலைகிறார். அதோடு நம்ப ஹீரோ எடுத்த போட்டோ ஒன்று மாதேஷ் எடுத்ததாக ஒரு பத்திரிகை அட்டையில வேற வந்துடுது. அவ்வளவுதான், மனக்கலக்கம் மனப்பிறழ்வா ஆயிடுது.

அப்பால.. என்ன? பொண்டாட்டியை சித்திரவதை செய்கிறார். தலையை குனிஞ்சிகிட்டு நேர்கோட்டுல ’குய்யான்’ மாதிரி சைடு வாக்குல நடக்குறார். இதையெல்லாம் பார்த்த பொண்டாட்டி அவர் கூட பேசாம இருந்துடுறார். பொண்டாட்டி பேச மாட்டேங்கிறாரே, கிளைமாக்ஸ் வேற வந்துடுச்சேன்ங்கிற கவலையில தனுஷ், ஒரே ஸாங்குல படிச்சு, பெரியாளாகி, கலெக்டராகி.. சே.. இல்லல்ல.. போட்டோ புடிச்சு, டிஸ்கவரி சேனல்ல வந்து, நேஷனல் ஜியாகிரபிக்கே எப்படி போட்டோ எடுக்குறதுன்னு சொல்லிக்குடுத்து, எல்லா புக்குலயும் அட்டையில வந்து, BBCயில பேட்டி குடுத்து, ஏதோ உலக அவார்டு வாங்கி, அப்படியே பெண்டாட்டி டிவி பார்த்துக்கொண்டிருக்க, அந்த டிவியில் லைவ்வா ‘எல்லாமே என் பொண்டாட்டிதான்’னு ராஜ்கிரண் கணக்கா சொல்லிடுறார். சுபம் சுபம்.!

என்ன கொடுமை சார் இது?


மற்றபடி, வழக்கம்போல ஒளிப்பதிவு மட்டும் அழகு. தனுஷ், தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கைச் சூரியன் (அதுவும் நட்சத்திரம்தானே). ஆனால் அது அப்பா, அண்ணன், எதிர்பாராமல் ஹிட்டாகிவிடும் ’கொலைவெறி’கள் தலையில் ஏற்றும் கொலைவெறி இவற்றிலெல்லாம் இருந்து அவர் ஒதுங்கியிருந்தால் மட்டுமே. ரிச்சா ரொம்ப அழகாக இருக்கிறார். தன்னை பெரிய படைப்பாளின்னு நினைச்சுக்கற டுபாகூருங்க தமிழ்ல அதிகமாயிட்டாங்கன்னு தோணுது. நான் செல்வராகவனைச் சொல்லலை, பொதுவாச்சொன்னேன். இது மாதிரி படங்களுக்கு இயக்குனர் ஹரி மாதிரியானவர்களின் படங்களே எவ்வளவோ தேவலாம்.

.

Tuesday, November 15, 2011

சவால் சிறுகதைப்போட்டி-2011 : முடிவுகள்

பரிசல்+ஆதி, மற்றும் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கிய ‘சவால் சிறுகதைப்போட்டி –2011’க்கான முடிவுகள்.
அன்பான போட்டியாளர்கள் மற்றும் இணைய நண்பர்களே,
”இப்பதான் விஷ்ணு கிட்ட இருந்து போன் வந்தது, ஆனால் பேசினது எஸ்.பி.கோகுல். நான் என்னோட ரிவால்வர பேன்ட் பாக்கெட்ல செருகினேன். 'டிஎஸ்பி அனுஜன்யா சாருக்கு' என்று எழுதிய பார்சல் இப்போதுதான் என் டேபிளுக்கு வந்தது. இன்னும் அரை மணி நேரத்துக்குள் முழுத் தகவலும் வரும். தூக்கிக்கொண்டு நேரே ஆப்பிரிக்காவில் போய் செட்டிலாகிவிட வேண்டியதுதான். அத்தனை வில்லன்களையும் பிடித்து புழல் சிறையில் அடைத்துவிட்டு நிம்மதியாக சேரில் அமர்ந்தேன். ’இன்ஸ்பெக்டர் அப்துல்லா இலங்கை போயிருக்கிறார், வருவதற்குள் நாமே கொலையாளியைப் பிடித்துவிடமுடியுமா?’ என்று கேட்டார் சிறப்புப்படை கமாண்டோ ஸ்ரீதர் நாராயணன். யோசனையோடு கைக்குட்டையில் நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்து, அலை பேசியையும் ஒற்றினேன்.”
 
சமீபத்தில் ஒருநாள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம். அப்துல்லா ஆகியோருடன் நாங்கள் போட்டி முடிவுகள் குறித்த ஒரு கான்ஃபரன்ஸில் இருந்த போது அவர்கள் மூவரும் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக்கொண்டிருந்ததுதான் மேலே நீங்கள் காண்பது. இதிலிருந்தே தெரிந்துகொண்டிருக்கலாம்.. ஆம்.! இவர்கள்தான் நமது கிரைம் கதைகளில் மூழ்கி இந்த நிலைக்குப் போன, நம்முடைய இந்த ஆண்டு சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றிக்கதைகளை தேர்ந்தெடுக்கும் பணியேற்று நம்மைப் பெருமை செய்த நடுவர்கள் என்று.

அனுஜன்யாவிடம் விபரம் சொல்லி பொறுப்பேற்கச் சொன்னதுமே, பின்னணியிலிருக்கும் பெண்டு நிமிர்க்கும் வேலையை எப்படி கண்டுகொண்டாரோ தெரியவில்லை, ‘நா ரொம்ப பிஸி’ என்று தப்பியோட முயன்றார். பின்னர் நம் ‘பதிவர்களால், பதிவர்களுக்காக..’ ஸ்லோகத்தை லைட்டா உல்டா செய்து, ’இளைஞர்களால், இளைஞர்களுக்காக நடத்தப்படும் போட்டியில் ஒரு இளைஞர் நடுவர் என்றால்தானே சிறப்பு’ என்று கூறி அவரை அரைமயக்கத்தில் ஆழ்த்தி சம்மதிக்க வைத்தோம்.

சென்ற ஆண்டு சவால் போட்டியில் கலந்துகொண்டு கலக்கல் கதை எழுதி, முதல் பரிசை வென்றவர்களுள் ஒருவரான ஸ்ரீதர் நாராயணனைக் கேட்டபோது டக்கென ஒப்புக்கொண்டார். பாவம் அவருக்கு அவ்வளவு விவரம் பத்தவில்லை அப்போது. பின்னாடி அவர் புலம்பியதை ஒரு தனி தொடராகவே எழுதலாம். சென்ற ஆண்டின் நடுவர்களில் ஒருவராக இருந்தும், மீண்டும் களம் காணும் துணிச்சல் ஒருவருக்கு இருக்குமானால் அது அப்துல்லாவிற்கு மட்டும்தான் இருக்கும் என்று சொல்லிவிடலாம்.

நடுவர்களின் திறனையும், கதைகள் மீதான அவர்களின் ஆர்வத்தையும் நாங்கள் சொல்வதெற்கெல்லாம் அவசியமில்லை என்பதை நண்பர்கள் நீங்கள் அறிவீர்கள். சவால் மற்றும் விதிமுறைகளோடு கூடிய போட்டி குறித்த முதல் அறிவிப்பை இங்கே காணலாம். துவக்கத்தில் ஒன்றிரண்டு என மெதுவாக வர ஆரம்பித்த கதைகள் பிற்பகுதியில் வந்து குவியத்தொடங்கின.
ஆம், சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஏராளமானோர் (78 பேர்) போட்டியில் கலந்துகொண்டு எங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த போட்டியாளர்களின் அன்புக்கும், இதன் பின் நின்ற நண்பர்களுக்கும், போட்டியை ஸ்பான்ஸர் செய்து நடத்தித்தந்த ’யுடான்ஸ்’ திரட்டிக்கும், இணைய வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

கீழே நடுவர்களின் மடல்..

-அன்புடன்

ஆதிமூலகிருஷ்ணன், பரிசல் கிருஷ்ணா மற்றும் யுடான்ஸ் குழு.


*
அன்பு நண்பர்களே,

பல்வேறு காரணிகளை புனைந்துகொண்டு அதன் கீழ், சற்று சிரமத்துடனே கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறோம். போட்டி குறித்தும், தேர்வு செய்தமை பற்றியும், வெற்றிபெற்ற கதைகள் பற்றியும், அவற்றின் ’விதிமுறைகளுடன் 100% பொருந்தாத தன்மை’ பற்றியும், அடைந்த குழப்பங்கள் பற்றியும் நிறைய எழுதலாம் என்று தோன்றுகிறது. இனியும் பில்டப் செய்துகொண்டிருக்காமல் நேரடியாக ரிஸல்டுக்குப் போய்விடுவது நல்லது என்பதையும் உணர்கிறோம். பரிசுகளுக்கான இடங்களுக்கு பலத்த போட்டியுடன் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்களுடன் சில கதைகள் இருந்தமையால் முதல் மூன்று இடங்களை இரண்டிரண்டு கதைகள் பகிர்ந்துகொள்கின்றன.

முதல் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சிலை ஆட்டம்    -ஆர்விஎஸ்
http://www.rvsm.in/2011/10/2011.html

விண்டேஜ்    -பினாத்தல் சுரேஷ்
http://penathal.blogspot.com/2011/10/vintage-2011.html

இரண்டாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சட்டென நனைந்தது ரத்தம்    -ஜேகே
http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html

கனவில் எழுதப்படும் கதை    -நந்தாகுமாரன்
http://nundhaa.blogspot.com/2011/10/2011.html

மூன்றாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சவால் சிறுகதை    -இளா
http://vivasaayi.blogspot.com/2011/10/2011.html

கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு    -சி.பி.செந்தில்குமார்
http://adrasaka.blogspot.com/2011/10/kovai-preethi-murder-case.html


இறுதிச் சுற்றுக்கு வந்த 15 கதைகளில் மற்ற 9 கதைகள் : இவையும் அறிவிக்கப்படாத ஆறுதல் பரிசுகளைப் பெற இருக்கின்றன.

நகல்    -கோமாளி செல்வா   
http://koomaali.blogspot.com/2011/10/2011.html00

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட    -சன்   
http://writersun.blogspot.com/2011/10/2011.html

கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும்    -சரவணவடிவேல்.வே    http://saravanaidea.blogspot.com/2011/10/2011.html

உதயசூரியன்    -கார்த்திக் பாலா   
http://kanakkadalan.blogspot.com/2011/10/2011.html

அர்த்தமுள்ள குறியீடு         -ஸ்ரீ மாதவன்    http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html

ரங்கு குரங்கு ஆன கதை    -வெண்புரவி   
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

பீமனின் பராக்ரமம்    -இராஜராஜேஸ்வரி   
http://jaghamani.blogspot.com/2011/10/2011.html

குறிப்பறிதல்    -நவநீதன்   
http://navaneethankavithaigal.blogspot.com/2011/10/2011.html

மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும்    -சன்    http://writersun.blogspot.com/2011/10/2011_31.html

இவை தவிரவும் போட்டியில் கலந்து கொண்ட பலரும் மிகுந்த ஆர்வத்துடன் புதுமையாகவும், சுவாரசியமாகவும், நிறைவாகவும் கதை சொல்லியிருந்தார்கள். வேறு பல காரணிகளில் சிறப்பாக விளங்கிய கதைகளும் அனேகம் இருந்தன. அவற்றில் மனோ எழுதிய ’நீதானே என் பொன்வசந்தம்..’, அபிமன்யு எழுதிய ’அலைபேசி’, கணேஷின் ‘அறியா உலகம்’, பார்வையாளன் எழுதிய ‘பாப்பா போட்ட தாப்பா’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். இவை நூலிழையில் பரிசுகளைத் தவறவிடுகின்றன.

வெற்றிபெற்றோருக்கும், கலந்துகொண்டோருக்கும் வாழ்த்துகள். வாழ்த்துவதற்கு வெற்றியை விடவும் பங்கேற்பு என்பதே சிறந்த காரணி என்பதை அறிவீர்கள். இப்படியொரு நல்வாய்ப்பினை நல்கிய ஆதி, பரிசல் ஆகியோருக்கு நன்றிகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன் -

அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம்.அப்துல்லா.

*
போட்டிக்களத்திலிருந்த மொத்தக் கதைகளின் வரிசையையும் இந்த இணைப்புகளில் நீங்கள் காணலாம். இணைப்பு 1, இணைப்பு 2. களத்திலிருந்தவை மொத்தம் 78 கதைகளாகும்.

இன்று சுடுவது நிச்சயம் –என்றொரு கதையை வேங்கட ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதியிருக்கிறார். போட்டிக்கான இறுதிநாளைக் கடந்து அனுப்பப்பட்டதால் இதை போட்டிக்கு ஏற்கமுடியவில்லை. போட்டிக்கல்ல என்று குறிப்பிட்டே ஒரு கதையும் தாமதமாக எழுதப்பட்டிருந்தது. நீச்சல்காரன் என்பவர் எழுதிய கஞ்சத்தின் தலைவா! என்பதே அது. ஆகவே அதுவும் போட்டியில் இல்லை. முடிவுகள் வெளியாகுமுன்பே ஒரு ஆர்வத்தில் வெளியான விமர்சனங்களை கொண்டு கணிக்கப்பட்ட ஒரு பதிவு பார்வையாளனால் எழுதப்பட்டிருந்தது மற்றொரு சுவாரசியம்.

போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும், பின்னணியில் இருந்த நண்பர்களுக்கும், கடினப் பணியை மேற்கொண்ட நடுவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு விபரங்களை விரைவில் இன்னொரு பதிவில் காணலாம். பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் இல்லம் தேடி வரும். அவர்கள் தயவுசெய்து தங்கள் இந்திய முகவரிகளை thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

-பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன்.

*

Monday, November 14, 2011

சவால் சிறுகதைப்போட்டிக் கதைகள் : விமர்சனம் -2

அன்பு நண்பர்களே, சவால் சிறுகதைப்போட்டிக்கான நடுவர் குழு, அதன் பணியை நிறைவுசெய்துவிட்டார்கள். முடிவுகள் நாளை வெளியாகும். 3 பேர்கள் உள்ள அந்தக் குழு இணைந்தளித்த சிறிய நறுக் விமர்சனங்களின் இரண்டாம் பகுதி இதோ இங்கே.. உங்களுக்காக. இதன் முதல் பகுதியைக் காண முந்தைய பதிவுக்குச் செல்லுங்கள். விமர்சனங்கள் உங்கள் மீதானதல்ல, உங்களுடைய இந்த தனிப்பட்ட படைப்பின் மீதானதுதான். அவற்றை ஆரோக்கியமான நோக்கத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கவும், வெற்றிநடை போடவும் குழுவின் சார்பாக வாழ்த்துகள்.!

____________________________________________________________________

 

38    அர்த்தமுள்ள குறியீடு        -ஸ்ரீ மாதவன்   

http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html

கடத்தல், போலிஸ் கதைதான்.  சூப்பரிண்டெண்ட் ரேங்கில் இருப்பவரை பிரத்யேக செக்யூரிட்டி ரேஞ்சில் கேரக்ட்ரைசேஷன் செய்திருக்க வேண்டாம்.  குறியீடு என்பது யூசர்நேமையும் குறிக்கும் என்று கதையிலேயே குறிப்பாக சொல்லிவிட்டார்.  லாப்டாப்பிலிருக்கும் டேட்டாவை பாதுகாக்க ஏகப்பட்ட டெக்னிகல் விஷயங்கள் கதை படிப்பதை அந்நியபடுத்திவிடுகின்றன.

*****

39    தொலைநோக்கிப் பார்வை    -ராதாகிருஷ்ணன்   

http://www.greatestdreams.com/2011/10/2011.html

அஸ்ட்ரானமி, நட்சத்திரம் என்று புதிய கதைக் களன்.  ஆனால் அம்புலிமாமா கதைகளை நினைவூட்டும் நடை கொஞ்சம் தடங்கலாக இருக்கிறது.  ஏதோ குறியீடு, புத்தகம், கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்படும் சங்கேதங்கள் என்றெல்லாம் வருகிறது. அவை என்னவென்று சொல்லாமல் கதை பயணிப்பதால் அழுத்தம் இல்லை.

*****

40    சார் என்கிற சாரங்கன்    -ஷைலஜா   

http://shylajan.blogspot.com/2011/10/2011.html

கோவில் நகைக் கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.  லாக்கர் பாஸ்வேர்டை மிரட்டி வாங்குகிறார்கள்.  இன்னொருபக்கம் விஷ்ணுபிரியாவே கொண்டு போய் கொடுக்கிறார். பாஸ்வேர்ட் தெரிந்த முகுந்த் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கோகுல் கொள்ளையடிக்க எதற்கு இத்தனை சுற்றல் என்று தோன்றியது.  விஷ்ணுவை விஷ்ணுப்ரியாவாக்கி, Sir என்பதை சாரங்கனாக்கி ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்.  நல்ல முயற்சிதான். ஆனால் த்ரில்லருக்கான வடிவமைப்பு வரவில்லை கதையில்.

*****

41    சேலன்ஜ்            -பழ மாதேசு   

http://kavithaimathesu.blogspot.com/2011/10/blog-post_27.html

பொண்ணுங்க கடத்தல் பத்தின கதை. ஏகப்பட்ட போலிஸ்காரர்கள் வருகிறார்கள்.  கடத்தல் கூட்டத்தை கைது செய்து விடுகிறார்கள்.  சங்கேத குறியீடு அனுப்புகிற இன்ஃபார்மர், பின்பு ஃபோன் செய்து அவரே அதை விளக்கியும் விடுகிறார்.  பின் எதற்கு சங்கேதம் எல்லாம்?
"

*****

42    கதை விடலாமா?        -சூர்யா ஜீவா   

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011_28.html

சவால் போட்டிக்காக கதை எழுதுவதையே கதையாக கொடுத்திருக்கிறார். கதாசிரியரின் நண்பர் நிறைய ஓட்டுகள் போடுவதாக உறுதி அளித்திருந்ததால் கதையை போட்டிக்கு அனுப்பிவிட்டாராம்.  நல்லது.

*****

43    ஐ.டி            -சூர்யா ஜீவா   

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011_31.html

தொடக்கத்தில் ஏதோ பெரிய ரகசிய அமைப்பை பற்றி வருகிறது.  ஒரு சங்கேதம் பேப்பரில் கொடுக்கப்பட்டு, அதற்கு வீடியோ கான்ஃபரன்சிங்கில் விளக்கம் சொல்லப்பட்டு, அதையொட்டி ரேடியோவில் தொடர்பு கொண்டு... தலை சுற்றுகிறது.  கடைசியில் பார்த்தால் ஆளுங்கட்சி சதி என்று முடிகிறது.

*****

44    கனவில் எழுதப்படும் கதை    -நந்தாகுமாரன்   

http://nundhaa.blogspot.com/2011/10/2011.html

Recursive தொடர் கனவுகளாக சவால் சூழல் சித்திரிக்கப்படுகிறது.  அருமையான உத்தி.  முடிவிலிருந்து தொடக்கத்திற்கு சர்க்குலர் லிங்க் இருக்கிறது.  ஆனால் முதல் காட்சியும் இரண்டாம் காட்சியும் சரியாக இணையவில்லை.  புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள்.   ஸ்பெஷல் பாராட்டுகள்.

*****

45    வினை            -நம்பிக்கை பாண்டியன்   

http://npandian.blogspot.com/2011/10/2011.html

மற்றொரு துப்பறியும் கதை. ஃபோன் வேலை செய்யாததால் நண்பன் மூலம் கடிதத்தில் சங்கேத குறியீடுகளை கொடுத்தனுப்புகிறார் துப்பறிபவர். ஹ்ம்ம்... கெடுவான் கேடு நினைப்பான் என்ற மாரலோடு முடிகிறது கதை. அழுத்தமான  திருப்பங்கள் இல்லை.

*****

46    ஒரு கிராம் சொர்க்கம்    -மனோ   

http://feelthesmile.blogspot.com/2011/10/2011_29.html

போதை பொருள் கடத்த சங்கேத மொழி பயன்படுத்துகிறார்கள் என்று பில்டப் கொடுத்துவிட்டு சாதாரண அரசு பேருந்தில் கடத்துகிறார்கள்.  போலிஸ், இன்ஃபார்மர், டபுள் கிராஸிங் எல்லாம் தாண்டி கடைசியில் மாணவர் கலவரத்தினால் போதை மருந்து அழிந்து போகிறது.  போலிஸ் துறையின் உள்ளடி வேலைகள் இன்னும் நம்பும்படியாக சித்திரித்து இருக்கலாம்.

*****

47    நீதானே என் பொன்வசந்தம்..    -மனோ   

http://feelthesmile.blogspot.com/2011/10/2011_30.html

இன்ஃபார்மர் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கும் கடத்தல் கதை.  அதனால் சவால் சூழல் சரியானபடிக்கு பொருந்தவில்லை.  ஆனாலும் அது பேக்ட்ராப்பில் எங்கேயோ நிகழ்ந்திருக்கின்றது என்று புரிகிறது.  இன்ஃபார்மர் என்பது ஒரு நெட்வொர்க்கிலிருந்து கொண்டு தகவல்களை வெளியே கசிய விடுவது.  மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு எந்தமாதிரியான நிழல் அமைப்புகளிலிருந்து தகவல் பெறுகிறார் என்பது தெரியாததால் கதையின் நம்பகத்தன்மை குறைகிறது.  மற்றபடி நல்ல முயற்சி.

*****

48    பொறி            -பரிவை. சே.குமார்   

http://vayalaan.blogspot.com/2011/10/2011.html

துப்பறியும் கதைக்கு ஏற்ற தலைப்பு. கிட்னி திருடும் கும்பலின் இருப்பிடத்தை சங்கேதமாக போலிஸுக்கு அனுப்புகிற இடம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.  ப்ரிண்ட் அவுட் எடுத்து, பிறகு நேரில் போய்ச் சொல்லி, சவால் சூழல் எந்த இடத்தில் பொருந்துகிறது என்று புரியவில்லை.

*****

49    பீமனின் பராக்ரமம்        -இராஜராஜேஸ்வரி   

http://jaghamani.blogspot.com/2011/10/2011.html

தொன்ம வரலாற்றின் பின்னணியில் புதிய கதைக்களன்.  மஹாவிஷ்ணுவின் அவதாரமாக சாரங்கபாணி எஸ்பி கோகுலாக வருகிறார். பிறகு அவருக்கே விஷ்ணு ஃபோன் செய்கிறார் என்னும்போது லாஜிக் இடர்கிறது. தவறான குறியீட்டால் பீமன் பாதி சிக்கிக் கொள்கிறான் என்னும் கற்பனை ரசிக்க வைக்கிறது.  நல்ல முயற்சி.

*****

50    உளவுத்துறை        -பன்னிக்குட்டி ராம்சாமி   

http://shilppakumar.blogspot.com/2011/10/2011.html

கம்ப்யூட்டர் கேம் பிரியரான எஸ்பிக்கும் இன்ஃபார்மர் விஷ்ணுவிற்கும் நடக்கும் கம்யூனிகேஷன் பற்றி போலிஸார் குழம்புகிறார்கள்.  சவால் சூழலுக்கு பொருத்தமாகவே கதை இருக்கிறது.  முடிவில் வாசகர்களிடம் புதிரையெல்லாம் விடுவித்து விளக்கம் சொல்லிவிடுகிறார்.  சுவாரசியத்தை இன்னும் அதிகபடுத்தியிருக்கலாம்.

*****

51    சித்தரின் எழுத்துக்கள்        -பழ மாதேசு   

http://kavithaimathesu.blogspot.com/2011/10/blog-post_29.html

சித்தர் பூமி, ஹெச்ஐவி என்று புதுக் கதைக்களன்.  குறியீட்டை தப்பாக தரச் சொல்லும் ஐஜி ஒரே நிமிடத்தில் மனம் மாறுவது சற்று இடறல்தான்.  நடுநடுவே தமிழையே ஆங்கிலத்தில் எழுதி வைத்திருப்பது அசிரத்தையை காட்டுகிறது. 

*****

52    களைகள் இங்கு கொல்லப்படும்    -வைகை   

http://unmai-sudum.blogspot.com/2011/10/2011.html

ஆயுத கடத்தல் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது.  ஒரு க்ளூவை மாற்றி, அதை மீண்டும் மாற்றி என்று டபுள் ட்ரிபிள் கேம்கள்.  முடிவில் கெட்ட போலீஸ்காரரை இன்னொரு போலிஸ்காரர் என்கௌண்ட்டர் செய்துவிட போலிஸ் டிபார்ட்மெண்ட்டின் மானம் காப்பாற்றப்படுகிறது. ஆனால் அழுத்தமாக வரவில்லை.

*****

53    கதையின் கதை..        -பன்னிக்குட்டி ராம்சாமி   

http://shilppakumar.blogspot.com/2011/10/2011_30.html

சவால் சூழலின் புகைப்படத்தையே துப்புதுலக்கி கதையாக செய்திருக்கிறார். போட்டோவில் இருக்கும் எஸ்பியை மெய்யாகவே கண்டுபிடிக்கிறார்கள்.  அந்த சரடு நன்றாக இருந்தது.  ஆனால் அதற்குள் கதை முடிந்துவிட்டது.

*****

54    புத்தர் சிரிக்கிறார்        -பார்வையாளன்   

http://pichaikaaran.blogspot.com/2011/10/2011_30.html

அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகளின் பின்புலனில் சவால் சூழலை பொருத்தி எழுதப்பட்ட கதை.  நீளமாக இருந்தாலும் 1500 வார்த்தைகளுக்கு மிகவில்லை.  இன்ஃபார்மர் என்பது ஒரு சிற்றிதழ் என்பது நல்ல கற்பனை. கடித பரிமாற்றங்கள் மற்றும் டைரி குறிப்புகளில் கதை சொல்லப்படுகிறது.  கொஞ்சம் பிரச்சார நெடி தூக்கலாக இருப்பதால் கதையம்சம் மட்டுப்பட்டு விடுகிறது.

*****

55    போட்டி     -மிடில்கிளாஸ் மாதவி   

http://middleclassmadhavi.blogspot.com/2011/10/2011.html

ட்ரெஷர் ஹண்ட் பின்னணியில் கதை நடக்கிறது. அட்லாஸை வைத்து புதிரை அவிழ்க்கிறார்கள். புதிரில் அதிக கவனம் செலுத்தியதால் மற்ற சம்பவங்கள் எலலாம் அழுத்தமில்லாமல் நடக்கின்றன.  முடிவில் காதலர்கள் இணைந்து சுபமாக முடிகிறது.

*****

56    கத்தியின்றி ரத்தமின்றி    -பார்வையாளன்   

http://pichaikaaran.blogspot.com/2011/10/2011_3324.html

ஃபோன் மூலமாக அமானுஷ்ய கட்டளைகள் என்று தொடங்கி, முடிவில் அணுசக்திக்கு ஆதரவான சதியாக முடிகிறது.  கதையின் தொடக்கத்தில் வரும் அடல்ட்ஸ் ஒன்லி கதை ஒட்டாமல் நெருடலாக இருக்கிறது.  முடிவில் இன்னும் நம்பும்படி அமைந்திருந்தால் சிறப்பான கதையாக அமைந்திருக்கும்.

*****

57    குறியீடு            -ப. அருண்   

http://aalunga.blogspot.com/2011/10/2011.html

நல்ல லாஜிக்.  பாஸ்வேர்ட் கேட்டவன் உண்மையில் கேட்டானா, இல்ல தவறாக நோக்கத்தில் கேட்டானா என்பதை கண்டுபிடிக்க நல்ல திட்டம்.  இதற்கு மாதவனிடமே கேட்டு சரி பார்த்திருக்கலாமே என்று தோன்றாமலும் இல்லை.  இன்னும் விரிவாக எடுத்து சென்றிருந்தால் நல்ல கதையாக உருவெடுத்திருக்கும்.

*****

58    மாயை            -செல்வகணபதி   

http://selvasword.blogspot.com/2011/10/blog-post.html

அலுவலக பாலிடிக்ஸால் தவறான பாஸ்வேர்டு கொடுக்கப்பட அதை அதிர்ஷ்டவசமாக முறியடிக்கிறார்கள்.  யார் செய்த சதி என்பது நல்ல ட்விஸ்ட்.  ஆனால் மெலெழுந்தவாரியாக நடக்கிற சம்பவங்களால் சுவாரசியம் அதிகம் இல்லை.

*****

59    கத்தியின்றி.. ரத்தமின்றி..    -அருண்காந்தி   

http://enviruppam.blogspot.com/2011/10/2011_31.html

பயோ வேஸ்ட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கப் போடும் திட்டம்.  நல்ல முயற்சி என்று சொல்லலாம்.  ஆனால் கதையமைப்பு கொஞ்சம் காலை வாரி விடுகிறது.  இன்னும் 'நறுக்'கென வந்திருக்கலாம்.

*****

60    கண்ணாமூச்சி        -கார்த்திக்   

http://karthiguy.blogspot.com/2011/10/2011.html

அணுசக்தி போராட்ட குழுவிற்கு ஆதரவாக பாற்கடல் விஷ்ணுவே வந்து பாஸ்வேர்டை மாற்றிவிடுவதாக ஒரு கதை.  கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான். ஆனால் அப்படிப்பட்ட குறிப்பு ஏன் வரவேண்டும் என்ற கேள்விக்கு விடையில்லை. 

*****

61    காவல்துறை கருப்பு ஆடு    -ரஹீம் கஸாலி   

http://ragariz.blogspot.com/2011/10/2011compedition-short-story.html

மற்றொரு கடத்தல், கருப்பு ஆடு கதை.  கதை முழுவதும் உரையாடல்களாக வருகிறது.  அப்பட்டமாக தகவல் சொல்லும் பாணியில் அமையாமல் யதார்த்த உரையாடல்களில் கதை சொன்னால்தான் சுவாரசியம் இருக்கும்.  அதுவும் தூரப் போய் செல்ஃபோன் பேசியதால் சந்தேகப்பட்டு மாட்டும் அப்பாவியாக இன்ஃபார்மர் இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

*****

62    பூங்காவுக்குள்ளே புயல்    -பரிவை. சே.குமார்   

http://vayalaan.blogspot.com/2011/10/2011_31.html

ஒரு ரொமான்ஸ் காதல் கதையின் இடையே ஆங்காங்கே சிறுகதைப் போட்டி பற்றியும் வருகிறது.

*****

63    விண்டேஜ்            -பினாத்தல் சுரேஷ்   

http://penathal.blogspot.com/2011/10/vintage-2011.html

விண்டேஜ் கார் வாங்க நடக்கும் போட்டி.  சார், கோகுல், ரெட்டி என்று பலரும் ஏலத்தில் போட்டி போட விஷ்ணு யாருக்கு வேலை செய்கிறான் என்ற சஸ்பென்ஸ். கதை வெகு சுவாரசியம்.  ஆனால் சங்கேத கோட் எதற்கு பரிமாறிக் கொள்கிறார்கள் என்றுதான் புரியவேயில்லை.

*****

64    போர்க்களத்தில் சாய்ந்தால் கூட    -சன்   

http://writersun.blogspot.com/2011/10/2011.html

மந்திரவாதம், ஊடு மாந்த்ரீகம் என்று வித்தியாசமான பின்னணி.  ஆங்கில குறியீட்டை எப்படியோ மாந்த்ரீகத்திற்கு கொண்டு சென்று விட்டார்.  நல்ல சரடு.  முதலில் வரும் காதல் சம்பவங்கள் கதையில் ஒட்டுவதில்லை.  முடிவில் அமானுஷ்யமான திருப்பம்.  நல்ல முயற்சி. 

*****

65    மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும்    -சன்   

http://writersun.blogspot.com/2011/10/2011_31.html

ஜென் மற்றும் ஆர்ட் ஆஃப் மோட்டார் சைக்கிள் பாணியில் எழுதப்பட்ட சிறுகதை.  நல்ல முயற்சி. சவால் சூழலையும் பொருத்துவதற்காக சற்று வளர்த்திருக்கிறார்.  அதற்கப்புறம் ஹெட் மெக்கானிக்கை சந்தித்தப் பிறகுதான் பம்ப் கதையே துவங்குகிறது.  ஆனால் கதையாக பரிமளிக்காமல் ஒரு சுயமுன்னேற்ற கட்டுரையாக நின்றுவிட்டது.

*****

66    காதல் ஒரு பட்டாம்பூச்சி    -விஜயஷங்கர்   

http://vijayashankar.blogspot.com/2011/10/blog-post_31.html

காதல் கதை.  முடிவில் தன் காதலிக்காக அவள் வருங்கால மாப்பிள்ளையை காப்பாற்றப் போகிறான்.  அப்புறம்? என்று பார்க்கும்போதே முற்றும் போட்டுவிட்டார்.

*****

67    சவால் சிறுகதை        -இளா   

http://vivasaayi.blogspot.com/2011/10/2011.html

குழந்தைகளின் கள்ளன் போலிஸ் விளையாட்டில் சவால் சூழலை பொருத்தியிருக்கற வித்தியாசமான கதை. சங்கேத மொழி, ஃபோன் வருவதெல்லாம் குழந்தையின் கற்பனையில் நடப்பதாக அழகாக காட்டி விடுகிறார். போட்டியின் விதிப்படி அது இருக்க வேண்டுமே. கோகுல் மற்றும் கிருஷ் இருவரா இல்லை ஒருவரா என்ற குழப்பம் இருக்கிறது. கதைக்கு உதவியாக சில படங்கள் காட்டப்படுகிறது.  ஆனால் சவால் படம் காணவில்லை. 

*****

68    இரட்டைப்பிறவி விஷ்ணு    -நக்கீரன் ஜெயராமன்   

http://naai-nakks.blogspot.com/2011/10/2011.html

சங்கேத குறிப்பிற்கு கூகுள் மூலமாக பல விவரங்களை சேகரித்து போட்டிருக்கிறார். டெரர் கும்மி போட்டியில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது இவருக்கு.  கதை எழுதும் ஆர்வம் விடாது துரத்திக் கொண்டிருக்கிறது.  சீக்கிரமே கதை எழுதிவிடுவார் என்று நம்புகிறோம்.

*****

69    ஆறாம் அறிவு        -நிஷா   

http://forcenisha.blogspot.com/2011/10/blog-post_31.html

பெண்ணை ப்ளாக்மெயில் செய்பவரை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள்.  அப்புறம் ஒட்டாக சவால் சூழலுக்கான ஃபோட்டோவை சேர்த்து விடுகிறார் கதாசிரியர்.  ஒருவேளை அடுத்த கதையில் சவால் சூழலை வைத்து தொடர்ந்து எழுதுவாராக இருக்கும்.

*****

70    அணு அணுவாய்..        -கதிரவன்   

http://kathir-tamil.blogspot.com/2011/10/2011.html

சங்கேத குறியீட்டின் மூலமாக வீட்டு விலாசம் கண்டுபிடித்து துப்பறியும் கதை.  கொலை செய்தவரின் வீட்டுக்குப் போனால் அணுசக்தி எதிர்ப்பு பிரச்சாரமாக முடிகிறது.  த்ரில்லராக தொடங்கி பெரிய சஸ்பென்ஸ் இல்லாமல் சப்பென முடிந்துவிட்டது போல் இருந்தது.

*****

71    பிரபல எழுத்தாளன் எழுதியது    -பறக்கும் குதிரை   

http://parakkumkuthirai.blogspot.com/2011/10/2011.html

"
இணையத்தில் நடந்த பிரபல தமிழ் எழுத்தாளர்களிடையேயான விவாதத்தை அப்படியே கதை செய்திருக்கிறார்.  விஷ்ணுதர வட்டம், எழுத்தாளர் ஜெயராமன், எழுத்தாளர் ஆறு என்றெல்லாம் வருகிறது.  நல்ல முயற்சி."

*****

72    அகம்            -அகல்விளக்கு   

http://agalvilakku.blogspot.com/2011/10/2011.html

சவால் சூழலை சுற்றி எழுதப்பட்ட கடத்தல் கதை.  நடையை இன்னும் மெருகேற்றியிருந்தால் நன்றாக வந்திருக்கும். குறியீட்டுத் தகவலை கொரியர் டெலிவரியிடமிருந்து கைப்பற்றுவது தவிர வேறு சஸ்பென்ஸ் இல்லாததால் சற்று டல்லடிக்கிறது.

*****

73    வாழ்க்க ஒரு வட்டம்டா -2    -ரவி   

http://mcxu.blogspot.com/2011/10/2-2011.html

கடத்தல், போலிஸ் கதாபாத்திரங்களை வைத்து சைக்ளிக் சம்பவங்களை சித்திரித்திருக்கிறார். நடுவில் சற்று பெயர்க் குழப்பம் வந்துவிடுகிறது.  சம்பந்தபட்டவர்கள் எல்லாரும் இறந்து விடுகிறார்கள்.  இரண்டு கொலை செய்த வின்செண்ட் மட்டும் இருபது கோடியோடு தப்பித்து விடுகிறார்.  வாழ்க்கஒரு வட்டம்டா- 3ல் அவருக்கு தண்டனை கிடைக்குமோ?

*****

74    மூன்றாம் விதி        -ஸ்ரீராம்   

http://engalblog.blogspot.com/2011/10/2011.html

குழப்பங்களின் விதி போல் வரிசையாக எல்லாரும் பணத்தை கண்டெடுக்கிறார்கள். வேறு வழியில் திருட்டு கொடுக்கிறார்கள்.  இறுதியில் வரும் குருமூர்த்தி பாட்டியின் மருமகனா?  பணத்தை முதலில் தவறவிட்டவரோ? அந்தரத்தில் நின்றுவிடுகிறது கதை.  சவால் சூழல் சம்பந்தமில்லாமல் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது.

*****

75    போலீஸா கொக்கா?        -பெசொவி   

http://ulagamahauthamar.blogspot.com/2011/10/2011.html

க்ளூ கொடுத்த பேப்பரிலிருந்து இன்னொரு க்ளூ எடுத்து துப்பு துலக்கிவிடுகிறார்கள்.  நல்ல கற்பனை.  ஆனால் பாத்திரங்கள் எல்லாரும் Confess செய்வது போலவே தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்வதால் கதை போரடிக்கிறது."

*****

76    காக்கும் விஷ்ணு        -பெசொவி   

http://ulagamahauthamar.blogspot.com/2011/10/2011_31.html

சவால் சூழலை வைத்து கம்ப்யூட்டர், டேட்டாபேஸ், பாஸ்வேர்டுன்னு எழுதப்பட்ட கதை.  இறுதியில் தவறான பாஸ்வேர்டையே தப்புந்தவறுமாக உள்ளிட்டால் சரியான பாஸ்வேர்டாகிவிடுகிற கற்பனை நன்றாக இருந்தது.  இறுதியில் வேறொரு விஷ்ணு ப்ரியா வேறு ஃபோன் செய்வதாக முடித்துவிடுகிறார்.  அதனால் சவால் சூழல் முழுவதுமாக பொருந்தாமல் போய்விடுகிறது.  டேட்டாபேசில் சேமித்து வைக்க ஃபாண்ட் கலரெல்லாமா தேவைப்படும்?

*****

77    ரங்கு குரங்கு ஆன கதை    -வெண்புரவி   

http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

கொஞ்சம் நீளமான கதை.  1600 வார்த்தைகளுக்கு மேலே போகிறது.  அங்கங்கே சில நல்ல நகைச்ச்சுவையும் இருக்கிறது.  கதைக்களனாக திருப்பரங்குன்றம் வருகிறது.  நண்பர்கள் தண்ணியடித்துவிட்டு, திறந்தவெளியில் படிகளில் ஏறிப் போய் வாந்தி எடுப்பதாக சொல்லப்படுகிறது.  திருப்பரங்குன்றம் கோவில் குடவறை முறையில் குன்றின் உள்ளிருந்து ஏறிப்போகும் முறையில் கட்டப்பட்டது என்று தெரியாமல் எழுதிவிட்டாரோ.  குரங்கு கடித்துவிட டாக்டர் சிகிச்சை, கடித்த குரங்கு செத்து போகிறது என்று போய் முடிவில் டாக்டர் மங்களேஸ்வரன் என்னும் மங்கியோடு முடிகிறது.  கொஞ்சம் எடிட் செய்திருந்தால் நல்ல கதையாக வந்திருக்கும்.

*****

78    குழப்பம்            -வெளங்காதவன்   

http://velangaathavan.blogspot.com/2011/10/2011.html

கல்லூரிக் காதல் பின்னணியில் எழுதப்பட்ட கதை.  குறியீட்டிற்கு ஜாலியான ஒரு விளக்கமும் சொல்லபடுகிறது.  ஆனால் கதையோடு பொருந்தவில்லை.  சும்மா ஜாலியாக எழுதப்பட்ட கதை.

.

Saturday, November 12, 2011

சவால் சிறுகதைப்போட்டிக் கதைகள் : விமர்சனம் -1

அன்பு நண்பர்களே, சவால் சிறுகதைப்போட்டிக்கான நடுவர் குழு, கதைத் தேர்வில் மூழ்கியிருக்கிறது. 3 பேர்கள் உள்ள அந்தக் குழு இணைந்தளித்த சிறிய நறுக் விமர்சனங்களின் முதல் பகுதி இதோ இங்கே.. உங்களுக்காக. இதன் இரண்டாம் பகுதி 14ம் தேதியும் தொடர்ந்து போட்டி முடிவுகளும் அறிவிக்கப்படும். விமர்சனங்களை உங்கள் மீதானதல்ல, உங்களுடைய இந்த தனிப்பட்ட படைப்பின் மீதானதுதான். அவற்றை ஆரோக்கியமான நோக்கத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கவும், வெற்றிபெறவும் குழுவின் சார்பாக வாழ்த்துகள்.!

_________________________________________________________

 

1    உதயசூரியன்    -கார்த்திக் பாலா   

http://kanakkadalan.blogspot.com/2011/10/2011.html

தொடக்கம் நன்றாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் அறிமுகம் கொஞ்சம் நீளம்தான். எஸ்பி திறமையாக சதியை முறியடித்தபிறகு நடக்கும் சம்பவங்கள் சற்றே குழப்பமாக இருக்கிறது.  'உதயசூரியன்' என்ற புத்தகம் கதையில் இடம்பெறுகிறது.  அதற்கும் இந்தக் கதையின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. முடிவில் கொஞ்சம் ஷாக்கான ட்விஸ்ட் அமைந்திருக்கிறது. நல்ல முயற்சி.

***

2    பிளாக் டைமண்ட்    -இளையதாசன்   

http://unmaikaga.blogspot.com/2011/10/b-l-c-k-d-i-m-o-n-d-2011.html

சவால் போட்டிக்கான படம் சரியானபடி உபயோகிக்கப் படவில்லை. கறுப்பு வைரத்தால் ஆன சிலை, அதை கொள்ளையடிக்க ஒரு கொலை அதில் டபுள் கிராஸிங் என்று குழப்பமான கதையமைப்பு.  லாஜிக்கும் ஒட்டவில்லை.

***

3    அவள் வருவாளா?    -இளையதாசன்   

http://unmaikaga.blogspot.com/2011/10/2011.html

காலேஜ் செட்டப்பில் சவால் படத்தை இணைத்து எழுதப்பட்ட கதை. ஆனால் கதையில் அவ்வளவு சுவாரசியமில்லை.  சவால் சூழல் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று போலத்தான் இருந்தது.

***

4    குறுஞ்செய்தி    -ஆ.சுகுமார்   

http://sukumaranandan.blogspot.com/2011/10/2011.html0

பெரிய சதிப்பின்னலைப் பற்றி வருகிறது.  சரியாக புரியவில்லை.  நிறைய சம்பவங்கள் முக்கியத்துவம் இல்லாத வகையில் சித்திரிக்கப்படுகின்றன.  எழுத்துப் பிழை, சொற்பிழைகள் வாசிக்க பெரும் தடங்கல்.  ஸ்டைலிஷாக இருக்க என்று வலிந்து திணிக்கப்பட்ட ஆங்கில உரையாடல்கள் மற்றொரு தடங்கல். இன்னும் முயற்சி செய்தால் நல்ல த்ரில்லர்கள் எழுதலாம்.

***

5    விசாரணை       - ஆ.சுகுமார்   

http://sukumaranandan.blogspot.com/2011/10/2011_08.html

சவால் சூழல் பொருந்தவேயில்லை.  கதையின் முடிவில் எல்லாம் கனவு என்று முடித்துவிட்டார்.  கதையாக உருப்பெறவேயில்லை.

***

6    அலைபேசி        -அபிமன்யு   

http://abimanyuonline.blogspot.com/2011/10/2011.html

தொடக்கத்தில் நல்ல விறுவிறுப்பு.  மர்மம், தீவிரவாத கும்பல், ரகசிய குறியீடு என்றெல்லாம் சுற்றி கடைசியில் கதைப் போட்டி நடத்துபவர்களை கலாய்ப்பதோடு முடிகிறது.  நல்ல முயற்சி.  மீண்டும் படிக்கத் தூண்டுமளவுக்கு சுவாரசியம்.

***

7    மனசாட்சி        -கலாநேசன்   

http://somayanam.blogspot.com/2011/10/2011.html

விவரணைகள் பரவாயில்லை.  சில இடங்களில், விவரணைகளிலிருந்து வசனங்களை வேறுபடுத்த கொட்டேஷன் பயன்படுத்தப்படாதது படிக்க தடைக்கல்லாக இருந்தது.  மும்பையிலிருந்து சென்னை வந்து பிறகு கல்கத்தா போய் பிறகு மிடில் ஈஸ்ட் போகும் கடத்தல் பாதை லாஜிக்கலாக நெருடுகிறது.  திருப்பம் அழுத்தமாக அமையாயததால் அதிகம் சுவாரசியம் இல்லை.

***

8    புதிய தென்றல்    -ஜ.ரா.ரமேஷ்பாபு   

http://meithedi.blogspot.com/2011/10/2011.html

கொஞ்சம் மாறுபட்ட புதிரோடு தொடங்கினாலும் சவால் சூழல் முழுவதுமாக பொருந்தவில்லை.  தவறான குறியீட்டைப் பற்றிய விளக்கம் 'சப்'பென முடிந்துவிட்டது.  ராஜுவின் திருமணத்தை நிறுத்த போடும் திட்டம் கொக்கு தலையில் வெண்ணெய் மாதிரி சுற்றி வளைத்துக் கொண்டு போகிறது.

***

9    சொல்லமறந்த கதை    -ஜ.ரா.ரமேஷ்பாபு   

http://meithedi.blogspot.com/2011/10/2011_11.html

கதை என்று ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.  சும்மா ஜாலியாக போட்டிக்கு அனுப்பியிருப்பார் போல..

***

10    போங்காட்டம்    -ராதாகிருஷ்ணன்   

http://www.greatestdreams.com/2011/10/blog-post_10.html

மாறுபட்ட கதைக்களன். ஆனால் ரொம்பவும் சுத்தி வளைத்து கதைக்குள் வருவதற்கு ரொம்பவும் தாமதமாகிறது. சவால் சூழல் காணப்பட்டாலும், வலியப் பொருத்தியது போலத்தான் இருக்கிறது. தலைப்பிற்கு ஏற்றபடி போங்காட்டம்தான். 

***

11    தடயம்        -அப்துல் பாஸித்   

http://nanbanpakkam.blogspot.com/2011/10/2011.html

டபுள் கேமை வச்சு இன்னொரு கதை.  ஒரு போலிஸ் அதிகாரி அப்படி 'பொக்'குனு உண்மையை எல்லாம் உளறிடுவாரா என்ன.?  இன்னும் கொஞ்ச்ம நல்ல ட்விஸ்ட் கொடுத்திருக்கலாம். 

***

12    அதிர்ச்சி வைத்தியம்        -ஜ.ரா.ரமேஷ்பாபு   

http://meithedi.blogspot.com/2011/10/2011_12.html

முதல் வாக்கியத்திலேயே எழுத்துப் பிழை.  Dean என்பது தவறாக குறிப்பிடப் பட்டிருந்தது.  அடுத்து பார்த்தால் சுப்புவிற்கு ஃபோன் வருகிறது.  அதை அட்டெண்ட் செய்தால் எங்கேஜ்ட் டோன் வருகிறதாம்.  எப்படி ஐயா? கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதையாக வடித்திருக்கலாம்.

***

13    கண்கள் இரெண்டால், உன் கண்கள் இரெண்டால்    -இளையதாசன்   

http://unmaikaga.blogspot.com/2011/10/2011_12.html

எங்கெங்கோ சுற்றிவிட்டு கடைசியில் சவால் சூழலை ஒரு ஸ்கிட் போல செய்து கதைக்குள் கொண்டு வந்துவிட்டார்.  ஆனால் எதற்காக ஒரு டிவி இயக்குநர் ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுக்கிறார் என்று புரியவில்லை.  எப்படியோ கதை டபக்கென முடிந்து விட்டது.

***

14    செல்’லத் தொல்லைகள்    -நாய்க்குட்டி மனசு   

http://venthayirmanasu.blogspot.com/2011/10/2011.html

மாறுபட்ட கதைக் கரு.  கதையின் தொடக்கத்தில் மனோதத்துவ கவுன்சிலிங் என்று வருகிறது. பெயரெல்லாம் கேட்கிறார். பிறகு நடுவில் நாலு சிட்டிங் முடிந்துவிட்டது என்று வருகிறது.  அப்புறமும் பெயரைக் கேட்டுக் கொண்டிருப்பார்களா என்று லேசாக இடறுகிறது. எஸ்பி, கோகுல் என்று இரண்டு வெவ்வேறு பாத்திரங்களா? சவால் சூழலில் அப்படி இல்லையே.  குழப்பம்.  மனோவியாதியால் மாறி மாறி மெசேஜ் அனுப்பியிருப்பதை சொல்லி அப்படியே முடித்துவிடுவதால் வேறு சுவாரசியம் எதுவும் இல்லை. 

***

15    மனதோடு விளையாடு    -பொன்ராஜ் ராமு   

http://mugaavari.blogspot.com/2011/10/2011.html

4th APRIL 2012 என்று தேதி வருகிறது.  எதிர்காலத்தில் எழுதப்பட்ட அத்தியாயமோ என்று சுவாரசியமாக படித்தால், ஏன் அப்படி தேதி குறிப்பிட்டிருக்கிறார் என்று குழப்பமாகி விடுகிறது.  விஷ்ணு இன்ஃபார்மரா இல்லை இன்வெஸ்டிகேஷன்ஆபிசரா? டாக்டர்ஸ் சர்டிபிகேட் எல்லாம் கண்டுபிடித்து துல்லியமாக ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறாரே... எல்லா தகவல்களையும் கொடுத்தவர்  பாஸ்வேர்டை தவறாக கொடுப்பதற்கான காரணத்தை முழுவதும் சொல்லவில்லை.  சவால் சூழல் ஒட்டாமல் இருக்க, கதை வேறு தளத்தில் போகிறது போல் ஒரு உணர்வு.  இன்னும் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதை கிடைத்திருக்கும்.

***

16    கண்ணனும் கண்ணனும்    -சுரேகா   

http://www.surekaa.com/2011/10/2011.html

வித்தியாசமான கதைக்களன்.  கதையையும் கதை போட்டியையும் இணைத்து பின்னியிருக்கிறார்.  ஆனால் 'கண்ணனும் கண்ணனும்' என்று ஏன் தேர்ந்தெடுத்து சென்னைக் கண்ணன், திருப்பூர் கண்ணன் என்றெல்லாம் சுற்ற வேண்டும் எனப் புரியவில்லை. கதைப் போட்டியை நன்றாகவே கிண்டல் அடித்திருந்தார். பரிசலும் ஆதியும் கவனிக்க வேண்டும்.  நல்ல முயற்சி.  ஆனால் முழுமையடையவில்லை.

***

17    கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும்    -சரவணவடிவேல்.வே   

http://saravanaidea.blogspot.com/2011/10/2011.html

கதையாக இல்லாமல், வாசகனோடு உரையாடலாக எழுதியிருக்கிறார். நல்ல நகைச்சுவை வருகிறது இவருக்கு.  சவால் சூழலை பொருந்தாமல் பொருத்தி ஒரு சைக்காலஜிக்கல் பிராஜெக்ட் என்று சமாளித்து விட்டார்.  கடைசியில் 'இந்த புகைப்படத்திற்கு இந்தக் கதை போதும்' என்று ஒரு வரி சேர்த்திருப்பதை போட்டி அமைப்பாளர்கள் பார்வையில் பட்டதா? படாவிட்டால் இப்பொழுதாவது படட்டுமே.

***

18    சட்டென நனைந்தது ரத்தம்    -ஜேகே   

http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html

முதலில் கொஞ்சம் புரிதல் சிக்கல் இருந்தது.  மீண்டும் வாசித்தபோது, இரு பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறார் என்று புரிந்தது. திலீபன் குமரனை சந்தேகிக்கும் இடம் சற்று சறுக்கினாலும், நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக அமைந்திருக்கிறது. சவால் சூழலை இயல்பாக பொருத்தி இருந்தார்.  அருமை.

***

19    ஹோட்டல் வசந்தம்        -பிரபாகரன்.கு   

http://prabaonline.blogspot.com/2011/10/blog-post.html

சவால் சூழலுக்காக எழுதப்பட்ட கதைதான். மனைவியின் இறப்பிற்கு காரணமானவனை, தனக்கே தெரியாமல் கணவன் மாட்டிவிடுகிறான்.  ஆனால் அந்த கடத்தல் சமாச்சாரஙக்ள் அவதி அவதியாக சொல்லப்பட்டு கதையின் சுவாரசியம் கெட்டுவிடுகிறது.  இன்னும் ஸ்ட்ரீம்லைன் செய்திருந்தால் நல்ல பழிவாங்கும் கதையாக எடுபட்டிருக்கும்.  இதில் எதற்கு ஹோட்டலைக் கொண்டு வந்தார்? கேபிள் ஷங்கருக்காகவா? :)

***

20    என்னை கண்காணிப்பவன்    -கே.எஸ்.சுரேஷ்குமார்   

http://veeedu.blogspot.com/2011/10/2011.html

கிரைம் களனிலேயே சற்று வேறு கோணத்தில் கதை சொல்லியிருக்கிறார்.  கோகுலுக்காக விஷ்ணு இன்ஃபார்மராய் மாறுவதாய் நமக்கு சொல்லிக் கொண்டே வருபவர் கடைசியில் அவர் ஏற்கெனவே இன்ஃபார்மராய் இருக்கிறார் என்று சொல்லும்போது லாஜிக் இடிக்கிறது. செல்ஃபோன் சர்க்யூட்டில் கொண்டு போய் ஏன் பாஸ்வேர்டை பதுக்கி வைக்கிறார் என்பதுதான் புரியவே மாட்டேன் என்கிறது.

***

21    வாழ்க்க ஒரு வட்டம்டா    -ரவி   

http://mcxu.blogspot.com/2011/10/2011.html

முதல் வரியிலேயே கதையை சவால் சூழலுக்குள் கொண்டு வந்து விடுகிறார்.  சினிமா டிக்கெட்டிற்கான குறியீட்டை மாற்றிக் கொடுத்து பழி தீர்க்கிற கதை. சப்பென முடிந்து விடுகிறது.

***

22    ஒன்றுக்குள் இரண்டு    -மனோ   

http://feelthesmile.blogspot.com/2011/10/2011.html

மல்டிப்பிள் பர்சனாலிட்டி வைத்து கிரைம் கதை.  ஆங்காங்கே நல்ல விவரணைகள் கைகொடுத்தாலும், சவால் சூழலை கதையில் காணவில்லை என்பது மிகப் பெரிய குறை.  முடிவில் ஒரு டாக்டர் வந்து எல்லா புதிர்களையும் ஜஸ்ட் லைக் தட் விளக்கி விட்டுப் போகிறார். 

***

23    அம்பு ஒன்று.. இலக்கு மூன்று    -முத்துசிவா   

http://muthusiva.blogspot.com/2011/10/2011.html

ஃப்ளாஷ்பேக், கரெண்ட் என்று மாறி மாறி கதை சொல்வது நல்ல உத்திதான்.  ஆனால் அதிகம் குழப்பாமல் இருக்க வேண்டும்.  அந்த ரகசிய குறியீட்டிற்காக போலீஸ், ஆதி என்று எல்லாரும் அடித்துக் கொள்ளும்போது விஷ்ணு எதற்காக அதை போலிஸிடம் கொடுக்க வேண்டும்? அவரே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேள்வி வருகிறது.  முடிவில் சில ட்விஸ்ட்கள் இருந்தாலும் அதை அவசர அவசரமாக கொட்டியது போல் இருந்தது.  நல்ல முயற்சி.

***

24    திருட்டைத் திருடிய திருட்டு    -ஆ.சுகுமார்   

http://sukumaranandan.blogspot.com/2011/10/2011_20.html

போலிஸ் விசாரணை சம்பந்தபட்ட மற்றுமொரு த்ரில்லர்.  செல்ஃபோன் சர்வீஸ் செய்பவர் பார்வையில் சவால் சூழலை பொருத்த முயற்சித்திருக்கிறார்.  ஆனால் லாஜிக் நிறையவே இடிக்கிறது.  ஏகபட்ட தொழில்நுட்பத் தகவல்கள் தடுமாற வைக்கின்றன.

***

25    குறிப்பறிதல்    -நவநீதன்   

http://navaneethankavithaigal.blogspot.com/2011/10/2011.html

சவால் சூழலில் இருக்கும் சங்கேத மொழியைப் பற்றிய முதல் கதை.  தவறான குறியீட்டிற்கான விளக்கம் புதுமையாக இருந்தது.  ஆனால் அந்த குறியீட்டை வைத்து போலீஸ் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை. நல்ல கதைக்களன்.  இன்னும் நன்றாக செய்திருக்கலாம்.

***

26    சிலை ஆட்டம்    -ஆர்விஎஸ்   

http://www.rvsm.in/2011/10/2011.html

சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற கதை உத்தி.  முதலிலேயே ஒரு மரண வாக்குமூலம், பின் கொலை, துப்பு துலக்குதல் என்று பரபரவென தொடங்குகிறது. சவால் சூழலை வெகு நேர்த்தியாக பொருத்தியிருக்கிறார்.  கதையும் முழுமையான வடிவத்தில் திருப்பங்களுடனும், தர்க்கத்துடனும் அமைந்திருந்தது.  சங்கேத குறிப்புக்கு நீளமான விளக்கமும் வருகிறது. முடிவு கொஞ்சம் டல்தான். சாகும் தறுவாயில் அவசர அவசரமாக எழுதுபவன் 'வஸந்த் பவன் மசால்தோசையும், டிகிரி காபியையும் ருசித்தி...' என்றெல்லாமா எழுதுவான் என்று கேள்வி எழாமல் இல்லை.  இந்த சவால் சூழலுக்கு பொருத்தமான சிறப்பான கதை.

***

27    நகல்    -கோமாளி செல்வா   

http://koomaali.blogspot.com/2011/10/2011.html

இன்ஃபார்மரை உளவாளியாக்கிக் கொண்டு அறிபுனைவாக எழுதியிருக்கிறார். இரண்டு நாட்களில் க்ளோனிங், புளுட்டோனியம் குண்டு, வாய்ஸ் சென்ஸார் என்று பெரிய ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறார்.  ஆனால் இவையெல்லாம் அழுத்தமாக பதியவில்லை.  உதாரணத்திற்கு நேரே சந்திக்கும் கோகுலிடம், விஷ்ணு மெனக்கெட்டு குறியீடை கடித பாணியில் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்கிறார்.  பிறகு கொஞ்சம் காலக் குழப்பம் வேறு இருக்கிறது.  மற்றபடி நல்ல முயற்சி.

***

28    கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு    -சி.பி.செந்தில்குமார்   

http://adrasaka.blogspot.com/2011/10/kovai-preethi-murder-case.html

தலைப்பும், கதை உத்தியும் வித்தியாசம்தான்.  டைரி குறிப்புகள் வழியாக கதையை கொண்டு போயிருக்கிறார்.  டைரி குறிப்புகள் ஒப்புதல் வாக்குமூலம் ரேஞ்சுக்கு 'அவளை கரெக்ட் பண்ணினேன். இவ ரோலை அவ செய்வா' இல்லாம இயல்பா இருந்திருக்கலாம்.  சவால் சூழலை நல்லா பொருத்தமா இணைச்சிருக்கார்.  புஷ்பா தங்கதுரை ஸ்டைல்ல நல்ல த்ரில்லர்.

***

29    பாப்பா போட்ட தாப்பா!    -பார்வையாளன்   

http://pichaikaaran.blogspot.com/2011/10/2011.html

முதல் வரியிலேயே கதைக்குள் இழுத்து விடுகிறார். பிறகு ஒரு A ஜோக் வேறு வருகிறது. வித்தியாசமான கதை சொல்லும் முறையோடு ஆங்கங்கே சில நகைச்சுவைகளும் நன்றாக வந்திருக்கின்றன. முதலில் சில தர்க்கக் குழப்பங்கள் ஏற்பட்டாலும், முடிவில் வரிசையாக விளக்கங்கள் கொடுத்து ட்விஸ்ட்டோடு முடிகிறது கதை.  கொஞ்சம் Rawவாக இருந்தாலும் படிக்க சுவாரசியம். 

***

30    தனக்கென்று வந்துவிட்டால்..    -ராஜி வெங்கட்   

http://suharaji.blogspot.com/2011/10/2011.html

நல்ல சஸ்பென்ஸோடு எழுதப்பட்ட த்ரில்லர்.  சிம்பிளான நடையில் குழப்பமில்லாமல் இருக்கிறது. கடத்தின பொண்ணுங்களை மூணு மாசம் மறைச்சி வச்சிருந்து கப்பல்ல கொண்டு போவாங்களா போன்ற கேள்விகள் எழுந்தாலும், சவால் சூழலை சரியானபடிக்கு பொருத்தி எழுதியிருக்கிறார்.  நல்ல முயற்சி.

***

31    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி        -ராம்வி   

http://maduragavi.blogspot.com/2011/10/2011.html

நிதானமான எழுத்து.  ஊருக்கு உதவும் பையனை தவறாக புரிந்து கொள்ளும் தந்தை இறுதியில் பெருமிதம் அடைகிறார். நடுவில் சவால் கதைப் போட்டியை நுழைத்து சவால் சூழலை விளக்கிவிடுகிறார்.  அதுதான் ஒட்டாமல் நிற்கிறது.

***

32    கல்லூரி சாலை        -எ.யுகேந்தர்குமார்   

http://ivanbigilu.blogspot.com/2011/10/2011.html

ட்ரெஷர் ஹண்ட் விளையாட்டை வைத்து எழுதப்பட்ட கதை.  முதல் முயற்சியாக இருக்கலாம்.  சங்கேதத்தை சற்று சாமர்த்தியமாக வளைத்து பயன்படுத்திக் கொண்டுவிட்டார். அதிக சுவாரசியம் இல்லாத போதும் நல்ல முயற்சி.

***

33    அறியா உலகம்        -கணேஷ்   

http://ganeshmoorthyj.blogspot.com/2011/10/2011.html

கிட்டத்தட்ட ஒரு நெடுங்கதையை சிறுகதையாக சுருக்கி சவால் சூழலை நுழைத்து எழுதியிருக்கிறார். இவ்வுலகின் பெரும்பகுதியான நீரில் மனிதன் கண்டறியாத ஒரு உலகம் இயங்கி வருகிறது என்ற கற்பனை.  சங்கேத மொழியை எப்படி உபயோகிப்பது என்பதற்கான வழிகளும் புதுமை.  அரிதான கற்பனை.  இன்னும் கொஞ்சம் சீர்படுத்தியிருந்தால் சிறப்பான கதையாக அமைந்திருக்கும்.

***

34    கனவுகளின் நிறம் காக்கி    -சூர்யா ஜீவா   

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011.html

காக்கி உடையின் மேல் காதலாக இருப்பவர் என்று தொடங்கி, இறுதியில் அவர் ஒரு சாதாரண டிரைவர்தான் என்று முடியும் கதை.  சவால் சூழல் சும்மா வந்து போகிறது. 

***

35    யாரிடமும் சொல்லாத கதை    -ஆர்விஎஸ்   

http://www.rvsm.in/2011/10/2011_26.html

அழகான ஆண்களை கடத்தும் கதை.  இவருக்கு விவரணைகள் நன்றாக வருகிறது.  ஆனால் இந்தக் கதையில் சமபவங்கள் என்றுமே எதுவுமே இல்லை.  டீக்கடை வாசலில் இருக்கும் இளைஞனை ஏமாற்றி தவறான வழிக்கு திருப்பி விடுகிறார்களாம்.  இந்த மாதிரி தீம்களுக்கு இன்னும் ஷார்பாக எழுதியிருக்க வேண்டும்.

***

36    முடியலை ஆனால் முடியும்..    -ஆசியா உமர்   

http://asiyaomar.blogspot.com/2011/10/2011.html

தலைப்பைப் போல முடியாத கதைதான்.  சவால் சூழலைச் சுற்றி பாத்திரங்களை அடுக்கிக் கொண்டே கதையை ஜாங்கிரி சுற்றி விடுகிறார்.  எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்ற சிக்கல்.  கடைசியில் புதிய பாத்திரத்தை அறிமுகப்படுத்தி கதையை இன்னும் நீட்டித்துக் கொண்டே போகிறார். குழப்பமான கதை.

***

37    மீண்ட சொர்க்கம்        -ஷர்மி   

http://sharmmi.blogspot.com/2011/10/2011.html

சிம்பிளான சுயசரிதை பாணியில் ஒரு கதை.  சவால் சூழல் மூலம் சின்ன திருப்பமும் முயற்சித்திருக்கிறார்.  கதைக்குத் துணையாக ஒரு படமும் போட்டிருக்கிறார். அதென்ன சுவிஸ் பாங்கில் சிறுகச் சிறுக சேமிப்பது என்றுதான் புரியவில்லை. 

***

.