Sunday, January 2, 2011

புத்தக வேட்டை

மீண்டும் ஒரு புத்தகத் திருவிழா. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புகழ்பெற்ற தமிழ்ப் புத்தக உலகின் கோலாகலமான வருடாந்திர திருவிழாவான ‘சென்னை புத்தகக் காட்சி’ 34 வது ஆண்டாக வரும் ஜனவரி 4 ம் தேதி முதல் வழக்கம் போல சென்னை, அமைந்தகரை ‘செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி’ வளாகத்தில் துவங்க இருக்கிறது. மறக்காமல் சென்று வாருங்கள், வாழ்த்துகள்.

*எந்தப் புத்தகம் வாங்க வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டு செல்லுங்கள். லட்சக்கணக்கான புத்தகங்களில் எதை வாங்குவது என்ற குழப்பத்தில் ஆளாகுவீர்கள்.

*நல்ல பெரிய பைகளை எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு கடையிலும் சில புத்தகங்கள் என அவர்கள் தரும் நிறைய பைகளை சுமப்பது கடினமாக இருக்கும். சில பைகள் கிழிந்து தொல்லைகொடுக்கும்.

*நல்ல உணவு வசதிகள் செய்திருப்பார்கள் எனினும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். உட்கார இடம் கிடைக்காது. நீண்ட க்யூவில் நிற்க நேரிடும். கவனம்.

*தனியாகவோ, ஒரு நண்பரோடோ செல்லுங்கள். நிறைய பேரைக்கூட்டிச் சென்றால் உங்களுக்குத் தேவையில்லாத பல புத்தகங்களை வாங்க நேரிடும்.

*கேஷ் கொண்டு செல்லுங்கள். எல்லா கடைகளிலும் மின்னணு அட்டைகளை ஏற்கும் வசதி இருக்காது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நண்பர் கேபிள் சங்கரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும், மூன்றாவது புத்தகமுமான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற புத்தகத்தின் வெளியீடு வரும் 4ம் தேதி சென்னை, கே.கே நகர் ‘டிஸ்கவரி புக் பேலஸி’ல் நிகழ இருக்கிறது.

எழுத்தாள, சினிமா பிரபலங்களோடு, வலையுலக பிரபலங்களும் (ஹிஹி.. என்னையச் சொல்லல) கலந்துகொள்ள இருக்கும் இந்நிகழ்வை உங்கள் வருகை மேலும் சிறப்புடையதாக்கும். கேபிள் சங்கரும், புத்தகப் பதிப்பாளரான ‘ழ’ பதிப்பக கே.ஆர்.பி. செந்திலும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு இந்த பதிவைக் காணலாம்.

Final Layout[5]

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுதி இந்த ஆண்டுக்கான ‘சாகித்ய அகாதெமி’ விருதினை தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறது. தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்னையில் 3ம் தேதி நிகழ்த்தும் ‘நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா’வுக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!

.

12 comments:

வழிப்போக்கன் - யோகேஷ் said...

கையில் பெரிய பை இல்லாமல் புத்தகங்களை வைத்துக்கொண்டு பைக்கில் அவஸ்தையுடன் வந்தது ஞாபகம் வருகிறது...........

பட்டியல் தயார் செய்து கொண்டுஇருக்கிறேன்....

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பரிசல்காரன் said...

நல்ல பகிர்வு ஆதி. அப்படியே இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. வாங்கிய புத்தகங்களை காலவரையறை வைத்துக் கொண்டு படித்து முடிக்கச் சொல்லுங்கள்!

பரிசல்காரன் said...

நல்ல பகிர்வு ஆதி. அப்படியே இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. வாங்கிய புத்தகங்களை காலவரையறை வைத்துக் கொண்டு படித்து முடிக்கச் சொல்லுங்கள்!

காவேரி கணேஷ் said...

வரவர தகவல் களஞ்சியம் தர ஆரம்பித்துள்ளீர்.

கேபிளாருக்கு வாழ்த்துக்கள்.

சுசி said...

//(ஹிஹி.. என்னையச் சொல்லல) //
ம்க்கும்..

நல்ல தகவல்கள்.

உங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்.

Cable Sankar said...

நல்ல யூஸ்ஃபுல் பதிவு.

Philosophy Prabhakaran said...

// தனியாகவோ, ஒரு நண்பரோடோ செல்லுங்கள். நிறைய பேரைக்கூட்டிச் சென்றால் உங்களுக்குத் தேவையில்லாத பல புத்தகங்களை வாங்க நேரிடும் //

இதுதான் ஹைலைட்.... என்னைப்பொறுத்தவரையில் கண்டிப்பாக தனியாக மட்டுமே செல்லவேண்டும்... நான் அப்படித்தான் செல்வேன்...

மோகன் குமார் said...

Useful suggestions. (Experience!!)

Parisal's suggestion also is to be noted.

தராசு said...

எல்லாம் கூட்டனி போட்டுட்டு அறிவுரை சொல்றாங்கப்பா, சூப்பர் தல, பை கொண்டு போக வேண்டியதுதான், பரிசல் அறிவுரையும் சூப்பர்.

படிக்க முடியுமளவே வாங்குங்கள்.
வாங்கியவற்றை கண்டிப்பாக படியுங்கள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

மிக்க நன்றி தல ...

ஆதிமூலகிருஷ்ணன் said...

யோகேஷ்,

ராமலக்‌ஷ்மி,

பரிசல் (நல்ல பாயிண்ட்),

காவேரி கணேஷ்,

சுசி,

கேபிள்,

பிரபாகரன்,

மோகன்,

தராசு,

கேஆர்பி..

அனைவருக்கும் நன்றி.