Monday, January 24, 2011

ஆதியின் செல்லப்பெயர் தெரியுமா?

எழுதுவதற்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் கொடுத்துவிட்டு (நிறைய சாதிச்சாச்சு இல்லையா?) ஏதாவது புத்தகங்கள் கொஞ்சம் வாசித்துவிட்டு மீண்டும் வரலாம் என்று நினைத்தால் அது ’ஆவுற’ கதையாய்த் தெரியவில்லை. எழுதுவது, டிவி பார்ப்பது போன்றவற்றில் இருந்து எவ்வளவு நேரத்தை நாம் மிச்சப்படுத்தினாலும், பார்க்கின்ஸன்’ஸ் விதிப்படி, அதை ரமாவுக்கு கீரை ஆய்ந்துகொடுப்பது, சுபாவுக்கு மூக்கு சிந்திவிடுவது போன்ற பிரதான குடும்ப வேலைகளே விழுங்கிவிடுகின்றன. எந்தப் புத்தகத்தையும் தொடக்கூட முடியவில்லை. அதோடு கொஞ்ச நாட்கள் எழுதாமல் விட்டுவிட்டு மீண்டும் எழுத உட்கார்ந்தால், ’தமிழ் கூறும் நல்லுலகிற்கு பகிர்ந்தே ஆகவேண்டிய, அப்படியென்ன ‘தலைபோகிற’ காரியமோ, சிந்தனையோ எழுந்தது இந்த நாட்களில்?’ என்று உள்ளுக்குள்ளிருந்து குரல் கேட்கிறது.

அட, அதெல்லாம் ஞான நிலை அடைந்தவர்களுக்கு கேட்க வேண்டிய குரல்.. நமக்கு ஏன் கேட்க வேண்டும்? அதானே.! அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால் பின்னர் யார்தாம் தமிழ் வாசகர்களுக்கு எழுத்துச் சேவை செய்வதாம்? ஆகவே விடுமுறைக்கால அப்டேட்டுகளுடன் ஆரம்பிக்கிறேன். அடுத்தடுத்து வழக்கம் போல இயங்குவோம்.

---------------

சில வருடங்களுக்கு முன்னதாக குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக இருந்த போது ஒவ்வொரு விடுமுறையிலும் கன்னியாகுமரி, திருச்செந்தூர், வாய்ப்பிருந்தால் ராமேஸ்வரம் அல்லது குறைந்த பட்சமாக பாபநாசம், குற்றாலம் என்று பக்கத்திலாவது எல்லோரும் போய்வருவோம். இப்போது குடும்ப எண்ணிக்கை குழந்தைகள் உட்பட 11 ஆகிவிட்டதால் ’ஒன்று கரைக்கு இழுத்தால், இன்னொன்று தண்ணீருக்கு..’ என்பது போல இருக்கிறது. பாபநாசம் போய்வருவதற்கே இழுத்துக்கோ, பிடிச்சுக்கோ என்பது போல ஆகிவிடுகிறது. அம்மாவுக்கு எங்கள் மூவரின் கல்யாணத்துக்குப் பிறகு ராமேஸ்வரம் சென்று வரவேண்டும் என்றொரு ஆசை இருந்து வருகிறது. இம்முறையும் அங்கு போகமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எங்கும் போகமுடியாவிட்டாலும் 11 பேரும் இருந்துவிட்டால் வீடே ஒரு பெரிய ’அவுட்டிங்’காகத்தான் இருக்கிறது.

ஆனாலும் கூடியிருப்பதின் பிரச்சினைகள் இல்லாமலில்லை. மாமியார்களுக்கும், மருமகள்களுக்கும் தங்கள் முகமூடிகளை கழற்றி வீசுவதற்கு ஐந்து நாட்களே போதுமானதாகத்தான் இருக்கின்றன.

---------------

’ஒரு சிங்கம்’ வயசாச்சு (எத்தனை காலம்தான் கழுதையின் வயசோடு ஒப்பிடுவது?) பாருங்க.. இன்னும் என் பெயர் என் தாத்தாவின் பெயர் என்றுதான் தெரியுமே தவிர அவருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியாதிருந்திருக்கிறேன். பொத்தாம் பொதுவாக அவரது தாத்தாவின் பெயராக இருக்கும் என்று நானே முடிவு செய்துகொண்டிருந்திருக்கிறேன். ஆனால் தற்செயலாக அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ’அது அப்படியல்ல, என் தாத்தாவிற்கு அவர் ஒரே பிள்ளை, அதுவும் தாமதமாகப் பிறந்தவர், ஆகவே என் தாத்தா வணங்கிவந்த ‘அத்தாளநல்லூர்’ ஆதிமூல நாராயணரின் பெயரையே வைத்திருக்கிறார்’ என்று சொன்னார். ’அடடே.. அப்படியா? அது எந்த மாவட்டத்தில் அப்பா இருக்கிறது?’ என்று கேட்டேன். நல்லவேளை, நல்ல மூடில் இருந்திருக்கிறார், இல்லையென்றால் ’ஒரு சிங்கம்’ வயசாச்சே என்றெல்லாம் பார்க்காமல் நடுமண்டையில் ’நச்’சென்று வைத்திருப்பார்.

DSC09387

பாருங்கள் ’அத்தாளநல்லூர்’ எங்கள் ஊரிலிருந்து 10 கிமீ தூரத்தில்தான் இருந்திருக்கிறது. ’ஒரு சிங்கம்’ வயசாகிற வரைக்கும் நானும் அந்தக் கோயிலுக்கு போகாமலே இருந்திருக்கிறேன். பக்தியெல்லாம் ஒன்றும் பெரிதாக கிடையாதெனினும் சில செண்டிமெண்ட்ஸ் இருக்கத்தான் செய்கிறது. என் தாத்தனுக்கு தாத்தன் கால்பட்ட மண்ணை நானும் பார்க்கவேண்டாமா? அப்புறமென்ன குஞ்சு குளுவான்களோடு ‘புளியோதரை’யையும் கட்டிக்கொண்டு, தாமிரபரணிக் கரையோரம் இருக்கும் ‘ஆதிமூலரை’க் காண போய்வந்தோம். கோயில் பின்புற படித்துறையைப் பார்த்தால் நிச்சயம் அங்கேயே செட்டிலாகிவிடுவீர்கள். எனக்கு திரும்பி வரவே மனமில்லை. அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, கல் மண்டபத்தில் கொஞ்ச நேரம் உருண்டுகொண்டிருந்துவிட்டு பிறகு வீடு திரும்பினோம்.

---------------

இந்தப் பெயர் பிரதாபம் பேசுகையில்தான் ஞாபகம் வருகிறது, சமீபத்தில் சென்னை டெலிபோன் ஆன்லைன் டைரக்டரியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் பெயர் அரிதானது என்று தெரியும்தான், ஆயினும் சென்னையில் என்னையும் சேர்த்து இரண்டே இரண்டு ‘ஆதிமூலகிருஷ்ணன்’தான் இருக்கிறார்கள் என்பது ஒரு சின்ன ஆச்சரியம். கல்பாக்கத்தில் இருக்கும் அந்த யாரோவையும் என்னையும் தவிர இன்னொரு ஆதிமூலகிருஷ்ணனும் சென்னையில் இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அவர் எங்கள் குடும்ப உறுப்பினரும் கூட. ஹிஹி.. சென்னை திருவொற்றியூரில் இருக்கும் இரண்டு வயது ‘ஆதிமூலகிருஷ்ணன்’ என் தம்பியின் மகன் ஆவார். என் மீதுள்ள பிரியத்தில் தம்பி இந்தப் பெயரை அவருக்கு வைத்திருக்கிறார்.

அவரின் செல்லப்பெயர் கூட அரிதானதுதான். அம்மு, ஜில்லு, பில்லு, புஜ்ஜி, பப்லு, பப்பு எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள், இவரது பெயர் ‘டிகால்’. ’இதென்னடா பெயர்? லூசு மாதிரி? என்ன அர்த்தம்?’ன்னு கேட்டா ’’பில்லு’ன்னா என்ன அர்த்தம் சொல்லு முதல்ல’ங்கிறார் அவரது அப்பா.

---------------

ஊருக்குச் செல்கையில் வழக்கம் போல திருநெல்வேலிக்கு டிக்கெட் எடுத்திருந்தாலும் திடுமென மதுரையில் மைத்துனியை பார்ப்பதற்காக இறங்கினோம். அட, நான் போகணும்னு சொல்லலைங்க.. ரமாதான் கட்டாயப் படுத்தினார். ஒரு நாள் தங்க நேர்ந்தது. தங்கரீகலில் ஒரு படமும், மதுரை மீனாட்சி தரிசனமும் கிட்டியது. 90 –95 வாக்கில் பல தடவைகள் மதுரை சென்றிருந்தாலும் அதன் பின் செல்லவே வாய்ப்பு கிடைக்கவில்லை. இவ்வளவு பெரிய கால இடைவெளியில் சென்னையில் என்றால் பெரீய்ய்ய்ய்ய்ய்ய மாற்றங்களைக் காண்கிறேன். ஆனால் மதுரை அப்ப்ப்ப்படியேதான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த முறைதான் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீரில்லாத நிலையில் கண்டேன்.

DSC00580

அப்படியே மதுரையில் நம் ஆட்கள் யாரார் இருக்கிறார்கள் என எண்ணி, பதிவர் ‘சீனா’ ஐயாவின் ஞாபகம் வந்து அவரை அழைத்து நலம் விசாரித்தேன். ஹிஹி.. அவர் ஊருக்குப் போயிட்டு அவருக்கு ஒரு போன் கூட செய்யவில்லை என்றால் எப்படி? இப்போவெல்லாம் போனில் பேசுவதற்கே அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. அன்று மாலையே பதிவர் ‘கோபி’ சென்னையில் இருந்து அழைத்தார், ‘ஹிஹி.. உங்கள் ஊருக்கு வந்தேன். அதான் நலம் விசாரிக்கலாமேன்னு கூப்பிட்டேன்.’

---------------

ஏனோ மற்ற நாட்களில் 8 மணிவரை தூங்கித் தொலைத்தாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சீக்கிரமாக விழிப்பு வந்துவிடுகிறது. ஒரு நாள் காலை ஆறு மணிக்கே எழுந்துபார்த்தபோது எல்லோரும் ஒவ்வொரு ஆங்கிளில் தூங்கிக்கொண்டிருக்க என் அப்பா, அம்மாவை மட்டும் காணவில்லை. உடனே ஞாபகம் வந்துவிட்டது, இன்று அவர்களின் கல்யாண நாள். இது ஒன்றும் புதிதில்லை, எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக இந்த நிகழ்வு நடந்துவருகிறது. 37 வருடங்கள். அன்று மட்டும் அதிகாலையிலேயே எழுந்து இருவரும் குளித்துக் கிளம்பி ஜோடியாக பாபநாசம் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது போலவே அன்றும் போய்விட்டு நாங்கள் எல்லோரும் விழிப்பதற்கு முன்னமே ஏழு, ஏழரைக்கெல்லாம் திரும்பி வந்துவிட்டார்கள்.

நானும் ரமாவும் கடந்த கல்யாண நாளில் நடை சாத்தும் முன்னாடியே 10 மணிக்குள்ளாக தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போய்வந்துவிட்டோம்.. ஹிஹி.. சாதனைதான் இல்ல.?

.

28 comments:

MSK / Saravana said...

நல்ல தொகுப்பு.. எல்லாமே நல்லா இருக்கு..
படித்துறை அழகா இருக்கு..

மதுரை சரவணன் said...

மதுரைக்கு வந்து எங்களை எல்லாம் பார்க்காம போயிட்டீங்களே...? அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்

vinu said...

ellamea agmaark pulambalgal

பரிசல்காரன் said...

//நானும் ரமாவும் கடந்த கல்யாண நாளில் நடை சாத்தும் முன்னாடியே 10 மணிக்குள்ளாக தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போய்வந்துவிட்டோம்.//

ந்ந்ந்ந்ந்ந்நெஜம்ம்ம்மாஆஆஆஆஆஆவாஆஆஆஆஆஆஆஆஆஆஆ?

காவேரி கணேஷ் said...

நக்கலும், நையாண்டியும் இந்த சிங்க வயசுகாரனுக்கு நல்லாவே வருது.

பிரதீபா said...

//எழுதுவது, டிவி பார்ப்பது போன்றவற்றில் இருந்து எவ்வளவு நேரத்தை நாம் மிச்சப்படுத்தினாலும், பார்க்கின்ஸன்’ஸ் விதிப்படி, அதை ரமாவுக்கு கீரை ஆய்ந்துகொடுப்பது, சுபாவுக்கு மூக்கு சிந்திவிடுவது போன்ற பிரதான குடும்ப வேலைகளே விழுங்கிவிடுகின்றன// - இந்த நடை தான் /ஞான நிலை அடைந்தவர்களுக்கு/-க்கான நிலையோ !! ;)

உண்மையில் இந்த நடை தான் உங்கள் எழுத்துக்கு அழகு சேர்ப்பதே !!

// ’ஒரு சிங்கம்’// - ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தானாம்; அவனோட காதலி அவன் கிட்ட சொன்னாளாம்,'இனிமே உன்னோட பேரு கோபாலகிருஷ்ணன்"ன்னு. ஆனா பாருங்க...(எதாச்சும் படம் ஞாபகம் வருதா உங்களுக்கு?) .

சுசி said...

சிங்கம் செமயா எழுதி இருக்கிங்க.

அம்மா அப்பாவுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.

பா.ராஜாராம் said...

வாசிப்பும், வாசிப்பு சார்ந்த எழுத்தும் இப்போ ரொம்ப தேவையாக போச்சு ஆதி(அ) சிங்கம் (அ) அங்காள நல்லூர் சோ & சோ (ரௌடி :-)).. எங்கடா ஆளக் காணோமே என இருந்தது. (வெகு நாளாக அனுஜன்யா தேடல் உட்பட.)

குறை வைக்கவில்லை சிங்கம்! :-)

என் வீட்டை பார்த்த நிறைவு ஆதி!

Philosophy Prabhakaran said...

// சென்னை திருவொற்றியூரில் இருக்கும் இரண்டு வயது ‘ஆதிமூலகிருஷ்ணன்’ என் தம்பியின் மகன் ஆவார் //

நானும் திருவொற்றியூரில் தான் இருக்கிறேன் சார்... எங்க ஊர் பெயரை திருவொற்றியூர் என்று பிழையில்லாமல் டைப்படிததற்காகவே உங்களை பாராட்ட வேண்டும்...

Balaji saravana said...

”சிங்க” கர்ஜனை நல்லாவே இருக்கு! ;)

தராசு said...

யோவ், உங்க ஊருக்கு ஒரு தபா இட்டுனு போ நைனா, ஜூப்பராக்குது.

Cable Sankar said...

interesting..

நர்சிம் said...

ரசனை..

மைதீன் said...

’அத்தாளநல்லூர்’இந்த பெயரே இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.சொல்வதைப்பார்த்தால் எனக்கும் பார்க்க வேண்டும் போல்தான் தோன்றுகிறது.

அமுதா கிருஷ்ணா said...

நீங்கள் செய்த பொங்கல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை டிகால்..

ஷர்புதீன் said...

உங்களுக்கு தேவையான இருபது கமெண்ட்ஸ் வந்தாச்சு ., கடைய சாத்திடுங்க
:)

Mahesh said...

super.... need to catch up with all other posts...

//ஆனாலும் கூடியிருப்பதின் பிரச்சினைகள் இல்லாமலில்லை. மாமியார்களுக்கும், மருமகள்களுக்கும் தங்கள் முகமூடிகளை கழற்றி வீசுவதற்கு ஐந்து நாட்களே போதுமானதாகத்தான்
இருக்கின்றன//

so u survived 5 days ??!!

sriram said...

பிரபலம்..
நீங்க இவ்ளோ அப்பாவியா இருப்பீங்கன்னு தெரியாமப் போச்சே..

தம்பி உங்க பேரை பையனுக்கு வச்சதுக்குக் காரணம், அவனைத் திட்ற சாக்குல உங்களைத் திட்டத்தான்.. :)

அப்புறம், சென்னையில் ஆதி..... என்ற பெயரில் BSNL தொலைபேசி வைத்திருப்பவர்கள் இருவர் என்று மட்டுமே கொள்ளவேண்டும் (இதிலேயும் Unlisted Number இருக்க வாய்ப்புண்டு)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அன்புடன் அருணா said...

/ஒன்று கரைக்கு இழுத்தால், இன்னொன்று தண்ணீருக்கு..’ என்பது போல இருக்கிறது./
’Welcome Back!இதே கதைதான் நாங்க ஊருக்குப் போகும்போதும்!

அனுஜன்யா said...

படிப்பது பெரியார். போயிட்டு வருவது கன்யாகுமாரி அம்மன், திருச்செந்தூர் முருகன், அத்தாளநல்லூர் ஆதிமூலர், மதுரை மீனாட்சி, தெருமுனைப் பிள்ளையார் கோயில். நல்லா இருங்கடே.

அனுஜன்யா

கார்க்கி said...

அனுவின் கமெண்ட்டுக்கு பெரிய ரிப்பிட்டு..

பதிவு செம செம

RR said...

டிகால்: இதுவும் உங்கள் மீதுள்ள பிரியத்தாள் வைத்த பெயர் போல தான் தெரிகின்றது! இது என்ன டகால்டி, டிகால்டி வகைய சார்ந்ததா?

MSK / Saravana said...

அனுவின் கமெண்ட்டுக்கு பெரிய ரிப்பிட்டு.. :))

இளங்கோ said...

:-)
Super...

நாடோடி இலக்கியன் said...

ப‌டித்துறை ப‌ட‌ம் அழ‌கு.

சிங்க‌ம் தாமிரா ட‌ச்.

மொத்த‌த்தில் ர‌ச‌னையான‌ ப‌திவு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி MSK.

நன்றி Madurai Saravanan. (அடாடா.. போன் நம்பர் தெரியாமப் போச்சே. தெரிஞ்சா போன் பண்ணியிருப்பேனே :-))

நன்றி Vinu.

நன்றி Parisal. (நிஜமாத்தான்யா)

நன்றி Kaveri Ganesh.

நன்றி Pratheeba. (ஹிஹி)

நன்றி Susi.

நன்றி Pa.Ra. (தேடுனீங்களா? நம்புறேன் :-))

நன்றி Prabhakaran. (யோவ், பாராட்டுறீங்களா? திட்டுறீங்களா? நான் என்னவோ வரிக்கு நாலு தவறுகளோட எழுதறமாதிரியும், ஒரு ஊரு பெயரை கூட உருப்படியா எழுதத்தெரியாதவன்ங்கிற மாதிரியும் இருக்குது உங்க பின்னூட்டம். :-( )

நன்றி Balaji Saravana.

நன்றி Tharasu. (நிச்சயமா)

நன்றி Cable.

நன்றி Narsim.

நன்றி Maitheen.

நன்றி Amudha Krishna. (கரெக்டா கேட்டுடுவீங்களே)

நன்றி Sharfudin.

நன்றி Mahesh. (என்ன தல.. ஆளையே காணோம்.? / என்ன தல.. நொண்டுற? கால்லயே போட்டுட்டானுங்களோ.?)

நன்றி Sriram. (இருக்குறதுல சொன்னேன்ங்க)

நன்றி Aruna.

நன்றி Anujanya. (யோவ்.. ஏன் இந்த கொலவெறி? அது குடும்பத்துக்காக போனதுய்யா.. எழுதும் போதே நினைச்சேன், என்னடா ஏதோ பக்திஸ்பெஷல் மாதிரி இருக்குதேன்னு)

நன்றி Karki.

நன்றி RR.

நன்றி Ilango.

நன்றி Ilakkiyan.

Anonymous said...

///இப்போவெல்லாம் போனில் பேசுவதற்கே அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. ///

:)

கபீஷ் said...

//பக்தியெல்லாம் ஒன்றும் பெரிதாக கிடையாதெனினும்// கொஞ்சமே கொஞ்சம் பக்தி விலகாம இருக்கு போல :)))