Wednesday, January 26, 2011

இந்தியக் கடற்படை தூங்குகிறதா?

விடைகளற்ற எத்தனையோ தருணங்களைப் போலவே, இதையும் தொண்டையில் பொங்கி வரும் கசப்போடு கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. எப்படிப் பகிர்ந்துகொள்வது, இதெற்கென்ன தீர்வு என்பதுதான் எத்தனை யோசித்தும் புரிபடாத, பிடிபடாத விஷயமாகவே இருக்கிறது. அடுத்த சில மாதங்களில், ஆட்காட்டி விரலில் நான் வைத்துக்கொள்ளப்போகும் கருப்பு மை எதையாவது சாதிக்குமா?

தமிழக மீனவர்களை பலிகொடுக்க நம் அரசுக்கோ, அல்லது பலிகொள்ள இலங்கை அரசுக்கோ விருப்பமிருக்கும் என்று சந்தேகிக்க வழியில்லை. ஆனால் பெரும் போருக்குப் பிறகான சிங்கள, தமிழின பகைமைதான்.. மனம் நிறைந்த இனத் துவேஷத்துடன், ஆயுதம் தாங்கிய ஒரு சிங்கள சிப்பாய் என்ன செய்யக்கூடும் என்று சந்தேகிக்க நியாயமிருக்கிறது. ஆனால் நிகழும் சம்பவங்களை தடுக்க இரண்டு அரசுகளும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதுதான் நம் முன் இருக்கும் பெரும் கேள்வி.

நம் இனம், நம் மக்கள்.. கண்முன்னே அழிவதை பார்த்துக்கொண்டேயிருந்தாயிற்று. அது வெளிநாட்டு விவகாரம் என்பது போன்ற காரணங்களும் சொல்லிக்கொண்டோம். உதவிக்குத்தான் போகமுடியாது, அமைதியாகவாவது இருந்திருக்கலாம். ஆனால் எதிரிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பினோம் நம்மையே அழித்துக்கொள்ள. நம் அரசென்றால் அது நாம்தானே. அதுதான் தடுக்கமுடியவில்லையே, பிறகென்ன ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். சுய மரியாதை என்ன, சுயநலம் கூட இல்லாத ஒரு இனமாகிப்போய்விட்டோம். சரி, அது வெளிநாட்டு விவகாரம். ஆனால் இது? பக்கத்து வீட்டிலிருந்து நம் வீட்டுக்குள்ளும் வந்தாயிற்று. துப்பாக்கியால் சுடு. நிரூபித்துவிடுகிறார்களா.. பொய் சொல்வதற்கு வசதியாக கழுத்தை நெறித்துக் கொல்.!

india-flag

மத்திய அரசு தூங்குகிறது. இந்திய கடற்படை தூங்குகிறது. அவற்றிற்கு உரைக்கும் படி சொல்லவேண்டிய தமிழக அரசும் தூங்குகிறது. அல்லது இலவசங்களால் மக்களை சுயமரியாதையற்ற மனிதர்களாக, வெறும் கேளிக்கை விரும்பிகளாக மட்டுமே ஆக்கி வைத்திருப்பதே இது போன்ற அவசியமான தூக்கங்களைச் செய்வதற்காகத்தானா? எதிர்க் கட்சிகள் என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறதா? அடுத்த சில மாதங்களில், ஆட்காட்டி விரலில் நான் வைத்துக்கொள்ளப்போகும் கருப்பு மை எதையாவது சாதிக்குமா?

தமிழின விரோதப் போக்கு கொண்ட காங்கிரஸ் என் தேர்வல்ல. அதோடு கை கோர்த்துகொண்டிருக்கும், இவ்விஷயத்தில் முதுகெலும்பற்றுப் போய்விட்ட தி.மு.கவும் என் தேர்வல்ல. அதற்காக ஊழல்களின் கிடங்கு அ.தி.மு.கவும் என் தேர்வாக இருக்கமுடியாது. தெளிந்த சிந்தனையோ, நோக்கமோ, கொள்கையோ இல்லாத, பிற பச்சோந்திக் கும்பல்களின் மீதும் நம்பிக்கையில்லை. ஆழ்ந்த சிந்தனை கூட வேண்டாம், இது நியாயம், இது அநியாயம் என்று உணரத்தெரிந்த என்னைப்போன்ற ஒரு சராசரித் தமிழனுக்கு வாக்களிக்க ஒரு ஒற்றைத் தேர்வு கூட இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இது தமிழக வரலாற்றின் மிகத் துரதிருஷ்டமான காலகட்டமாக இருக்கலாம்.

.

16 comments:

Anonymous said...

////"இந்தியக் கடற்படை தூங்குகிறதா?/////

ஹி ஹீ ஹீ ..,புடுங்கிட்டு உக்கார்ந்திட்டு இருக்கு சார்

Anonymous said...

//// அடுத்த சில மாதங்களில், ஆட்காட்டி விரலில் நான் வைத்துக்கொள்ளப்போகும் கருப்பு மை எதையாவது சாதிக்குமா? /////

சார் நீங்க நான் இப்படி நினைக்கிறோம் ..,(கருப்பு மை ) ஆனா ..,இலவசம் ,வோட்டுக்கு துட்டு...,அப்புறம் நிறையா

Anonymous said...

////// ஆனால் நிகழும் சம்பவங்களை தடுக்க இரண்டு அரசுகளும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதுதான் நம் முன் இருக்கும் பெரும் கேள்வி///////

கேள்விக்கி விடையெல்லாம் எல்லாருக்கும் தெரியும் ..,நீங்க லந்து பண்றீங்க .,அவனுகளுக்கு அக்கறை மசுரு இல்ல ..,ரெண்டு மாசத்துக்கு மட்டும் இலவசம் ,அது இதுன்னு மண்டைய கழுவிட்டு போய்ட்டே இருப்பானுவ ..,நீங்க வேணா பாருங்க

Anonymous said...

.////// நம் இனம், நம் மக்கள்.. கண்முன்னே அழிவதை பார்த்துக்கொண்டேயிருந்தாயிற்று. ////

///// அது வெளிநாட்டு விவகாரம் என்பது போன்ற காரணங்களும் சொல்லிக்கொண்டோம். ////

இரண்டு வரிகளுக்கும் கடும் முரண்பாடு ..,மனுஷனை மனுஷனா பார்கோணம் சார் ,,இனம் ,நம் மக்கள் ,ஜாதி ,மதம் ,கட்சி னு பிரிச்சா அடிசிகிட்டு தான் சாகோணம் ..,

Anonymous said...

///// மத்திய அரசு தூங்குகிறது.///////

ஹா ஹா ஹா ........,தூங்கல சார் ..,தூங்கறா மாதிரி நடிக்கிறான் ....,

Anonymous said...

என்னமோ போங்க .,

தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல பகிர்வு நீங்கள் சொன்னது போல தமிழனுக்கு விடிவு ஏற்படுத்த தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சுசி said...

ஆதி.. மனதின் வலிகளுக்கும் தூங்கும் சக்தி இருந்திருக்கலாம்.

தராசு said...

ஆதங்கம்..... உண்மைதான். மனது வலிக்கிறது. கையறு நிலையை நினைத்து வெட்கமும் வருகிறது.

ஆட்காட்டி விரலின் கறுப்பு மையால் சாதிக்க முடியும். எந்த மடையனும் எனக்கு வேண்டாம்னு சொல்லுவோம்.

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க தேர்தல்ல நில்லுங்க பாஸ் நாங்க ஓட்டு போடுறோம்....

DHANS said...

ஆதங்கம்..... உண்மைதான். மனது வலிக்கிறது. கையறு நிலையை நினைத்து வெட்கமும் வருகிறது.

ஆட்காட்டி விரலின் கறுப்பு மையால் சாதிக்க முடியும். எந்த மடையனும் எனக்கு வேண்டாம்னு சொல்லுவோம்.


Repeat :(

புதுகைத் தென்றல் said...

:((

ஈரோடு கதிர் said...

அரசு தூங்குவது போல் நடிக்கும் போது, கடற்படையும் கூடவே!!

நாம் இருக்கும் கம்ஃபோர்ட் ஜோன்(!!!) கையறு நிலையை நம்மிடம் தினிக்கிறது ஆதி!

ஸ்வர்ணரேக்கா said...

//தமிழக மீனவர்களை பலிகொடுக்க நம் அரசுக்கோ, அல்லது பலிகொள்ள இலங்கை அரசுக்கோ விருப்பமிருக்கும் என்று சந்தேகிக்க வழியில்லை.//

-- பலிகொடுக்க விருப்பமில்லை தான்... ஆனால் அதை தடுக்கும் எண்ணம் சுத்தமாக இல்லாவிடில், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கருத்துப் பகிர்வுக்கு நன்றி நண்பர்களே.!

RR said...

//அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கால்களில் கண்காணிப்பு கேமரா: எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம்! : ஆனந்த விகடன் செய்தி//

குறுக்கு வழியில் அமெரிக்க போன திருட்டு பசங்களுக்கு வக்காலத்து வாங்கி இந்தியா அரசு கண்டனம் தெரிவிக்கின்றது. வயிற்று பிழைப்புக்காக மீனவன் கடலுக்கு போய் அடுத்த நாட்டு இராணுவத்திடம் அடிபட்டு செத்தால்?!.....நீ எல்லை தாண்டி போயிருக்ககூடது என்று ஏளனம்.