Sunday, January 30, 2011

புலன்களின் திசை நீ.!

 

சில நேரங்களில்

காற்றிலே மிதக்கும்

இறகாகிவிடுகிறேன்

ஊதி விளையாடுபவள்.. நீ.!

**********

 

சுழலும் காந்த ஊசிகளுக்கான‌

வடக்கைப்போலவே

என் புலன்களுக்கான திசையாக‌ நீ இருக்கிறாய்.

**********

 

மழை

பூக்கள்

கடல்

மரங்களடர்ந்த ரயிலடி

இவற்றைப்போலவே

இயற்கை என்ற வரையறையைத்தாண்டிய

கூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது.!

**********

 

கண்ணில்லாதவன் போலத்தான்

கற்பனை செய்து வைத்திருந்தேன்

அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..

பிரமித்துப் போய்விட்டேன்.!

**********

 

நெருங்கி வந்து

என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்

நீ விழித்திருக்கிறாய்

என்பது உறக்கத்திலும் புரிகிறது

காதல் எளிதான வரையறைக்குள் சிக்கிவிடும்

சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.

.

14 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி.. மறு ஒளிபரப்பு.!

கனாக்காதலன் said...

அருமை ஆதி.. காதல் பொங்கி வழிகிறது. அருமை :)

பிரதீபா said...

//மறு ஒளிபரப்பு// -சுமார் நாலு இல்லாட்டி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எழுதினதாண்ணே? ;)

Philosophy Prabhakaran said...

மீள் பதிவா... இருக்கட்டும்... நான் முதல்முறையாக படிக்கிறேன்... நீங்கள் முதல்முறை எழுதியபோது நான் பதிவுலகிலேயே இல்லை...

//

கண்ணில்லாதவன் போலத்தான்

கற்பனை செய்து வைத்திருந்தேன்

அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..

பிரமித்துப் போய்விட்டேன்.! //


இந்தக்கவிதை பிரமாதமாக இருக்கிறது...

அத்திரி said...

ஒவ்வொரு வரியும் அழகு

புன்னகை said...

:-( மீள்பதிவு!

தராசு said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
ஹிஹி.. மறு ஒளிபரப்பு//

தெரியுது..., இருந்தாலும் ஜூப்பர்

சுசி said...

நான் இப்போதான் படிக்கறேன் ஆதி..

அழகா இருக்கு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நண்பர்களே.!

இம்சை அரசி said...

superrrrrrbbb...

idhu unga thangamani-kkaga ezuthinathu thaane??

இம்சை அரசி said...

sari unga wife-tta pesanumnu romba naala ninaichutte irundhen :(((

pesave illa innum :((

edho pottu kudukkanumnu ninaichen... adhaiyum marandhu poitten :(((((((((

இம்சை அரசி said...

yosichu vachuttu varen he he...

பார்வையாளன் said...

நாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி தந்த அதிர்ச்சி

ஆதிமூலகிருஷ்ணன் said...

@இம்சை அரசி,

போட்டுக்கொடுக்கறதுன்னா வருஷமானாலும் மறக்காம நினைவுபடுத்திக்கொண்டிருங்க.. நல்ல பணி.! குழந்தை நல்லாருக்குதா.?