Sunday, February 27, 2011

ரசிகன் : மிஷெல் ரோட்ரிகெஸ்

ஆண்கள் கருப்பு வெள்ளை. பெண்கள்தான் வண்ணமயமானவர்கள். RBY யில் ஒவ்வொரு துளி கூடுகையிலும் குறைகையிலும் ஒரு வண்ணம் உருவாகிறது. ஒன்றைப்போல் இன்னொன்றில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நிறமானவள். ஒருத்தியைப்போல் இன்னொருத்தியில்லை.

இந்தப் பெண்ணின் நிறம் யாது? இவளை ஏன் எனக்குப் பிடித்துப்போயிற்று என உங்களுக்காவது புரிகிறதா பாருங்கள். இந்தப் படங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

Michelle-Rodriguez-43

Machete_movie_image

10879000_gal

images (1)

 Michelle-Rodriguez-46 (1)

michelle rodriguez driving lost

 Girlfight-michelle-rodriguez-609345_1024_768

 Michelle Rodriguez (12)

 michelle-rodriguez-20050310-30246

 machete-michelle-rodriguez

images (2)

images

Fast-and-furious-4-michell-rodriguez-letty-2009

michelle-rodriguez-avatar

cip_michelle-rodriguez-avatar-2    

2198368638_9da5758cc0

michelle-rodriguez-letty-and-vin-diesel-dominic

Michelle-Rodriguez

machete_michelle_rodriguez_blue_large_2010

மிஷெல்.. என் சாலைகள் முடிகின்றதே.. உன் பாதங்களில்.!

.

Friday, February 11, 2011

த்ரில்லர் ’பயணம்’

ராதாமோகன் எனக்குப் பிடித்தமான ஒரு இயக்குனர். அவரின் இந்தப் படமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரே விதமான கதைகளாக அல்லாமல் விதம் விதமான படங்களைச் செய்யவேண்டும் என்ற ஆர்வமே அவரின் ரசனையைக் காட்டுகிறது.

பாடல்கள் இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை. இருப்பினும் ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் படம் பார்த்த திருப்தியைத் ’பயணம்’ தருகிறது. பயணிகளூடே கலந்திருந்த ஹைஜாக்கர்களால் சென்னையிலிருந்து கிளம்பும் ஒரு விமானம் கடத்தப்படுகிறது. நல்லவேளையாக ஏற்படும் ஒரு சிறிய விபத்தால் விமானம் வெகுதூரம் கொண்டு செல்லப்படாமல் திருப்பதியிலேயே இறக்கப்படுகிறது. அவர்களது குறிக்கோள் ஒரு முக்கிய தீவிரவாதி ஒருவனின் விடுதலை. ஆக்‌ஷனுக்குத் தயாராகின்றனர் NSG படையினர். ஆயினும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் அரசு சார்ந்து, அரசியல்வாதிகள் சார்ந்து இது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன? NSG க்கு அனுமதி கிடைக்காமல் கையைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய சூழல்.

சில தீவிரவாதிகள். பயத்தில் ஏராளமான பணயக் கைதிகள். கடந்துகொண்டிருக்கும் நாட்கள். பரபரப்பில் அதிகாரிகள். அரிக்கும் மீடியா. இந்தச் சூழலில் அரசு அனுமதித்தும் அந்த முக்கியத் தீவிரவாதியை ஒப்படைப்பதில் புதிய எதிர்பாராத சிக்கல். இப்போது வேறு வழியே இல்லாமல் அதிகாரிகள் NSGயின் அதிரடி முற்றுகையை அனுமதிக்க.. எப்படி இறுதியில் முடிந்தவரை உயிர்ச்சேதமில்லாமல் மக்கள் மீட்கப்படுகிறார்கள் என்பது மீதக்கதை.

Payanam 

ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாக முடிக்கப்படவேண்டிய ஆங்கிலப் பட பாணிக் கதை. அது நமக்குத் தேவையான நீளத்தில் சொல்லப்படவேண்டியிருப்பதால் எவ்வளவுதான் இயல்பாகச் செய்திருந்தாலும் ஆங்காங்கே மெலிதாக சினிமாத்தனம் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. இவ்வளவுக்கும் படம் முழுதும் ஆங்காங்கே நம் சினிமா ஹீரோக்களையும், கிளிஷேக்ளையும் நக்கல் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார் ராதாமோகன்.

விதவிதமான மனநிலையில் உள்ள விதவிதமான மனிதர்கள் ஒரு விமானத்துக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள். காத்திருக்கும் நேரம், நாட்களாக நீள்கிறது. அப்போது அவர்களது ரியாக்‌ஷன்களும், ஏற்படும் மனமாற்றமும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வசனங்கள் குறிப்பாகச் சொல்லப்படவேண்டிய விஷயங்களில் ஒன்று. பல இடங்களிலும் ஆழமாக, அழகாக இருக்கின்றன. பணயக் கைதிகளான ‘ஷைனிங்ஸ்டார்’ பிரித்விராஜ், ஜாவா பாலாஜி காம்பினேஷன் படம் முழுக்க ரசித்துச் சிரிக்க முடிகிறது. சின்னச்சின்ன காரெக்டர்களில் நம் நடிகர்கள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், நாகார்ஜுன் அவரவர்கள் காரெக்டர்களில் அவ்வளவு இயல்பாக, நிஜ ஆஃபீஸர்களை நினைவூட்டுகிறார்கள். நாகார்ஜுன் தன் புத்தம் புதூதூதூ யூனிபார்மில், பிஜிஎம் ஒலிக்க, ஹெலிகாப்டர் பின்னணியில் நடந்துவரும் அறிமுகக் காட்சியை மட்டும் விட்டுவிடலாம். அவ்வளவு நேரம் அனுமதிக்காக பரபரப்புடன் காத்திருந்துவிட்டு கிடைத்தவுடன் NSG மேற்கொள்ளும் ஆபரேஷனும், நாகார்ஜுனின் ஐடியாக்களும் சுவாரசியமானது என்றாலும் அந்தக் காட்சிகள் படு ஸ்லோவாக இருக்கிறது. எனினும் பெரும்பாலான நேரம் நம்மை டென்ஷனிலேயே வைத்திருந்ததில் ஜெயித்திருக்கிறார் ராதாமோகன்.

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே.. ஒளிப்பதிவு, எடிடிங், பின்னணி இசை, கலை போன்ற அத்தனையும் சிறப்பாக அமைந்திருந்தன. ஹிஹி.. இதைச் சொல்லலைன்னா அப்புறம் இதெல்லாம் ஒரு விமர்சனமான்னு யாராவது கேட்டுடப் போறாங்க.. ஹிஹி.!

.

Monday, February 7, 2011

யுத்தம் செய், தூங்காநகரம் –ஒரு பார்வை

இந்த நேரத்தில் லிஸ்டில் இருந்த இரண்டு படங்கள் இவை. எப்போதும் படங்கள் குறித்த பார்வையை எழுதும் முன்பு அவை குறித்த நண்பர்களின் பார்வை எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதுண்டு. இந்த முறையும் அப்படியே வாசித்துக்கொண்டிருந்தேன். பல தடவைகள் அட்லீஸ்ட் நம் மனதில் இருக்கும் சில விஷயங்களாவது சொல்லப்படாமல் போயிருக்கும். ஆனால் அபூர்வமாய் இம்முறை தலைப்பிலிருக்கும் இரண்டு படங்கள் குறித்த இரண்டு விமர்சனங்களும் கிட்டத்தட்ட 90% நான் விரும்பியதைப் போலவே அமைந்திருந்தன. ஏற்கனவே நாம் நினைத்தவை எழுதப்பட்டுவிட்ட பின்னர் அதையே நாமும் எழுதிக்கொண்டிருப்பதைவிட அவற்றை முன்னிலைப்படுத்துவதே நியாயம் எனத் தோன்றியது.

’யுத்தம் செய்’ படத்தினைப் பற்றிய நண்பர் அதிஷாவின் விமர்சனம்.

’தூங்கா நகரம்’ படத்தினைப் பற்றிய நண்பர் கேபிள்சங்கரின் விமர்சனம்.

.

Thursday, February 3, 2011

சோளம் எங்கே கிடைக்கும்?

சமீபத்தில் ஒரு பிரச்சினைக்காக மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட. மருந்துகளைக் எழுதிக்கொடுத்துவிட்டு உணவுப்பழக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். கீரை, காய்கறிகள், நவ தானியங்கள் என அதே பழைய பல்லவியைப் பாடினார். ’கேட்க நல்லாயிருக்குது சார், ஆனா இப்ப இருக்கிற அவசரத்துல எங்க முடியுது? காலையில ஓட்ஸ் குடிச்சுட்டு அவசரமா ஓடவேண்டியிருக்குது. அப்புறம் மதியமும், பல நாட்கள்ல நைட்டும் வெளியேதான் சாப்பிடவேண்டியிருக்குது..’ என்றதும் கொஞ்சம் கோபமாக, ‘எதை விளம்பரம் பண்ணினாலும் கண்ணை மூடிகிட்டு நம்பிடுவீங்களா? படிச்ச நீங்களே இப்படி இருந்தா என்னத்தச் சொல்றது? ஓட்ஸ், மனிதன் சாப்பிடவேண்டிய ஒரு உணவே இல்லை, அதைச்சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லை.. முதல்ல அதத் தூக்கி எறிங்க.. பதிலா அதைவிட குறைந்த விலையில் எவ்வளவோ சிறந்த, கேழ்வரகு கஞ்சி குடிக்கலாம் இல்லையா..’ என்றார். கொஞ்சம் அதிர்ச்சியாகி ‘சரி சார்’ என்றேன். ஓட்ஸ் ஒண்ணுதான் உருப்படியா ஏதோ குடிச்சுகிட்டிருக்கோம்னு நினைச்சேன். அதுவும் போச்சா? அது சரி, எதை நாம உருப்படியாப் பண்ணியிருக்கோம்னு நினைச்சுகிட்டேன்.

வரும் போது கம்பு, கேழ்வரகு, சோளம் என்றெல்லாம் சொன்னாரே அதை வாங்கிச் செல்வோம் என்று தாம்பரத்தில் ஒரு மளிகைக் கடையில் கேட்டேன். கடைக்காரர், ‘சோளமா? போங்க சார், அதெல்லாம் இங்க கிடைக்காது. எங்கனா கோழித்தீவனம், மாட்டுத்தீவனம் விக்கிற கடையாப் போய்க் கேளுங்க..’ என்றார்.

*******************************

http://kurals.com திருக்குறளுக்காக இவ்வளவு சிறப்பாக, தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள தளத்தை முதல் முறையாகக் காண்கிறேன். ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர், டாக்டர் மு.வ., கலைஞர், சாலமன் பாப்பையா ஆகியோரின் உரைகள் தரப்பட்டுள்ளன. குறள் வாரியாக அதன் உரை, மொழிபெயர்ப்பு, ஒலிவடிவம், படங்கள், பிற குறிப்புகள் என அத்தனையையும் ஒருங்கே தந்திருக்கிறார்கள். குறட்பாக்களை ரெஃபர் செய்வதற்கு மிகத் தகுதியான தளம்.

********************************

’நாத்திகம் காத்தல்’ என்று ஒரு பகிர்வை எழுதினாலும் எழுதினேன்.. இந்த இரண்டரை வருடங்களில் அதிகபட்ச பார்வை கிடைத்த பதிவாக அது ஆனது மட்டுமல்லாமல் பின்னூட்டத்தில் ஒரு சலசலப்பையும், விவாதத்தையும் நிகழ்த்தியது. அதோடு கட்டுரை நிறைய எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் மெயிலிலும், போனிலும் கொண்டு வந்தது. அந்தக் கட்டுரை யாருக்கும், எந்தக் கொள்கைக்கும் எதிராகவோ, அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலோ எழுதப்படவில்லை, அது என் நோக்கமும் அல்ல. அதில் ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்பட்ட ஒரு வார்த்தையால் அப்படியாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டது. நமது எழுத்து நம்மைத்தான் பிரதிபலிக்கிறது, ஆனால் முழுமையாக அல்ல. நம்மில் ஒரு சிறு பகுதியைத்தான் காட்டுகிறது. விருப்பமில்லாமலோ, வேறு காரணங்களாலோ பல விஷயங்களையும், சார்ந்திருக்கும் கொள்கைகளையும் நாம் பகிர்வதில்லை. எப்போதாவது அதன் ஒரு கீற்று மின்னிச் செல்லலாம், தவறுதலாக. அப்போதுதான் ‘இவரா? இப்படியா?’ என்பது போன்ற கேள்விகள் எழுகிறது. நான் நிஜமாக நாத்திகம் பேசினால் அது இந்தக் கட்டுரை போல நிச்சயமாக இருக்காது. காதலைப் பற்றியும், நட்பைப் பற்றியும் மென்மையான எழுத்துகளில் சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்வதில்லையா.. அது போல அது ஒரு சிறிய எண்ணப்பகிர்வு, அவ்வளவே.

அதில் பயன்படுத்தப்பட்டது ஒன்றும் கெட்டவார்த்தை இல்லை, அது ஒரு சிறிய எள்ளல். அதுவும் ஒரு சரியான உதாரணத்துக்காக மட்டுமே எழுதப்பட்டது. மாற்றுக்குழுவைத் திட்டவேண்டும் என்ற நோக்கில் கையாளப்படவில்லை. கட்டுரை மீதான உங்கள் விவாதத்துக்கு நன்றி. மோகன்குமார், நடராஜ், யுவகிருஷ்ணா போன்றோருக்கு என் அன்பு.

********************************

சமீபத்திய ‘அவுட்லுக்’ கட்டுரை பற்றிய நண்பரின் பகிர்வைக்கண்டேன். ஒண்ணுமில்லை, பிள்ளைகள் வச்சிருக்கிறவர்களை கொஞ்சம் எச்சரித்து வைக்கலாமேன்னுதான்.. இது. ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியில் இன்னும் 15 வருஷம் கழித்து உங்கள் பிள்ளையை ஒரு சாதாரண டிகிரி படிக்கவைக்க ஆகப்போகும் செலவு சுமார் 20 லட்சங்கள். மாஸ்டர் டிகிரி, ப்ரொபஷனல் கோர்ஸெல்லாம் எப்படியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். அதிகமில்லை ஜெண்டில்மேன் அப்போது உங்கள் பிள்ளைக்கு ஆகப்போகும் கல்யாணச்செலவு ஒரே ஒரு கோடிதான்.!!

கவலைப்படாதீங்க.. சம்பளமும் அப்போ கூடியிருக்கும்.! ..னு நம்புவோம்.!

********************************

கீழ் வீட்டில் சுபாவை விட சின்னவனாக இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறான். அவனும் இவனைப்போல சாப்பாட்டுக்குப் பிரச்சினை செய்கிறவன் போலத் தெரிகிறது. காலையிலும் மாலையிலும் என்னைப் பார்க்கும் போது மட்டும் ரொம்பவே பயந்தவன் போல பம்முவான். நான் இவ்வளவுக்கும் அவனைப் பயமுறுத்தியதே இல்லை. இன்றைக்கு காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது அவன் அம்மா அவனிடம், ‘சுபாப்பாகிட்ட சொல்லணுமா?.. ம்..’ என்றவுடன் ஒழுங்காக ‘ஆ’ வாங்கத்துவங்கினான், என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே. அடப்பாவமே என்னை ஒரு பூச்சாண்டி ரேஞ்சுக்கு அவனிடம் சொல்லிவைத்திருக்கிறார்கள். அவன் பார்க்கும் பெரும்பாலான நேரம் நான் ஹெல்மெட் அணிந்துகொண்டிருப்பதால் அதை வைத்து பயம் காட்டியிருப்பார்கள் என நினைக்கிறேன். ஹிஹி.. நம்மைப் பார்த்தும் பயப்படுகிற ஒரு ஜீவன் இருக்குதுன்னு நினைச்சு பெருமைப் பட்டுக்க வேண்டியதுதான்.

********************************

அடுத்த மாதம் நண்பர் ஒருவரின் திருமணத்துக்குச் செல்லவேண்டியதிருக்கிறது. ரமாவிடம் முன்பே சொல்லிவைப்போமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கால் மணி நேரம் பீரோவை திறந்து நோண்டிக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் வந்தார்.

‘நாம எப்பங்க டி.நகர் போகணும்?’ என்றார்.

‘இல்லம்மா, கல்யாணம் டி.நகர்ல இல்ல. விழுப்புரத்துல..’

‘நா அதக் கேக்கலைங்க, கல்யாணத்துக்குப் போவதற்கு புதுச்சேலை எடுக்கணும்ல.. அதுக்குக் கேட்டேன்’.

.