Thursday, February 3, 2011

சோளம் எங்கே கிடைக்கும்?

சமீபத்தில் ஒரு பிரச்சினைக்காக மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட. மருந்துகளைக் எழுதிக்கொடுத்துவிட்டு உணவுப்பழக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். கீரை, காய்கறிகள், நவ தானியங்கள் என அதே பழைய பல்லவியைப் பாடினார். ’கேட்க நல்லாயிருக்குது சார், ஆனா இப்ப இருக்கிற அவசரத்துல எங்க முடியுது? காலையில ஓட்ஸ் குடிச்சுட்டு அவசரமா ஓடவேண்டியிருக்குது. அப்புறம் மதியமும், பல நாட்கள்ல நைட்டும் வெளியேதான் சாப்பிடவேண்டியிருக்குது..’ என்றதும் கொஞ்சம் கோபமாக, ‘எதை விளம்பரம் பண்ணினாலும் கண்ணை மூடிகிட்டு நம்பிடுவீங்களா? படிச்ச நீங்களே இப்படி இருந்தா என்னத்தச் சொல்றது? ஓட்ஸ், மனிதன் சாப்பிடவேண்டிய ஒரு உணவே இல்லை, அதைச்சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லை.. முதல்ல அதத் தூக்கி எறிங்க.. பதிலா அதைவிட குறைந்த விலையில் எவ்வளவோ சிறந்த, கேழ்வரகு கஞ்சி குடிக்கலாம் இல்லையா..’ என்றார். கொஞ்சம் அதிர்ச்சியாகி ‘சரி சார்’ என்றேன். ஓட்ஸ் ஒண்ணுதான் உருப்படியா ஏதோ குடிச்சுகிட்டிருக்கோம்னு நினைச்சேன். அதுவும் போச்சா? அது சரி, எதை நாம உருப்படியாப் பண்ணியிருக்கோம்னு நினைச்சுகிட்டேன்.

வரும் போது கம்பு, கேழ்வரகு, சோளம் என்றெல்லாம் சொன்னாரே அதை வாங்கிச் செல்வோம் என்று தாம்பரத்தில் ஒரு மளிகைக் கடையில் கேட்டேன். கடைக்காரர், ‘சோளமா? போங்க சார், அதெல்லாம் இங்க கிடைக்காது. எங்கனா கோழித்தீவனம், மாட்டுத்தீவனம் விக்கிற கடையாப் போய்க் கேளுங்க..’ என்றார்.

*******************************

http://kurals.com திருக்குறளுக்காக இவ்வளவு சிறப்பாக, தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள தளத்தை முதல் முறையாகக் காண்கிறேன். ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர், டாக்டர் மு.வ., கலைஞர், சாலமன் பாப்பையா ஆகியோரின் உரைகள் தரப்பட்டுள்ளன. குறள் வாரியாக அதன் உரை, மொழிபெயர்ப்பு, ஒலிவடிவம், படங்கள், பிற குறிப்புகள் என அத்தனையையும் ஒருங்கே தந்திருக்கிறார்கள். குறட்பாக்களை ரெஃபர் செய்வதற்கு மிகத் தகுதியான தளம்.

********************************

’நாத்திகம் காத்தல்’ என்று ஒரு பகிர்வை எழுதினாலும் எழுதினேன்.. இந்த இரண்டரை வருடங்களில் அதிகபட்ச பார்வை கிடைத்த பதிவாக அது ஆனது மட்டுமல்லாமல் பின்னூட்டத்தில் ஒரு சலசலப்பையும், விவாதத்தையும் நிகழ்த்தியது. அதோடு கட்டுரை நிறைய எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் மெயிலிலும், போனிலும் கொண்டு வந்தது. அந்தக் கட்டுரை யாருக்கும், எந்தக் கொள்கைக்கும் எதிராகவோ, அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலோ எழுதப்படவில்லை, அது என் நோக்கமும் அல்ல. அதில் ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்பட்ட ஒரு வார்த்தையால் அப்படியாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டது. நமது எழுத்து நம்மைத்தான் பிரதிபலிக்கிறது, ஆனால் முழுமையாக அல்ல. நம்மில் ஒரு சிறு பகுதியைத்தான் காட்டுகிறது. விருப்பமில்லாமலோ, வேறு காரணங்களாலோ பல விஷயங்களையும், சார்ந்திருக்கும் கொள்கைகளையும் நாம் பகிர்வதில்லை. எப்போதாவது அதன் ஒரு கீற்று மின்னிச் செல்லலாம், தவறுதலாக. அப்போதுதான் ‘இவரா? இப்படியா?’ என்பது போன்ற கேள்விகள் எழுகிறது. நான் நிஜமாக நாத்திகம் பேசினால் அது இந்தக் கட்டுரை போல நிச்சயமாக இருக்காது. காதலைப் பற்றியும், நட்பைப் பற்றியும் மென்மையான எழுத்துகளில் சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்வதில்லையா.. அது போல அது ஒரு சிறிய எண்ணப்பகிர்வு, அவ்வளவே.

அதில் பயன்படுத்தப்பட்டது ஒன்றும் கெட்டவார்த்தை இல்லை, அது ஒரு சிறிய எள்ளல். அதுவும் ஒரு சரியான உதாரணத்துக்காக மட்டுமே எழுதப்பட்டது. மாற்றுக்குழுவைத் திட்டவேண்டும் என்ற நோக்கில் கையாளப்படவில்லை. கட்டுரை மீதான உங்கள் விவாதத்துக்கு நன்றி. மோகன்குமார், நடராஜ், யுவகிருஷ்ணா போன்றோருக்கு என் அன்பு.

********************************

சமீபத்திய ‘அவுட்லுக்’ கட்டுரை பற்றிய நண்பரின் பகிர்வைக்கண்டேன். ஒண்ணுமில்லை, பிள்ளைகள் வச்சிருக்கிறவர்களை கொஞ்சம் எச்சரித்து வைக்கலாமேன்னுதான்.. இது. ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியில் இன்னும் 15 வருஷம் கழித்து உங்கள் பிள்ளையை ஒரு சாதாரண டிகிரி படிக்கவைக்க ஆகப்போகும் செலவு சுமார் 20 லட்சங்கள். மாஸ்டர் டிகிரி, ப்ரொபஷனல் கோர்ஸெல்லாம் எப்படியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். அதிகமில்லை ஜெண்டில்மேன் அப்போது உங்கள் பிள்ளைக்கு ஆகப்போகும் கல்யாணச்செலவு ஒரே ஒரு கோடிதான்.!!

கவலைப்படாதீங்க.. சம்பளமும் அப்போ கூடியிருக்கும்.! ..னு நம்புவோம்.!

********************************

கீழ் வீட்டில் சுபாவை விட சின்னவனாக இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறான். அவனும் இவனைப்போல சாப்பாட்டுக்குப் பிரச்சினை செய்கிறவன் போலத் தெரிகிறது. காலையிலும் மாலையிலும் என்னைப் பார்க்கும் போது மட்டும் ரொம்பவே பயந்தவன் போல பம்முவான். நான் இவ்வளவுக்கும் அவனைப் பயமுறுத்தியதே இல்லை. இன்றைக்கு காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது அவன் அம்மா அவனிடம், ‘சுபாப்பாகிட்ட சொல்லணுமா?.. ம்..’ என்றவுடன் ஒழுங்காக ‘ஆ’ வாங்கத்துவங்கினான், என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே. அடப்பாவமே என்னை ஒரு பூச்சாண்டி ரேஞ்சுக்கு அவனிடம் சொல்லிவைத்திருக்கிறார்கள். அவன் பார்க்கும் பெரும்பாலான நேரம் நான் ஹெல்மெட் அணிந்துகொண்டிருப்பதால் அதை வைத்து பயம் காட்டியிருப்பார்கள் என நினைக்கிறேன். ஹிஹி.. நம்மைப் பார்த்தும் பயப்படுகிற ஒரு ஜீவன் இருக்குதுன்னு நினைச்சு பெருமைப் பட்டுக்க வேண்டியதுதான்.

********************************

அடுத்த மாதம் நண்பர் ஒருவரின் திருமணத்துக்குச் செல்லவேண்டியதிருக்கிறது. ரமாவிடம் முன்பே சொல்லிவைப்போமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கால் மணி நேரம் பீரோவை திறந்து நோண்டிக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் வந்தார்.

‘நாம எப்பங்க டி.நகர் போகணும்?’ என்றார்.

‘இல்லம்மா, கல்யாணம் டி.நகர்ல இல்ல. விழுப்புரத்துல..’

‘நா அதக் கேக்கலைங்க, கல்யாணத்துக்குப் போவதற்கு புதுச்சேலை எடுக்கணும்ல.. அதுக்குக் கேட்டேன்’.

.

26 comments:

கார்க்கி said...

:)))

டி.நகர் போனா சொல்லுங்க சகா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://maravalam.blogspot.com/2011/02/2.html இதுல எழுதி இருக்காங்க பாருங்க.. சத்து அட்டவணையும் உண்டு..

மதுரை சரவணன் said...

எல்லாம் நல்லா இருக்கு... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Nataraj said...

ஓட்ஸ் வேஸ்ட் என்பது புதுசா இருக்கு. ஏன்னு டாக்டர் சொன்னாரா? எனக்கு தெரிஞ்சு ஓட்ஸ் calories மற்றும் carbohydrate லெவல்ல rice விட ஒன்னும் பெனிபிட் இல்ல..ஆனா soluble டயடரி பைபர் (நார்சத்து) அதிகம். கொஞ்சம் ப்ரோடீனும் உண்டு..

காவேரி கணேஷ் said...

ஆதி,

உங்களுக்கு ராகி, கம்பு, கோதுமை சேமியா அனுப்பி வைக்கிறேன்.

கக்கு - மாணிக்கம் said...

// ‘சோளமா? போங்க சார், அதெல்லாம் இங்க கிடைக்காது. எங்கனா கோழித்தீவனம், மாட்டுத்தீவனம் விக்கிற கடையாப் போய்க் கேளுங்க..’ என்றார்.//

கடைக்காரர் ரொம்ப சூட்சம அறிவுள்ளவர் போலும் ஆளை பார்த்தவுடனே சொல்லிவிடுவார்கள். இங்கேயும் அப்படித்தான் :))

ILA(@)இளா said...

உங்களையும் பார்த்து ஒரு ஜீவன் பயப்படுதேன்னு சந்தோசப்படாதீங்க. எல்லாம் ரெண்டு வருசம்தான். சோளச்சோறு இங்கேயே சாப்பிடறேன். தேடும்யா.. கிடைக்கும்

redwithanger said...

I think whole oats has low glycemic index - so still helps as a good breakfast food.

Indian said...

அவ்வப்போது அம்மா கைவண்ணத்தில் சோளச்சோறு, கம்பங்களி, ராகிக்களி, வரகரிசிச்சோறு உண்பதுண்டு.

Philosophy Prabhakaran said...

// ‘நா அதக் கேக்கலைங்க, கல்யாணத்துக்குப் போவதற்கு புதுச்சேலை எடுக்கணும்ல.. அதுக்குக் கேட்டேன்’. //

வெளங்கிடும்...

பிரதீபா said...

//நம்மைப் பார்த்தும் பயப்படுகிற ஒரு ஜீவன் // - அட நெசமாவா சொல்றீங்க , இல்ல இதுவும் ...ஹி ஹி

//நா அதக் கேக்கலைங்க, கல்யாணத்துக்குப் போவதற்கு புதுச்சேலை எடுக்கணும்ல.. அதுக்குக் கேட்டேன்’//- அண்ணே, நீங்க மேய்ப்பர்-ன்னு ஒத்துகிட்டீங்க, வேற வழி இல்ல. :))

கனாக்காதலன் said...

நல்ல பகிர்வு ஆதி. அதுவும் அந்த குறள் வலைமனை அருமை. நன்றி.

புன்னகை said...

//நம்மைப் பார்த்தும் பயப்படுகிற ஒரு ஜீவன் இருக்குதுன்னு நினைச்சு பெருமைப் பட்டுக்க வேண்டியதுதான்.//
சிப்பு வருது சிப்பு! :-)))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கார்க்கி.

நன்றி முத்துலட்சுமி. (ஸ்பெஷல் நன்றி)

நன்றி சரவணன்.

நன்றி நடராஜ்.

நன்றி காவேரி கணேஷ். (கண்டிப்பா அனுப்புங்க)

நன்றி மாணிக்கம்.

நன்றி இளா.

நன்றி ரெட்.

நன்றி இண்டியன்.

நன்றி பிரபாகரன். (ரொம்ப அடியோ?)

நன்றி பிரதீபா.

நன்றி கனாக்காதலன்.

நன்றி புன்னகை.

P.K.K.BABU said...

GOOD QUALITY RAGI, CORN, MAIZE, AVLBL AT NILGIRIS, (AND STORES LIKE). BEFORE USING SPROUT IT. DRY WELL AND GRIND WELL.THEN USE WITH JAGGERY WHEN PREPARING FOR DAILY USE AS CEREAL. THANKS.(GOOD FOR KIDS TOO)

ஈரோடு கதிர் said...

மீசைய வச்சு பூச்சாண்டி பதவி கொடுத்திருப்பாங்களோ?

அமுதா கிருஷ்ணா said...

சோளம்னா கார்ன் தானே..சூப்பர் மார்கெட்ல பச்சையா கிடைக்குதே ஆதி.

அவுட்லுக் பத்திரிக்கை கட்டுரை நான் தப்பித்தேன்.என் பசங்க இப்ப காலேஜ்..

சுபா மாதிரி அந்த குழந்தை டெர்ரர் இல்லையோ..

ஷர்புதீன் said...

//என்னைப் பார்க்கும் போது மட்டும் ரொம்பவே பயந்தவன் போல பம்முவான்//

ஹய் போங்கு.,!

சுசி said...

//காதலைப் பற்றியும், நட்பைப் பற்றியும் மென்மையான எழுத்துகளில் சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்வதில்லையா..//

:))))

செம சிரிப்பு ஆதி.

ராஜ நடராஜன் said...

ஆதி!கிராமத்துக்கே சோளக் கஞ்சியோ,கூழோ கிடைக்குமான்னு தேடிப்பார்த்து விட்டேன்.ம்ஹும்!

சோளம்,கம்பு கண்ணால் காண்பவர்கள் பாக்கியசாலிகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சென்னை டி.நகர்ல 4 சோளக்கதிர வெச்சு 20 ரூபாய்க்கு விப்பாங்க பாருங்க. அவ்வளவு ஏன் தாம்பரம் மார்க்கெட்டுலயே விப்பாங்க.

இல்லனா சோளம், ராகி, கம்பு இன்னும் இத்யாதிகள் இவை எல்லாத்தையும் ஒன்னா சேர்த்து மன்னா ராகி ஹெல்த் மிக்ஸுன்னு கிடைக்கும்.

Reflections said...

Aadi, Don't worry too much about the feedback regarding your Kadavul article. This has been going on fore ever and you are not alone. Even if my daughter or wife wish to go to the temple, I accompany them without any hesitation. You are 100% correct, their happiness is more important than anything else but at the sametime, I am very strong in my beliefs and dis-beliefs. One of your friend also said- why is that when we question the marketing strategy and illogical belief of the thing in stone, they get so offended but it is always okay to bash the Atheist.

Funny world- Periyaar tried and a whole generation changed.

Again- don't worry- what you raised are 100% valid and for the record you didn't hurt anyone's feelings.

I think you were making a big difference in people's thinking.

By the way- your blog was referred by Yuvakrishna.

Sudhar said...

Somebody mistakenly telling 'Corn'for Cholam. Our traditional food Cholam is different.

I also eating nowadays only 'Raagi, Kambu, Cholam, Barliey and Oats' based food only. (getting easily in Dubai from an Indian store)- Sorghum (Hindi: Jowar; Tamil: Cholam; Telugu: Jonna; Kannada: Jola; Malayalam: Cholum)

http://geethaachalrecipe.blogspot.com/

She is writing lot of wonderful cookery stuff using the above. its a must visit website.

To know more about Milets

http://millets.wordpress.com/

Regarding Oats I am not sure why he said for Oats. May be bcoz its not growing in our country ?

Sudhar said...

Somebody mistakenly telling 'Corn'for Cholam. Our traditional food Cholam is different.

I also eating nowadays only 'Raagi, Kambu, Cholam, Barliey and Oats' based food only. (getting easily in Dubai from an Indian store)- Sorghum (Hindi: Jowar; Tamil: Cholam; Telugu: Jonna; Kannada: Jola; Malayalam: Cholum)

http://geethaachalrecipe.blogspot.com/

She is writing lot of wonderful cookery stuff using the above. its a must visit website.

To know more about Milets

http://millets.wordpress.com/

Regarding Oats I am not sure why he said for Oats. May be bcoz its not growing in our country ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

கருத்துப்பகிர்வுகளுக்கு அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.!

Avargal Unmaigal said...

சார் நீங்க கண்டிப்பா உங்க குடும்ப டாக்டரை மாற்றுங்க...ஒட்ஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அது பற்றி விரிவான பதிவு ஓன்றை போடுகிறேன்.சில டாக்டர்கள் லேட்டஸ்ட் தகவல்களை அப்டேட் செய்து கொள்வதில்லை. உங்களுக்கு நேரம் கிடைத்தால் ஆன்லைனில் ஒட்ஸ் & ஹெல்த் பெனிபிட் என்று தேடி பாருங்கள் . டாக்டர் சொல்வதை எல்லாம் அப்படியே கடைபிடிக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஒரு டாக்டருக்கு இரு டாக்டரிடம் ஆலோசனை கேட்டு கொள்ளுங்கள்