Friday, February 11, 2011

த்ரில்லர் ’பயணம்’

ராதாமோகன் எனக்குப் பிடித்தமான ஒரு இயக்குனர். அவரின் இந்தப் படமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரே விதமான கதைகளாக அல்லாமல் விதம் விதமான படங்களைச் செய்யவேண்டும் என்ற ஆர்வமே அவரின் ரசனையைக் காட்டுகிறது.

பாடல்கள் இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை. இருப்பினும் ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் படம் பார்த்த திருப்தியைத் ’பயணம்’ தருகிறது. பயணிகளூடே கலந்திருந்த ஹைஜாக்கர்களால் சென்னையிலிருந்து கிளம்பும் ஒரு விமானம் கடத்தப்படுகிறது. நல்லவேளையாக ஏற்படும் ஒரு சிறிய விபத்தால் விமானம் வெகுதூரம் கொண்டு செல்லப்படாமல் திருப்பதியிலேயே இறக்கப்படுகிறது. அவர்களது குறிக்கோள் ஒரு முக்கிய தீவிரவாதி ஒருவனின் விடுதலை. ஆக்‌ஷனுக்குத் தயாராகின்றனர் NSG படையினர். ஆயினும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் அரசு சார்ந்து, அரசியல்வாதிகள் சார்ந்து இது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன? NSG க்கு அனுமதி கிடைக்காமல் கையைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய சூழல்.

சில தீவிரவாதிகள். பயத்தில் ஏராளமான பணயக் கைதிகள். கடந்துகொண்டிருக்கும் நாட்கள். பரபரப்பில் அதிகாரிகள். அரிக்கும் மீடியா. இந்தச் சூழலில் அரசு அனுமதித்தும் அந்த முக்கியத் தீவிரவாதியை ஒப்படைப்பதில் புதிய எதிர்பாராத சிக்கல். இப்போது வேறு வழியே இல்லாமல் அதிகாரிகள் NSGயின் அதிரடி முற்றுகையை அனுமதிக்க.. எப்படி இறுதியில் முடிந்தவரை உயிர்ச்சேதமில்லாமல் மக்கள் மீட்கப்படுகிறார்கள் என்பது மீதக்கதை.

Payanam 

ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாக முடிக்கப்படவேண்டிய ஆங்கிலப் பட பாணிக் கதை. அது நமக்குத் தேவையான நீளத்தில் சொல்லப்படவேண்டியிருப்பதால் எவ்வளவுதான் இயல்பாகச் செய்திருந்தாலும் ஆங்காங்கே மெலிதாக சினிமாத்தனம் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. இவ்வளவுக்கும் படம் முழுதும் ஆங்காங்கே நம் சினிமா ஹீரோக்களையும், கிளிஷேக்ளையும் நக்கல் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார் ராதாமோகன்.

விதவிதமான மனநிலையில் உள்ள விதவிதமான மனிதர்கள் ஒரு விமானத்துக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள். காத்திருக்கும் நேரம், நாட்களாக நீள்கிறது. அப்போது அவர்களது ரியாக்‌ஷன்களும், ஏற்படும் மனமாற்றமும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வசனங்கள் குறிப்பாகச் சொல்லப்படவேண்டிய விஷயங்களில் ஒன்று. பல இடங்களிலும் ஆழமாக, அழகாக இருக்கின்றன. பணயக் கைதிகளான ‘ஷைனிங்ஸ்டார்’ பிரித்விராஜ், ஜாவா பாலாஜி காம்பினேஷன் படம் முழுக்க ரசித்துச் சிரிக்க முடிகிறது. சின்னச்சின்ன காரெக்டர்களில் நம் நடிகர்கள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், நாகார்ஜுன் அவரவர்கள் காரெக்டர்களில் அவ்வளவு இயல்பாக, நிஜ ஆஃபீஸர்களை நினைவூட்டுகிறார்கள். நாகார்ஜுன் தன் புத்தம் புதூதூதூ யூனிபார்மில், பிஜிஎம் ஒலிக்க, ஹெலிகாப்டர் பின்னணியில் நடந்துவரும் அறிமுகக் காட்சியை மட்டும் விட்டுவிடலாம். அவ்வளவு நேரம் அனுமதிக்காக பரபரப்புடன் காத்திருந்துவிட்டு கிடைத்தவுடன் NSG மேற்கொள்ளும் ஆபரேஷனும், நாகார்ஜுனின் ஐடியாக்களும் சுவாரசியமானது என்றாலும் அந்தக் காட்சிகள் படு ஸ்லோவாக இருக்கிறது. எனினும் பெரும்பாலான நேரம் நம்மை டென்ஷனிலேயே வைத்திருந்ததில் ஜெயித்திருக்கிறார் ராதாமோகன்.

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே.. ஒளிப்பதிவு, எடிடிங், பின்னணி இசை, கலை போன்ற அத்தனையும் சிறப்பாக அமைந்திருந்தன. ஹிஹி.. இதைச் சொல்லலைன்னா அப்புறம் இதெல்லாம் ஒரு விமர்சனமான்னு யாராவது கேட்டுடப் போறாங்க.. ஹிஹி.!

.

13 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

நன்று

பா.ராஜாராம் said...

good review!

//இதைச் சொல்லலைன்னா அப்புறம் இதெல்லாம் ஒரு விமர்சனமான்னு யாராவது கேட்டுடப் போறாங்க//

இன்டர்வெல்-லில் என்ன சாப்பிட்டீங்க ஆதி? :-)

எல் கே said...

nalla irukku review. paarkkalam

டக்கால்டி said...

http://dakkalti.blogspot.com/2011/02/blog-post_10.html

konjam ithaiyum vaasiyunga ji...

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை விட உங்க விமர்சனம் சூப்பர்....

சுசி said...

டைரட்டர் விமர்சனம்னா சும்மாவா..

படம் பாக்கணும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

Joseph said...

பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்ல இருக்கு இந்த படம்.

rajasundararajan said...

ஒரு கிறிஸ்துவர் என்றால் அவருடைய விசயம் (விஷயமன்றுசாராம்சம்) இது; ஒரு இஸ்லாமியர் என்றால் அவருடைய விசயம் இது; ஒரு பட்டாளத்துக் காரர் (பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட) அவருடைய விசயம் இது; ஒரு குடும்பத் தலைவியின் விசயம் இது; (நடிப்புக்காக ஹீரோ வேஷம் கட்டினாலும்) அவருடைய விசயம் இது, ஒரு மருத்துவருடைய விசயம் இது என்று, சமூகப் பங்காளிகள் ஓரொருவருக்கும் இருந்தாக வேண்டிய சாராம்ச இயல்பைச் சொல்லுகிறார் பாருங்கள், அங்குதான் இயக்குநர் உயர்ந்து நிற்கிறார். ராதாமோகனின் staff-work என்னை வியப்பில் ஆழ்த்துகிறது, அவருடைய ஓரொரு படத்திலும்.

Vijay said...

நன்றி ஆதி. படம் பார்த்துட்டு வந்து பேசறேன்.

Vijay said...

//பா.ராஜாராம் said...
good review!

//இதைச் சொல்லலைன்னா அப்புறம் இதெல்லாம் ஒரு விமர்சனமான்னு யாராவது கேட்டுடப் போறாங்க//

இன்டர்வெல்-லில் என்ன சாப்பிட்டீங்க ஆதி? :-)//

என்னா ஆதீ.. படம் பார்த்துட்டு வந்தீங்க போல ? ம்ம்ம்... :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நாகேந்திரன்.
நன்றி பாரா. (ஹிஹி)
நன்றி எல்கே.
நன்றி டக்கால்டி.
நன்றி நாஞ்சில் மனோ.
நன்றி சுசி.
நன்றி டிவிஆர்.
நன்றி ஜோஸஃப்.
நன்றி ராஜசுந்தர்ராஜன்.
நன்றி விஜய்.

Suresh Kumar said...

பயணம் முடிவு என்னவோ சுபமா தான் முடியுது. ஆனாலும் ஒரு திருப்தி இல்லை.
my review