Monday, April 4, 2011

காமம் எனுமொரு கொலையாயுதம்

Kolai2


பெருங்கிளையொன்றில் வீற்றிருந்த
அழகிய பறவையொன்றின்
வீறிட்ட ஓலம்
ஆச்சரியம் தருவதாகவும்
கோபம் தருவதாகவும்
அதுகுறித்து
விவாதம் செய்யத் தகுந்ததாகவும் இருந்தது.
பிறிதொரு நாள்
தனிமையில்
நான் உணர்ந்த என் குரல்
அந்தப் பறவையினை ஒத்ததாக இருந்தது.
மிகுந்த வேதனையினூடே
புலிகளுக்கான நியாயங்களைப் போலவே
பறவைகளுக்கும் இருக்கக் கூடும்
என்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு வீச்சிலும்
பச்சைப் பசுமரங்களை
வெட்டிச் சாய்த்துக்கொண்டேயிருக்கிறது
பளபளக்கும் ஒரு ஒற்றைக் கோடரி.
.

41 comments:

பிரதீபா said...

நான் தான் மொதல் ல படிச்சேன் ..

பரிசல்காரன் said...

என்னமோ பண்ணுதுய்யா கவிதை!

அப்பப்ப இப்படியும் எழுதேன்...

கனாக்காதலன் said...

ரொம்ப நல்லாயிருக்கு ஆதி.

நேசமித்ரன் said...

ஆதி

நல்ல முயற்சி !


//பிரிதொரு - பிறிதொரு//

//ஒரு ஒற்றைக் கோடரி//

kalakalapriya said...

க்ளாஸ் ஆதி

Rathnavel said...

பச்சைப் பசுமரங்களை
வெட்டிச் சாய்த்துக்கொண்டேயிருக்கிறது
பளபளக்கும் ஒரு ஒற்றைக் கோடரி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ப்ரதீபா, பரிசல் (ஹை), கனாக்காதலன், ப்ரியா, ரத்னவேல்.. நன்றி.

நேசமித்திரன் நன்றி. (நான்கைந்து தடவைகள் வாசித்தும் மண்டையில் உறைக்காதமைக்கு குட்டிக்கொண்டு ’பிறிதொரு’வை திருத்திக்கொள்கிறேன். ‘ஒரு ஒற்றைக்கோடரி’யை தெரிந்தேதான் ஒரு அழுத்தத்துக்காகவோ, ரிதமுக்காகவோ அல்லது எதற்காகவோ வைத்திருக்கிறேன். :-))

புன்னகை said...

Welcome back! :-)

குசும்பன் said...

ஒரு எண்டர் தட்டி எழுதியிருந்தா சாதா கவிதை, ரெண்டு எண்டர் தட்டி எழுதியிருந்தா அது ஸ்பெசல் சாதா கவிதையா பாஸ்???

குசும்பன் said...

சின்னவீட்டில் படுத்திருந்த
ஆதிமூலகிருஷ்ணன்
வீறிட்ட ஓலம்
சிரிப்பை தருவதாகவும்
சந்தோசத்தை தருவதாகவும்
அதுகுறித்து
ஜாலியா பேசத்தகுந்ததாகவும்
இருந்தது.
பிறிதொரு நாள்
போனில் பேசும் பொழுது
பரிசல்காரன் எழுப்பியக்குரல்
அந்த ஆதியின் குரலை ஒத்ததாக இருந்தது.
மிகுந்த வேதனையினூடே சிந்திக்கும் பொழுது இரண்டு ஓலமும்
கருங்கல்லால்
அடிவாங்கிய நாய் உடும் ஓலம்
என்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு கல்வீச்சிலும்
நாய் ஓலமிட்டுக்கொண்டேயிருக்கிறது
இரத்தம் பளபளக்கும் கருங்கல்.

குசும்பன் said...

//பரிசல்காரன் said...
என்னமோ பண்ணுதுய்யா கவிதை!//

ஆமா ஆமா நைட் நாலு வாழைப்பழம் உட்டும் காலையில் பிரியாதது எல்லாம் சுளுவா பிரியுது...டேங்க்ஸ் ஆதி!

கார்க்கி said...

//ஒரு ஒற்றைக்கோடரி’யை //

அது அழுத்த‌மா இருக்க‌ட்டும். ஒற்றைக்கோடாரியில் க் வ‌ராது. ஒற்றைகோடாரிதான்

குசும்பன் said...

//’பிறிதொரு’வை திருத்திக்கொள்கிறேன். ‘ஒரு ஒற்றைக்கோடரி’யை தெரிந்தேதான் ஒரு அழுத்தத்துக்காகவோ, ரிதமுக்காகவோ அல்லது எதற்காகவோ வைத்திருக்கிறேன். :-))//

என்னமோ கவிதையே எழுதிட்ட மாதிரி கொடுக்கிற பில்டப்ப பாரேன்.

குசும்பன் said...

//அது அழுத்த‌மா இருக்க‌ட்டும். ஒற்றைக்கோடாரியில் க் வ‌ராது. ஒற்றைகோடாரிதான்//

கார்க்கி உன் சின்சியாரிட்டிக்கு அளவே இல்லையா? இதை படிச்சதும் உச்சி மண்டையில் கோடாரியால் ஒரு போடு போட்டது மாதிரியிருக்கு...இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

குசும்பன் said...

உயிர்மை பதிப்பகத்துக்கு அடுத்த கவிஞன் ரெடி ஆகிறானா பாஸ்ஸ்ஸ்ஸ்?

கார்க்கி said...

ஒயின்ஷாப்பில் க‌விழ்ந்திருந்த‌
ஆதிமூலகிருஷ்ணன்
எடுத்திருந்த‌ வாந்தி
கும‌ட்ட‌லை தருவதாகவும்
அசூசை உண‌ர்வை தருவதாகவும்
அதுகுறித்து
அருவ‌ருப்பாக‌ பேசத்தகுந்ததாகவும்
இருந்தது.
பிறிதொரு நாள்
திருப்பூரில்
பரிசல்காரன் எடுத்த‌ வாந்தி
அந்த ஆதி வாந்தியின் க‌ப்பை ஒத்ததாக இருந்தது.
மிகுந்த ம‌ப்பினூடே சிந்திக்கும் பொழுது இரண்டு வாந்தியும்
ப‌ரோட்டா
செரிக்காம‌ல் ம‌றுநாள் வெளிவ‌ந்த‌ வாந்திதான்
என்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு பாரிலும்
வாந்தி எடுக்க‌ப்ப‌ட்டு கொண்டேயிருக்கிற‌து
ம‌ப்பு அதிக‌மாகும் த‌ருண‌ங்க‌ளில்

குசும்பன் said...

//நேசமித்திரன் நன்றி. (நான்கைந்து தடவைகள் வாசித்தும் மண்டையில் உறைக்காதமைக்கு குட்டிக்கொண்டு //

ஆமா இவரு பெரிய சீத்தலைசாத்தனாரு...ஒவ்வொரு மிஸ்டேக்குக்கும் எழுத்தானியால் குத்திக்கிட்டு திருத்துகிறார்...இதெல்லாம் ஓவரா இல்ல.

Sukumar Swaminathan said...

@குசும்பன்...
அண்ணே பழமொழி சொன்னா அனுபவிக்கனும் இப்படி போட்டு ஆராயக்கூடாது...

குசும்பன் said...

ஹே ஹேய்ய்ய் கார்க்கி “ஆம்லேட்” கவிதை சூப்பரு!

பாலா said...

நேசமித்ரன் said...
ஆதி

நல்ல முயற்சி !


//பிரிதொரு - பிறிதொரு//

//ஒரு ஒற்றைக் கோடரி"மாம்ஸ் நீங்க சொல்ல வந்தது அங்க " ஒரு " தேவை இல்லைங்கரததானே ??

குசும்பன் said...

சுகுமார் அப்ப இது கவிதை இல்லையா? பழமொழியா பாஸ்ஸ்ஸ்...அப்ப மிஸ்டேக் என் மேலதான்.

குசும்பன் said...

// பிரதீபா said...
நான் தான் மொதல் ல படிச்சேன் .//

பவர் ஸ்டார் சீனிவாசன் படம் லத்திகாவை முதல் ஷோவே பார்த்துட்டேன் என்று சொல்லுவது மாதிரி இருக்கு.

சிங்கை நாதன்/SingaiNathan said...

//புலிகளுக்கான நியாயங்களைப் போலவே//

விடுதலைப்புலிகளா பாஸ் ? இல்ல நீங்க தான் இங்க புலியா ???

அன்புடன்
சிங்கை நாதன்

சிங்கை நாதன்/SingaiNathan said...

follow-up ....

குசும்பன் said...

//விடுதலைப்புலிகளா பாஸ் ? இல்ல நீங்க தான் இங்க புலியா ???//

ஒரு காட்டு எலியைப்பார்த்து புலியான்னு கேட்கிறீங்களே இது நியாயமா செந்தில் அண்ணா?

Hanif Rifay said...

@குசும்பன்

//இரத்தம் பளபளக்கும் கருங்கல்.//


இரத்தம் பளபளக்கும் ஒரு ஒற்றை கருங்கல்..


திருத்திகோங்க பாஸ்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கூட்டமா வந்துட்டாங்கடா கைப்புள்ள்ள்ள.. ஆபீஸுக்குள்ள ஓடிரு.!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

@குசும்பன்,

கூடவே பரிசலையும் சேர்த்துகிட்டதுல துக்கத்திலயும் கொஞ்சம் மகிழ்ச்சி.

பிளாகர்ல ஒரு 50 தடவை ஸ்பேசிங் சரிபண்ணியும் அந்தக் கருமம் புடிச்சது ஸ்பெசல் சாதாவைத்தான் காமிக்குது. நடுராத்திரி இதுக்கே அரைமணி நேரம் ஆயிடுச்சு. கடைசியில போய்த்தொலையுதுனு விட்டுட்டேன்.

உயிர்மைக் கவிஞரா? இதுக்கு நீ இன்னும் நாலு பின்னூட்டம் போட்டு என்னைய கொடுமைப் படுத்தியிருக்கலாம்.

ஆயில்யன் said...

அருமையானதொரு வடிவத்தில் வார்த்தைகளால் கட்டியமைக்கப்பட்டிருக்கும் கவிதை எம்மை பிரம்மிக்கவைக்கிறது! [டிஸ்கி:-கண்டிப்பாக குசும்பன் சொல்லி நான் இங்கிட்டு வர்ல பாஸ்]

ஷர்புதீன் said...

அட !!

கார்க்கி said...

//பிளாகர்ல ஒரு 50 தடவை ஸ்பேசிங் சரிபண்ணியும் /

இடைவெளி குறித்த‌ க‌விதை என்ப‌தால் அதையும் ஒரு குறியீடுன்னு நினைச்சேன்.. இல்லையா?

இப்ப‌டிக்கு,
விஜ‌ய்ம‌‌கேந்திர‌ன் க‌விதைக‌ளின் வெறிப்பிடித்த‌ வாச‌க‌ன்

பரிசல்காரன் said...

ஆஹா எல்லாரும் இங்கனதான் கூடிக் கும்மியடிக்கறீங்களா?

குசும்பா

தலைப்பை கவனிச்சியா? கவிதை எனுமொரு கொலையாயுதம்-ன்னு வரணும்ல?

நேசமித்ரன். said...

ஆதி

புரிதலுக்கு நன்றி .அழுத்தம்! ஓகே பாஸ் :)

கார்க்கி ராக்ஸ் !!!

’க்’ வரலாம் சகா :)

சுசி said...

ஆதி.. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

நாய்க்குட்டி மனசு said...

ஒரு மனுஷன் நல்லா கவிதை எழுதி இருக்கிறாறேனு பார்த்தா அவர எழுத விடாம பண்ண எத்தனை முயற்சி. ஆதி உண்மையிலேயே சூப்பரா இருக்குது கவிதை.

//பிறிதொரு நாள்

தனிமையில்

நான் உணர்ந்த என் குரல்// ரசிக்க வைத்த வரிகள்

பார்வையாளன் said...

ஒவ்வொரு வரியாக பாராட்டி எழுத வயதில்லை . வணங்கி மகிழ்கிறேன்

நாய்க்குட்டி மனசு said...

எங்க அலுவலகத்தில "வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்" னு சொன்னா அப்பறம் ஏய்யா பேச வரீங்கன்னு வாங்க. அதனால பாராட்டிருங்க பார்வையாளன்.

அமுதா கிருஷ்ணா said...

पकुथ अचा है !!!

ஸ்ரீதர் நாராயணன் said...

//டிஸ்கி:-கண்டிப்பாக குசும்பன் சொல்லி நான் இங்கிட்டு வர்ல பாஸ்// நானும்தான் பாஸ் :))))

நீங்களாவது பரவாயில்லை. மெனக்கெட்டு கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்க. உங்களை குசும்பன் கும்மறதில ஒரு நியாயம் இருக்கு. (எழுதும்போதே சந்தோஷம் தெரியுதா... அப்படில்லாம் இல்ல பாஸ். நம்புங்க)

ஆனா பாவம்... பரிசல்காரன்... யதார்த்தமா கமெண்ட் எழுதறது ஒரு குத்தமாய்யா? ரொம்பவே பாவம் சார்! :(

Santhappan சாந்தப்பன் said...

குசும்பன் ராக்ஸ்ஸ்ஸ்ஸ்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

புன்னகை,
குசும்பன்,
கார்க்கி,
சுகுமார்,
பாலா (ஆம்),
சிங்கைநாதன் (நலமாயிருக்கீங்களா நாதன்?),
ஹனிஃப்,
ஆயில்யன்,
ஷர்புதீன்,
பரிசல்,
சுசி,
நாய்க்குட்டி மனசு,
அமுதாகிருஷ்ணா,
ஸ்ரீதர் நாராயணன்,
சாந்தப்பன்..

அனைவருக்கும் நன்றி.!