Tuesday, April 12, 2011

யார் என் மேனேஜர்?

என்னதான் வெளியே காண்பித்துக் கொள்வதில்லை என்றாலும் உள்ளுக்குள் கொஞ்சம் சுயமரியாதை சார்ந்த திமிர் இருக்கத்தான் செய்கிறது. அது பெருமைப் பட்டுக்கொள்ளவேண்டிய விஷயம்தான் என்றும் கருதுகிறேன். இது வரை குறு, சிறு, பெரு என சுமார் ஒரு பத்து நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் நான் பணியாற்றுகையில் சம்பளம், பணி, பிற விஷயங்கள் தவிர்த்து ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிப்பேன். அதுதான்.. யார் என் மேனேஜர்?

இந்தக் கேள்வியை என்னைப் பொருத்தவரை மிக முக்கியமாகக் கருதுகிறேன். ஏனெனில் மேனேஜர் என்பவர் அலுவலக விஷயங்களில் கிட்டத்தட்ட நம்மை ஆள்பவர். எந்த மேனேஜரையும் நான் பெரும்பாலும் எதிர்கேள்வி கேட்பதில்லை. இது தவறென நிச்சயமாகத் தெரியாதபட்சத்தில், தவறாகப் போகும் வாய்ப்பிருந்தாலும் கூட மேனேஜர் சொன்ன சொல்லை நிறைவேற்றிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன். அவர் கட்டளை நிறைவேற்றப்படுவதுதான் முக்கியம். ஏன் என்ற கேள்வி, தவறெனில் அதன் மீதான ஆராய்ச்சி இதெல்லாம் செய்துமுடித்த பிறகுதான். இதுதான் நான் கற்றிருக்கும் பாடம்.

நான் இப்படியிருக்க வேண்டுமானால் என் மேனேஜர் எப்படியிருக்கவேண்டும்? ”இவர் சில விஷயங்களில் ஆச்சரியப்படுத்துகிறார், நம்மிலும் திறமைசாலி, இவரிடம் கற்க விஷயங்கள் இருக்கின்றன, நாம் ரிப்போர்ட் செய்யத் தகுதியானவர்தான்..” என்ற எண்ணம் எனக்கு கொஞ்ச காலத்திலேயே ஏற்பட்டுவிடவேண்டும். அவ்வளவுதான் அவர் செய்யவேண்டியது. அப்படி எண்ணம் எழாத மாங்காய் நபர்களிடம் என்னால் வேலை செய்யமுடிவதேயில்லை. செய்யவும் மாட்டேன், ரொம்ப சிம்பிள்.. மேனேஜரை மாற்றிவிடுவேன். (வேறு வேலைக்குப் போய்விடுவேன்னு சொல்றேன்ங்க..)

அலுவலகப்பணி சார்ந்து ஒரு மேனேஜரே நான் எதிர்பார்க்கும் தகுதியுள்ளவராக, நான் செலக்ட் செய்பவராகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணும் நான் என்னையே ஆளப்போகிறவர்களை, என் பிள்ளைகளின், என் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் சக்தியாக இருக்கப்போகிறவர்களைத் தேர்ந்தெடுப்பது என்று வரும்போது.? எனக்குத் தரப்பட்டிருக்கும் ஒரே வாய்ப்பான என் வாக்குரிமையை கண்டிப்பாக பயன்படுத்துவேன். இதுவரை தவறாது பயன்படுத்தி வந்திருக்கிறேன். நான் வாக்களிப்பவர் வெற்றிபெறுகிறாரோ இல்லையோ, என் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள எனக்கிருக்கும் உரிமையை நான் பயன்படுத்திவிட்டேன் என்ற நிம்மதி இருக்கும்.

உங்கள் வாக்குரிமையையும் தவறாமல் பயன்படுத்துங்கள்.

நல்லவர்கள் யாருமே இல்லையேயென சாக்குச் சொல்வதை விட இருப்பதில் யார் குறைவாக தவறு செய்கிறார்கள், யார் சமூகத்தின் எதிர்காலம் குறித்த கண்ணோட்டத்துடன் கொஞ்சமேனும் திட்டங்கள் தீட்டுகிறார்கள் என்ற அடிப்படையிலாவது தேர்ந்தெடுங்கள். லாஜிக் படி குறைவாக தவறு செய்பவர்களைத் நாம் தேர்ந்தெடுத்தால் தோல்வியடைபவர் அடுத்தமுறை இவரை விடவும் குறைவாகத் தவறு செய்யமுயல்வார் இல்லையா? அப்படியும் சமாதானமாகவில்லையெனில் சுயேச்சைகளைத் தேர்ந்தெடுங்கள். கட்சி சாராத சுயேச்சைகள் கணிசமான இடங்களைப் பெற்றால் என்ன நேர்கிறது என பார்க்கலாம்.!

வாக்களிப்பது உங்கள் கடமை மட்டுமல்ல, உங்கள் உரிமையும் கூட. இந்தத்தேசம் கறைபடாதிருக்க உங்கள் ஆட்காட்டி விரலைக் கறைபடுத்திக்கொள்ளுங்கள். கறை நல்லது.!

******

சமூகநலன் கருதி வெளியிடுவோர் : ஹிஹி.. நான்தான்.!

25 comments:

குசும்பன் said...

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கும் நேரமா இந்த பதிவ போட்டுவிட்டியே!:(((

குசும்பன் said...

// இது வரை குறு, சிறு, பெரு என சுமார் ஒரு பத்து நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறேன்.//

அதில் 9 நிறுவனங்களை மூடியாச்சு..ஒன்னு மூடும் நிலையில் இருக்கு அதையும் சொல்லவேண்டியதுதானே?

குசும்பன் said...

//நான் பணியாற்றுகையில் சம்பளம், பணி, பிற விஷயங்கள் தவிர்த்து ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிப்பேன். அதுதான்..//

ஆபிசில் எத்தனை பிகருங்க இருக்கு? எத்தனை ஓட்டை உடைசல்? எத்தனை தேறும்... இதைதானே பார்ப்ப...என்னமோ யோக்கியன் மாதிரி மேனேஜரை பார்ப்பேன் என்கிற.

குசும்பன் said...

// யார் என் மேனேஜர்?இந்தக் கேள்வியை என்னைப் பொருத்தவரை மிக முக்கியமாகக் கருதுகிறேன். ஏனெனில் மேனேஜர் என்பவர் அலுவலக விஷயங்களில் கிட்டத்தட்ட நம்மை ஆள்பவர்.//

நீ உன் மேனேஜர் திறமையானவராக இருக்கனும் என்று நினைக்கிற ரைட்டு ஓக்கே! அதே அந்த மேனேஜர் நமக்கு கீழே வேலை பார்க்கும் லேபர்,எடுபுடி(ரெண்டுமே நீதான்)திறமையானவனா இருக்கனும் என்று நினைச்சிருந்தா நீ 10 கம்பெனியில் வேலை செய்து இருக்க முடியுமா?

சிந்திச்சு பேசு!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏண்டா.. நானெல்லாம் ’சம்முக விளிப்புணர்வு’ பதிவு போடுறதே அதிசயம். அதிலயும் வந்து ஏண்டா நோண்டுறீங்க..

பளமொளி சொன்னா அனுபவிச்சுட்டுப் போயிடணும்.

குசும்பன் said...

//அலுவலகப்பணி சார்ந்து ஒரு மேனேஜரே நான் எதிர்பார்க்கும் தகுதியுள்ளவராக, நான் செலக்ட் செய்பவராகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணும் //

வீட்டில் எப்படி ஆதி...இன்னைக்கு இதால் தான் அடிவாங்கனும் ...இங்கதான் வாங்கனும்...இத்தனை அடிதான் வாங்கனும் என்று முடிவு செய்வதும் நீதானா? இல்ல அவுங்களா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

உன்னியவும் ஒருத்தன் வச்சி வேலை வாங்குறாம் பாரு.. அவனை பாக்கணும்டா நான்.. ‘ங்கொங்காப்பயலே.. உனக்கு மூளையே கிடையாதா’ன்னு உன்னை இல்ல அவனைக் கேக்கணும். :-))))))))

குசும்பன் said...

///அனுபவிச்சுட்டுப் போயிடணும்.//

அனுபவிச்சிட்டு போறதுக்கு நீ என்ன .............


(எதுனா அசிங்கமா கேட்டுப்புடப்போறேன்...ஓடிபோயிடு!)

குசும்பன் said...
This comment has been removed by the author.
ஆதிமூலகிருஷ்ணன் said...

பொதுவெளியில கெட்டவார்த்தை பேசவைக்காம போகமாட்டான் போலத் தெரியுதே. ஆண்டவா.. இவன்கிட்டயிருந்து என்னைக் காப்பாத்து, ’அவனை’ நானே சமாளிச்சுகிறேன்.!

குசும்பன் said...

ஆள் இல்லாத கடையா இருக்கே, போனா போவுதேன்னு வியாபாரம் செய்ய வந்தா... கஸ்டமரையே திட்டுறீயா நீயி?

(மூனு நாலு பின்னூட்டம் வாங்குறப்பயே இந்த பேச்சி பேசுற...நீ எல்லாம் கார்க்கி மாதிரி பின்னூட்டம் வாங்கினா என்னா பேச்சி பேசுவ)

குசும்பன் said...

//இந்தத்தேசம் கறைபடாதிருக்க உங்கள் ஆட்காட்டி விரலைக் கறைபடுத்திக்கொள்ளுங்கள்//

:))) இதன் மூலம் ஓட்டுதான் போட சொன்னேன்னு குத்து மதிப்பா புரிஞ்சுக்கிறேன்.

vinu said...

குசும்பன் said...
ஆள் இல்லாத கடையா இருக்கே, போனா போவுதேன்னு வியாபாரம் செய்ய வந்தா... கஸ்டமரையே திட்டுறீயா நீயி?

(மூனு நாலு பின்னூட்டம் வாங்குறப்பயே இந்த பேச்சி பேசுற...நீ எல்லாம் கார்க்கி மாதிரி பின்னூட்டம் வாங்கினா என்னா பேச்சி பேசுவ)


i condemn this strongly.........

me too presentttuuuuuuuu

vinu said...

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்!

இன்னைகு தேதில

எதினி பேரு ஊருவிட்டு ஊரு வந்து பொலப்பு பாக்குராங்க அவங எல்லாம் இன்னைகு பஸ் ஏரி ஊருக்குப் போயி ஓட்டு போட நினைச்சு இர்ருந்தா

தீபாவளி பொங்கல் பன்டிகை தினம் மாதிரி எல்லா பேருந்து நிலயமும் கூட்டம் நிரம்பி வழியனுமே

தராசு said...

ஹலோ,

இங்க என்ன பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியா நடக்குது?????

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாங்க தராசு.

இப்படித்தான் அவன் என்னை கேவலமா பேசுவான். நான் அவனை ரெம்பக்கேவலமா பேசுவேன். ஹிஹி.. இத நாங்க ஜாலியாவே எடுத்துகிறது.. அவ்வ்வ்வ்வ்..

பிரதீபா said...

என்ன ஆதியண்ணன், குசும்பர் சீனியர் ரெண்டு பேருக்கும் மோசமான மனேஜர் போலிருக்கே.. சொந்தமாவே கும்மிக்கறாங்க?

//ஆள் இல்லாத கடையா இருக்கே, போனா போவுதேன்னு வியாபாரம் செய்ய வந்தா... கஸ்டமரையே திட்டுறீயா நீயி?// - "குசும்பர் கும்மிக்கல்ல இந்தப் பதிவு" அப்படீன்னு டிஸ்கி போட்டா வேணா உண்டு. அப்படியும் வந்து ஆழ்ந்த அனுதாபங்கள் ன்னு சொல்ற ஆளாச்சே அவரு :)

நாய்க்குட்டி மனசு said...

அலுவலகத்தில் நம்மை ஆள்பவர்களையும், நமக்கு கீழ் பணி புரிபவர்களையும் தேர்ந்தெடுக்க முடியாத போது சிவனேன்னு வேலை பார்க்க வேண்டியது தான். நான் என்னைசொன்னேன் !

பரிசல்காரன் said...

:-)

பரிசல்காரன் said...

பதிவை விட பின்னூட்டங்கள் சுவாரஸ்யம்..

இது ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் என்பதறிக!

Rathnavel said...

நல்லவர்கள் யாருமே இல்லையேயென சாக்குச் சொல்வதை விட இருப்பதில் யார் குறைவாக தவறு செய்கிறார்கள், யார் சமூகத்தின் எதிர்காலம் குறித்த கண்ணோட்டத்துடன் கொஞ்சமேனும் திட்டங்கள் தீட்டுகிறார்கள் என்ற அடிப்படையிலாவது தேர்ந்தெடுங்கள்

சுசி said...

நல்ல பகிர்வு ஆதி.

என். உலகநாதன் said...

//யார் என் மேனேஜர்?இந்தக் கேள்வியை என்னைப் பொருத்தவரை மிக முக்கியமாகக் கருதுகிறேன். ஏனெனில் மேனேஜர் என்பவர் அலுவலக விஷயங்களில் கிட்டத்தட்ட நம்மை ஆள்பவர்//

நீங்க மேனேஜர் ஆகணும் நினைக்க ஆரம்பிங்க ஆதி.

ஷர்புதீன் said...

:-) ( thanks" abdullah")

ஆதிமூலகிருஷ்ணன் said...

குசும்பன்,
வினு,
தராசு,
பிரதீபா,
நாய்க்குட்டி மனசு (கன்னாபின்னான்னு சிரிச்சேன்க, உங்க கமெண்ட்ல)
பரிசல்காரன்,
ரத்னவேல்,
சுசி,
உலகநாதன் (ஹை.. அட்வைஸ்.!)
ஷர்புதீன்..

நன்றி.!