Saturday, May 7, 2011

மே மாதம்

எஸ்ஜி-

பஸ் பயணங்களிலும், பைக் ரைட்களின் போதும், பாத்ரூம் ஷவருக்கு கீழேயும், அலுவலக மீட்டிங் மேஜையின் மீதும் உனக்கென உருவான கவிதைகள் எழுதப் படாமலே போயிருக்கின்றன. அவை ஆகச்சிறந்த கவிதைகளாகவும் இருக்கக்கூடும். ஒரே மாதிரியான வார்த்தைகள்தாம் பல்வேறு காம்பினேஷன்களில் கவிதையாக உருக்கொள்கின்றன. மிகச்சிறந்த காம்பினேஷன் ஒன்றை உனக்காக உருவாக்க முயன்றுகொண்டேயிருக்கிறேன்.

இன்றைய தினம் எனக்கு மட்டுமேயான காதலர் தினம்.

இப்போது நீ எப்படி இருக்கிறாய் என்பது தெரியவேண்டிய அவசியமில்லை எனக்கு. ஒரு பனிச்சிற்பத்தைப்போல என்னுள் உறைந்துபோயிருக்கிறாய் நீ. ஆழ்மனதைப்போல எப்போதும் நீ நானறியாமலே இருந்துகொண்டேதானிருக்கிறாய் என்னுடன். உன்னை நான் காதலித்தமைக்காக நம் இருவருக்கும் கிடைத்த வரமும், சாபமுமாக இது இருக்கலாம்.

உன்னைச் சேராமல் என் டையரியில் தூங்கிக்கொண்டிருக்கும் மடல்களோடு இதோ இதுவும் இன்றைக்கான வாழ்த்துகளோடு சேர்கிறது. அதே பச்சைப் புன்னகை மாறாமல் இன்னும் நூறாண்டு வாழ். அதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன் எட்டி நின்று.!

தாய்மையின் பால்சுரப்பைப் போன்றது காதல். சுரப்பின் அதீதத்தை அனுபவிக்கும் தாய்மையை ஒத்ததாக என் காதல் இருக்கிறது. பின்பொருநாள் நான் இறந்துபோவேன். ஆனால் மூப்பு மட்டுமே அதன் காரணமாக இருந்துவிடமுடியாது.

-கேகே.
.

11 comments:

சிசு said...

காதலைக்குழைத்த வரிகள்....

//ஆனால் மூப்பு மட்டுமே அதன் காரணமாக இருந்துவிடமுடியாது.//

வரிகளில் உணர முடிகிறது... அன்பின் ஏக்கத்தையும், தாக்கத்தையும்...

meenu-asha said...

gud one

பரிசல்காரன் said...

நல்லா இருக்கு ஆதி.

பிரதீபா said...

//ஆழ்மனதைப்போல எப்போதும் நீ நானறியாமலே இருந்துகொண்டேதானிருக்கிறாய் என்னுடன். உன்னை நான் காதலித்தமைக்காக நம் இருவருக்கும் கிடைத்த வரமும், சாபமுமாக //
என்னத்தச் சொல்ல?
//ஆனால் மூப்பு மட்டுமே அதன் காரணமாக இருந்துவிடமுடியாது// - ஒரு லைன், ஒரே லைன்.. நச்சுனு நடுமண்டையில !!

அப்பாவி தங்கமணி said...

//ஆனால் மூப்பு மட்டுமே அதன் காரணமாக இருந்துவிடமுடியாது.//

hmm..

ஜானி வாக்கர் said...

//ஒரு பனிச்சிற்பத்தைப்போல என்னுள் உறைந்துபோயிருக்கிறாய் நீ//

மனது தொட்ட வரிகள் ஆதி. படிக்கும் போது மலரும் நினைவுகள்

தராசு said...

எச்சூஸ் மி,

இது கவிதையா, இல்லை கட்டுரையா, உங்க எண்டர் பட்டன் கெட்டுப் போச்சா, என்ன நடந்தது,

கொலை வெறி கவுஜ தல. வாழ்த்துக்கள்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

வித்தியாசமாய்....

சுசி said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ஆதி.

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிசு, மீனு, பரிசல், பிரதீபா, தங்கமணி, ஜானிவாக்கர், தராசு, யோகேஷ், சுசி, அன்புமணி.. நன்றி.!