கொஞ்சம் லேட்டானாலும் கண்டிப்பாக இந்த படம் பற்றி எழுதியே தீருவேன். நீங்க கேட்டாலும் கேட்காவிட்டாலும் படத்தின் கதையையும் சொல்லியே தீருவேன். அப்பதான் என் மனசு ஆறும்.

ஒருத்தன் லீவுக்கு வெளிநாடு போறான். பொண்ணுங்களோட ஜாலியா இருக்கான். அவன ஒரு பொண்ணு லவ் பண்ணுறா. இவ்வளவுக்கும் அட்ராக்டிவா அவன் ஒரு எழவையும் பண்ணாம சும்மாதான் இருக்கான். அவ லவ்வ சொல்லப்போறப்ப அவளக் கண்டுக்காம ‘டாடா’ சொல்லிட்டு ஊருக்கு வந்துடுறான். இடைவேளை. ஒரு வருசம் கழிச்சு திரும்பவும் லீவுக்கு வர்றான். ரெண்டு பேரும் அதுவரைக்கும் சும்மாதான் இருக்காங்க. இப்போ என்னாவுதுன்னா, அவ அவன கண்டுக்காத மாதிரி நடிக்கிறா.. அவனுக்கு லவ்வு வந்துடுது. இவ்வளவுக்கும் அட்ராக்டிவா அவ ஒரு எழவையும் பண்ணாம சும்மாதான் இருக்கா. இப்போ டிவிஸ்ட். அவ அப்பா வந்து அவன்கிட்ட ‘நீங்க பணக்காரங்க, நாங்க ஏழ.. ப்ளீஸ் ஊருக்குப்போயிரு, இது வாணாம்’ங்கிறாரு. அவனும் சரின்னுட்டு ஊருக்குப் போயிடுறான். கடைசி அஞ்சி நிமிசம். ரெண்டு பேருக்கும் சோகத்துல இருக்காங்க. அப்போ ஒரு புறா (ஆமாங்க நிஜ புறாதான்) வந்து தூது போயி அவங்களை சேத்துவைக்கிது. சுபம்.
இடையிடையே பாட்டுகளா போட்டுக் கொல்றாங்க.. ஃபைட்டு வேணுமா.? ஹீரோவும், ஹீரோயினும் கார்ல போறப்ப திடீர்னு ஹீரோ கோவப்பட்டு ஹீரோயினை பாதிவழியில இறக்கிவிட்டுட்டு போறாரு. கபால்னு நாலு பேரு ஹீரோயினைத் துரத்துறாங்க. தெரு முனை வரை போயிட்டு ஹீரோ திரும்பி வந்து இவனுங்களோட சண்டை போட்டு காப்பாத்தி ஹீரோயினை கூப்பிட்டுட்டு போயிடுறாரு. திரும்பவும் கார்ல ஜாலியா பேசிகினே போறாங்க.
வேலை பிஸி, மத்த டென்ஷன்களுக்கு மத்தியில ரொம்பக் கஷ்டப்பட்டு, நேரமானதால சாப்பிடாமக் கொள்ளாம அவசர அவசரமா பொண்டாட்டி, புள்ளையைக் கூட்டிகிட்டு தியேட்டருக்கு வந்து.. ரிலாக்ஸ்டா ஏதும் படம் பாக்கலாம்னா.. இப்படியாடா பண்ணுவீங்க.? வந்த எரிச்சல்ல தியேட்டரை விட்டுக் கிளம்பும் போது மனைவியைப் பார்த்து, ’பசிக்கிது, சீக்கிரம் வாயேன்.. அன்ன நடை நடந்துகிட்டு..’ என எரிஞ்சி விழ, அவர் பதிலுக்கு, ‘வீட்ல இருக்குற வேலையைப் போட்டுட்டு கூப்பிடுறீங்களேன்னு வந்தா எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. எவன் மேலயோ உள்ள கோவத்த என் மேல காமிக்கிறீங்களா’னு ஆரம்பிச்சு, பேச்சு வளர்ந்துடுச்சு. அப்புறம் என்ன ஆகியிருக்கும்னு உங்களுக்கே தெரியும்.
ஏற்கனவே குடும்பத்துல இருக்குற பிரச்சினைகளை சமாளிக்கத்தானே இப்படி நாலு இடத்துக்கு, கடைத்தெருவுக்கு, சினிமாக்குன்னு போறோம். அதுனாலேயே குடும்பத்துக்குள்ள குழப்பம் உண்டுபண்றீங்களேடா.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா.? அந்தக் கடவுள்னு ஒருத்தன் இருந்தா உங்களையெல்லாம் எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்து நல்லாக் கேள்வி கேப்பாண்டா.!
.

20 comments:
படம் சூப்பரா [[ங்கே]] இருக்குமோ...
//எவன் மேலயோ உள்ள கோவத்த என் மேல காமிக்கிறீங்களா’னு ஆரம்பிச்சு, பேச்சு வளர்ந்துடுச்சு. அப்புறம் என்ன ஆகியிருக்கும்னு உங்களுக்கே தெரியும்.//
என்னைய அவ அடிக்க...
அவ என்னைய அடிக்க....
என்னைய அவ அடிக்க...
அவ என்னைய அடிக்க....
என்னைய அவ அடிக்க...
அவ என்னைய அடிக்க....
என்னைய அவ அடிக்க...
அவ என்னைய அடிக்க....
என்னைய அவ அடிக்க...
அவ என்னைய அடிக்க....
என்னைய அவ அடிக்க...
அவ என்னைய அடிக்க....
டுபுக்கு கூமாங்கோலி ஆதி
இதுக்குதான் அடுத்தவன் எழுதற பதிவெல்லாம் படிக்கணும்கறது.. தானாப் போய் தலையைக் கொடுத்தா வெட்டாம என்னடா பண்ணுவாங்க?
அரசியல் கூட மாறிடும், இந்த மொக்க படங்கள் மாறாது., சண் பிக்சர் என்ற பொழுதே சூதானமா நடக்கலான அப்படிதான்
//ஆரம்பிச்சு, பேச்சு வளர்ந்துடுச்சு. அப்புறம் என்ன ஆகியிருக்கும்னு உங்களுக்கே தெரியும்.//
சரி.. எந்த ஆஸ்பத்திரில இருக்க??
//எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்து //
வீட்ல சமையலும் நீதானா மச்சி???
//வேலை பிஸி, மத்த டென்ஷன்களுக்கு மத்தியில//
துணியை ஊற வெச்சிருந்தியே... துவைச்சாச்சா.. இன்னும் பாக்கியிருக்கா??
//எங்கேயும் காதல் –மனைவி, லவ்வரோடு போவாதீங்க..//
இதுல ரெண்டு வேற..
மனைவி, லவ்வர்.. அடிங்...
ஏன் சார், பிரபுதேவா டயரெக்சனை எல்லாம் கூட தியேட்டரில் போய் பாப்பீர்களா? இவங்க படத்தை எல்லாம் ஓசியில கிடைக்கும் திருட்டு டிவிடியில கூட பாக்க மாட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். போக்கிரியப் பார்த்து (நல்ல வேளை பிரன்ட்டு கிட்ட பொரோ பண்ணின சீடி) காது ஜவ்வு கிழிச்சதுக்கப்புறம் பிரபுதேவாவா, ஆளவுடு சாமின்னு 50மைல் வேகத்தில பின்னங்கால் பிடறியில் பட ஓடிடுவேன்.
இதப்பார்த்ததே தப்பு. விமர்சனம் வேறா? இருங்க அடப்பாவியோட இட்லி பார்சல் அனுப்பறேன்.
//ஏற்கனவே குடும்பத்துல இருக்குற பிரச்சினைகளை சமாளிக்கத்தானே இப்படி நாலு இடத்துக்கு, கடைத்தெருவுக்கு, சினிமாக்குன்னு போறோம். அதுனாலேயே குடும்பத்துக்குள்ள குழப்பம் உண்டுபண்றீங்களேடா.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா.? அந்தக் கடவுள்னு ஒருத்தன் இருந்தா உங்களையெல்லாம் எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்து நல்லாக் கேள்வி கேப்பாண்டா.!//
Ha ha ha.
வேணும் வேணும் உங்களுக்கு நல்லா வேணும்..:)
//எங்கேயும் காதல்//
இங்கே தவிர!!
//பரிசல்காரன் said...
சரி.. எந்த ஆஸ்பத்திரில இருக்க??//
சாரோட குடும்பம் ஊருக்குப் போயிருக்காங்க போல!!
:-)))))))
//அப்புறம் என்ன ஆகியிருக்கும்னு உங்களுக்கே தெரியும்.//
இப்போ உங்க தலைக்காயம் ஆறிடிச்சா ஆதி??
//நீங்க கேட்டாலும் கேட்காவிட்டாலும் படத்தின் கதையையும் சொல்லியே தீருவேன். //
ஆதி,
படத்தோட கதையச் சொல்லுவேன்னு அடம்புடிச்சிட்டுவந்து,”....” வீட்டுல வாங்கி கட்டிக்கின சொந்தக் கதையயுமா சொல்லுவீங்க...?!
//மனைவி, லவ்வரோடு போவாதீங்க//
அப்படின்னா, கீ..ட போலாமா?
எங்கேயும் காதல் படம் பார்க்க போறேன் இப்போ. பை.
இதுலே வேற இன்னைக்கு சன் டிவி நிகழ்ச்சியில் , இந்த படம் ஒரு breeze மாதிரி படம், ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ண போய் பார்க்கணும் அப்படின்னு ஒரு பாத்து தடவை சொல்லி இருப்பார். சரியோ தவறோ இது ஒரு french படம் பார்த்த ஒரு அனுபவம் கிடைக்குக்னு வேற சொன்னார். கொடுமைடா சாமி.
டைரடக்கர் பேரை எல்லாம் பார்க்கவே மாட்டீங்களா??
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 55/100 மார்க். நன்றி!
நன்றி மனோ.
நன்றி குசும்பன். (ஹிஹி)
நன்றி பரிசல். (தப்புதேன்)
நன்றி ஷர்புதீன்.
நன்றி அனாமிகா.
நன்றி ஆர்ம்ஸ்ட்ராங்.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி சுசி.
நன்றி சத்ரியன்.
நன்றி ட்ரூத். (சிலவன்லாம் என்ன சொன்னாலும் கேக்கமாட்டானுங்க.. கல்யாணம் கூட பண்ணிக்குவானுங்க. :-)))) )
நன்றி இட்ஸ்.
நன்றி அமுதா.
நன்றி ஷர்புதீன். (இம்புட்டுதனா? என்னய்யா இது அநியாயம்? :-))) )
Post a Comment