Thursday, June 2, 2011

ட்விட்டர் புலம்பல்கள்

ட்விட்ஸ் 46 - 96 லிருந்து சில..

*எவ்வளவுதான் வித்தையெல்லாம் காண்பித்து நாம் செய்தாலும் பக்கத்து வீடுகளிலிருந்து வரும் தீபாவளி தின்பண்டங்களே சுவையாக இருந்து தொலைக்கின்றன.

*மானம், மரியாதை, சூடு, சுரணை இருப்பவர்கள் செய்யமுடியாத வேலை என்று ஒன்று இருக்கிறது. கணவனாகவோ, மனைவியாகவோ இருப்பதுதான் அது.

*அதிரசம் தயாரிப்பது மிகப்பெரிய EHS பிரச்சினைகளுக்கு உரியதாக இருக்கிறது. அரசு உடனே அதிரசம் செய்வதை தடை செய்ய வேண்டும்.

*'உங்க ஊருக்கு வந்தேன், அதான் அப்படியே உங்ககிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்' - இப்பல்லாம் போன்ல பேசறதே அவங்கவங்க ஊருக்குப் போனால்தான்.

*வறுமையிலிருக்கும் ஒரு சிறுமியோ, சிறுவனோ என் கையிலிருக்கும் ஐஸ்கிரீமை ஆசையோடு பார்க்கும் போதெல்லாம் அது உப்புக்கரிப்பதாய் இருக்கிறது.

*ஆம்புலன்ஸ் என்னைக் கடக்கும் போதெல்லாம் அனிச்சையாய் என் வேகம் குறைகிறது. அது ஆம்புலன்ஸுக்கு வழிவிடவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல..

*ஆண்களைப் போலவே நடக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதற்காக பெண்களை மனித இனத்தில் என்னால் சேர்த்துவிட முடியவில்லை.

*இன்று ஒரு பெண்கள் பள்ளியையும், ஆண்கள் பள்ளியையும் பள்ளிவிடும் நேரம் அடுத்தடுத்துக் கடந்தேன். Yes.. Men are from Mars; Women are from Venus.

*நான் ஒரு வேலையில சினிசியரா இறங்கிட்டேன்னா.. முடியுற வரைக்கும் சோறு, தண்ணி, செல்போன் இல்லாம இருப்பேனாக்கும். :-)

*ஆயிரம் தடவை கேட்டபிறகும் கூட அலுக்காததும் விறுவிறுப்பைத் தருவதாகவும் ஒரு தீம் மியூஸிக் எனக்கு இருக்கிறது. அது மிஷன் இம்பாஸிபிளின் தீம்.

*ஒரு சிங்கம் வயசாகித் தொலைத்த பின்னும் பழைய காதலியைப் பார்க்கும்போது வெட்கப்பட்டுத் தொலைக்கிறேன். சை.!

*கரும்பு ஆலையில் சிறிய பூச்சிகள், தவளைகள், வண்டுகள் எல்லாம் அரைபட்டு ஜூஸாகிவிடுவது தெரியுமா உங்களுக்கு? கவலைப்படாதீங்க, ட்ரீட் பண்ணிடுவாங்க.

*எம்என்சி கலாச்சாரம் என்பது பொழுதை நிமிடங்களாக போக்கி, நாட்களாக போக்கி, வாரங்களாக போக்கி, மாதங்களாக போக்கி, வருடங்களாக போக்குவதாகும்.

*இந்திய ரசிகனுக்கு கிரிக்கெட் ஆர்வமும், கூடவே பிபி பிராப்ளமும் இருந்தா வெளங்கிரும்..

*கப்பு கூட வாணாம், கம்பேனியே வச்சுகிடட்டும். இலங்கையை ஜெயிச்சா மட்டும் போதும். ஆத்தா மகமாயிக்கு பொங்க வைக்கணும் போலயிருக்கே.!

*ஆர்டர் கொடுக்க 2 மாதம் எடுத்துக்கொள்பவர் கஸ்டமர். டெஸ்பாட்ச் 2 நாள் டிலே ஆனதால் அவரிடம் வாங்கிக்கட்டிக்கொள்பவர் சப்ளையர். #பொன்மொழி

.

டிவிட்டரிலும் நம்மை ஃபாலோ செய்து இம்சைகளைப் தவறவிடாமலிருக்க.. twitter.com/thaamiraa

.

8 comments:

Raghav said...

"எம்என்சி கலாச்சாரம் என்பது பொழுதை நிமிடங்களாக..." -

அருமையான சிந்தனை... மிக அருமையான சிந்தனை!
அவதி படுவதால் மட்டும் சொல்லல... எப்படி இப்படி மாட்டிநோம்கிறது ஆச்சரியபடுத்த கூட இல்ல

ஷர்புதீன் said...

*//மானம், மரியாதை, சூடு, சுரணை இருப்பவர்கள் செய்யமுடியாத வேலை என்று ஒன்று இருக்கிறது. கணவனாகவோ, மனைவியாகவோ இருப்பதுதான் அது.//

strongly agreed!

சுசி said...

//*ஆண்களைப் போலவே நடக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதற்காக பெண்களை மனித இனத்தில் என்னால் சேர்த்துவிட முடியவில்லை.//

அவ்வ்வ்வ்..

//*வறுமையிலிருக்கும் ஒரு சிறுமியோ, சிறுவனோ என் கையிலிருக்கும் ஐஸ்கிரீமை ஆசையோடு பார்க்கும் போதெல்லாம் அது உப்புக்கரிப்பதாய் இருக்கிறது.//

:(((((

//*ஆம்புலன்ஸ் என்னைக் கடக்கும் போதெல்லாம் அனிச்சையாய் என் வேகம் குறைகிறது. அது ஆம்புலன்ஸுக்கு வழிவிடவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல..//

:)))))))

நாய்க்குட்டி மனசு said...

ஆண்களைப் போலவே நடக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதற்காக பெண்களை மனித இனத்தில் என்னால் சேர்த்துவிட முடியவில்லை//
ஆம் தேவ இனத்தில் இருப்பவர்களை மனித இனத்துக்கு தள்ளி விடாதீர்கள்
"Men are from Mars; Women are from Venus."
படிச்சிருக்கீங்களா ஆதி, பலருக்கு திருமண பரிசாக நான் கொடுக்கும் புத்தகம், ஆனால் ஒரு சிலர் தான் பயன் பெறுகிறார்கள்.

தராசு said...

*//மானம், மரியாதை, சூடு, சுரணை இருப்பவர்கள் செய்யமுடியாத வேலை என்று ஒன்று இருக்கிறது. கணவனாகவோ, மனைவியாகவோ இருப்பதுதான் அது.//

கணவனாகவோ அப்பிடிங்கறதோட மேட்டர் முடிஞ்சுருக்கணுமே, அதென்ன மனைவியாக்வோன்னு ஒரு வேண்டாத இடைச் செருகல்.

அமுதா கிருஷ்ணா said...

ஓகே..

SELVENTHIRAN said...

ஆம்புலன்ஸ் என்னைக் கடக்கும் போதெல்லாம் அனிச்சையாய் என் வேகம் குறைகிறது. அது ஆம்புலன்ஸுக்கு வழிவிடவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல..

கலைஞன்யா நீ...!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராகவ்.

நன்றி ஷர்புதீன்.

நன்றி சுசி.

நன்றி நாய்க்குட்டிமனசு.

நன்றி தராசு. (ஹிஹி)

நன்றி அமுதா.

நன்றி செல்வா.