Tuesday, June 21, 2011

ஆரண்யகாண்டம்

ஆங்காங்கே தெரியும் ஒருசில சினிமாத்தனங்களை விட்டுவிட்டுப்பார்த்தால் ’ஆரண்யகாண்டம்’ ஒரு பர்ஃபெக்ட் சினிமா. போஸ்டர்களிலேயே தனித்த ரசனை தெரிந்தது. அதோடு இரண்டு சினிமா பிரபலங்கள் வேறு, ‘இப்படியொரு படத்தை எடுத்துட்டாங்கடா தமிழ்ல, ப்ரூவ் பண்ணிட்டாங்கடா..’ என்று ஏற்கனவே போனில் புலம்பியிருந்தது வேறு ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. அப்படியே ரெண்டு நாட்களுக்கு முன்னால் அருகிலிருக்கும் ஒரு திரையரங்கிற்கு இரவுக்காட்சிக்குப் போனபோது 10 நிமிடம் வெயிட்பண்ண வச்சு 10 பேர் கூட தேறாததால் காட்சியை ரத்துசெய்துவிட்டார்கள். அப்படியானால் இது நிச்சயம் நல்ல படமாகத்தான் இருக்கும் என்று முடிவுசெய்ததோடு பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலும் வேறு எழுந்துவிட்டது. நினைத்தது வீண் போகவில்லை.

இவ்வளவு க்ளீன் திரைக்கதை கொண்ட படத்தை யாருய்யா.. ’நான் லீனியர்’னு பிரச்சினை கிளப்பியது? உங்களோட லீனியர், நான் லீனியர் பிரச்சினைகளையெல்லாம் தமிழ் இலக்கியத்தோட வச்சிக்கப்பிடாதாய்யா.? எழுத்திலேயே அது இந்தக்கிழி கிழியுது. அப்பப்ப வர்ற ஒன்றிரண்டு நல்ல படங்களையும் இப்படி நாக்கூசாம திட்டினா எப்படி? அதெல்லாம் 2119 வரைக்கும் தமிழில் நான்-லீனியர் திரைப்படங்கள் வருவதற்கெல்லாம் சாத்தியங்கள் இல்லை என்று மேலக்குத்தப்பாஞ்சான் சின்ன லட்டு சொல்லிவிட்டதால் யாரும் பயப்படவும் வேண்டாம், இது நான்-லீனியரா இருக்குமோ அது டூயல் லேயரா இருக்குமோ என்றெல்லாம் சந்தேகப்படவும் வேண்டாம். (இதை நான் சொல்வதால் இவையெல்லாம் என்ன என்று நீங்கள் என்னை விளக்கும் படி கேட்கக்கூடாது. அவசியம் தேவையானால் மேலக்குத்தப்பாஞ்சான் சின்ன லட்டுவை அணுகவும்)

அடுத்தடுத்துத் தேவையான காட்சியமைப்புகளோடு விறுவிறுப்பாக பயணிக்கிறோம் படம் துவங்கியதிலிருந்தே. மேலும் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புதிய டோனை, ஒரு புதிய ஸ்டைலை உணர்வதால் இன்னும் சுவாரசியமாக இருக்கிறது. இரண்டு நிழலுலக குழுக்களிடையே மோதல்.. விதம்விதமான, ஓரளவு இயல்பான காரெக்டர்கள், அதற்குரிய நடிகர்கள் என படத்தில் ரசிக்க நிறைய இருக்கிறது. குறிப்பாக நடிகர்களில் பங்கு அற்புதமானது. ஜாக்கிஷெரஃப், சம்பத் ராஜ் பின்னியிருக்கிறார்கள். தமிழுக்கு, அதுவும் இப்படியொரு காரெக்டருக்கு எப்படி ஜாக்கியை அள்ளிக்கொண்டுவந்தார்களோ? அதற்காகவே தனியாக பாராட்டலாம்.

ஒரே ஒரு கடுப்புதான். நடிகர்கள் மூஞ்சி கூட தெரியாம முக்கால்வாசி படத்தை இருட்டுலயே எடுத்தா என்னாய்யா அர்த்தம்? எதுக்கும் ஒரு அளவு இல்லையா? இன்னொரு வருத்தம் என்னவெனில் நாம் ஏதாவது படம் பார்த்துவிட்டு லாஜிக் மீறாமல், சுவாரசியம் தப்பாமல், ஒரு அழகிய சினிமா அனுபவம் கிடைத்ததில் மகிழ்ந்துபோய் அதைப் பாராட்டிவைக்கலாம் என்று பார்த்தால் அட அநியாயமே அது பூரா வன்முறை, கொலை, ரத்தக்களறியாய் இருந்துத் தொலைத்துவிடுகிறது. இதுவும் அவ்வாறே. தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குனர்கள் எல்லாம் வன்முறை தவிர்த்த கதைகளிலும் இதே அழகிய சினிமா அனுபவத்தைத் தரமுடியும் என்று நிரூபித்தார்களானால் இன்னும் மகிழலாம்.

_____________________


போனஸ் : ஆண்மை தவறேல்

இந்தப்படம் பார்க்கவேண்டிய லிஸ்டிலேயே இல்லை. சமயங்களில் வேறு படம் பார்க்கப்போய் டிக்கெட் கிடைக்காமல் அல்லது நண்பர்கள் இழுத்துப்போய் அல்லது வேறு காரணங்களால் வலுக்கட்டாயமாக சில படங்களை பார்க்க நேர்ந்துவிடும். அப்படிப்பார்த்த படமே ஆண்மை தவறேல். சினிமாத்தனங்களே இல்லாத (சண்டைக்கு வராதீங்க சில பாக்கேஜ் ஐடம்ஸ் தவிர்த்து) சூப்பரான, விறுவிறுப்பான ஒரு எதிர்பாராத விருந்து என சொல்லலாம்.

ஹீரோயின் தொலைந்துபோகிறார். காதலன் (பக்கத்து வீடு), பெற்றோரோடு காவல் நிலையம் செல்கிறான். அப்போதுதான் காதல் விவகாரத்தையும் சொல்லியாகவேண்டிய கட்டாயம். பெண் காணாமல் போன அதிர்ச்சியோடு இன்னொரு அதிர்ச்சியும். ’ஏதும் காதல் விவகாரம் உண்டா?’ என்று விசாரணையில் போலீஸ்காரர் கேட்க ஹீரோயினது அம்மா, ‘நான் அப்படியெல்லாம் என் பிள்ளையை வளர்க்கலை’ என்று சொல்லிமுடிக்கவும் பக்கத்திலிருக்கும் ஹீரோ, அவருக்கான கேள்வியில், ‘ஆமா, நாங்க காதலிச்சோம்’ என்கிறார். படம் முழுதும் இதைப்போலவே இயல்பான காட்சிகள். விசாரணை, அலைக்கழிப்பு, என்ன செய்வது எனப்புரியாமல் விழிக்கும் ஹீரோ என இயல்பான காட்சிகள். ஒவ்வொரு இடத்திலும் பெண்களைக் கடத்திக்கொண்டு மெல்லிய பயத்துடன் பயணித்துக்கொண்டிருக்கும் வில்லன்கள் கூட்டம். தோராயமாக கோவா நோக்கி போய்ய்ய்ய்க்கொண்டேயிருக்கும் ஹீரோ. நல்லவேளையாக கடைசியில் அவர்களைக் கண்டுபிடித்து ஒரு அதிரடிக்குப் பின் மீட்டுவிடுகிறார், நமக்கு நிம்மதி.

இளம் பெண்கள் கடத்தல் குறித்த சில காட்சிகளும், படத்தில் சொல்லப்படும் புள்ளிவிவரங்களும் அதிர்ச்சியைத் தருகின்றன. வீட்டில் சகோதரிகளும், மகள்களும் இருப்பவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கலாம், கரைத்தது.

ஆரண்ய காண்டத்தின் கடைசி பாராவின் சில வரிகள் ஓரளவுக்கு இதற்கும் பொருந்தலாம். ஆகவே.. //இன்னொரு வருத்தம் என்னவெனில் நாம் ஏதாவது படம் பார்த்துவிட்டு லாஜிக் மீறாமல், சுவாரசியம் தப்பாமல், ஒரு அழகிய சினிமா அனுபவம் கிடைத்ததில் மகிழ்ந்துபோய் அதைப் பாராட்டிவைக்கலாம் என்று பார்த்தால் அட அநியாயமே அது பூரா வன்முறை, கொலை, ரத்தக்களறியாய் இருந்துத் தொலைத்துவிடுகிறது. இதுவும் அவ்வாறே. தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குனர்கள் எல்லாம் வன்முறை தவிர்த்த கதைகளிலும் இதே அழகிய சினிமா அனுபவத்தைத் தரமுடியும் என்று நிரூபித்தார்களானால் இன்னும் மகிழலாம்.// ரிப்பீட்டு.!

.

11 comments:

ஸ்ரீமதி said...

//எடுத்துண்டாங்கடா //

???? என்னது???

ஸ்ரீமதி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முதல் கமெண்டா இருக்கும்னு எதிர்ப்பார்க்கல.. :(((

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி.. மாத்திட்டேன்.

அப்பாலிகா, இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்பிடி? நாமெல்லாம் டான்.! :-))

ஸ்ரீமதி said...

அண்ணா நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா ஒன்னு சொல்வேன்.

ஸ்ரீமதி said...

எதுக்காக படத்தோட விமர்சனம்னு தனியா ஒரு பதிவு போடறீங்க? நம்ம நண்பர்களே நிறைய பேர் இதையே ஏற்கனவே போட்டுட்டாங்களே? இருந்தாலும் உங்க ப்ளாக் உங்க கருத்தும் சொல்லனும்னு நினைச்சா நாலைந்து செய்திகளோடு இதையும் சேர்த்து போடலாமே. ஏனென்றால் நல்லா எழுதக்கூடிய நீங்களூம் இதற்காக நேரம் செலவழிப்பது கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு. அதோடு படம் பார்க்கலாம்னு நினைக்கிறவங்களுக்கும் நம் கருத்தால் குழப்பம் வரலாம். மேலும் உங்க ரசிகையா நான் எதிர்ப்பார்ப்பது இதுவல்ல (ஐ மீன் சினிமா விமர்சனம் அல்ல). மற்ற உங்களின் முந்தைய பதிவுகள் போல வெரைட்டியா இருக்கட்டுமே இனியும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதென்ன பின்னூட்டத்துல பதில் சொல்றதுலாம் அந்தக்காலம். உலகம் ரொம்ப ஃபாஸ்டாயிடுச்சு. இதென்ன பஸ்ஸா? சொல்றதுனா சொல்லுங்க.. இல்லன்னா ஓடிப்போயிடுங்க..

ஸ்ரீமதி said...

ம்கும் நீங்க இந்த ரெண்டு வரி அடிக்கறதுக்குள்ள நான் சொல்லியே முடிச்சிட்டேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதிலேர்ந்து என்ன தெரியுது? நான் எழுதுனா ஏதோ ஒண்ணுவுடாம வாசிக்கிற மாதிரி பில்டப் பண்றீங்கன்னு தெரியுது.

நான் வேலை காரணமா பிளாகை விட்டுப்போய் 4 மாசமாவுது. இருந்தாலும் கிடைக்கிற நேரத்துல ஈஸியா பண்ணமுடிவது விமர்சனம்கிற பேர்ல அடுத்தவங்கள குறை சொல்றது மட்டும்தான். அதான் நமக்கு ரொம்பப்புடிக்குமே.

அதை மட்டும் அப்பப்போ செய்வேன்னு தெளிவா சொல்லிட்டுதானே போனேன். :-))))))

கார்க்கி said...

ர‌சிகையா எதிர்பார்க்கிறாங்க‌ளாம்..இதுல‌ இருக்கிற‌ அர‌சிய‌ல் அவ‌ருக்கு தெரியாம‌ இருக்க‌லாம்.. ஆனா என‌க்கு தெரியும்

த‌ல‌, நீங்க‌ அண்ணிக்கிட்ட‌ அடிவாங்க‌ணும்.. இல்ல‌ ப‌ல்பு வாங‌க்ணும். அதை ப‌திவா போட‌ணும். அத‌ இவ‌ங்க‌ ர‌சிக‌க்ணும்.. என்னா வில்ல‌த்த‌ன‌ம் பார்த்தீங்க்ளா? ஆவ்வ்வ்வ்வ் :)))

பார்வையாளன் said...

முன்பு போல அதிகம் எழுதுங்கள் . தொழில் நுட்ப கட்டுரையை தொடருங்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீமதி.

நன்றி கார்க்கி.

நன்றி பார்வையாளன். (முயற்சிக்கிறேன் நண்பரே)