Monday, June 27, 2011

ரசிகன் : லாரா கிராஃப்ட்

நமது ரசிகன் சீரிஸில் முதல் முறையாக ஒரு கற்பனைக் கதாபாத்திரம். லாரா கிராஃப்ட். இது வரை விடியோ கேம்களில் சித்தரிக்கப்பட்ட மனித காரெக்டர்களிலேயே அதிகம் புகழ்பெற்ற காரெக்டராக கின்னஸ் சாதனையை நிகழ்த்தியவர் லாரா.

ஆக்‌ஷன், அட்வென்சர் எனக்குப் பிடிக்கும். இண்டராக்டிவ் கேம்ஸ் ரொம்பப் பிடிக்கும். விதம்விதமான லொகேஷன்ஸ் பிடிக்கும். எக்ஸ்ப்ளோரிங் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அழகான ஹீரோயினை ரொம்பப் பிடிக்கும். துணிச்சல், புத்திசாலித்தனம் நிறைந்த கொஞ்சம் ஆண்மைத்தனமான பெண்களை ரொம்பப் பிடிக்கும். புதிர்கள், ட்ரிக்ஸ் பிடிக்கும். ஆர்ட், கிராஃபிக்ஸ் ரொம்பவே பிடிக்கும். ஒரு தனிப்பட்ட மனிதனின் இத்தனைப் பிடித்த விஷயங்களும் ஒருங்கே அமையமுடியுமா என்ன? அப்படி ஒரு அதிசயம்தான் ’லாரா கிராஃப்ட் : டோம்ப் ரைடர்’ கம்ப்யூட்டர் கேம் சீரீஸ்.

பிரிட்டிஷை சார்ந்த தொல்பொருள் ஆய்வாளரான லாரா கிராஃப்டை உருவாக்கியது கேம் டிஸைனரான Toby Gard. லாரா முதன்முதலில் அறிமுகமானது 1996ல் வெளியான டோம்ப் ரைடர் கேமின் முதல் எபிஸோடில். அதன் பின் லாரா உருவாக்கியதெல்லாம் ஒரு தனி வரலாறு. காமிக்ஸ், அனிமேஷன் சீரியல்ஸ், சினிமா என விரிந்து பரந்தது அவரது உலகம். சினிமாவில் லாராவை ஓரளவு பிரதிபலித்தவர் பிரபல ஹாலிவுட் நடிகை ‘ஏஞ்சலினா ஜூலி’. பெரும் வெற்றியடைந்த ’டோம்ப் ரைடர் (2001)’, ‘தி கிரேடில் ஆஃப் லைப் (2003)’ ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவது படம் 2013ல் எதிர்பார்க்கப்படுகிறது.

இவை எவற்றையும் விட லாரா ரசிகர்களை கட்டிப்போட்டது தொடர்ந்து வெளியாகிய அடுத்தடுத்த கேமிங் சீரிஸில்தான். டெக்னாலஜியுடன் இணைந்து லாராவும் வளர்ந்தார். லாராவின் துவக்ககால தயாரிப்பாளர்கள் வியாபார நோக்கத்துடன் அவருக்கு தர நினைத்த இமேஜை எல்லாம் உடைத்தெறிந்து லாரா ஒரு ஆர்கியாலஜிகல் எக்ஸ்ப்ளோரராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதெல்லாம் ஒரு வியப்புக்குரிய வரலாறுதான்.

துவக்கத்தில் (1997) இப்படியிருந்த லாரா..

lara97

பின்பு இப்படியும் (2003)..

lara angel

தற்போது (2008) இப்படியாகவும் தோற்றத்தில் முன்னேறியிருக்கிறார்.

lara underworld

இந்த இடத்தில் ஒரு விஷயம்.. மிகப்பெரிய வாய்ப்பும், தேவையும் இருக்கக்கூடிய ஹாலிவுட் சினிமாவே ரியல் மனித உருவங்களை சினிமாக்களில் அனிமேட் செய்யமுடியாத அளவில்தான் இன்றும் டெக்னாலஜி இருக்கிறது. இதுவரை சினிமாக்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட அனிமேஷன்கள் மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களும், பிற விஷயங்களும்தான். அதிலும் நாம் இதுவரை பார்த்திராத கற்பனை விலங்கினங்கள், ரோபோக்கள் போன்றவைதான் வெற்றிகரமான அனிமேஷன்களாக இருந்திருக்கின்றன. மனித உருவங்களின் தேவை வருகையில் பெரும்பாலும் அவர்கள் கார்ட்டூனிக் அனாடமியிலேயே உருவாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இதையும் மீறி மிகச்சில இடங்களில் டாம் ஹாங்க்ஸ், அர்னால்ட் போன்றவர்களின் அனாடமியும் சோதனை முயற்சியாக செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் விடியோ கேம்களைப் பொறுத்தவரை ஹ்யூமன் அனாடமியை கொண்டுவந்தே தீரவேண்டிய அவசியம் துவக்கத்திலிருந்தே இருந்துவந்திருக்கிறது. கால் ஆஃப் ட்யூட்டி, டோம்ப் ரைடர், ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஸியா, அஸாஸின்ஸ், ரெஸிடெண்ட் ஈவில், இன்னும் பலவகையான வார் கேம்ஸ் என மனிதர்களை மையப்படுத்திதான் கேம்கள் இருக்கின்றன.

இந்தச் சூழலில் ’டோம்ப் ரைடர் 2012’ல் லாராவின் தோற்றம் எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? ஜஸ்ட் ஹோல்ட் யுவர் ப்ரீத்.!

tomb-raider-wallpaper-01-1280x800

’தேர்ட் பர்சன் அட்வென்சர்’ கேம்களின் உச்சம் ‘டோம்ப் ரைடர்’. அவரோடு அந்த விர்சுவல் உலகத்தில் அவரது எக்ஸ்ப்ளோரிங் பயணத்தில் உடன் பங்கேற்பதும், பயணிப்பதும் அற்புதம். இதுவரை இந்த சீரிஸில் 9 முழுமையான கேம்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் 10 வது கேம் 2012ல் வெளியாகவிருக்கிறது. உலகெங்கும் லாராவின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு எந்திரன் படத்துக்காகக் காத்திருந்த ஒரு டைஹார்ட் ரஜினிகாந்த் ரசிகனின் காத்திருப்புக்கு ஒப்பானது இது. பின் வரும் ’டோம்ப் ரைடர் 2012’ன் கேம் ட்ரைலரைக் கண்டால் எனது இந்த ஒப்பீட்டின் நியாயம் புரியலாம்.

வெளியான ஒரே மாதத்தில் 9 லட்சம் பேர் பார்வையிட்ட ’டோம்ப் ரைடர் 2012’ அஃபிஷியல் கேம் ட்ரைலர்

மேலும் விபரங்களுக்கு..

http://www.tombraider.com/

http://en.wikipedia.org/wiki/Tomb_Raider#cite_note-0

http://www.tombraiderchronicles.com/

.

6 comments:

ஷர்புதீன் said...

அண்ணே நீங்க சரியான வீடியோ கேம் பைத்தியமா? ( இத வேற எப்படி கேட்குறது?!)

Vadivelan R said...

தல எனக்கு உங்களுடைய லாரா கிராப்ட் விளையாட்டுகள் எனது கணினியில் விளையாட ஒரு காப்பி சிடி அல்லது டிவிடி போட்டு தர முடியுமா??? தல ப்ளீஸ்

ஆதவா said...

பாஸ்... நானும் வெயிட்டிங்...
கான்ஃபிகுரேஷன் தான் எனக்கு பிரச்சனையா இருக்கப் போவுது. பார்ப்போம்.. எதுக்கும் ஒரு கம்ப்யூட்டருக்கு ஆர்டர் சொல்லவேண்டி வரும்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஷர்புதீன்.

நன்றி வடிவேலன். (உங்களுக்கேவா? ப்ளஷர் இஸ் மைன். எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க?)

தமிழினி said...

நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்www.tamil10.com
நன்றி

பிரதீபா said...

அண்ணே, மிட்சலு, லாரா - இப்ப ரெண்டு இஷ்டதேவதைகளா? ;)