Friday, September 23, 2011

சுபா அப்டேட்ஸ் (Buzz)

(கூகுள் பஸ்ஸில் அவ்வப்போது எழுதிய சுபா அப்டேட்ஸ்.. எக்ஸ்க்ளூஸிவ் பிளாக் வாசகர்களுக்காக..)

*

இன்று முதல் நாள் LKG வகுப்புக்கு வெற்றிகரமாக சென்றுவந்துவிட்டார் சுபா. எல்லோரையும் போலவே சற்று நேரம் இழுவிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் சாந்தமடைந்ததை ஒளிந்திருந்து பார்த்துவிட்டு வந்தேன். :-)))))

முன்னதாக பெற்றோரிடமிருந்து மிஸ்கள் பிள்ளைகளை கதறக்கதற பிடுங்கி எடுத்துக்கொண்டு போனதை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

********

நேற்று அலுவலகம் விட்டு வந்ததும் வராததுமாக சுபா ஓடிவந்து கைகளை பின்புறமிருந்து எடுத்து அதைக் காண்பித்தான். (இப்போ எதுவாயினும் பின்புறம் மறைத்து வைத்து பின்பு சடாரென காண்பிப்பது ஒரு வழக்கமாகியிருக்கிறது). துணி காயப்போடுகிற கிளிப்புகள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு பரவியிருந்தது. சிரித்து ஊய்ய்யென்று சத்தமெழுப்பி, பெரிதாய் ஆச்சரியப்பட்டு அவன் எதிர்பார்த்ததை செய்துவிட்டு பின்பு ஆச்சரியமான குரலில் கேட்டேன்.. ‘எப்டிம்மா செஞ்சீங்க.?’

‘இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டி.. இதும்மேல மாட்டினன். ஹோ..’

(மொத்தம் 17 கிளிப்புகள் இருந்தன. எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள்)

*********

குள்ள குள்ள வாத்து
குவ்வா குவ்வா வாத்து
மெல்லமாக நடக்கும்
சின்னமணி வாத்து.

-சுபாவின் LKG 1st மிட்டம் டெஸ்ட் சிலபஸ்.

*********

அ, ஆ.. A,B,C.. 1,2,3.. ரைம்ஸ்.. சொல்லாம படுத்திகிட்டிருந்தான். சொல்லவைக்க ஒரு வழி கண்டுபிடிச்சேன். ஒர்க் அவுட் ஆகி போய்கிட்டிருக்கு. ஆனா எழுதவைக்க முடியலை. தலையால தண்ணிகுடிக்கவேண்டியதா இருக்கு. 123 மட்டும் ஏதோ போனாப்போகுதுன்னு சுமாரா எழுதறான். மற்றது ஊஹூம்.. எதுனா ஐடியா சொல்லுங்க..

*********

"ஆச்சி, பீச்சில, தண்ணி, குரிச்சி குரிச்சி.. ம்ம்.. குதுச்சு குதுச்சு, தண்ணி, குதுச்சு குதுச்சு வருது..”

-பீச்சுக்கு சென்று அலைகளைப் பார்த்த அனுபவத்தை போனில் ஆச்சியிடம் விவரித்த சுபா.

*********

E ட்ரைவ்ல இருக்குற 'films' ஃபோல்டரை ஓபன் பண்ணி பிடிச்ச படங்களை செலக்ட் பண்ணி பிடிச்ச காட்சிகளிலிருந்து ஓடவிட்டு பார்க்கத்தெரிகிறது. D ட்ரைவ்ல இருக்குற ‘games' ஃபோல்டரை ஓபன் பண்ணி பிடிச்ச கேம்ஸை விளையாடத்தெரிகிறது.. ஆனால்.. யுவர் ஆனர்,

காலையில, A வைக் காமிச்சு என்னான்னு கேட்டா O ங்றார், O வைக் காமிச்சா E ங்றார்.. கடுப்பேத்துறார் மைலார்ட்.!

*********

தினமும் காலையில் சுபாவை ஸ்கூலில் ட்ராப் பண்ணும் போது ஒரு சுவாரசியம் பார்க்கலாம்.

குழந்தைகளை ட்ராப் செய்பவர்கள் மெயின் கேட்டில் விட்டுவிட்டு வந்துவிடவேண்டியதுதான், அதற்கு மேல் போகமுடியாது. ஆனால் கேட்டில் 10, +2 படிக்கும் மாணவிகள் நான்கைந்து பேர் தயாராக இருப்பார்கள். நாம் குழந்தைகளை விடவும் அவர்களின் பைகளை தூக்கிக்கொண்டு கையை பிடித்துக்கொண்டு, சமயங்களில் குழந்தைகளையே தூக்கிக்கொண்டும்.. ‘ஹாய், குட்மார்னிங் செல்லம்..’ என்று ராகமாய், உற்சாகமாய், சிரித்தமுகமாய் அவரவர் வகுப்புக்கு அழைத்துக்கொண்டு போய்விடுவார்கள். நமக்கே அதைப்பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

அதே நேரம், பெரிய வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் துவாரபாலகர்கள் போல கேட்டுக்கு இருபுறமும் கடுகடுத்த முகத்தோடு நிற்பார்கள். இவர்கள் எதற்கு நிற்கிறார்கள் என்பது எனக்கு ரொம்ப நாள் சந்தேகம். நேற்று கேட்டேவிட்டேன்.

‘இல்ல அங்கிள், சின்ன கிளாஸ் பிள்ளைங்க.. திடீர்னு வெளிய ஓடிப்போயிடுவாங்க. அதனால, அவங்கள கேப்சர் பண்ண மெயின் கேட் மூடுறவரைக்கும் நாங்க நிற்போம்’

*

14 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

// LKG வகுப்புக்கு //
சுபாவுக்கு வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் சுபா & ஆதி !

அமிர்தவர்ஷினி அம்மா said...

க்ளிப் - சு.பா சொன்னதும் அதை அப்படியே நீங்க உள்வாங்கி எழுதியதும் செம்ம க்யூட் :)

பிரதீபா said...

//(மொத்தம் 17 கிளிப்புகள் இருந்தன. எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள்)//- இது தான், இதுதாண்ணே பலபேரு உங்க எழுத்து நடையை ரசிக்கக் காரணம்..

// D ட்ரைவ்ல இருக்குற ‘games' ஃபோல்டரை ஓபன் பண்ணி பிடிச்ச கேம்ஸை விளையாடத்தெரிகிறது.. ஆனால்.. யுவர் ஆனர், காலையில, A வைக் காமிச்சு என்னான்னு கேட்டா O ங்றார், O வைக் காமிச்சா E ங்றார்.. கடுப்பேத்துறார் மைலார்ட்.!//
உங்களுக்கு மண்டை காயும், ஆனா எங்களுக்கு இது ரொம்ப ரசனை ..


ஆனா ஒண்ணுன்னே, பின்னூட்டம் இடாம போகவே முடியாது-சுபா அப்டேட்ஸ் க்கு மட்டும் :)

தொடர்ந்து எழுதவும்..

ILA(@)இளா said...

சேமிச்சு வெச்சிக்குங்க. :)

அகல்விளக்கு said...

அழகான தருணங்கள்...


சுபாவிற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்... :)

அன்புடன் அருணா said...

/காலையில, A வைக் காமிச்சு என்னான்னு கேட்டா O ங்றார், O வைக் காமிச்சா E ங்றார்.. கடுப்பேத்துறார் மைலார்ட்.!/
ஹாஹாஹா! அசத்தல்!

புதுகைத் தென்றல் said...

juper

அறிவிலி said...

:-)

சுசி said...

சுபாவுக்கு வாழ்த்துகள் :))

KSGOA said...

சுபாவுக்கு காலாண்டு தேர்வு முடிந்து
விட்டதா? பதிவு ரொம்ப நல்லா இருக்கு.

தக்குடு said...

உங்களோட ரமா அப்டேட்ஸ் & சுபா அப்டேட்ஸ் நான் ரசி(சிரி)ச்சு படிக்கும் ஒரு பகுதி! வாழ்த்துக்கள் சார்!! :))

அமுதா கிருஷ்ணா said...

romba nal aachu...

Fowmy Mohammed said...

சுபாவுக்கு வாழ்த்துகள்...
உங்களோட ரமா அப்டேட்ஸ் & சுபா அப்டேட்ஸ் நான் ரசி(சிரி)ச்சு படிக்கும் ஒரு பகுதி!
வாழ்த்துக்கள் சார்!!