Tuesday, October 4, 2011

ரமா அப்டேட்ஸ்

நாம் பெரியார் ஃபாலோயர்ஸ் எனினும் வீட்டில் ரமா அப்படியில்லை. அவருக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் சோதனை பாருங்கள் நம்பிக்கைதான் உண்டே தவிர கோயில் குளங்களுக்குத் தீவிரமாக போகிறது, வீட்டில் விழா ஏற்பாடுகள் செய்வது போன்ற வழக்கங்கள் இல்லை, அதுவும் முக்கால்வாசி எப்படிச் செய்வது என்றும் தெரியாது.

இன்னிக்கு வரலட்சுமி நோன்பு. கண்டிப்பாக கொழுக்கட்டை, பாயசம் எல்லாம் செய்து கணவர்களுக்குக் கொடுத்துவிட்டு மனைவிகள் பட்டினியாக கிடப்பார்கள் என்று காலையில் எழுந்ததுமே புளுகிவைத்திருக்கிறேன். ஏதாவது ஒர்க்கவுட் ஆகுதான்னு பார்ப்போம்.

********

நேற்று வீட்டில ரமா கொஞ்சம் கடுப்பேற்றிவிட்டதால் எங்காவது சற்று வெளியே போய்த்தொலையலாம் என்று நினைத்து சினிமாவுக்கு போகலாம்னு முடிவு பண்ணினேன். ஆனா பக்கத்து தியேட்டர்ஸ்ல எல்லாம் பாத்த படம். மிச்சமிருக்கிறது ‘வெடி’. போனேன். என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்ததில்லை. டைம்பாஸ்க்காவது இருக்கவேண்டிய கட்டாயம், அழுகையே வந்துடுச்சு. அரைமணி நேரத்துலயே வெளியில் வந்துட்டேன். நான் பாதியில் வெளிவந்த 4 வது படம்னு நினைக்கிறேன். அதுவும் அரைமணிக்குள் வந்தது இதுதான். 7 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து “சண்டை போட்டதுக்கு ஸாரிம்மா” என்று சரணடைந்துவிட்டேன்.

*********

என்ன சீரியஸான சண்டை, எத்தனை நாள் நீடிச்சாலும் ரமாவை தேவைப்படும் போது டப்பென்று சமாதானப்படுத்த என்னிடம் ஒரே ஒரு வழி இருக்கிறது, கொஞ்சம் ஈஸியானதும் கூட.

‘இன்னிக்கு ஃப்ரீயாத்தான் இருக்கேன். டிநகர் ஷாப்பிங் வேணா கூட்டிகிட்டு போறேன். கிளம்புறியா? கிளம்பட்டுமா? உன் விருப்பம்தான்’

**********

”உள்பக்கமா உதட்டுல பல்லால கடிபட்டு புண்ணாயிருக்கு. பேச முடியலை.. டாப்லெட்ஸ் கொடுங்க”
“பெரியவங்களுக்கா, சின்னவங்களுக்கா?”
“பெரியவங்களுக்கு, என் மனைவிக்கு..” இயல்பாக சொன்னேன்.

“அப்படியே விடுறதுதானே.. இன்னும் ரெண்டு நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்ல..” இயல்பாகவே சிரிக்காமல் சொன்னார் அந்த சிப்பந்தி.

இருவரும் சில விநாடிகள் முகம் பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டோம். பழைய ஜோக்தான், இருந்தாலும் அந்த இடத்தில் எதிர்பார்க்கவேயில்லை நான்.

**********

(ஒரு கணவன் மனைவி ஜோக்.. எங்கோ கேட்டது.)

கடை வீதியில் ஒரு பெண்ணிடம் பிச்சைக்காரி ஒருத்தி "அம்மா தாயே காசு கொடுங்கம்மா சாப்பிட்டு நாலு நாளாயிடுச்சு".

பெண்: நான் காசு குடுத்தா அதில பவுடர் சீப்பு கண்ணாடி வாங்க மாட்டதானே..

பிச்சைக்காரி: நான் குளிச்சே ரொம்ப நாளாயிடுச்சு. எனக்கு எதுக்குமா இதெல்லாம்?

பெண்: காசு குடுத்தா அதில நல்ல சேலை வாங்க மாட்டதானே..

பிச்சைக்காரி: பிச்சை எடுக்கற எனக்கு எதுக்குமா நல்ல சேலையெல்லாம். காசு குடுங்க நான் சாப்பிடணும்.

பெண்: காசு தறேன். அதுக்கு முன்னால வா என்னோட.. உன்னை என்னோட கணவர்கிட்ட காட்டணும். எனக்கு பவுடர் சீப்பு கண்ணாடி சேலை எல்லாம் வாங்கி தராட்டா நான் எப்படி இருப்பேன்னு காட்டணும்.

*********

துவக்கத்தில் மனைவியர் செல்லமாக அடித்தால் அதை அனுமதிக்காதீர்கள். அதையே சாக்காக வைத்து சமயம் கிடைக்கும் போது நிஜமாகவே அடிபின்னிவிடுவார்கள்.

#சும்மா பொதுவாச் சொன்னேன்.

*********

மின்சாரத்தைக் கடத்த நாம் ஸ்டீல் வயர்களைப் பயன்படுத்துகிறோம். ஏனெனில் அது குறைந்த மின்னிழப்பைச் செய்யக்கூடிய நல்ல மின்கடத்தியாகும். அதைவிட நல்ல கடத்தியாக அலுமினியமும், அலுமினியத்தைவிட நல்ல கடத்தியாக காப்பரும் இருக்கிறது. காப்பரை விட நல்ல கடத்தியாக வெள்ளி இருக்கிறது. வெள்ளியை விடவும் மிகச்சிறப்பான கடத்தி தங்கமாகும். --

இதைப்படித்ததும் நாம் ஏன் இந்த வேற ஒண்ணுக்கும் உதவாத தங்கத்தை மின் கடத்த பயன்படுத்தக்கூடாது என நினைத்தால் நீங்கள் ஒரு நல்ல என்ஜினியர்.

மின்சாரத்துக்கும் தங்கமணிகளுக்கும் இடையே இருக்கும் இன்னொரு அரிய ஒற்றுமை உங்களுக்கு விளங்குவது போலத் தோன்றினால் நீங்கள் என் நண்பன்.

*

(மேற்காணப்படுபவை ஏற்கனவே கூகுள் பஸ்ஸில் புலம்பியவைதான், இங்கே எக்ஸ்க்ளூஸிவ் பிளாக் வாசகர்களுக்காக)

*

5 comments:

ILA(@)இளா said...

மின்சாரம்- சம்சாரம் - டாப் :)

அத்திரி said...

அண்ணே உங்களின் சமாதானத்துக்கு உதவிய வெடி படத்துக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓ போடுங்க

KSGOA said...

உங்கள் களம்.அடித்து ஆடியிருக்கிறீர்கள்.

Vijay Armstrong said...

//#சும்மா பொதுவாச் சொன்னேன்.// என்ற வேலை எல்லாம் இங்கே வேண்டாம்..நீங்கள் எதைச் சொன்னாலும் அதில் உங்கள் அனுபவம் பொதிந்துதான் இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.. அனுபவங்கள் தொடர வாழ்த்துக்கள்.

Mugil said...

//#சும்மா பொதுவாச் சொன்னேன்.//.... ரொம்ப சரியா சொன்னீங்க