Wednesday, October 5, 2011

ரசிகன் : ரோவன் அட்கின்ஸன்

நமது ரசிகன் பகுதி சாதனையாளர்கள், தலைவர்கள், நடிகர்கள், பல்துறை கலைஞர்கள், கற்பனைக் கதாபாத்திரங்கள் என சகலமும் உள்ளடக்கியது. அந்த வரிசையில் இதோ இன்னொரு நபர் என்று அவ்வளவு சாதாரணமாக சொல்லிவிடமுடியாத பெரும் கலைஞன் ரோவன் அட்கின்ஸன். ’மிஸ்டர். பீன்’ என்றால் இன்னும் நெருக்கமாக உணர்வீர்கள்.

Rowan_Atkinson

உடல்மொழி நடிப்பின் உச்சத்தை தொட்ட நடிகர்களின் முதல் வரிசையில் என்றும் ரோவனுக்கு ஒரு அழிவில்லாத இடமிருக்கும். 56 வயதாகும் ரோவன் என்னும் இந்த பிரிட்டிஷ் நடிகன் உலகெங்கும் அறியப்படுவது அவனது புகழ்பெற்ற ‘மிஸ்டர்.பீன்’, ‘தி தின் ப்ளூ லைன்’, ’ப்ளாகெடர்’ போன்ற டிவி சீரியல்களுக்காக. சுமார் 1980களில் துவங்கிய பயணம் டிவி சீரியல்கள் மட்டுமல்லாது, சினிமாவிலும் வெற்றிகரமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பு, எழுத்து என பன்முகம் கொண்டவர் இவர். பெரும்பாலும் வசனங்களேயில்லாத ’மிஸ்டர்.பீன்’ எபிஸோடுகளைப் எத்தனை முறைகள் பார்க்க நேர்ந்தாலும் அத்தனை தடவையும் ரோவனைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது வரும், போட்டது போட்டபடி கிடக்க சூழல் மறந்து அலறிச் சிரித்துக்கொண்டிருக்க வேண்டியதும் நேரலாம்.

பல சினிமாக்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் அவரின் முழு நீள பங்களிப்பும் அனேகம். அதில் ‘பீன்’ (Bean :The ultimate disaster movie), பின்னர் ’ஜானி இங்க்லிஷ்’ (Johny English), ’ஹாலிடே’ (Mr.Bean’s Holiday) போன்றவை குறிப்பிடவேண்டியவையாகும். இவற்றில் 1997ல் வெளியான ’பீன்’ படத்தில் விஸிலர்’ஸ் மதர் (Whistler’s Mother) என்ற புகழ்பெற்ற ஓவியத்துடன் இவர் படும்பாடு இவரது திறனுக்கு ஒரு சோறு பதம். இந்தக் காட்சியை இப்போது பார்த்தலும் கண்ணில் நீர் வர சிரிக்கவேண்டியது வரும். கொஞ்சம் ரசனையும் கூடிய ரசிகர்கள் முதன்முதலில் இதைப்பார்க்க நேர்ந்தால் சிரித்தே மூச்சுமுட்டிவிடும் அபாயமும் உண்டு.

அந்த காட்சியை இதில் காணுங்கள்.. http://www.youtube.com/watch?v=NQevyIy8hzs

இவரது ’பீன்’ எபிஸோட்களை அடிக்கடி  ‘போகோ’சானலில் காணலாம். பல எபிஸோடுகள் கனவிலும் மறக்கமுடியாதவை. நமது ஊரில் இவரது ரீச் எதுவரை வந்திருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறலாம். இவரது அடுத்த படமான ’ஜானி இங்க்லிஷ் ரீ-பார்ன்’ (Johny English Reborn) இந்த மாதம் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது. வழக்கமாக தமிழ்ப்படங்களுக்காக ப்ரொமோ டிவி நிகழ்ச்சிகளைப் தமிழ்ச் சானல்களில் பார்த்திருப்பீர்கள். இந்தப் படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி, பிரபல தமிழ்ச்சானலில், அதுவும் விழாக்கால சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது.!!

Johnny_English_Reborn_Poster

மேலும் அட்கின்ஸனைப் பற்றி அறிய.. http://en.wikipedia.org/wiki/Rowan_Atkinson

.

5 comments:

Vijay Armstrong said...

ஆமாம்..அற்புதமான கலைஞன். நேற்றுக்கூட ‘நீச்சல் குளத்தில்’ அவர் அடித்த லூட்டியை பார்த்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன்..சாப்ளினைப் போலவே தனித்திறமையால் உலகை மகிழ்விக்கும் கலைஞன்.

கார்க்கி said...

இவ‌ரின் ப‌ல‌ காட்சிக‌ளை மாபெரும் திற‌மைசாலி வ‌ச‌ந்த் அவ‌ர்க‌ள் அதிக‌ம் காப்பிய‌டித்திருக்கிறார்.

நிச்ச‌ய‌ம் சாப்ளின் அள‌விற்கு வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிப்பார்

Senthil said...

s, a great actor!

senthil, doha

சுசி said...

நல்ல பகிர்வு டைரட்ரே

KSGOA said...

பதிவு நன்று.அவரைஎன் மகனுக்கு மிகவும்
பிடிக்கும்.யுடான்ஸ் நட்சத்திரம் ஆனதில் மிகவும் மகிழ்ச்சி.அதனால் தான் உங்கள்
பதிவுகளை தினமும் படிக்க முடிகிறது.