Pages

Ads 468x60px

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு -விமர்சனம்

‘எப்படி போதிதர்மரைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள்?’ என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இயக்குனர் முருகதாஸ் இப்படிச்சொல்கிறார், ’இண்டெர்நெட்டில் தற்செயலாகப் பார்த்தேன். பின்னர் கூகுள்ள தேடியே எல்லாவற்றையும் தெரிந்துகொண்டேன்..’ (சிக்குச்சுடா ஒரு டாபிக்னு கப்புனு புடிச்சிகிட்டேன் என்பது போலவே இருந்தது அவர் ஃபீலிங்). படமும் நெட்டில் ஒரு விஷயத்தை எந்த அளவுக்கு உருப்படியாக தெரிந்துகொள்ளமுடியுமோ அந்த அளவுக்கு மட்டுமேதான் இருக்கிறது. நெட்டில் கிடைக்கும் தகவல்கள் ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமேதான் இருக்கமுடியும்.

எடுத்துக்கொண்ட விஷயங்களை படக்குழுவினர் அது போதிதர்மரோ, குங்ஃபுவோ, DNA அறிவியலோ, அரசியலோ.. எதைப்பற்றியுமே முழு அறிவைத் தேடி அடைந்ததாய்த் தெரியவில்லை. நம்ப மக்களுக்கு இதுவே பெரிசு, இதுக்குமேல புரியாது போன்ற ஷங்கர் மனோபாவம்தான் தெரிகிறது. அதோடு முடிவு செய்த விஷயங்களை பிரசண்ட் செய்த விதத்தையும் ரசிக்கமுடியல்லை.

எத்தனையோ சம்பவங்களையும், மனிதர்களையும் வரலாறு விழுங்கிவிடத்தான் செய்கிறது. அது யார் தவறும் இல்லை. இந்தப் படத்தின் கதையை முடிவுசெய்யும் முன்னர் முருகதாஸும் அப்படித்தானே இருந்தார். அதெப்படி தாம் தெரிந்துகொண்டவுடனே மக்களை பேட்டி கண்டு, ‘ஹிஹி.. பாருங்கள். யாருக்குமே தெரியவில்லை.! தமிழர்களே இப்படித்தான்..’ என்று படத்தில் காட்சிகள் வைக்கமுடிகிறது?

7am-arivu

போதிதர்மரைப் பற்றி 15 நிமிடங்களில் என்ன சொல்லிவிடமுடியும்? சாதாரணமான கிளிஷேக்களால் ஒரு பகுதியைக் காண்பித்துவிட்டு, அதையும் மக்களை நோக்கிய நேரடியான கேள்வியுடன் முடிக்கிறார்கள். சொல்லப்போனால் அதன்பின் துவங்கும் முழு படத்தையுமே அதே பாணியில், ‘மஞ்சள் மகிமை தெரியுமா உங்களுக்கு? வேப்பிலை தெரியுமா? கோலம் போடத் தெரியுமா? எல்லாமே சயின்ஸ்தான், சிந்தியுங்கள்..’ என்றுதான் முடிக்கிறார்கள். டாகுமெண்டரி என்பது உண்மையான தகவல்களின் கோப்பு. இதை டாகுமெண்டரி பாணி என்று சொல்வது டாகுமெண்டரிகளை குறைத்து மதிப்பிடுவதாகிவிடும்.

படம் முழுதும் இதே பிரச்சினைதான் என்றாலும் மற்ற சாதாரண விஷயங்களிலும் கூட சொதப்பல்கள். சூர்யா, ஸ்ருதி காதல் ஏற்பட்டதா, அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று நமக்கும், சூர்யாவுக்கும் தெரியும் முன்பே ஒரு காதல் பாடல் வருகிறது. பின்னர் உடனேயே, ‘யம்மா, யம்மா’னு ஒரு சோகப்பாடலும் வைத்திருக்கிறோமே என்ன செய்வது என்று அப்படியே ஸ்ருதியின், ஒரே டயலாக்கில் அந்தப் பாடலுக்கு போய்விட்டு திரும்பவும் கதைக்குள் வருகிறார்கள். இப்படியே இவற்றோடெல்லாம் ஒன்றாமல் சிரமத்தோடு பார்த்துக்கொண்டிருந்தால் வில்லனும் வந்துவிடுகிறார், இடைவேளை வந்துவிடுகிறது. ஆனது ஆகிப்போச்சு,  இனி ஆக்‌ஷன்களால் களைகட்டப்போகுது, அதையாவது ரசிக்கலாம் என்று முடிவுசெய்து நிமிர்ந்து உட்கார்ந்தால் அங்கேயும் பிரச்சினை. அவர் போகிற வருகிற இடங்களிலெல்லாம் ‘பார்வை’யால் பார்த்தே அதகளம் பன்ணிக்கொண்டிருக்கிறார். ஒரு ஐடியா கிடைத்தால் அதையே போரடிக்கிறவரைக்கும் காண்பிப்பதில் நம்ப ஆட்களை மிஞ்ச முடியாது. கடைசியில் அவரை வெல்லவேமுடியாது என்ற நிலை வந்ததும் DNA அது இது என்று ஜல்லியடித்து வில்லனை சண்டை போட்டு ஜெயிக்கிறார் ஹீரோ. சண்டைக் காட்சிகளாவது ரசிக்கும் படி இருக்கிறதா?

சாதா ஹீரோ உதை விட்டாலே வில்லன் பத்து அடி உயரே பறப்பார். நம்ப ஹீரோ ஸ்பெஷல் சாதா வேறயா? அவர் அடிக்கும் போது இவர் நூறு அடி பறக்கிறார், இவர் அடிக்கும் போது அவர் நூறு அடி பறக்கிறார். ரொனால்டினோ காலில் சிக்கிய  ஃபுட்பால் கூட அவ்வளவு உயரம் போகுமா தெரியவில்லை. என்னதான் ஃபைட் கம்போஸ் பண்றாங்களோ புரியவில்லை.

பத்தும், பத்தாதற்கு உலகத் தமிழர்களுக்கு சமர்ப்பணம், உள்ளூர் தமிழர்களுக்கு சமர்ப்பணம், தமிழ், தமிழன், இங்கிலீஷ்காரன், சைனாக்காரன்.. போன்ற ஜல்லிகள் வேறு.

சூர்யா, ஸ்ருதி, ஜானி என்று நடிகர்களின் பங்களிப்பு, ஒளிப்பதிவு என படத்தில் ரசிக்கத்தகுந்த விஷயங்களும் கொஞ்சூண்டு இருக்கின்றன. தரணி, பேரரசு, விஜய், அஜித் டைப் கமர்ஷியல் மொக்கைகளுக்குப் பதிலாக வித்தியாசமான கதைக்களங்களை, ஐடியாக்களை படமாக்கவேண்டும் என்ற ஆர்வத்துக்காக மட்டும் பாராட்டலாம்.
.

19 comments:

MSK / Saravana said...

நச்.. என் மனசில இருக்கிறத அப்படியே செமையா எழுதியிருக்கீங்க அண்ணே..

ஜானகிராமன் said...

அண்ணே, சிறப்பான விமர்சனம். நிறைய படைப்பாளிகள் கதைக்கருவே கிடைக்காம அரைச்சமாவையே அரைக்கும் போது, முருகதாஸ் கிடைத்த அற்புதமான வாய்ப்பை இப்படி கொத்துபரோட்டா போட்டுட்டாரே... தமிழ் சினிமா எப்பவுமே இப்படித்தானே அல்லது இப்படித் தான் எப்பவுமேவா?

சுசி said...

//சாதா ஹீரோ உதை விட்டாலே வில்லன் பத்து அடி உயரே பறப்பார். நம்ப ஹீரோ ஸ்பெஷல் சாதா வேறயா? //

செம ஆதி.. ரொம்ப சிரிச்சேன்.. ரசிக்கும்படியான விமர்சனம்..

படத்தை ரெம்ப எதிர்பார்த்தேன்.. தியேட்டர்ல போய் பார்க்கிறதா இருந்த ப்ளான் புஸ்ஸ்ஸ்.. :((

வித்யா said...

\\ரொனால்டினோ காலில் சிக்கிய ஃபுட்பால் கூட அவ்வளவு உயரம் போகுமா தெரியவில்லை. \\

:)))))))))

280ரூவா தெண்டமா?? சனிக்கிழமை புக் பண்ணிருக்கேன்..

வேதாளம் said...

உங்களுக்கு எல்லாம் தெரியுமோ?, இதுக்கு முன்னாடி போதிதர்மரை பத்தி தெரியுமா?

சந்தோஷ் = Santhosh said...

நல்லா இருக்கு ஆதி..

பரிசல்காரன் said...

நானும் படம் பார்த்தேன்..

நிறைய லாஜிக் ஓட்டைன்னாலும் (போலீஸ்காரனுகளைக் கொன்னா எவனுமே கேட்கமாட்டானா?) அவ்ளோ ஒண்ணும் மொக்கையில்லை.

அஞ்சாம் நூற்றாண்டுல வாழ்ந்த ஒருத்தனை பத்தி பேரரசு கூகுள்ள பார்த்துட்டிருக்காரு.. விஜய்கிட்ட பேச்சு வார்த்தை நடக்குது. அப்ப இருக்குடி உனக்கு ஆப்பு.

பறக்கும் குதிரை said...

இந்த படத்துக்கு மட்டும் ஏன் சார் எல்லோரும் இப்படி லாஜிக் பாக்குறீங்க.. என்ன ஒரு கோபம்.. இது சினிமா தானே?

bandhu said...

நல்ல விமர்சனம். கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் (எவன் உழைக்கவில்லை?) அதற்காகவே பார்க்கலாம், தமிழனை பற்றி உலகறிய (?) எடுத்திருக்கிறார்கள் - அதற்காகவே பார்க்கலாம், என்ற பாசாங்குகள் எதுவும் இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@பறக்கும் குதிரை..

கவனமாக இருந்தாலும் சில சமயங்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. எழுத்தில் இன்னும் கவனம் தேவை என்பதை உணர்கிறேன்.

நான் எழுதியதில் கோபம் தொனிப்பதைப்போல இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். எந்தத் தனிநபர் மீதும் எனக்கு எந்த கோபமும் கிடையாது. அதீத எதிர்பார்ப்பில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக அப்படியொரு உணர்வு ஏற்பட்டிருக்கலாம்.

இருப்பினும் முதல் சில பாராக்களில் இருந்த வார்த்தைகளை மாற்றியமைத்திருக்கிறேன். கருத்தில் மாற்றமில்லை. சுட்டியமைக்கு நன்றி.

Vijay Armstrong said...

எனக்கும் படம் பார்த்தபோது ஏமாற்றமாகத்தான் இருந்தது..தேவையில்லாமல் தமிழனை சொரிந்து விட்டு காசு பார்க்க நினைப்பதைப் போல் இருக்கிறது.

உண்மையான அக்கரை இருந்தால் சொல்லுவதற்கு எவ்வளவோ மேன்மைகள் இருக்கு.. எல்லாம் தாண்டி தொழில்நுட்பாலனாகவும் முருகதாஸ் பல இடங்களை தவர விட்டிருக்கிறார். குறிப்பாக திரைக்கதை, காட்சிகள், பிழையான தகவல்கள் மற்றும் தேவையற்ற வசனங்கள்.

ஒரு திரைப்படமாக எந்த அளவிற்கு என்னை இப்படம் கவரவில்லையோ அதே அளவு ஒரு தமிழனாகவும் இப்படம் என்னை கவரவில்லை.

ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

உங்கள் விமர்சனத்தோடு நூறு சதவிதம் ஒத்துப்போகிறேன்.

SELVENTHIRAN said...

என்ன எழவுக்குடே மாத்தி அமைக்கனும். முதல் பாராவைச் சொன்னேன். கலைப்படைப்புக்கு அவனவன் மனசுல இருந்து வர்ற வார்த்தைகள்தாம் விமர்சனம். இருதய சுத்தி இருந்தா போதும். எழுத்துக்கு ‘டோன் டவுண்’ செய்வது, தனக்குத்தானே கருத்தடை ஆப்பரேசன் பண்ற மாதிரி.

reversetamilcinema.blogspot.com said...

அதெப்படி தாம் தெரிந்துகொண்டவுடனே மக்களை பேட்டி கண்டு, ‘ஹிஹி.. பாருங்கள். யாருக்குமே தெரியவில்லை.! தமிழர்களே இப்படித்தான்..’ என்று படத்தில் காட்சிகள் வைக்கமுடிகிறது?





நமக்கே எவ்வளவோ விஷயங்கள் தெரிவதில்லை சிலநல்ல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளும்போது நாலு பேருக்கு அதை சொல்வதில் தவறு இல்லை நமக்கு எப்பொழுது ஒரு விஷயம் பற்றிய புரிதல் ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் அதைப்பற்றி விளக்க முடியும் .பாகிஸ்தான் இந்தியா பிரச்சினையை மட்டுமே காலம்காலமாக காண்பித்துவரும் தமிழ் சினிமாவில் நமது நாட்டை துண்டாட நினைக்கும் சீனா பற்றி காண்பித்ததில் இயக்குனர் பாராட்டுக்குறியவராகிறார்.சீனா தனது வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை
நமது இந்தியாவில் இருந்து எடுத்துவிட்டு அதை பாகிஸ்தானுடன் சேர்த்துவிட்டது.ராமேஸ்வரம்
அருகே தலைமன்னாரில் சிங்களர்களுடன் சேர்ந்து பயிற்சி முகாம்கள் அமைக்கிறது.தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையோடு சேர்ந்து கொன்றுகுவிக்கிறது பாகிஸ்தானுக்கும்,இலங்கைக்கும் மறைமுக ஆதரவை கொடுத்து இந்தியாவை அழிக்க துடிக்கிறது இதை ஒரு தமிழரான முருகதாஸ் அழகாக சொல்லியிருக்கிறார் அருணாச்சல பிரதேசத்தை பங்கு கேட்கிறது இப்படி தொடர்ந்து அத்துமீறல்களை செய்துவரும் சீனாவை பற்றி
யாரும் வாய் திறப்பதில்லை ஒரு விஷயம் பாமரனுக்கும் புரியவில்லை என்றால் சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்கள் மூலம்தான் சொல்ல முடிகிறது.அதை ஏன் உங்கள் நெகட்டிவ்வான விமர்சனம் மூலம் சிதைக்கிறீர்கள் எல்லோரும் போதிதர்மன் பாத்திரத்துக்காக‌
மட்டுமே அதிகம் இப்படத்தை எதிர்பார்த்தனர் அதில் மற்ற விஷயங்களை சேர்த்தவுடன் அதிக‌
விமர்சனம் செய்கின்றனர்.சிங்களர்களுடன் கைகோர்த்துக்கொண்டு ராமேஸ்வரம்,நாகப்பட்டினம்
மீனவர்களை கொன்று குவிக்கும் சீனாவின் அத்துமீறலாலும் மீனவர்கள் மட்டுமல்லாது இந்தியாவே கலங்கி போயுள்ளது நல்ல விஷயங்களை பாராட்டுங்கள் இப்படி மண்ணை வாரி
தூற்றாதீர்கள்.என்னதான் தாக்குதல் நடத்தினாலும் நம் இந்திய அரசு பொம்மையாக இருப்பதும்
வேதனைக்கு உரியது.இந்தப்படம் மசாலா கலந்து கொடுத்து இருந்தாலும் காதல் காட்சிகள் ,சர்க்கஸ் கூடாரத்தில் சூர்யாவின் பங்குஇல்லாமை,தமிழ்பற்றி பேசிவிட்டு வெஸ்டர்ன் டைப்
பாடல் என சின்ன சின்ன மைனஸ் தெரிந்தாலும் சீனாவின் அத்துமீறல் பற்றி சொன்ன முருகதாஸ் பாராட்டுக்குரிய மனிதர்.உங்களின் விமர்சனத்தால்ஒருவர் படத்திற்க்கு செல்லவில்லை
என கமெண்ட் கொடுத்திருகிறார் பாவம் அவர்.

பறக்கும் குதிரை said...

பின்னுட்டத்தில் சொன்ன கருத்தை மதித்து பரிசீலனை செய்யும் உங்கள் பெருந்தன்மைக்கு எனது வாழ்த்துக்கள்!! :)

வவ்வால் said...

ஹி..ஹி.. நீங்க சொல்றதப்பார்த்தா நான் பார்த்த டப்பிங் படம்" மிரட்டல் அடி" போல இருக்கு நடுவில போதி தர்மர் சேர்த்துட்டாங்க போல. அதுல தான் வில்லன் உதைச்சா ஹீரோ மேகக்கூட்டத்துக்கே போய் வருவர்.திரும்பி வந்து வில்லனை பாதளத்துக்கு அனுப்புவார் :-))

நிறைய விமர்சனத்துல பி கிரேட் போல சொல்லி இருக்கிங்க , எனக்கும் அப்படித்தான் தோனுது. நீங்க ஒரே அடியா இசட் கிரேட் போட்டிங்க போல!

ஆனால் விகடன் போன்ற மொக்கை பத்திரிக்கைகள் " ஜஸ்ட் மிஸ் உலகத்தரம்னு" சொல்லும்னு நினைக்கிறேன்.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

நல்லாருக்கு சார்!!!!!!!!

nondhavan said...

தேவையில்லாமல் அதிக விளம்பரம் வேறு கொடுத்து எதிர்பார்ப்பை கிளப்பி விட்டது கூட ஒரு காரணமோ?

itsaarthimahesh said...

great movie i liked very much, Romba logic pakkathingappa, Atleast we proud our elder people live with great talents. I feel guilty still i am not putting my efforts for our next generation

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

இங்கும் வாசிக்கவும்

http://pothinimalai.blogspot.com/