Wednesday, November 30, 2011

மயக்கம் என்ன -விமர்சனம்


தடிமாடு மாதிரி நாலு பசங்க, கூட மூணு பொண்ணுங்க.. இவங்க எந்த நேரமும் பாசத்தைப் புழிஞ்சுக்குவாங்க. பீச்சுல ராத்திரி இருட்டுனப்பிறகு போய் தண்ணியடிச்சு, படுத்து உருண்டுகிட்டு வானத்தைப் பாத்து மல்லாக்க படுத்து சிந்திப்பாங்க. அப்பால ஒரே ரூம்ல கசமுசான்னு படுத்துத் தூங்குவாங்க. அதுல ஒருத்தி மட்டும் ஹால்லயே தூங்கினா அவளைப் பொறுப்பா தூக்கிவந்து இந்தக்கும்பலோட போட்டு தூங்க வைப்பாரு ஒரு பாசப்பெரியவரு.. இதெல்லாம் எங்கேய்யா நடக்குது? ஒருவேளை மேல்தட்டுல நடக்குமோ என்னவோ? ஒரு படம், ரெண்டு படம்னா இதையெல்லாம் பார்க்கலாம். ஏதோ இயல்பான கல்ச்சர் மாதிரி எல்லாப் படத்துலயும் பார்க்கணும்னா?

நல்ல வேளையா அது இல்ல படத்தோட கதை. அந்தக் கும்பல்ல ஒருத்தன் டேட்டிங் (அதாங்க.. அதுவும் நம்ப கல்ச்சர்தான், தெரியாதா?) பண்ண புதுசா கூட்டிவரும் பெண்ணை இன்னொருத்தன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்குறான். அவந்தான் படத்தோட ஹீரோ. ஓஹோ.. அதுவும் கதை இல்லைங்க. அப்போ? அவர் ஒரு ஃபோட்டோகிராபர். ஃபோட்டோக்கலையில் சாதிக்கவேண்டும் என்று போராடுகிறார். என்ன செய்கிறார் அப்படி?  அதான் சொன்னேனே.. பீச்சுல மல்லாக்க படுத்து சிந்திக்கிறது.. லவ் பண்றது.. அதெல்லாம் சின்ஸியராக பண்ணுகிறார். போனாப்போகுதேனு மதேஷ்னு அந்தத்துறை சார்ந்த ஒரு ஃபோட்டோகிராபரை அணுகி உதவியாளராக சேர்த்துக்கொள்ள வேண்டுகிறார். அவரோ மறுத்துவிடுகிறார். அடாடா, போச்சு.. வாழ்க்கையே முடிஞ்சுபோச்சு.. மனக்கலக்கத்துல அலைகிறார். அதோடு நம்ப ஹீரோ எடுத்த போட்டோ ஒன்று மாதேஷ் எடுத்ததாக ஒரு பத்திரிகை அட்டையில வேற வந்துடுது. அவ்வளவுதான், மனக்கலக்கம் மனப்பிறழ்வா ஆயிடுது.

அப்பால.. என்ன? பொண்டாட்டியை சித்திரவதை செய்கிறார். தலையை குனிஞ்சிகிட்டு நேர்கோட்டுல ’குய்யான்’ மாதிரி சைடு வாக்குல நடக்குறார். இதையெல்லாம் பார்த்த பொண்டாட்டி அவர் கூட பேசாம இருந்துடுறார். பொண்டாட்டி பேச மாட்டேங்கிறாரே, கிளைமாக்ஸ் வேற வந்துடுச்சேன்ங்கிற கவலையில தனுஷ், ஒரே ஸாங்குல படிச்சு, பெரியாளாகி, கலெக்டராகி.. சே.. இல்லல்ல.. போட்டோ புடிச்சு, டிஸ்கவரி சேனல்ல வந்து, நேஷனல் ஜியாகிரபிக்கே எப்படி போட்டோ எடுக்குறதுன்னு சொல்லிக்குடுத்து, எல்லா புக்குலயும் அட்டையில வந்து, BBCயில பேட்டி குடுத்து, ஏதோ உலக அவார்டு வாங்கி, அப்படியே பெண்டாட்டி டிவி பார்த்துக்கொண்டிருக்க, அந்த டிவியில் லைவ்வா ‘எல்லாமே என் பொண்டாட்டிதான்’னு ராஜ்கிரண் கணக்கா சொல்லிடுறார். சுபம் சுபம்.!

என்ன கொடுமை சார் இது?


மற்றபடி, வழக்கம்போல ஒளிப்பதிவு மட்டும் அழகு. தனுஷ், தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கைச் சூரியன் (அதுவும் நட்சத்திரம்தானே). ஆனால் அது அப்பா, அண்ணன், எதிர்பாராமல் ஹிட்டாகிவிடும் ’கொலைவெறி’கள் தலையில் ஏற்றும் கொலைவெறி இவற்றிலெல்லாம் இருந்து அவர் ஒதுங்கியிருந்தால் மட்டுமே. ரிச்சா ரொம்ப அழகாக இருக்கிறார். தன்னை பெரிய படைப்பாளின்னு நினைச்சுக்கற டுபாகூருங்க தமிழ்ல அதிகமாயிட்டாங்கன்னு தோணுது. நான் செல்வராகவனைச் சொல்லலை, பொதுவாச்சொன்னேன். இது மாதிரி படங்களுக்கு இயக்குனர் ஹரி மாதிரியானவர்களின் படங்களே எவ்வளவோ தேவலாம்.

.

Tuesday, November 15, 2011

சவால் சிறுகதைப்போட்டி-2011 : முடிவுகள்

பரிசல்+ஆதி, மற்றும் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கிய ‘சவால் சிறுகதைப்போட்டி –2011’க்கான முடிவுகள்.
அன்பான போட்டியாளர்கள் மற்றும் இணைய நண்பர்களே,
”இப்பதான் விஷ்ணு கிட்ட இருந்து போன் வந்தது, ஆனால் பேசினது எஸ்.பி.கோகுல். நான் என்னோட ரிவால்வர பேன்ட் பாக்கெட்ல செருகினேன். 'டிஎஸ்பி அனுஜன்யா சாருக்கு' என்று எழுதிய பார்சல் இப்போதுதான் என் டேபிளுக்கு வந்தது. இன்னும் அரை மணி நேரத்துக்குள் முழுத் தகவலும் வரும். தூக்கிக்கொண்டு நேரே ஆப்பிரிக்காவில் போய் செட்டிலாகிவிட வேண்டியதுதான். அத்தனை வில்லன்களையும் பிடித்து புழல் சிறையில் அடைத்துவிட்டு நிம்மதியாக சேரில் அமர்ந்தேன். ’இன்ஸ்பெக்டர் அப்துல்லா இலங்கை போயிருக்கிறார், வருவதற்குள் நாமே கொலையாளியைப் பிடித்துவிடமுடியுமா?’ என்று கேட்டார் சிறப்புப்படை கமாண்டோ ஸ்ரீதர் நாராயணன். யோசனையோடு கைக்குட்டையில் நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்து, அலை பேசியையும் ஒற்றினேன்.”
 
சமீபத்தில் ஒருநாள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம். அப்துல்லா ஆகியோருடன் நாங்கள் போட்டி முடிவுகள் குறித்த ஒரு கான்ஃபரன்ஸில் இருந்த போது அவர்கள் மூவரும் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக்கொண்டிருந்ததுதான் மேலே நீங்கள் காண்பது. இதிலிருந்தே தெரிந்துகொண்டிருக்கலாம்.. ஆம்.! இவர்கள்தான் நமது கிரைம் கதைகளில் மூழ்கி இந்த நிலைக்குப் போன, நம்முடைய இந்த ஆண்டு சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றிக்கதைகளை தேர்ந்தெடுக்கும் பணியேற்று நம்மைப் பெருமை செய்த நடுவர்கள் என்று.

அனுஜன்யாவிடம் விபரம் சொல்லி பொறுப்பேற்கச் சொன்னதுமே, பின்னணியிலிருக்கும் பெண்டு நிமிர்க்கும் வேலையை எப்படி கண்டுகொண்டாரோ தெரியவில்லை, ‘நா ரொம்ப பிஸி’ என்று தப்பியோட முயன்றார். பின்னர் நம் ‘பதிவர்களால், பதிவர்களுக்காக..’ ஸ்லோகத்தை லைட்டா உல்டா செய்து, ’இளைஞர்களால், இளைஞர்களுக்காக நடத்தப்படும் போட்டியில் ஒரு இளைஞர் நடுவர் என்றால்தானே சிறப்பு’ என்று கூறி அவரை அரைமயக்கத்தில் ஆழ்த்தி சம்மதிக்க வைத்தோம்.

சென்ற ஆண்டு சவால் போட்டியில் கலந்துகொண்டு கலக்கல் கதை எழுதி, முதல் பரிசை வென்றவர்களுள் ஒருவரான ஸ்ரீதர் நாராயணனைக் கேட்டபோது டக்கென ஒப்புக்கொண்டார். பாவம் அவருக்கு அவ்வளவு விவரம் பத்தவில்லை அப்போது. பின்னாடி அவர் புலம்பியதை ஒரு தனி தொடராகவே எழுதலாம். சென்ற ஆண்டின் நடுவர்களில் ஒருவராக இருந்தும், மீண்டும் களம் காணும் துணிச்சல் ஒருவருக்கு இருக்குமானால் அது அப்துல்லாவிற்கு மட்டும்தான் இருக்கும் என்று சொல்லிவிடலாம்.

நடுவர்களின் திறனையும், கதைகள் மீதான அவர்களின் ஆர்வத்தையும் நாங்கள் சொல்வதெற்கெல்லாம் அவசியமில்லை என்பதை நண்பர்கள் நீங்கள் அறிவீர்கள். சவால் மற்றும் விதிமுறைகளோடு கூடிய போட்டி குறித்த முதல் அறிவிப்பை இங்கே காணலாம். துவக்கத்தில் ஒன்றிரண்டு என மெதுவாக வர ஆரம்பித்த கதைகள் பிற்பகுதியில் வந்து குவியத்தொடங்கின.
ஆம், சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஏராளமானோர் (78 பேர்) போட்டியில் கலந்துகொண்டு எங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த போட்டியாளர்களின் அன்புக்கும், இதன் பின் நின்ற நண்பர்களுக்கும், போட்டியை ஸ்பான்ஸர் செய்து நடத்தித்தந்த ’யுடான்ஸ்’ திரட்டிக்கும், இணைய வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

கீழே நடுவர்களின் மடல்..

-அன்புடன்

ஆதிமூலகிருஷ்ணன், பரிசல் கிருஷ்ணா மற்றும் யுடான்ஸ் குழு.


*
அன்பு நண்பர்களே,

பல்வேறு காரணிகளை புனைந்துகொண்டு அதன் கீழ், சற்று சிரமத்துடனே கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறோம். போட்டி குறித்தும், தேர்வு செய்தமை பற்றியும், வெற்றிபெற்ற கதைகள் பற்றியும், அவற்றின் ’விதிமுறைகளுடன் 100% பொருந்தாத தன்மை’ பற்றியும், அடைந்த குழப்பங்கள் பற்றியும் நிறைய எழுதலாம் என்று தோன்றுகிறது. இனியும் பில்டப் செய்துகொண்டிருக்காமல் நேரடியாக ரிஸல்டுக்குப் போய்விடுவது நல்லது என்பதையும் உணர்கிறோம். பரிசுகளுக்கான இடங்களுக்கு பலத்த போட்டியுடன் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்களுடன் சில கதைகள் இருந்தமையால் முதல் மூன்று இடங்களை இரண்டிரண்டு கதைகள் பகிர்ந்துகொள்கின்றன.

முதல் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சிலை ஆட்டம்    -ஆர்விஎஸ்
http://www.rvsm.in/2011/10/2011.html

விண்டேஜ்    -பினாத்தல் சுரேஷ்
http://penathal.blogspot.com/2011/10/vintage-2011.html

இரண்டாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சட்டென நனைந்தது ரத்தம்    -ஜேகே
http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html

கனவில் எழுதப்படும் கதை    -நந்தாகுமாரன்
http://nundhaa.blogspot.com/2011/10/2011.html

மூன்றாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சவால் சிறுகதை    -இளா
http://vivasaayi.blogspot.com/2011/10/2011.html

கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு    -சி.பி.செந்தில்குமார்
http://adrasaka.blogspot.com/2011/10/kovai-preethi-murder-case.html


இறுதிச் சுற்றுக்கு வந்த 15 கதைகளில் மற்ற 9 கதைகள் : இவையும் அறிவிக்கப்படாத ஆறுதல் பரிசுகளைப் பெற இருக்கின்றன.

நகல்    -கோமாளி செல்வா   
http://koomaali.blogspot.com/2011/10/2011.html00

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட    -சன்   
http://writersun.blogspot.com/2011/10/2011.html

கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும்    -சரவணவடிவேல்.வே    http://saravanaidea.blogspot.com/2011/10/2011.html

உதயசூரியன்    -கார்த்திக் பாலா   
http://kanakkadalan.blogspot.com/2011/10/2011.html

அர்த்தமுள்ள குறியீடு         -ஸ்ரீ மாதவன்    http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html

ரங்கு குரங்கு ஆன கதை    -வெண்புரவி   
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

பீமனின் பராக்ரமம்    -இராஜராஜேஸ்வரி   
http://jaghamani.blogspot.com/2011/10/2011.html

குறிப்பறிதல்    -நவநீதன்   
http://navaneethankavithaigal.blogspot.com/2011/10/2011.html

மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும்    -சன்    http://writersun.blogspot.com/2011/10/2011_31.html

இவை தவிரவும் போட்டியில் கலந்து கொண்ட பலரும் மிகுந்த ஆர்வத்துடன் புதுமையாகவும், சுவாரசியமாகவும், நிறைவாகவும் கதை சொல்லியிருந்தார்கள். வேறு பல காரணிகளில் சிறப்பாக விளங்கிய கதைகளும் அனேகம் இருந்தன. அவற்றில் மனோ எழுதிய ’நீதானே என் பொன்வசந்தம்..’, அபிமன்யு எழுதிய ’அலைபேசி’, கணேஷின் ‘அறியா உலகம்’, பார்வையாளன் எழுதிய ‘பாப்பா போட்ட தாப்பா’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். இவை நூலிழையில் பரிசுகளைத் தவறவிடுகின்றன.

வெற்றிபெற்றோருக்கும், கலந்துகொண்டோருக்கும் வாழ்த்துகள். வாழ்த்துவதற்கு வெற்றியை விடவும் பங்கேற்பு என்பதே சிறந்த காரணி என்பதை அறிவீர்கள். இப்படியொரு நல்வாய்ப்பினை நல்கிய ஆதி, பரிசல் ஆகியோருக்கு நன்றிகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன் -

அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம்.அப்துல்லா.

*
போட்டிக்களத்திலிருந்த மொத்தக் கதைகளின் வரிசையையும் இந்த இணைப்புகளில் நீங்கள் காணலாம். இணைப்பு 1, இணைப்பு 2. களத்திலிருந்தவை மொத்தம் 78 கதைகளாகும்.

இன்று சுடுவது நிச்சயம் –என்றொரு கதையை வேங்கட ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதியிருக்கிறார். போட்டிக்கான இறுதிநாளைக் கடந்து அனுப்பப்பட்டதால் இதை போட்டிக்கு ஏற்கமுடியவில்லை. போட்டிக்கல்ல என்று குறிப்பிட்டே ஒரு கதையும் தாமதமாக எழுதப்பட்டிருந்தது. நீச்சல்காரன் என்பவர் எழுதிய கஞ்சத்தின் தலைவா! என்பதே அது. ஆகவே அதுவும் போட்டியில் இல்லை. முடிவுகள் வெளியாகுமுன்பே ஒரு ஆர்வத்தில் வெளியான விமர்சனங்களை கொண்டு கணிக்கப்பட்ட ஒரு பதிவு பார்வையாளனால் எழுதப்பட்டிருந்தது மற்றொரு சுவாரசியம்.

போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும், பின்னணியில் இருந்த நண்பர்களுக்கும், கடினப் பணியை மேற்கொண்ட நடுவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு விபரங்களை விரைவில் இன்னொரு பதிவில் காணலாம். பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் இல்லம் தேடி வரும். அவர்கள் தயவுசெய்து தங்கள் இந்திய முகவரிகளை thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

-பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன்.

*

Monday, November 14, 2011

சவால் சிறுகதைப்போட்டிக் கதைகள் : விமர்சனம் -2

அன்பு நண்பர்களே, சவால் சிறுகதைப்போட்டிக்கான நடுவர் குழு, அதன் பணியை நிறைவுசெய்துவிட்டார்கள். முடிவுகள் நாளை வெளியாகும். 3 பேர்கள் உள்ள அந்தக் குழு இணைந்தளித்த சிறிய நறுக் விமர்சனங்களின் இரண்டாம் பகுதி இதோ இங்கே.. உங்களுக்காக. இதன் முதல் பகுதியைக் காண முந்தைய பதிவுக்குச் செல்லுங்கள். விமர்சனங்கள் உங்கள் மீதானதல்ல, உங்களுடைய இந்த தனிப்பட்ட படைப்பின் மீதானதுதான். அவற்றை ஆரோக்கியமான நோக்கத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கவும், வெற்றிநடை போடவும் குழுவின் சார்பாக வாழ்த்துகள்.!

____________________________________________________________________

 

38    அர்த்தமுள்ள குறியீடு        -ஸ்ரீ மாதவன்   

http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html

கடத்தல், போலிஸ் கதைதான்.  சூப்பரிண்டெண்ட் ரேங்கில் இருப்பவரை பிரத்யேக செக்யூரிட்டி ரேஞ்சில் கேரக்ட்ரைசேஷன் செய்திருக்க வேண்டாம்.  குறியீடு என்பது யூசர்நேமையும் குறிக்கும் என்று கதையிலேயே குறிப்பாக சொல்லிவிட்டார்.  லாப்டாப்பிலிருக்கும் டேட்டாவை பாதுகாக்க ஏகப்பட்ட டெக்னிகல் விஷயங்கள் கதை படிப்பதை அந்நியபடுத்திவிடுகின்றன.

*****

39    தொலைநோக்கிப் பார்வை    -ராதாகிருஷ்ணன்   

http://www.greatestdreams.com/2011/10/2011.html

அஸ்ட்ரானமி, நட்சத்திரம் என்று புதிய கதைக் களன்.  ஆனால் அம்புலிமாமா கதைகளை நினைவூட்டும் நடை கொஞ்சம் தடங்கலாக இருக்கிறது.  ஏதோ குறியீடு, புத்தகம், கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்படும் சங்கேதங்கள் என்றெல்லாம் வருகிறது. அவை என்னவென்று சொல்லாமல் கதை பயணிப்பதால் அழுத்தம் இல்லை.

*****

40    சார் என்கிற சாரங்கன்    -ஷைலஜா   

http://shylajan.blogspot.com/2011/10/2011.html

கோவில் நகைக் கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.  லாக்கர் பாஸ்வேர்டை மிரட்டி வாங்குகிறார்கள்.  இன்னொருபக்கம் விஷ்ணுபிரியாவே கொண்டு போய் கொடுக்கிறார். பாஸ்வேர்ட் தெரிந்த முகுந்த் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கோகுல் கொள்ளையடிக்க எதற்கு இத்தனை சுற்றல் என்று தோன்றியது.  விஷ்ணுவை விஷ்ணுப்ரியாவாக்கி, Sir என்பதை சாரங்கனாக்கி ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்.  நல்ல முயற்சிதான். ஆனால் த்ரில்லருக்கான வடிவமைப்பு வரவில்லை கதையில்.

*****

41    சேலன்ஜ்            -பழ மாதேசு   

http://kavithaimathesu.blogspot.com/2011/10/blog-post_27.html

பொண்ணுங்க கடத்தல் பத்தின கதை. ஏகப்பட்ட போலிஸ்காரர்கள் வருகிறார்கள்.  கடத்தல் கூட்டத்தை கைது செய்து விடுகிறார்கள்.  சங்கேத குறியீடு அனுப்புகிற இன்ஃபார்மர், பின்பு ஃபோன் செய்து அவரே அதை விளக்கியும் விடுகிறார்.  பின் எதற்கு சங்கேதம் எல்லாம்?
"

*****

42    கதை விடலாமா?        -சூர்யா ஜீவா   

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011_28.html

சவால் போட்டிக்காக கதை எழுதுவதையே கதையாக கொடுத்திருக்கிறார். கதாசிரியரின் நண்பர் நிறைய ஓட்டுகள் போடுவதாக உறுதி அளித்திருந்ததால் கதையை போட்டிக்கு அனுப்பிவிட்டாராம்.  நல்லது.

*****

43    ஐ.டி            -சூர்யா ஜீவா   

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011_31.html

தொடக்கத்தில் ஏதோ பெரிய ரகசிய அமைப்பை பற்றி வருகிறது.  ஒரு சங்கேதம் பேப்பரில் கொடுக்கப்பட்டு, அதற்கு வீடியோ கான்ஃபரன்சிங்கில் விளக்கம் சொல்லப்பட்டு, அதையொட்டி ரேடியோவில் தொடர்பு கொண்டு... தலை சுற்றுகிறது.  கடைசியில் பார்த்தால் ஆளுங்கட்சி சதி என்று முடிகிறது.

*****

44    கனவில் எழுதப்படும் கதை    -நந்தாகுமாரன்   

http://nundhaa.blogspot.com/2011/10/2011.html

Recursive தொடர் கனவுகளாக சவால் சூழல் சித்திரிக்கப்படுகிறது.  அருமையான உத்தி.  முடிவிலிருந்து தொடக்கத்திற்கு சர்க்குலர் லிங்க் இருக்கிறது.  ஆனால் முதல் காட்சியும் இரண்டாம் காட்சியும் சரியாக இணையவில்லை.  புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள்.   ஸ்பெஷல் பாராட்டுகள்.

*****

45    வினை            -நம்பிக்கை பாண்டியன்   

http://npandian.blogspot.com/2011/10/2011.html

மற்றொரு துப்பறியும் கதை. ஃபோன் வேலை செய்யாததால் நண்பன் மூலம் கடிதத்தில் சங்கேத குறியீடுகளை கொடுத்தனுப்புகிறார் துப்பறிபவர். ஹ்ம்ம்... கெடுவான் கேடு நினைப்பான் என்ற மாரலோடு முடிகிறது கதை. அழுத்தமான  திருப்பங்கள் இல்லை.

*****

46    ஒரு கிராம் சொர்க்கம்    -மனோ   

http://feelthesmile.blogspot.com/2011/10/2011_29.html

போதை பொருள் கடத்த சங்கேத மொழி பயன்படுத்துகிறார்கள் என்று பில்டப் கொடுத்துவிட்டு சாதாரண அரசு பேருந்தில் கடத்துகிறார்கள்.  போலிஸ், இன்ஃபார்மர், டபுள் கிராஸிங் எல்லாம் தாண்டி கடைசியில் மாணவர் கலவரத்தினால் போதை மருந்து அழிந்து போகிறது.  போலிஸ் துறையின் உள்ளடி வேலைகள் இன்னும் நம்பும்படியாக சித்திரித்து இருக்கலாம்.

*****

47    நீதானே என் பொன்வசந்தம்..    -மனோ   

http://feelthesmile.blogspot.com/2011/10/2011_30.html

இன்ஃபார்மர் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கும் கடத்தல் கதை.  அதனால் சவால் சூழல் சரியானபடிக்கு பொருந்தவில்லை.  ஆனாலும் அது பேக்ட்ராப்பில் எங்கேயோ நிகழ்ந்திருக்கின்றது என்று புரிகிறது.  இன்ஃபார்மர் என்பது ஒரு நெட்வொர்க்கிலிருந்து கொண்டு தகவல்களை வெளியே கசிய விடுவது.  மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு எந்தமாதிரியான நிழல் அமைப்புகளிலிருந்து தகவல் பெறுகிறார் என்பது தெரியாததால் கதையின் நம்பகத்தன்மை குறைகிறது.  மற்றபடி நல்ல முயற்சி.

*****

48    பொறி            -பரிவை. சே.குமார்   

http://vayalaan.blogspot.com/2011/10/2011.html

துப்பறியும் கதைக்கு ஏற்ற தலைப்பு. கிட்னி திருடும் கும்பலின் இருப்பிடத்தை சங்கேதமாக போலிஸுக்கு அனுப்புகிற இடம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.  ப்ரிண்ட் அவுட் எடுத்து, பிறகு நேரில் போய்ச் சொல்லி, சவால் சூழல் எந்த இடத்தில் பொருந்துகிறது என்று புரியவில்லை.

*****

49    பீமனின் பராக்ரமம்        -இராஜராஜேஸ்வரி   

http://jaghamani.blogspot.com/2011/10/2011.html

தொன்ம வரலாற்றின் பின்னணியில் புதிய கதைக்களன்.  மஹாவிஷ்ணுவின் அவதாரமாக சாரங்கபாணி எஸ்பி கோகுலாக வருகிறார். பிறகு அவருக்கே விஷ்ணு ஃபோன் செய்கிறார் என்னும்போது லாஜிக் இடர்கிறது. தவறான குறியீட்டால் பீமன் பாதி சிக்கிக் கொள்கிறான் என்னும் கற்பனை ரசிக்க வைக்கிறது.  நல்ல முயற்சி.

*****

50    உளவுத்துறை        -பன்னிக்குட்டி ராம்சாமி   

http://shilppakumar.blogspot.com/2011/10/2011.html

கம்ப்யூட்டர் கேம் பிரியரான எஸ்பிக்கும் இன்ஃபார்மர் விஷ்ணுவிற்கும் நடக்கும் கம்யூனிகேஷன் பற்றி போலிஸார் குழம்புகிறார்கள்.  சவால் சூழலுக்கு பொருத்தமாகவே கதை இருக்கிறது.  முடிவில் வாசகர்களிடம் புதிரையெல்லாம் விடுவித்து விளக்கம் சொல்லிவிடுகிறார்.  சுவாரசியத்தை இன்னும் அதிகபடுத்தியிருக்கலாம்.

*****

51    சித்தரின் எழுத்துக்கள்        -பழ மாதேசு   

http://kavithaimathesu.blogspot.com/2011/10/blog-post_29.html

சித்தர் பூமி, ஹெச்ஐவி என்று புதுக் கதைக்களன்.  குறியீட்டை தப்பாக தரச் சொல்லும் ஐஜி ஒரே நிமிடத்தில் மனம் மாறுவது சற்று இடறல்தான்.  நடுநடுவே தமிழையே ஆங்கிலத்தில் எழுதி வைத்திருப்பது அசிரத்தையை காட்டுகிறது. 

*****

52    களைகள் இங்கு கொல்லப்படும்    -வைகை   

http://unmai-sudum.blogspot.com/2011/10/2011.html

ஆயுத கடத்தல் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது.  ஒரு க்ளூவை மாற்றி, அதை மீண்டும் மாற்றி என்று டபுள் ட்ரிபிள் கேம்கள்.  முடிவில் கெட்ட போலீஸ்காரரை இன்னொரு போலிஸ்காரர் என்கௌண்ட்டர் செய்துவிட போலிஸ் டிபார்ட்மெண்ட்டின் மானம் காப்பாற்றப்படுகிறது. ஆனால் அழுத்தமாக வரவில்லை.

*****

53    கதையின் கதை..        -பன்னிக்குட்டி ராம்சாமி   

http://shilppakumar.blogspot.com/2011/10/2011_30.html

சவால் சூழலின் புகைப்படத்தையே துப்புதுலக்கி கதையாக செய்திருக்கிறார். போட்டோவில் இருக்கும் எஸ்பியை மெய்யாகவே கண்டுபிடிக்கிறார்கள்.  அந்த சரடு நன்றாக இருந்தது.  ஆனால் அதற்குள் கதை முடிந்துவிட்டது.

*****

54    புத்தர் சிரிக்கிறார்        -பார்வையாளன்   

http://pichaikaaran.blogspot.com/2011/10/2011_30.html

அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகளின் பின்புலனில் சவால் சூழலை பொருத்தி எழுதப்பட்ட கதை.  நீளமாக இருந்தாலும் 1500 வார்த்தைகளுக்கு மிகவில்லை.  இன்ஃபார்மர் என்பது ஒரு சிற்றிதழ் என்பது நல்ல கற்பனை. கடித பரிமாற்றங்கள் மற்றும் டைரி குறிப்புகளில் கதை சொல்லப்படுகிறது.  கொஞ்சம் பிரச்சார நெடி தூக்கலாக இருப்பதால் கதையம்சம் மட்டுப்பட்டு விடுகிறது.

*****

55    போட்டி     -மிடில்கிளாஸ் மாதவி   

http://middleclassmadhavi.blogspot.com/2011/10/2011.html

ட்ரெஷர் ஹண்ட் பின்னணியில் கதை நடக்கிறது. அட்லாஸை வைத்து புதிரை அவிழ்க்கிறார்கள். புதிரில் அதிக கவனம் செலுத்தியதால் மற்ற சம்பவங்கள் எலலாம் அழுத்தமில்லாமல் நடக்கின்றன.  முடிவில் காதலர்கள் இணைந்து சுபமாக முடிகிறது.

*****

56    கத்தியின்றி ரத்தமின்றி    -பார்வையாளன்   

http://pichaikaaran.blogspot.com/2011/10/2011_3324.html

ஃபோன் மூலமாக அமானுஷ்ய கட்டளைகள் என்று தொடங்கி, முடிவில் அணுசக்திக்கு ஆதரவான சதியாக முடிகிறது.  கதையின் தொடக்கத்தில் வரும் அடல்ட்ஸ் ஒன்லி கதை ஒட்டாமல் நெருடலாக இருக்கிறது.  முடிவில் இன்னும் நம்பும்படி அமைந்திருந்தால் சிறப்பான கதையாக அமைந்திருக்கும்.

*****

57    குறியீடு            -ப. அருண்   

http://aalunga.blogspot.com/2011/10/2011.html

நல்ல லாஜிக்.  பாஸ்வேர்ட் கேட்டவன் உண்மையில் கேட்டானா, இல்ல தவறாக நோக்கத்தில் கேட்டானா என்பதை கண்டுபிடிக்க நல்ல திட்டம்.  இதற்கு மாதவனிடமே கேட்டு சரி பார்த்திருக்கலாமே என்று தோன்றாமலும் இல்லை.  இன்னும் விரிவாக எடுத்து சென்றிருந்தால் நல்ல கதையாக உருவெடுத்திருக்கும்.

*****

58    மாயை            -செல்வகணபதி   

http://selvasword.blogspot.com/2011/10/blog-post.html

அலுவலக பாலிடிக்ஸால் தவறான பாஸ்வேர்டு கொடுக்கப்பட அதை அதிர்ஷ்டவசமாக முறியடிக்கிறார்கள்.  யார் செய்த சதி என்பது நல்ல ட்விஸ்ட்.  ஆனால் மெலெழுந்தவாரியாக நடக்கிற சம்பவங்களால் சுவாரசியம் அதிகம் இல்லை.

*****

59    கத்தியின்றி.. ரத்தமின்றி..    -அருண்காந்தி   

http://enviruppam.blogspot.com/2011/10/2011_31.html

பயோ வேஸ்ட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கப் போடும் திட்டம்.  நல்ல முயற்சி என்று சொல்லலாம்.  ஆனால் கதையமைப்பு கொஞ்சம் காலை வாரி விடுகிறது.  இன்னும் 'நறுக்'கென வந்திருக்கலாம்.

*****

60    கண்ணாமூச்சி        -கார்த்திக்   

http://karthiguy.blogspot.com/2011/10/2011.html

அணுசக்தி போராட்ட குழுவிற்கு ஆதரவாக பாற்கடல் விஷ்ணுவே வந்து பாஸ்வேர்டை மாற்றிவிடுவதாக ஒரு கதை.  கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான். ஆனால் அப்படிப்பட்ட குறிப்பு ஏன் வரவேண்டும் என்ற கேள்விக்கு விடையில்லை. 

*****

61    காவல்துறை கருப்பு ஆடு    -ரஹீம் கஸாலி   

http://ragariz.blogspot.com/2011/10/2011compedition-short-story.html

மற்றொரு கடத்தல், கருப்பு ஆடு கதை.  கதை முழுவதும் உரையாடல்களாக வருகிறது.  அப்பட்டமாக தகவல் சொல்லும் பாணியில் அமையாமல் யதார்த்த உரையாடல்களில் கதை சொன்னால்தான் சுவாரசியம் இருக்கும்.  அதுவும் தூரப் போய் செல்ஃபோன் பேசியதால் சந்தேகப்பட்டு மாட்டும் அப்பாவியாக இன்ஃபார்மர் இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

*****

62    பூங்காவுக்குள்ளே புயல்    -பரிவை. சே.குமார்   

http://vayalaan.blogspot.com/2011/10/2011_31.html

ஒரு ரொமான்ஸ் காதல் கதையின் இடையே ஆங்காங்கே சிறுகதைப் போட்டி பற்றியும் வருகிறது.

*****

63    விண்டேஜ்            -பினாத்தல் சுரேஷ்   

http://penathal.blogspot.com/2011/10/vintage-2011.html

விண்டேஜ் கார் வாங்க நடக்கும் போட்டி.  சார், கோகுல், ரெட்டி என்று பலரும் ஏலத்தில் போட்டி போட விஷ்ணு யாருக்கு வேலை செய்கிறான் என்ற சஸ்பென்ஸ். கதை வெகு சுவாரசியம்.  ஆனால் சங்கேத கோட் எதற்கு பரிமாறிக் கொள்கிறார்கள் என்றுதான் புரியவேயில்லை.

*****

64    போர்க்களத்தில் சாய்ந்தால் கூட    -சன்   

http://writersun.blogspot.com/2011/10/2011.html

மந்திரவாதம், ஊடு மாந்த்ரீகம் என்று வித்தியாசமான பின்னணி.  ஆங்கில குறியீட்டை எப்படியோ மாந்த்ரீகத்திற்கு கொண்டு சென்று விட்டார்.  நல்ல சரடு.  முதலில் வரும் காதல் சம்பவங்கள் கதையில் ஒட்டுவதில்லை.  முடிவில் அமானுஷ்யமான திருப்பம்.  நல்ல முயற்சி. 

*****

65    மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும்    -சன்   

http://writersun.blogspot.com/2011/10/2011_31.html

ஜென் மற்றும் ஆர்ட் ஆஃப் மோட்டார் சைக்கிள் பாணியில் எழுதப்பட்ட சிறுகதை.  நல்ல முயற்சி. சவால் சூழலையும் பொருத்துவதற்காக சற்று வளர்த்திருக்கிறார்.  அதற்கப்புறம் ஹெட் மெக்கானிக்கை சந்தித்தப் பிறகுதான் பம்ப் கதையே துவங்குகிறது.  ஆனால் கதையாக பரிமளிக்காமல் ஒரு சுயமுன்னேற்ற கட்டுரையாக நின்றுவிட்டது.

*****

66    காதல் ஒரு பட்டாம்பூச்சி    -விஜயஷங்கர்   

http://vijayashankar.blogspot.com/2011/10/blog-post_31.html

காதல் கதை.  முடிவில் தன் காதலிக்காக அவள் வருங்கால மாப்பிள்ளையை காப்பாற்றப் போகிறான்.  அப்புறம்? என்று பார்க்கும்போதே முற்றும் போட்டுவிட்டார்.

*****

67    சவால் சிறுகதை        -இளா   

http://vivasaayi.blogspot.com/2011/10/2011.html

குழந்தைகளின் கள்ளன் போலிஸ் விளையாட்டில் சவால் சூழலை பொருத்தியிருக்கற வித்தியாசமான கதை. சங்கேத மொழி, ஃபோன் வருவதெல்லாம் குழந்தையின் கற்பனையில் நடப்பதாக அழகாக காட்டி விடுகிறார். போட்டியின் விதிப்படி அது இருக்க வேண்டுமே. கோகுல் மற்றும் கிருஷ் இருவரா இல்லை ஒருவரா என்ற குழப்பம் இருக்கிறது. கதைக்கு உதவியாக சில படங்கள் காட்டப்படுகிறது.  ஆனால் சவால் படம் காணவில்லை. 

*****

68    இரட்டைப்பிறவி விஷ்ணு    -நக்கீரன் ஜெயராமன்   

http://naai-nakks.blogspot.com/2011/10/2011.html

சங்கேத குறிப்பிற்கு கூகுள் மூலமாக பல விவரங்களை சேகரித்து போட்டிருக்கிறார். டெரர் கும்மி போட்டியில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது இவருக்கு.  கதை எழுதும் ஆர்வம் விடாது துரத்திக் கொண்டிருக்கிறது.  சீக்கிரமே கதை எழுதிவிடுவார் என்று நம்புகிறோம்.

*****

69    ஆறாம் அறிவு        -நிஷா   

http://forcenisha.blogspot.com/2011/10/blog-post_31.html

பெண்ணை ப்ளாக்மெயில் செய்பவரை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள்.  அப்புறம் ஒட்டாக சவால் சூழலுக்கான ஃபோட்டோவை சேர்த்து விடுகிறார் கதாசிரியர்.  ஒருவேளை அடுத்த கதையில் சவால் சூழலை வைத்து தொடர்ந்து எழுதுவாராக இருக்கும்.

*****

70    அணு அணுவாய்..        -கதிரவன்   

http://kathir-tamil.blogspot.com/2011/10/2011.html

சங்கேத குறியீட்டின் மூலமாக வீட்டு விலாசம் கண்டுபிடித்து துப்பறியும் கதை.  கொலை செய்தவரின் வீட்டுக்குப் போனால் அணுசக்தி எதிர்ப்பு பிரச்சாரமாக முடிகிறது.  த்ரில்லராக தொடங்கி பெரிய சஸ்பென்ஸ் இல்லாமல் சப்பென முடிந்துவிட்டது போல் இருந்தது.

*****

71    பிரபல எழுத்தாளன் எழுதியது    -பறக்கும் குதிரை   

http://parakkumkuthirai.blogspot.com/2011/10/2011.html

"
இணையத்தில் நடந்த பிரபல தமிழ் எழுத்தாளர்களிடையேயான விவாதத்தை அப்படியே கதை செய்திருக்கிறார்.  விஷ்ணுதர வட்டம், எழுத்தாளர் ஜெயராமன், எழுத்தாளர் ஆறு என்றெல்லாம் வருகிறது.  நல்ல முயற்சி."

*****

72    அகம்            -அகல்விளக்கு   

http://agalvilakku.blogspot.com/2011/10/2011.html

சவால் சூழலை சுற்றி எழுதப்பட்ட கடத்தல் கதை.  நடையை இன்னும் மெருகேற்றியிருந்தால் நன்றாக வந்திருக்கும். குறியீட்டுத் தகவலை கொரியர் டெலிவரியிடமிருந்து கைப்பற்றுவது தவிர வேறு சஸ்பென்ஸ் இல்லாததால் சற்று டல்லடிக்கிறது.

*****

73    வாழ்க்க ஒரு வட்டம்டா -2    -ரவி   

http://mcxu.blogspot.com/2011/10/2-2011.html

கடத்தல், போலிஸ் கதாபாத்திரங்களை வைத்து சைக்ளிக் சம்பவங்களை சித்திரித்திருக்கிறார். நடுவில் சற்று பெயர்க் குழப்பம் வந்துவிடுகிறது.  சம்பந்தபட்டவர்கள் எல்லாரும் இறந்து விடுகிறார்கள்.  இரண்டு கொலை செய்த வின்செண்ட் மட்டும் இருபது கோடியோடு தப்பித்து விடுகிறார்.  வாழ்க்கஒரு வட்டம்டா- 3ல் அவருக்கு தண்டனை கிடைக்குமோ?

*****

74    மூன்றாம் விதி        -ஸ்ரீராம்   

http://engalblog.blogspot.com/2011/10/2011.html

குழப்பங்களின் விதி போல் வரிசையாக எல்லாரும் பணத்தை கண்டெடுக்கிறார்கள். வேறு வழியில் திருட்டு கொடுக்கிறார்கள்.  இறுதியில் வரும் குருமூர்த்தி பாட்டியின் மருமகனா?  பணத்தை முதலில் தவறவிட்டவரோ? அந்தரத்தில் நின்றுவிடுகிறது கதை.  சவால் சூழல் சம்பந்தமில்லாமல் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது.

*****

75    போலீஸா கொக்கா?        -பெசொவி   

http://ulagamahauthamar.blogspot.com/2011/10/2011.html

க்ளூ கொடுத்த பேப்பரிலிருந்து இன்னொரு க்ளூ எடுத்து துப்பு துலக்கிவிடுகிறார்கள்.  நல்ல கற்பனை.  ஆனால் பாத்திரங்கள் எல்லாரும் Confess செய்வது போலவே தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்வதால் கதை போரடிக்கிறது."

*****

76    காக்கும் விஷ்ணு        -பெசொவி   

http://ulagamahauthamar.blogspot.com/2011/10/2011_31.html

சவால் சூழலை வைத்து கம்ப்யூட்டர், டேட்டாபேஸ், பாஸ்வேர்டுன்னு எழுதப்பட்ட கதை.  இறுதியில் தவறான பாஸ்வேர்டையே தப்புந்தவறுமாக உள்ளிட்டால் சரியான பாஸ்வேர்டாகிவிடுகிற கற்பனை நன்றாக இருந்தது.  இறுதியில் வேறொரு விஷ்ணு ப்ரியா வேறு ஃபோன் செய்வதாக முடித்துவிடுகிறார்.  அதனால் சவால் சூழல் முழுவதுமாக பொருந்தாமல் போய்விடுகிறது.  டேட்டாபேசில் சேமித்து வைக்க ஃபாண்ட் கலரெல்லாமா தேவைப்படும்?

*****

77    ரங்கு குரங்கு ஆன கதை    -வெண்புரவி   

http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

கொஞ்சம் நீளமான கதை.  1600 வார்த்தைகளுக்கு மேலே போகிறது.  அங்கங்கே சில நல்ல நகைச்ச்சுவையும் இருக்கிறது.  கதைக்களனாக திருப்பரங்குன்றம் வருகிறது.  நண்பர்கள் தண்ணியடித்துவிட்டு, திறந்தவெளியில் படிகளில் ஏறிப் போய் வாந்தி எடுப்பதாக சொல்லப்படுகிறது.  திருப்பரங்குன்றம் கோவில் குடவறை முறையில் குன்றின் உள்ளிருந்து ஏறிப்போகும் முறையில் கட்டப்பட்டது என்று தெரியாமல் எழுதிவிட்டாரோ.  குரங்கு கடித்துவிட டாக்டர் சிகிச்சை, கடித்த குரங்கு செத்து போகிறது என்று போய் முடிவில் டாக்டர் மங்களேஸ்வரன் என்னும் மங்கியோடு முடிகிறது.  கொஞ்சம் எடிட் செய்திருந்தால் நல்ல கதையாக வந்திருக்கும்.

*****

78    குழப்பம்            -வெளங்காதவன்   

http://velangaathavan.blogspot.com/2011/10/2011.html

கல்லூரிக் காதல் பின்னணியில் எழுதப்பட்ட கதை.  குறியீட்டிற்கு ஜாலியான ஒரு விளக்கமும் சொல்லபடுகிறது.  ஆனால் கதையோடு பொருந்தவில்லை.  சும்மா ஜாலியாக எழுதப்பட்ட கதை.

.

Saturday, November 12, 2011

சவால் சிறுகதைப்போட்டிக் கதைகள் : விமர்சனம் -1

அன்பு நண்பர்களே, சவால் சிறுகதைப்போட்டிக்கான நடுவர் குழு, கதைத் தேர்வில் மூழ்கியிருக்கிறது. 3 பேர்கள் உள்ள அந்தக் குழு இணைந்தளித்த சிறிய நறுக் விமர்சனங்களின் முதல் பகுதி இதோ இங்கே.. உங்களுக்காக. இதன் இரண்டாம் பகுதி 14ம் தேதியும் தொடர்ந்து போட்டி முடிவுகளும் அறிவிக்கப்படும். விமர்சனங்களை உங்கள் மீதானதல்ல, உங்களுடைய இந்த தனிப்பட்ட படைப்பின் மீதானதுதான். அவற்றை ஆரோக்கியமான நோக்கத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கவும், வெற்றிபெறவும் குழுவின் சார்பாக வாழ்த்துகள்.!

_________________________________________________________

 

1    உதயசூரியன்    -கார்த்திக் பாலா   

http://kanakkadalan.blogspot.com/2011/10/2011.html

தொடக்கம் நன்றாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் அறிமுகம் கொஞ்சம் நீளம்தான். எஸ்பி திறமையாக சதியை முறியடித்தபிறகு நடக்கும் சம்பவங்கள் சற்றே குழப்பமாக இருக்கிறது.  'உதயசூரியன்' என்ற புத்தகம் கதையில் இடம்பெறுகிறது.  அதற்கும் இந்தக் கதையின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. முடிவில் கொஞ்சம் ஷாக்கான ட்விஸ்ட் அமைந்திருக்கிறது. நல்ல முயற்சி.

***

2    பிளாக் டைமண்ட்    -இளையதாசன்   

http://unmaikaga.blogspot.com/2011/10/b-l-c-k-d-i-m-o-n-d-2011.html

சவால் போட்டிக்கான படம் சரியானபடி உபயோகிக்கப் படவில்லை. கறுப்பு வைரத்தால் ஆன சிலை, அதை கொள்ளையடிக்க ஒரு கொலை அதில் டபுள் கிராஸிங் என்று குழப்பமான கதையமைப்பு.  லாஜிக்கும் ஒட்டவில்லை.

***

3    அவள் வருவாளா?    -இளையதாசன்   

http://unmaikaga.blogspot.com/2011/10/2011.html

காலேஜ் செட்டப்பில் சவால் படத்தை இணைத்து எழுதப்பட்ட கதை. ஆனால் கதையில் அவ்வளவு சுவாரசியமில்லை.  சவால் சூழல் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று போலத்தான் இருந்தது.

***

4    குறுஞ்செய்தி    -ஆ.சுகுமார்   

http://sukumaranandan.blogspot.com/2011/10/2011.html0

பெரிய சதிப்பின்னலைப் பற்றி வருகிறது.  சரியாக புரியவில்லை.  நிறைய சம்பவங்கள் முக்கியத்துவம் இல்லாத வகையில் சித்திரிக்கப்படுகின்றன.  எழுத்துப் பிழை, சொற்பிழைகள் வாசிக்க பெரும் தடங்கல்.  ஸ்டைலிஷாக இருக்க என்று வலிந்து திணிக்கப்பட்ட ஆங்கில உரையாடல்கள் மற்றொரு தடங்கல். இன்னும் முயற்சி செய்தால் நல்ல த்ரில்லர்கள் எழுதலாம்.

***

5    விசாரணை       - ஆ.சுகுமார்   

http://sukumaranandan.blogspot.com/2011/10/2011_08.html

சவால் சூழல் பொருந்தவேயில்லை.  கதையின் முடிவில் எல்லாம் கனவு என்று முடித்துவிட்டார்.  கதையாக உருப்பெறவேயில்லை.

***

6    அலைபேசி        -அபிமன்யு   

http://abimanyuonline.blogspot.com/2011/10/2011.html

தொடக்கத்தில் நல்ல விறுவிறுப்பு.  மர்மம், தீவிரவாத கும்பல், ரகசிய குறியீடு என்றெல்லாம் சுற்றி கடைசியில் கதைப் போட்டி நடத்துபவர்களை கலாய்ப்பதோடு முடிகிறது.  நல்ல முயற்சி.  மீண்டும் படிக்கத் தூண்டுமளவுக்கு சுவாரசியம்.

***

7    மனசாட்சி        -கலாநேசன்   

http://somayanam.blogspot.com/2011/10/2011.html

விவரணைகள் பரவாயில்லை.  சில இடங்களில், விவரணைகளிலிருந்து வசனங்களை வேறுபடுத்த கொட்டேஷன் பயன்படுத்தப்படாதது படிக்க தடைக்கல்லாக இருந்தது.  மும்பையிலிருந்து சென்னை வந்து பிறகு கல்கத்தா போய் பிறகு மிடில் ஈஸ்ட் போகும் கடத்தல் பாதை லாஜிக்கலாக நெருடுகிறது.  திருப்பம் அழுத்தமாக அமையாயததால் அதிகம் சுவாரசியம் இல்லை.

***

8    புதிய தென்றல்    -ஜ.ரா.ரமேஷ்பாபு   

http://meithedi.blogspot.com/2011/10/2011.html

கொஞ்சம் மாறுபட்ட புதிரோடு தொடங்கினாலும் சவால் சூழல் முழுவதுமாக பொருந்தவில்லை.  தவறான குறியீட்டைப் பற்றிய விளக்கம் 'சப்'பென முடிந்துவிட்டது.  ராஜுவின் திருமணத்தை நிறுத்த போடும் திட்டம் கொக்கு தலையில் வெண்ணெய் மாதிரி சுற்றி வளைத்துக் கொண்டு போகிறது.

***

9    சொல்லமறந்த கதை    -ஜ.ரா.ரமேஷ்பாபு   

http://meithedi.blogspot.com/2011/10/2011_11.html

கதை என்று ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.  சும்மா ஜாலியாக போட்டிக்கு அனுப்பியிருப்பார் போல..

***

10    போங்காட்டம்    -ராதாகிருஷ்ணன்   

http://www.greatestdreams.com/2011/10/blog-post_10.html

மாறுபட்ட கதைக்களன். ஆனால் ரொம்பவும் சுத்தி வளைத்து கதைக்குள் வருவதற்கு ரொம்பவும் தாமதமாகிறது. சவால் சூழல் காணப்பட்டாலும், வலியப் பொருத்தியது போலத்தான் இருக்கிறது. தலைப்பிற்கு ஏற்றபடி போங்காட்டம்தான். 

***

11    தடயம்        -அப்துல் பாஸித்   

http://nanbanpakkam.blogspot.com/2011/10/2011.html

டபுள் கேமை வச்சு இன்னொரு கதை.  ஒரு போலிஸ் அதிகாரி அப்படி 'பொக்'குனு உண்மையை எல்லாம் உளறிடுவாரா என்ன.?  இன்னும் கொஞ்ச்ம நல்ல ட்விஸ்ட் கொடுத்திருக்கலாம். 

***

12    அதிர்ச்சி வைத்தியம்        -ஜ.ரா.ரமேஷ்பாபு   

http://meithedi.blogspot.com/2011/10/2011_12.html

முதல் வாக்கியத்திலேயே எழுத்துப் பிழை.  Dean என்பது தவறாக குறிப்பிடப் பட்டிருந்தது.  அடுத்து பார்த்தால் சுப்புவிற்கு ஃபோன் வருகிறது.  அதை அட்டெண்ட் செய்தால் எங்கேஜ்ட் டோன் வருகிறதாம்.  எப்படி ஐயா? கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதையாக வடித்திருக்கலாம்.

***

13    கண்கள் இரெண்டால், உன் கண்கள் இரெண்டால்    -இளையதாசன்   

http://unmaikaga.blogspot.com/2011/10/2011_12.html

எங்கெங்கோ சுற்றிவிட்டு கடைசியில் சவால் சூழலை ஒரு ஸ்கிட் போல செய்து கதைக்குள் கொண்டு வந்துவிட்டார்.  ஆனால் எதற்காக ஒரு டிவி இயக்குநர் ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுக்கிறார் என்று புரியவில்லை.  எப்படியோ கதை டபக்கென முடிந்து விட்டது.

***

14    செல்’லத் தொல்லைகள்    -நாய்க்குட்டி மனசு   

http://venthayirmanasu.blogspot.com/2011/10/2011.html

மாறுபட்ட கதைக் கரு.  கதையின் தொடக்கத்தில் மனோதத்துவ கவுன்சிலிங் என்று வருகிறது. பெயரெல்லாம் கேட்கிறார். பிறகு நடுவில் நாலு சிட்டிங் முடிந்துவிட்டது என்று வருகிறது.  அப்புறமும் பெயரைக் கேட்டுக் கொண்டிருப்பார்களா என்று லேசாக இடறுகிறது. எஸ்பி, கோகுல் என்று இரண்டு வெவ்வேறு பாத்திரங்களா? சவால் சூழலில் அப்படி இல்லையே.  குழப்பம்.  மனோவியாதியால் மாறி மாறி மெசேஜ் அனுப்பியிருப்பதை சொல்லி அப்படியே முடித்துவிடுவதால் வேறு சுவாரசியம் எதுவும் இல்லை. 

***

15    மனதோடு விளையாடு    -பொன்ராஜ் ராமு   

http://mugaavari.blogspot.com/2011/10/2011.html

4th APRIL 2012 என்று தேதி வருகிறது.  எதிர்காலத்தில் எழுதப்பட்ட அத்தியாயமோ என்று சுவாரசியமாக படித்தால், ஏன் அப்படி தேதி குறிப்பிட்டிருக்கிறார் என்று குழப்பமாகி விடுகிறது.  விஷ்ணு இன்ஃபார்மரா இல்லை இன்வெஸ்டிகேஷன்ஆபிசரா? டாக்டர்ஸ் சர்டிபிகேட் எல்லாம் கண்டுபிடித்து துல்லியமாக ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறாரே... எல்லா தகவல்களையும் கொடுத்தவர்  பாஸ்வேர்டை தவறாக கொடுப்பதற்கான காரணத்தை முழுவதும் சொல்லவில்லை.  சவால் சூழல் ஒட்டாமல் இருக்க, கதை வேறு தளத்தில் போகிறது போல் ஒரு உணர்வு.  இன்னும் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதை கிடைத்திருக்கும்.

***

16    கண்ணனும் கண்ணனும்    -சுரேகா   

http://www.surekaa.com/2011/10/2011.html

வித்தியாசமான கதைக்களன்.  கதையையும் கதை போட்டியையும் இணைத்து பின்னியிருக்கிறார்.  ஆனால் 'கண்ணனும் கண்ணனும்' என்று ஏன் தேர்ந்தெடுத்து சென்னைக் கண்ணன், திருப்பூர் கண்ணன் என்றெல்லாம் சுற்ற வேண்டும் எனப் புரியவில்லை. கதைப் போட்டியை நன்றாகவே கிண்டல் அடித்திருந்தார். பரிசலும் ஆதியும் கவனிக்க வேண்டும்.  நல்ல முயற்சி.  ஆனால் முழுமையடையவில்லை.

***

17    கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும்    -சரவணவடிவேல்.வே   

http://saravanaidea.blogspot.com/2011/10/2011.html

கதையாக இல்லாமல், வாசகனோடு உரையாடலாக எழுதியிருக்கிறார். நல்ல நகைச்சுவை வருகிறது இவருக்கு.  சவால் சூழலை பொருந்தாமல் பொருத்தி ஒரு சைக்காலஜிக்கல் பிராஜெக்ட் என்று சமாளித்து விட்டார்.  கடைசியில் 'இந்த புகைப்படத்திற்கு இந்தக் கதை போதும்' என்று ஒரு வரி சேர்த்திருப்பதை போட்டி அமைப்பாளர்கள் பார்வையில் பட்டதா? படாவிட்டால் இப்பொழுதாவது படட்டுமே.

***

18    சட்டென நனைந்தது ரத்தம்    -ஜேகே   

http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html

முதலில் கொஞ்சம் புரிதல் சிக்கல் இருந்தது.  மீண்டும் வாசித்தபோது, இரு பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறார் என்று புரிந்தது. திலீபன் குமரனை சந்தேகிக்கும் இடம் சற்று சறுக்கினாலும், நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக அமைந்திருக்கிறது. சவால் சூழலை இயல்பாக பொருத்தி இருந்தார்.  அருமை.

***

19    ஹோட்டல் வசந்தம்        -பிரபாகரன்.கு   

http://prabaonline.blogspot.com/2011/10/blog-post.html

சவால் சூழலுக்காக எழுதப்பட்ட கதைதான். மனைவியின் இறப்பிற்கு காரணமானவனை, தனக்கே தெரியாமல் கணவன் மாட்டிவிடுகிறான்.  ஆனால் அந்த கடத்தல் சமாச்சாரஙக்ள் அவதி அவதியாக சொல்லப்பட்டு கதையின் சுவாரசியம் கெட்டுவிடுகிறது.  இன்னும் ஸ்ட்ரீம்லைன் செய்திருந்தால் நல்ல பழிவாங்கும் கதையாக எடுபட்டிருக்கும்.  இதில் எதற்கு ஹோட்டலைக் கொண்டு வந்தார்? கேபிள் ஷங்கருக்காகவா? :)

***

20    என்னை கண்காணிப்பவன்    -கே.எஸ்.சுரேஷ்குமார்   

http://veeedu.blogspot.com/2011/10/2011.html

கிரைம் களனிலேயே சற்று வேறு கோணத்தில் கதை சொல்லியிருக்கிறார்.  கோகுலுக்காக விஷ்ணு இன்ஃபார்மராய் மாறுவதாய் நமக்கு சொல்லிக் கொண்டே வருபவர் கடைசியில் அவர் ஏற்கெனவே இன்ஃபார்மராய் இருக்கிறார் என்று சொல்லும்போது லாஜிக் இடிக்கிறது. செல்ஃபோன் சர்க்யூட்டில் கொண்டு போய் ஏன் பாஸ்வேர்டை பதுக்கி வைக்கிறார் என்பதுதான் புரியவே மாட்டேன் என்கிறது.

***

21    வாழ்க்க ஒரு வட்டம்டா    -ரவி   

http://mcxu.blogspot.com/2011/10/2011.html

முதல் வரியிலேயே கதையை சவால் சூழலுக்குள் கொண்டு வந்து விடுகிறார்.  சினிமா டிக்கெட்டிற்கான குறியீட்டை மாற்றிக் கொடுத்து பழி தீர்க்கிற கதை. சப்பென முடிந்து விடுகிறது.

***

22    ஒன்றுக்குள் இரண்டு    -மனோ   

http://feelthesmile.blogspot.com/2011/10/2011.html

மல்டிப்பிள் பர்சனாலிட்டி வைத்து கிரைம் கதை.  ஆங்காங்கே நல்ல விவரணைகள் கைகொடுத்தாலும், சவால் சூழலை கதையில் காணவில்லை என்பது மிகப் பெரிய குறை.  முடிவில் ஒரு டாக்டர் வந்து எல்லா புதிர்களையும் ஜஸ்ட் லைக் தட் விளக்கி விட்டுப் போகிறார். 

***

23    அம்பு ஒன்று.. இலக்கு மூன்று    -முத்துசிவா   

http://muthusiva.blogspot.com/2011/10/2011.html

ஃப்ளாஷ்பேக், கரெண்ட் என்று மாறி மாறி கதை சொல்வது நல்ல உத்திதான்.  ஆனால் அதிகம் குழப்பாமல் இருக்க வேண்டும்.  அந்த ரகசிய குறியீட்டிற்காக போலீஸ், ஆதி என்று எல்லாரும் அடித்துக் கொள்ளும்போது விஷ்ணு எதற்காக அதை போலிஸிடம் கொடுக்க வேண்டும்? அவரே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேள்வி வருகிறது.  முடிவில் சில ட்விஸ்ட்கள் இருந்தாலும் அதை அவசர அவசரமாக கொட்டியது போல் இருந்தது.  நல்ல முயற்சி.

***

24    திருட்டைத் திருடிய திருட்டு    -ஆ.சுகுமார்   

http://sukumaranandan.blogspot.com/2011/10/2011_20.html

போலிஸ் விசாரணை சம்பந்தபட்ட மற்றுமொரு த்ரில்லர்.  செல்ஃபோன் சர்வீஸ் செய்பவர் பார்வையில் சவால் சூழலை பொருத்த முயற்சித்திருக்கிறார்.  ஆனால் லாஜிக் நிறையவே இடிக்கிறது.  ஏகபட்ட தொழில்நுட்பத் தகவல்கள் தடுமாற வைக்கின்றன.

***

25    குறிப்பறிதல்    -நவநீதன்   

http://navaneethankavithaigal.blogspot.com/2011/10/2011.html

சவால் சூழலில் இருக்கும் சங்கேத மொழியைப் பற்றிய முதல் கதை.  தவறான குறியீட்டிற்கான விளக்கம் புதுமையாக இருந்தது.  ஆனால் அந்த குறியீட்டை வைத்து போலீஸ் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை. நல்ல கதைக்களன்.  இன்னும் நன்றாக செய்திருக்கலாம்.

***

26    சிலை ஆட்டம்    -ஆர்விஎஸ்   

http://www.rvsm.in/2011/10/2011.html

சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற கதை உத்தி.  முதலிலேயே ஒரு மரண வாக்குமூலம், பின் கொலை, துப்பு துலக்குதல் என்று பரபரவென தொடங்குகிறது. சவால் சூழலை வெகு நேர்த்தியாக பொருத்தியிருக்கிறார்.  கதையும் முழுமையான வடிவத்தில் திருப்பங்களுடனும், தர்க்கத்துடனும் அமைந்திருந்தது.  சங்கேத குறிப்புக்கு நீளமான விளக்கமும் வருகிறது. முடிவு கொஞ்சம் டல்தான். சாகும் தறுவாயில் அவசர அவசரமாக எழுதுபவன் 'வஸந்த் பவன் மசால்தோசையும், டிகிரி காபியையும் ருசித்தி...' என்றெல்லாமா எழுதுவான் என்று கேள்வி எழாமல் இல்லை.  இந்த சவால் சூழலுக்கு பொருத்தமான சிறப்பான கதை.

***

27    நகல்    -கோமாளி செல்வா   

http://koomaali.blogspot.com/2011/10/2011.html

இன்ஃபார்மரை உளவாளியாக்கிக் கொண்டு அறிபுனைவாக எழுதியிருக்கிறார். இரண்டு நாட்களில் க்ளோனிங், புளுட்டோனியம் குண்டு, வாய்ஸ் சென்ஸார் என்று பெரிய ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறார்.  ஆனால் இவையெல்லாம் அழுத்தமாக பதியவில்லை.  உதாரணத்திற்கு நேரே சந்திக்கும் கோகுலிடம், விஷ்ணு மெனக்கெட்டு குறியீடை கடித பாணியில் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்கிறார்.  பிறகு கொஞ்சம் காலக் குழப்பம் வேறு இருக்கிறது.  மற்றபடி நல்ல முயற்சி.

***

28    கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு    -சி.பி.செந்தில்குமார்   

http://adrasaka.blogspot.com/2011/10/kovai-preethi-murder-case.html

தலைப்பும், கதை உத்தியும் வித்தியாசம்தான்.  டைரி குறிப்புகள் வழியாக கதையை கொண்டு போயிருக்கிறார்.  டைரி குறிப்புகள் ஒப்புதல் வாக்குமூலம் ரேஞ்சுக்கு 'அவளை கரெக்ட் பண்ணினேன். இவ ரோலை அவ செய்வா' இல்லாம இயல்பா இருந்திருக்கலாம்.  சவால் சூழலை நல்லா பொருத்தமா இணைச்சிருக்கார்.  புஷ்பா தங்கதுரை ஸ்டைல்ல நல்ல த்ரில்லர்.

***

29    பாப்பா போட்ட தாப்பா!    -பார்வையாளன்   

http://pichaikaaran.blogspot.com/2011/10/2011.html

முதல் வரியிலேயே கதைக்குள் இழுத்து விடுகிறார். பிறகு ஒரு A ஜோக் வேறு வருகிறது. வித்தியாசமான கதை சொல்லும் முறையோடு ஆங்கங்கே சில நகைச்சுவைகளும் நன்றாக வந்திருக்கின்றன. முதலில் சில தர்க்கக் குழப்பங்கள் ஏற்பட்டாலும், முடிவில் வரிசையாக விளக்கங்கள் கொடுத்து ட்விஸ்ட்டோடு முடிகிறது கதை.  கொஞ்சம் Rawவாக இருந்தாலும் படிக்க சுவாரசியம். 

***

30    தனக்கென்று வந்துவிட்டால்..    -ராஜி வெங்கட்   

http://suharaji.blogspot.com/2011/10/2011.html

நல்ல சஸ்பென்ஸோடு எழுதப்பட்ட த்ரில்லர்.  சிம்பிளான நடையில் குழப்பமில்லாமல் இருக்கிறது. கடத்தின பொண்ணுங்களை மூணு மாசம் மறைச்சி வச்சிருந்து கப்பல்ல கொண்டு போவாங்களா போன்ற கேள்விகள் எழுந்தாலும், சவால் சூழலை சரியானபடிக்கு பொருத்தி எழுதியிருக்கிறார்.  நல்ல முயற்சி.

***

31    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி        -ராம்வி   

http://maduragavi.blogspot.com/2011/10/2011.html

நிதானமான எழுத்து.  ஊருக்கு உதவும் பையனை தவறாக புரிந்து கொள்ளும் தந்தை இறுதியில் பெருமிதம் அடைகிறார். நடுவில் சவால் கதைப் போட்டியை நுழைத்து சவால் சூழலை விளக்கிவிடுகிறார்.  அதுதான் ஒட்டாமல் நிற்கிறது.

***

32    கல்லூரி சாலை        -எ.யுகேந்தர்குமார்   

http://ivanbigilu.blogspot.com/2011/10/2011.html

ட்ரெஷர் ஹண்ட் விளையாட்டை வைத்து எழுதப்பட்ட கதை.  முதல் முயற்சியாக இருக்கலாம்.  சங்கேதத்தை சற்று சாமர்த்தியமாக வளைத்து பயன்படுத்திக் கொண்டுவிட்டார். அதிக சுவாரசியம் இல்லாத போதும் நல்ல முயற்சி.

***

33    அறியா உலகம்        -கணேஷ்   

http://ganeshmoorthyj.blogspot.com/2011/10/2011.html

கிட்டத்தட்ட ஒரு நெடுங்கதையை சிறுகதையாக சுருக்கி சவால் சூழலை நுழைத்து எழுதியிருக்கிறார். இவ்வுலகின் பெரும்பகுதியான நீரில் மனிதன் கண்டறியாத ஒரு உலகம் இயங்கி வருகிறது என்ற கற்பனை.  சங்கேத மொழியை எப்படி உபயோகிப்பது என்பதற்கான வழிகளும் புதுமை.  அரிதான கற்பனை.  இன்னும் கொஞ்சம் சீர்படுத்தியிருந்தால் சிறப்பான கதையாக அமைந்திருக்கும்.

***

34    கனவுகளின் நிறம் காக்கி    -சூர்யா ஜீவா   

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011.html

காக்கி உடையின் மேல் காதலாக இருப்பவர் என்று தொடங்கி, இறுதியில் அவர் ஒரு சாதாரண டிரைவர்தான் என்று முடியும் கதை.  சவால் சூழல் சும்மா வந்து போகிறது. 

***

35    யாரிடமும் சொல்லாத கதை    -ஆர்விஎஸ்   

http://www.rvsm.in/2011/10/2011_26.html

அழகான ஆண்களை கடத்தும் கதை.  இவருக்கு விவரணைகள் நன்றாக வருகிறது.  ஆனால் இந்தக் கதையில் சமபவங்கள் என்றுமே எதுவுமே இல்லை.  டீக்கடை வாசலில் இருக்கும் இளைஞனை ஏமாற்றி தவறான வழிக்கு திருப்பி விடுகிறார்களாம்.  இந்த மாதிரி தீம்களுக்கு இன்னும் ஷார்பாக எழுதியிருக்க வேண்டும்.

***

36    முடியலை ஆனால் முடியும்..    -ஆசியா உமர்   

http://asiyaomar.blogspot.com/2011/10/2011.html

தலைப்பைப் போல முடியாத கதைதான்.  சவால் சூழலைச் சுற்றி பாத்திரங்களை அடுக்கிக் கொண்டே கதையை ஜாங்கிரி சுற்றி விடுகிறார்.  எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்ற சிக்கல்.  கடைசியில் புதிய பாத்திரத்தை அறிமுகப்படுத்தி கதையை இன்னும் நீட்டித்துக் கொண்டே போகிறார். குழப்பமான கதை.

***

37    மீண்ட சொர்க்கம்        -ஷர்மி   

http://sharmmi.blogspot.com/2011/10/2011.html

சிம்பிளான சுயசரிதை பாணியில் ஒரு கதை.  சவால் சூழல் மூலம் சின்ன திருப்பமும் முயற்சித்திருக்கிறார்.  கதைக்குத் துணையாக ஒரு படமும் போட்டிருக்கிறார். அதென்ன சுவிஸ் பாங்கில் சிறுகச் சிறுக சேமிப்பது என்றுதான் புரியவில்லை. 

***

.

Thursday, November 3, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம்

நான் தமிழ் இணைய உலகு வந்து சுமார் நான்கு வருடங்கள் இருக்கலாம். நான் தொடர்ந்து வாசித்த, நல்ரசனை மிக்க ஒரு சிலர் தொடர்ந்து இயங்காமல் இங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். சிலர் தன் அடையாளங்களையே கூட அழித்துக்கொண்டு விலகிப்போயிருக்கிறார்கள். அதில் சிலருக்கு இணையக் கருத்துமோதல்களும் காரணமாய் இருந்திருக்கிறது. அப்போது நான், மாற்றுக் கருத்தையும், எதிர்க்கருத்தையும் எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள் இவர்கள் என்று நினைத்ததுண்டு. இப்போதுதான் புரிகிறது அவர்கள் பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என.! இதுபோன்ற சமயங்களில் தோன்றுகிறது, இணையம் சாரா குடும்பம், நட்பு என ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்தால்தான் என்ன? இந்த அறிவுப்போலிகளோடான போராட்டம் தேவைதானா?

அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், விரோதங்கள், பழிவாங்கல்கள் அனைத்தையும் நிகழ்த்த எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதை நடத்திட வாகாய் தவறுகளையும் கொள்ளை கொள்ளையாய் செய்துகொண்டுதான் இருக்கின்றன அரசியல் கட்சிகள், அவர்கள் ஆளும் போது இவர்களும், இவர்கள் ஆளும் போது அவர்களும். மக்கள் பணி மறந்து எதையெதையோ செய்துகொள்ளட்டும். நூலகத்தையும் மாற்றட்டும், வேண்டுமானால் கொளுத்தவும் செய்திடலாம். ஒரு தலைமுறையின் கல்வியையே துச்சமாக மதித்த முதல்வருக்கு ஒரே ஒரு நூலகம் ஒன்றும் பெரிதில்லைதான். ஆனால் கட்சி சார்பாக பேசவும், நடுநிலை என்று சொல்லிக்கொண்டு இதன் மீதும் விவாதம் நிகழ்த்தவும் முன்வரும் இணைய நண்பர்களின் நிலைப்பாடுதான் மிகுந்த மனவேதனையைத் தருகிறது. எதிர்க்கட்சி உருவாக்கியதால் ஒழிந்தது நூலகம் என்று மனதுக்குள்ளே மகிழ்ந்துகொள்ளுங்களேன். ஏன் கோரங்களை வெளிக்காட்டவேண்டும்? எதிராளிகளைச் சீண்ட, விவாதம் நிகழ்த்த உங்களுக்கு வேறு விஷயங்களா கிடைக்காதா என்ன.?

ஒவ்வொரு அங்கமும் சீர்பட செதுக்கப்பட்டிருக்கும் ’அண்ணா நூற்றாண்டு நூலகத்தை’ ஆசை ஆசையாய் கண்கள் கொள்ளாமல் பார்த்து, மகிழ்ந்து, உணர்ந்து வந்தவர்களுக்குத் தெரியும், அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்த அறிவுச்செல்வத்தின் அருமை. உள்ளிருந்த ஒவ்வொரு நிமிடமும் இது நான் வாழும் இடத்தில், வாழும் காலத்தில் அமைந்திருக்கிறது, அறிவுசார் எதிர்காலம் அமைந்திட ஆட்சியாளர்களுக்கும் கூட அதிசயமாய் எண்ணம் தோன்றிவிடத்தான் செய்கிறது என்று எண்ணி பெருமிதம் கொண்டிருந்தேன். எந்த ஆட்சியில் அது கட்டப்பட்டிருந்தாலும் என் உணர்வு இதுவாகத்தான் இருந்திருக்கும்.

நான் இப்போது நூலகம் செல்லாதவனாக இருக்கலாம். என் அலமாரியில் தூங்கும் புத்தகங்களை நான் இப்போது வாசிக்காமலிருக்கலாம். ஆனால் எவருக்கும் தீங்கிழைக்காத என் எண்ணம் வாசிப்பால் வந்தது. என் ரசனையும், சிந்தனையும் புத்தகங்கள் தந்தவை. என் பிள்ளைக்கு நான் செல்வத்தை தருவதையும் விட, நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், தீது எண்ணா நல்மனத்தையும், நல்ல சுற்றுச்சூழலையும், வரலாற்று-அறிவியல்-அரசியல் அறிவையும், தந்துசெல்லவேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் இவை அத்தனையையும் என் ஒருவனால் தரமுடியாது என்றும், வாசிப்பு என்ற ஒற்றைப் பழக்கத்தால் இவற்றை அடையச்செய்யமுடியும் என்றும் நம்புகிறேன். ஏனெனில் பிற ஊடகங்கள் நோயுற்றிருக்கும் ஒரு சமூகத்தின் கடைசி நம்பிக்கை புத்தகங்கள் மட்டுமே. அத்தகைய அரும் செல்வத்தை கொண்டுள்ள நூலகங்கள் மென்மேலும் பெருகவேண்டுமேயல்லாது, இருப்பவையும் அழியக்கூடாது என்பதே என் விருப்பம்.

ஏராள நூலகங்கள் இருக்க இன்னொன்றும் ஏன்? (நாம் மட்டும் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டேயிருக்கிறோமே..) புகழுக்காகக் கட்டப்பட்டதுதானே? (இருக்கட்டுமே, நாம் வருந்தியழ என்ன இன்னொரு கோயிலா கட்டப்பட்டிருக்கிறது, நூலகம்தானே..) என்ற அற்ப கேள்விகளையெல்லாம் விடுத்து, இந்த நூலக மாற்றம் குறித்த அரசு அறிவிப்புக்கு எதிராக அணி திரள்வோம். நான் என் மனப்பூர்வமான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன்.

********

நம் மதிப்புக்குரிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் கண்டனப்பதிவு.

*

http://satamilselvan.blogspot.com/2011/11/blog-post.html

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக் குழு அலுவலகம்

421,அண்ணா சாலை,சென்னை-600018

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும்

தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இன்று (2.11.2011) அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

முந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.

நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது. டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.

அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.

ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்

மாநிலத்தலைவர் மாநிலப்பொதுச்செயலாளர்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்,வலைத்தளத்தில்,தொலைக்காட்சியில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்

********

மூத்த தமிழ் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை.

ezhudhalar_arikkai[8]

.

Tuesday, November 1, 2011

சவால் போட்டிக் கதைகளின் தொகுப்பு

’என்னப்பா கான்செப்ட் இது? இந்த கான்செப்டுக்கு 10 கதைகள் வந்தாலே உங்கள் முயற்சி வெற்றின்னு நினைச்சுக்கோங்க..’

- சவால் சிறுகதைப் போட்டி அறிவித்த உடனே எனக்கும் பரிசல்காரனுக்கும் அடுத்தடுத்து வந்த அலைபேசி அழைப்புகள் இந்த ஒரே செய்தியைத்தான் தந்தன.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல இலக்கியத்தரமான சிறுகதைகளை வெளிக்கொண்டுவரவேண்டும், தமிழுக்கு இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது, அதற்கு நாங்களும் விதிவிலக்கல்லர். அதுபோன்ற விஷயங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு மூத்தவர்களுக்கும், இணைய, அச்சு இதழ்களுக்கும் இருக்கிறது. அத்தகைய நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தற்சமயம் ‘வம்சி’ நடத்தும் சிறுகதைப்போட்டி அப்படியொரு அழகிய உதாரணமாகும். (வம்சி சிறுகதைப்போட்டிக்கான இறுதிநாள் 02.11.11, ஆர்வமிருப்பவர்கள் விரைந்து கதைகளை அனுப்புங்கள்). எங்களைப் பொறுத்தவரை அதைப்போன்ற சீரிய விஷயங்களில் நாங்கள் இன்னும் மாணவர்களே என்று கருதுகிறோம். ஆகவே நாங்கள் அது போன்ற ஆசையில் இந்த சிறுகதைப்போட்டியினை நடத்தவில்லை என்றும் கொள்ளலாம்..

இதை ஒரு சுவாரசியமான விளையாட்டு என்ற வகையில் அணுகலாம். மேலும் சவால்களுக்கு உட்பட்டு வித்தியாசமான கதைகளைத் தரவேண்டியதிருப்பதும் புதியவர்களை எழுத ஊக்குவிக்கும் ஒரு காரணிதான் அல்லவா.? புதிய வலைப்பூக்களைத் துவக்கிக்கொண்டு சென்ற முறை பல இணைய வாசகர்கள் கதையெழுத முன்வந்தனர். இந்த முறையும் அதே நல்ல விஷயத்தை நாம் காண்கிறோம். எப்படி எழுதத் துவங்குவது என்ற தயக்கத்தில் இருப்பவர்களுக்கு இது எளிமையாக இருக்கலாம். அவ்வளவே.!

இருப்பினும் மேற்சொன்ன தொலைபேசி அழைப்புகள் எங்களைப் பயமுறுத்திக்கொண்டிருந்தன. ஆனால், எங்களை ஏமாற்றவில்லை நீங்கள்.. 78 கதைகள் போட்டிக்கு வந்து குவிந்துள்ளன. நடுவர்களும் ‘அட! சிக்கலான சவால் என்பதால் குறைந்த அளவே கதைகள் வரும்.. எங்களுக்கும் வேலை மிச்சம் என்றிருந்தோம். இத்தனைக் கதைகளா.?’ என்று சந்தோஷப்பட்டனர். ஆம் சென்ற ஆண்டை விட சிக்கலான சவால் எனினும் சென்ற ஆண்டைவிட அதிக ஆதரவையே இப்போதும் தந்திருக்கிறீர்கள்.

ஆகவே நண்பர்களே...  நடுவர் குழு கதைகளை அலசிக் கொண்டிருக்கிறது. முடிவுகள் இம்மாதம் 15 ம் தேதி அன்று வெளியாகும்.

கதைகள் அனைத்தும் யுடான்ஸ் திரட்டியில் ஒருங்கமைக்கப்பட்டுள்ளன. அவை இங்கே காணக்கிடைக்கும். அனைவரும் சென்று கதைகளை வாசித்து எழுதியவர்களை பின்னூட்டங்களில் ஊக்குவிக்குமாறும், பிடித்த கதைகளுக்கு யுடான்ஸ் திரட்டியில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வாக்குகளும் வெற்றிக்கான 10 சதவீத மதிப்பை வழங்க இருக்கின்றன என்பதை மறவாதீர்கள். நவ.12ம் தேதி வரை பெறப்படும் வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும்.

கலந்து கொண்டு சிறப்பித்த, ஆதரவு தந்த, பின்னின்ற ஒவ்வொருவருக்கும் மற்றும் போட்டியை ஸ்பான்ஸர் செய்த யுடான்ஸ் திரட்டிக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

-----------

ஏற்கனவே களத்திலிருக்கும் கதைகள் –1 ஐக் கண்டிருப்பீர்கள். அதில் 21 கதைகளின் வரிசை இருந்தது. மீதமிருக்கும் 57 கதைகளின் தொகுப்பு தகுந்த இணைப்புகளுடன் இதோ கீழே தரப்பட்டுள்ளது. போட்டிக்கு வரும் கதைகளின் சுட்டி, தரப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டு, யுடான்ஸ் திரட்டியிலும் இணைக்கப்படவேண்டும் என்று விதிமுறை வைத்திருந்தோம். இருப்பினும் ஒரு சில கதைகள் இதில் ஒன்றை மட்டுமே செய்திருந்தன, ஆயினும் அவையும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.  நீங்கள் ஏற்கனவே போட்டியில் கலந்துகொண்டு மெயில்கள் அனுப்பியிருந்தும், இந்த இரண்டு தொகுப்புகளிலும் உங்கள் கதை இடம்பெறவில்லை எனில் உடன் தொடர்புகொள்ளுங்கள்.. thaamiraa@gmail.com 

வெற்றிக் கதைகளுடனும், பரிசுகளுடனும் விரைவில் சந்திக்கிறோம். நன்றி. வாழ்த்துகள்.

-------------

களத்திலிருக்கும் கதைகள் –2

கதை எண் கதையின் பெயர் கதையை எழுதியவர் கதையின் இருப்பிடம்
22 ஒன்றுக்குள் இரண்டு மனோ http://feelthesmile.blogspot.com/2011/10/2011.html
23 அம்பு ஒன்று.. இலக்கு மூன்று முத்துசிவா http://muthusiva.blogspot.com/2011/10/2011.html
24 திருட்டைத் திருடிய திருட்டு ஆ.சுகுமார் http://sukumaranandan.blogspot.com/2011/10/2011_20.html
25 குறிப்பறிதல் நவநீதன் http://navaneethankavithaigal.blogspot.com/2011/10/2011.html
26 சிலை ஆட்டம் ஆர்விஎஸ் http://www.rvsm.in/2011/10/2011.html
27 நகல் கோமாளி சிவா http://koomaali.blogspot.com/2011/10/2011.html
28 கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு சி.பி.செந்தில்குமார் http://adrasaka.blogspot.com/2011/10/kovai-preethi-murder-case.html
29 பாப்பா போட்ட தாப்பா! பார்வையாளன் http://pichaikaaran.blogspot.com/2011/10/2011.html
30 தனக்கென்று வந்துவிட்டால்.. ராஜி வெங்கட் http://suharaji.blogspot.com/2011/10/2011.html
31 மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ராம்வி http://maduragavi.blogspot.com/2011/10/2011.html
32 கல்லூரி சாலை எ.யுகேந்தர்குமார் http://ivanbigilu.blogspot.com/2011/10/2011.html
33 அறியா உலகம் கணேஷ் http://ganeshmoorthyj.blogspot.com/2011/10/2011.html
34 கனவுகளின் நிறம் காக்கி சூர்யா ஜீவா http://kathaikkiren.blogspot.com/2011/10/2011.html
35 யாரிடமும் சொல்லாத கதை ஆர்விஎஸ் http://www.rvsm.in/2011/10/2011_26.html
36 முடியலை ஆனால் முடியும்.. ஆசியா உமர் http://asiyaomar.blogspot.com/2011/10/2011.html
37 மீண்ட சொர்க்கம் ஷர்மி http://sharmmi.blogspot.com/2011/10/2011.html
38 அர்த்தமுள்ள குறியீடு ஸ்ரீ மாதவன் http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html
39 தொலைநோக்கிப் பார்வை ராதாகிருஷ்ணன் http://www.greatestdreams.com/2011/10/2011.html
40 சார் என்கிற சாரங்கன் ஷைலஜா http://shylajan.blogspot.com/2011/10/2011.html
41 சேலன்ஜ் பழ மாதேசு http://kavithaimathesu.blogspot.com/2011/10/blog-post_27.html
42 கதை விடலாமா? சூர்யா ஜீவா http://kathaikkiren.blogspot.com/2011/10/2011_28.html
43 ஐ.டி சூர்யா ஜீவா http://kathaikkiren.blogspot.com/2011/10/2011_31.html
44 கனவில் எழுதப்படும் கதை நந்தாகுமாரன் http://nundhaa.blogspot.com/2011/10/2011.html
45 வினை நம்பிக்கை பாண்டியன் http://npandian.blogspot.com/2011/10/2011.html
46 ஒரு கிராம் சொர்க்கம் மனோ http://feelthesmile.blogspot.com/2011/10/2011_29.html
47 நீதானே என் பொன்வசந்தம்.. மனோ http://feelthesmile.blogspot.com/2011/10/2011_30.html
48 பொறி பரிவை. சே.குமார் http://vayalaan.blogspot.com/2011/10/2011.html
49 பீமனின் பராக்ரமம் இராஜராஜேஸ்வரி http://jaghamani.blogspot.com/2011/10/2011.html
50 உளவுத்துறை பன்னிக்குட்டி ராம்சாமி http://shilppakumar.blogspot.com/2011/10/2011.html
51 சித்தரின் எழுத்துக்கள் பழ மாதேசு http://kavithaimathesu.blogspot.com/2011/10/blog-post_29.html
52 களைகள் இங்கு கொல்லப்படும் வைகை http://unmai-sudum.blogspot.com/2011/10/2011.html
53 கதையின் கதை.. பன்னிக்குட்டி ராம்சாமி http://shilppakumar.blogspot.com/2011/10/2011_30.html
54 புத்தர் சிரிக்கிறார் பார்வையாளன் http://pichaikaaran.blogspot.com/2011/10/2011_30.html
55 போட்டி மிடில்கிளாஸ் மாதவி http://middleclassmadhavi.blogspot.com/2011/10/2011.html
56 கத்தியின்றி ரத்தமின்றி பார்வையாளன் http://pichaikaaran.blogspot.com/2011/10/2011_3324.html
57 குறியீடு ப. அருண் http://aalunga.blogspot.com/2011/10/2011.html
58 மாயை செல்வகணபதி http://selvasword.blogspot.com/2011/10/blog-post.html
59 கத்தியின்றி.. ரத்தமின்றி.. அருண்காந்தி http://enviruppam.blogspot.com/2011/10/2011_31.html
60 கண்ணாமூச்சி கார்த்திக் http://karthiguy.blogspot.com/2011/10/2011.html
61 காவல்துறை கருப்பு ஆடு ரஹீம் கஸாலி http://ragariz.blogspot.com/2011/10/2011compedition-short-story.html
62 பூங்காவுக்குள்ளே புயல் பரிவை. சே.குமார் http://vayalaan.blogspot.com/2011/10/2011_31.html
63 விண்டேஜ் பினாத்தல் சுரேஷ் http://penathal.blogspot.com/2011/10/vintage-2011.html
64 போர்க்களத்தில் சாய்ந்தால் கூட சன் http://writersun.blogspot.com/2011/10/2011.html
65 மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும் சன் http://writersun.blogspot.com/2011/10/2011_31.html
66 காதல் ஒரு பட்டாம்பூச்சி விஜயஷங்கர் http://vijayashankar.blogspot.com/2011/10/blog-post_31.html
67 சவால் சிறுகதை இளா http://vivasaayi.blogspot.com/2011/10/2011.html
68 இரட்டைப்பிறவி விஷ்ணு நக்கீரன் ஜெயராமன் http://naai-nakks.blogspot.com/2011/10/2011.html
69 ஆறாம் அறிவு நிஷா http://forcenisha.blogspot.com/2011/10/blog-post_31.html
70 அணு அணுவாய்.. கதிரவன் http://kathir-tamil.blogspot.com/2011/10/2011.html
71 பிரபல எழுத்தாளன் எழுதியது பறக்கும் குதிரை http://parakkumkuthirai.blogspot.com/2011/10/2011.html
72 அகம் அகல்விளக்கு http://agalvilakku.blogspot.com/2011/10/2011.html
73 வாழ்க்க ஒரு வட்டம்டா -2 ரவி http://mcxu.blogspot.com/2011/10/2-2011.html
74 மூன்றாம் விதி ஸ்ரீராம் http://engalblog.blogspot.com/2011/10/2011.html
75 போலீஸா கொக்கா? பெசொவி http://ulagamahauthamar.blogspot.com/2011/10/2011.html
76 காக்கும் விஷ்ணு பெசொவி http://ulagamahauthamar.blogspot.com/2011/10/2011_31.html
77 ரங்கு குரங்கு ஆன கதை வெண்புரவி http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html
78 குழப்பம் வெளங்காதவன் http://velangaathavan.blogspot.com/2011/10/2011.html

 

ஒரு முக்கிய அறிவிப்பு : போட்டிக் கதைகள் ஒவ்வொன்றின் உரிமையும் அதனதன் ஆசிரியர்களையேச் சாரும். யுடான்ஸ் திரட்டி, பரிசல்காரன் மற்றும் எனது இந்தத் தளங்களில் கதைகளின் சுட்டி வாசகர்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் தரப்படுகிறதே தவிர, பிறர் கதைகளை ஆசிரியர்களின் அனுமதியின்றி எங்கும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

.