Saturday, November 12, 2011

சவால் சிறுகதைப்போட்டிக் கதைகள் : விமர்சனம் -1

அன்பு நண்பர்களே, சவால் சிறுகதைப்போட்டிக்கான நடுவர் குழு, கதைத் தேர்வில் மூழ்கியிருக்கிறது. 3 பேர்கள் உள்ள அந்தக் குழு இணைந்தளித்த சிறிய நறுக் விமர்சனங்களின் முதல் பகுதி இதோ இங்கே.. உங்களுக்காக. இதன் இரண்டாம் பகுதி 14ம் தேதியும் தொடர்ந்து போட்டி முடிவுகளும் அறிவிக்கப்படும். விமர்சனங்களை உங்கள் மீதானதல்ல, உங்களுடைய இந்த தனிப்பட்ட படைப்பின் மீதானதுதான். அவற்றை ஆரோக்கியமான நோக்கத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கவும், வெற்றிபெறவும் குழுவின் சார்பாக வாழ்த்துகள்.!

_________________________________________________________

 

1    உதயசூரியன்    -கார்த்திக் பாலா   

http://kanakkadalan.blogspot.com/2011/10/2011.html

தொடக்கம் நன்றாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் அறிமுகம் கொஞ்சம் நீளம்தான். எஸ்பி திறமையாக சதியை முறியடித்தபிறகு நடக்கும் சம்பவங்கள் சற்றே குழப்பமாக இருக்கிறது.  'உதயசூரியன்' என்ற புத்தகம் கதையில் இடம்பெறுகிறது.  அதற்கும் இந்தக் கதையின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. முடிவில் கொஞ்சம் ஷாக்கான ட்விஸ்ட் அமைந்திருக்கிறது. நல்ல முயற்சி.

***

2    பிளாக் டைமண்ட்    -இளையதாசன்   

http://unmaikaga.blogspot.com/2011/10/b-l-c-k-d-i-m-o-n-d-2011.html

சவால் போட்டிக்கான படம் சரியானபடி உபயோகிக்கப் படவில்லை. கறுப்பு வைரத்தால் ஆன சிலை, அதை கொள்ளையடிக்க ஒரு கொலை அதில் டபுள் கிராஸிங் என்று குழப்பமான கதையமைப்பு.  லாஜிக்கும் ஒட்டவில்லை.

***

3    அவள் வருவாளா?    -இளையதாசன்   

http://unmaikaga.blogspot.com/2011/10/2011.html

காலேஜ் செட்டப்பில் சவால் படத்தை இணைத்து எழுதப்பட்ட கதை. ஆனால் கதையில் அவ்வளவு சுவாரசியமில்லை.  சவால் சூழல் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று போலத்தான் இருந்தது.

***

4    குறுஞ்செய்தி    -ஆ.சுகுமார்   

http://sukumaranandan.blogspot.com/2011/10/2011.html0

பெரிய சதிப்பின்னலைப் பற்றி வருகிறது.  சரியாக புரியவில்லை.  நிறைய சம்பவங்கள் முக்கியத்துவம் இல்லாத வகையில் சித்திரிக்கப்படுகின்றன.  எழுத்துப் பிழை, சொற்பிழைகள் வாசிக்க பெரும் தடங்கல்.  ஸ்டைலிஷாக இருக்க என்று வலிந்து திணிக்கப்பட்ட ஆங்கில உரையாடல்கள் மற்றொரு தடங்கல். இன்னும் முயற்சி செய்தால் நல்ல த்ரில்லர்கள் எழுதலாம்.

***

5    விசாரணை       - ஆ.சுகுமார்   

http://sukumaranandan.blogspot.com/2011/10/2011_08.html

சவால் சூழல் பொருந்தவேயில்லை.  கதையின் முடிவில் எல்லாம் கனவு என்று முடித்துவிட்டார்.  கதையாக உருப்பெறவேயில்லை.

***

6    அலைபேசி        -அபிமன்யு   

http://abimanyuonline.blogspot.com/2011/10/2011.html

தொடக்கத்தில் நல்ல விறுவிறுப்பு.  மர்மம், தீவிரவாத கும்பல், ரகசிய குறியீடு என்றெல்லாம் சுற்றி கடைசியில் கதைப் போட்டி நடத்துபவர்களை கலாய்ப்பதோடு முடிகிறது.  நல்ல முயற்சி.  மீண்டும் படிக்கத் தூண்டுமளவுக்கு சுவாரசியம்.

***

7    மனசாட்சி        -கலாநேசன்   

http://somayanam.blogspot.com/2011/10/2011.html

விவரணைகள் பரவாயில்லை.  சில இடங்களில், விவரணைகளிலிருந்து வசனங்களை வேறுபடுத்த கொட்டேஷன் பயன்படுத்தப்படாதது படிக்க தடைக்கல்லாக இருந்தது.  மும்பையிலிருந்து சென்னை வந்து பிறகு கல்கத்தா போய் பிறகு மிடில் ஈஸ்ட் போகும் கடத்தல் பாதை லாஜிக்கலாக நெருடுகிறது.  திருப்பம் அழுத்தமாக அமையாயததால் அதிகம் சுவாரசியம் இல்லை.

***

8    புதிய தென்றல்    -ஜ.ரா.ரமேஷ்பாபு   

http://meithedi.blogspot.com/2011/10/2011.html

கொஞ்சம் மாறுபட்ட புதிரோடு தொடங்கினாலும் சவால் சூழல் முழுவதுமாக பொருந்தவில்லை.  தவறான குறியீட்டைப் பற்றிய விளக்கம் 'சப்'பென முடிந்துவிட்டது.  ராஜுவின் திருமணத்தை நிறுத்த போடும் திட்டம் கொக்கு தலையில் வெண்ணெய் மாதிரி சுற்றி வளைத்துக் கொண்டு போகிறது.

***

9    சொல்லமறந்த கதை    -ஜ.ரா.ரமேஷ்பாபு   

http://meithedi.blogspot.com/2011/10/2011_11.html

கதை என்று ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.  சும்மா ஜாலியாக போட்டிக்கு அனுப்பியிருப்பார் போல..

***

10    போங்காட்டம்    -ராதாகிருஷ்ணன்   

http://www.greatestdreams.com/2011/10/blog-post_10.html

மாறுபட்ட கதைக்களன். ஆனால் ரொம்பவும் சுத்தி வளைத்து கதைக்குள் வருவதற்கு ரொம்பவும் தாமதமாகிறது. சவால் சூழல் காணப்பட்டாலும், வலியப் பொருத்தியது போலத்தான் இருக்கிறது. தலைப்பிற்கு ஏற்றபடி போங்காட்டம்தான். 

***

11    தடயம்        -அப்துல் பாஸித்   

http://nanbanpakkam.blogspot.com/2011/10/2011.html

டபுள் கேமை வச்சு இன்னொரு கதை.  ஒரு போலிஸ் அதிகாரி அப்படி 'பொக்'குனு உண்மையை எல்லாம் உளறிடுவாரா என்ன.?  இன்னும் கொஞ்ச்ம நல்ல ட்விஸ்ட் கொடுத்திருக்கலாம். 

***

12    அதிர்ச்சி வைத்தியம்        -ஜ.ரா.ரமேஷ்பாபு   

http://meithedi.blogspot.com/2011/10/2011_12.html

முதல் வாக்கியத்திலேயே எழுத்துப் பிழை.  Dean என்பது தவறாக குறிப்பிடப் பட்டிருந்தது.  அடுத்து பார்த்தால் சுப்புவிற்கு ஃபோன் வருகிறது.  அதை அட்டெண்ட் செய்தால் எங்கேஜ்ட் டோன் வருகிறதாம்.  எப்படி ஐயா? கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதையாக வடித்திருக்கலாம்.

***

13    கண்கள் இரெண்டால், உன் கண்கள் இரெண்டால்    -இளையதாசன்   

http://unmaikaga.blogspot.com/2011/10/2011_12.html

எங்கெங்கோ சுற்றிவிட்டு கடைசியில் சவால் சூழலை ஒரு ஸ்கிட் போல செய்து கதைக்குள் கொண்டு வந்துவிட்டார்.  ஆனால் எதற்காக ஒரு டிவி இயக்குநர் ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுக்கிறார் என்று புரியவில்லை.  எப்படியோ கதை டபக்கென முடிந்து விட்டது.

***

14    செல்’லத் தொல்லைகள்    -நாய்க்குட்டி மனசு   

http://venthayirmanasu.blogspot.com/2011/10/2011.html

மாறுபட்ட கதைக் கரு.  கதையின் தொடக்கத்தில் மனோதத்துவ கவுன்சிலிங் என்று வருகிறது. பெயரெல்லாம் கேட்கிறார். பிறகு நடுவில் நாலு சிட்டிங் முடிந்துவிட்டது என்று வருகிறது.  அப்புறமும் பெயரைக் கேட்டுக் கொண்டிருப்பார்களா என்று லேசாக இடறுகிறது. எஸ்பி, கோகுல் என்று இரண்டு வெவ்வேறு பாத்திரங்களா? சவால் சூழலில் அப்படி இல்லையே.  குழப்பம்.  மனோவியாதியால் மாறி மாறி மெசேஜ் அனுப்பியிருப்பதை சொல்லி அப்படியே முடித்துவிடுவதால் வேறு சுவாரசியம் எதுவும் இல்லை. 

***

15    மனதோடு விளையாடு    -பொன்ராஜ் ராமு   

http://mugaavari.blogspot.com/2011/10/2011.html

4th APRIL 2012 என்று தேதி வருகிறது.  எதிர்காலத்தில் எழுதப்பட்ட அத்தியாயமோ என்று சுவாரசியமாக படித்தால், ஏன் அப்படி தேதி குறிப்பிட்டிருக்கிறார் என்று குழப்பமாகி விடுகிறது.  விஷ்ணு இன்ஃபார்மரா இல்லை இன்வெஸ்டிகேஷன்ஆபிசரா? டாக்டர்ஸ் சர்டிபிகேட் எல்லாம் கண்டுபிடித்து துல்லியமாக ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறாரே... எல்லா தகவல்களையும் கொடுத்தவர்  பாஸ்வேர்டை தவறாக கொடுப்பதற்கான காரணத்தை முழுவதும் சொல்லவில்லை.  சவால் சூழல் ஒட்டாமல் இருக்க, கதை வேறு தளத்தில் போகிறது போல் ஒரு உணர்வு.  இன்னும் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதை கிடைத்திருக்கும்.

***

16    கண்ணனும் கண்ணனும்    -சுரேகா   

http://www.surekaa.com/2011/10/2011.html

வித்தியாசமான கதைக்களன்.  கதையையும் கதை போட்டியையும் இணைத்து பின்னியிருக்கிறார்.  ஆனால் 'கண்ணனும் கண்ணனும்' என்று ஏன் தேர்ந்தெடுத்து சென்னைக் கண்ணன், திருப்பூர் கண்ணன் என்றெல்லாம் சுற்ற வேண்டும் எனப் புரியவில்லை. கதைப் போட்டியை நன்றாகவே கிண்டல் அடித்திருந்தார். பரிசலும் ஆதியும் கவனிக்க வேண்டும்.  நல்ல முயற்சி.  ஆனால் முழுமையடையவில்லை.

***

17    கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும்    -சரவணவடிவேல்.வே   

http://saravanaidea.blogspot.com/2011/10/2011.html

கதையாக இல்லாமல், வாசகனோடு உரையாடலாக எழுதியிருக்கிறார். நல்ல நகைச்சுவை வருகிறது இவருக்கு.  சவால் சூழலை பொருந்தாமல் பொருத்தி ஒரு சைக்காலஜிக்கல் பிராஜெக்ட் என்று சமாளித்து விட்டார்.  கடைசியில் 'இந்த புகைப்படத்திற்கு இந்தக் கதை போதும்' என்று ஒரு வரி சேர்த்திருப்பதை போட்டி அமைப்பாளர்கள் பார்வையில் பட்டதா? படாவிட்டால் இப்பொழுதாவது படட்டுமே.

***

18    சட்டென நனைந்தது ரத்தம்    -ஜேகே   

http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html

முதலில் கொஞ்சம் புரிதல் சிக்கல் இருந்தது.  மீண்டும் வாசித்தபோது, இரு பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறார் என்று புரிந்தது. திலீபன் குமரனை சந்தேகிக்கும் இடம் சற்று சறுக்கினாலும், நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக அமைந்திருக்கிறது. சவால் சூழலை இயல்பாக பொருத்தி இருந்தார்.  அருமை.

***

19    ஹோட்டல் வசந்தம்        -பிரபாகரன்.கு   

http://prabaonline.blogspot.com/2011/10/blog-post.html

சவால் சூழலுக்காக எழுதப்பட்ட கதைதான். மனைவியின் இறப்பிற்கு காரணமானவனை, தனக்கே தெரியாமல் கணவன் மாட்டிவிடுகிறான்.  ஆனால் அந்த கடத்தல் சமாச்சாரஙக்ள் அவதி அவதியாக சொல்லப்பட்டு கதையின் சுவாரசியம் கெட்டுவிடுகிறது.  இன்னும் ஸ்ட்ரீம்லைன் செய்திருந்தால் நல்ல பழிவாங்கும் கதையாக எடுபட்டிருக்கும்.  இதில் எதற்கு ஹோட்டலைக் கொண்டு வந்தார்? கேபிள் ஷங்கருக்காகவா? :)

***

20    என்னை கண்காணிப்பவன்    -கே.எஸ்.சுரேஷ்குமார்   

http://veeedu.blogspot.com/2011/10/2011.html

கிரைம் களனிலேயே சற்று வேறு கோணத்தில் கதை சொல்லியிருக்கிறார்.  கோகுலுக்காக விஷ்ணு இன்ஃபார்மராய் மாறுவதாய் நமக்கு சொல்லிக் கொண்டே வருபவர் கடைசியில் அவர் ஏற்கெனவே இன்ஃபார்மராய் இருக்கிறார் என்று சொல்லும்போது லாஜிக் இடிக்கிறது. செல்ஃபோன் சர்க்யூட்டில் கொண்டு போய் ஏன் பாஸ்வேர்டை பதுக்கி வைக்கிறார் என்பதுதான் புரியவே மாட்டேன் என்கிறது.

***

21    வாழ்க்க ஒரு வட்டம்டா    -ரவி   

http://mcxu.blogspot.com/2011/10/2011.html

முதல் வரியிலேயே கதையை சவால் சூழலுக்குள் கொண்டு வந்து விடுகிறார்.  சினிமா டிக்கெட்டிற்கான குறியீட்டை மாற்றிக் கொடுத்து பழி தீர்க்கிற கதை. சப்பென முடிந்து விடுகிறது.

***

22    ஒன்றுக்குள் இரண்டு    -மனோ   

http://feelthesmile.blogspot.com/2011/10/2011.html

மல்டிப்பிள் பர்சனாலிட்டி வைத்து கிரைம் கதை.  ஆங்காங்கே நல்ல விவரணைகள் கைகொடுத்தாலும், சவால் சூழலை கதையில் காணவில்லை என்பது மிகப் பெரிய குறை.  முடிவில் ஒரு டாக்டர் வந்து எல்லா புதிர்களையும் ஜஸ்ட் லைக் தட் விளக்கி விட்டுப் போகிறார். 

***

23    அம்பு ஒன்று.. இலக்கு மூன்று    -முத்துசிவா   

http://muthusiva.blogspot.com/2011/10/2011.html

ஃப்ளாஷ்பேக், கரெண்ட் என்று மாறி மாறி கதை சொல்வது நல்ல உத்திதான்.  ஆனால் அதிகம் குழப்பாமல் இருக்க வேண்டும்.  அந்த ரகசிய குறியீட்டிற்காக போலீஸ், ஆதி என்று எல்லாரும் அடித்துக் கொள்ளும்போது விஷ்ணு எதற்காக அதை போலிஸிடம் கொடுக்க வேண்டும்? அவரே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேள்வி வருகிறது.  முடிவில் சில ட்விஸ்ட்கள் இருந்தாலும் அதை அவசர அவசரமாக கொட்டியது போல் இருந்தது.  நல்ல முயற்சி.

***

24    திருட்டைத் திருடிய திருட்டு    -ஆ.சுகுமார்   

http://sukumaranandan.blogspot.com/2011/10/2011_20.html

போலிஸ் விசாரணை சம்பந்தபட்ட மற்றுமொரு த்ரில்லர்.  செல்ஃபோன் சர்வீஸ் செய்பவர் பார்வையில் சவால் சூழலை பொருத்த முயற்சித்திருக்கிறார்.  ஆனால் லாஜிக் நிறையவே இடிக்கிறது.  ஏகபட்ட தொழில்நுட்பத் தகவல்கள் தடுமாற வைக்கின்றன.

***

25    குறிப்பறிதல்    -நவநீதன்   

http://navaneethankavithaigal.blogspot.com/2011/10/2011.html

சவால் சூழலில் இருக்கும் சங்கேத மொழியைப் பற்றிய முதல் கதை.  தவறான குறியீட்டிற்கான விளக்கம் புதுமையாக இருந்தது.  ஆனால் அந்த குறியீட்டை வைத்து போலீஸ் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை. நல்ல கதைக்களன்.  இன்னும் நன்றாக செய்திருக்கலாம்.

***

26    சிலை ஆட்டம்    -ஆர்விஎஸ்   

http://www.rvsm.in/2011/10/2011.html

சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற கதை உத்தி.  முதலிலேயே ஒரு மரண வாக்குமூலம், பின் கொலை, துப்பு துலக்குதல் என்று பரபரவென தொடங்குகிறது. சவால் சூழலை வெகு நேர்த்தியாக பொருத்தியிருக்கிறார்.  கதையும் முழுமையான வடிவத்தில் திருப்பங்களுடனும், தர்க்கத்துடனும் அமைந்திருந்தது.  சங்கேத குறிப்புக்கு நீளமான விளக்கமும் வருகிறது. முடிவு கொஞ்சம் டல்தான். சாகும் தறுவாயில் அவசர அவசரமாக எழுதுபவன் 'வஸந்த் பவன் மசால்தோசையும், டிகிரி காபியையும் ருசித்தி...' என்றெல்லாமா எழுதுவான் என்று கேள்வி எழாமல் இல்லை.  இந்த சவால் சூழலுக்கு பொருத்தமான சிறப்பான கதை.

***

27    நகல்    -கோமாளி செல்வா   

http://koomaali.blogspot.com/2011/10/2011.html

இன்ஃபார்மரை உளவாளியாக்கிக் கொண்டு அறிபுனைவாக எழுதியிருக்கிறார். இரண்டு நாட்களில் க்ளோனிங், புளுட்டோனியம் குண்டு, வாய்ஸ் சென்ஸார் என்று பெரிய ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறார்.  ஆனால் இவையெல்லாம் அழுத்தமாக பதியவில்லை.  உதாரணத்திற்கு நேரே சந்திக்கும் கோகுலிடம், விஷ்ணு மெனக்கெட்டு குறியீடை கடித பாணியில் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்கிறார்.  பிறகு கொஞ்சம் காலக் குழப்பம் வேறு இருக்கிறது.  மற்றபடி நல்ல முயற்சி.

***

28    கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு    -சி.பி.செந்தில்குமார்   

http://adrasaka.blogspot.com/2011/10/kovai-preethi-murder-case.html

தலைப்பும், கதை உத்தியும் வித்தியாசம்தான்.  டைரி குறிப்புகள் வழியாக கதையை கொண்டு போயிருக்கிறார்.  டைரி குறிப்புகள் ஒப்புதல் வாக்குமூலம் ரேஞ்சுக்கு 'அவளை கரெக்ட் பண்ணினேன். இவ ரோலை அவ செய்வா' இல்லாம இயல்பா இருந்திருக்கலாம்.  சவால் சூழலை நல்லா பொருத்தமா இணைச்சிருக்கார்.  புஷ்பா தங்கதுரை ஸ்டைல்ல நல்ல த்ரில்லர்.

***

29    பாப்பா போட்ட தாப்பா!    -பார்வையாளன்   

http://pichaikaaran.blogspot.com/2011/10/2011.html

முதல் வரியிலேயே கதைக்குள் இழுத்து விடுகிறார். பிறகு ஒரு A ஜோக் வேறு வருகிறது. வித்தியாசமான கதை சொல்லும் முறையோடு ஆங்கங்கே சில நகைச்சுவைகளும் நன்றாக வந்திருக்கின்றன. முதலில் சில தர்க்கக் குழப்பங்கள் ஏற்பட்டாலும், முடிவில் வரிசையாக விளக்கங்கள் கொடுத்து ட்விஸ்ட்டோடு முடிகிறது கதை.  கொஞ்சம் Rawவாக இருந்தாலும் படிக்க சுவாரசியம். 

***

30    தனக்கென்று வந்துவிட்டால்..    -ராஜி வெங்கட்   

http://suharaji.blogspot.com/2011/10/2011.html

நல்ல சஸ்பென்ஸோடு எழுதப்பட்ட த்ரில்லர்.  சிம்பிளான நடையில் குழப்பமில்லாமல் இருக்கிறது. கடத்தின பொண்ணுங்களை மூணு மாசம் மறைச்சி வச்சிருந்து கப்பல்ல கொண்டு போவாங்களா போன்ற கேள்விகள் எழுந்தாலும், சவால் சூழலை சரியானபடிக்கு பொருத்தி எழுதியிருக்கிறார்.  நல்ல முயற்சி.

***

31    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி        -ராம்வி   

http://maduragavi.blogspot.com/2011/10/2011.html

நிதானமான எழுத்து.  ஊருக்கு உதவும் பையனை தவறாக புரிந்து கொள்ளும் தந்தை இறுதியில் பெருமிதம் அடைகிறார். நடுவில் சவால் கதைப் போட்டியை நுழைத்து சவால் சூழலை விளக்கிவிடுகிறார்.  அதுதான் ஒட்டாமல் நிற்கிறது.

***

32    கல்லூரி சாலை        -எ.யுகேந்தர்குமார்   

http://ivanbigilu.blogspot.com/2011/10/2011.html

ட்ரெஷர் ஹண்ட் விளையாட்டை வைத்து எழுதப்பட்ட கதை.  முதல் முயற்சியாக இருக்கலாம்.  சங்கேதத்தை சற்று சாமர்த்தியமாக வளைத்து பயன்படுத்திக் கொண்டுவிட்டார். அதிக சுவாரசியம் இல்லாத போதும் நல்ல முயற்சி.

***

33    அறியா உலகம்        -கணேஷ்   

http://ganeshmoorthyj.blogspot.com/2011/10/2011.html

கிட்டத்தட்ட ஒரு நெடுங்கதையை சிறுகதையாக சுருக்கி சவால் சூழலை நுழைத்து எழுதியிருக்கிறார். இவ்வுலகின் பெரும்பகுதியான நீரில் மனிதன் கண்டறியாத ஒரு உலகம் இயங்கி வருகிறது என்ற கற்பனை.  சங்கேத மொழியை எப்படி உபயோகிப்பது என்பதற்கான வழிகளும் புதுமை.  அரிதான கற்பனை.  இன்னும் கொஞ்சம் சீர்படுத்தியிருந்தால் சிறப்பான கதையாக அமைந்திருக்கும்.

***

34    கனவுகளின் நிறம் காக்கி    -சூர்யா ஜீவா   

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011.html

காக்கி உடையின் மேல் காதலாக இருப்பவர் என்று தொடங்கி, இறுதியில் அவர் ஒரு சாதாரண டிரைவர்தான் என்று முடியும் கதை.  சவால் சூழல் சும்மா வந்து போகிறது. 

***

35    யாரிடமும் சொல்லாத கதை    -ஆர்விஎஸ்   

http://www.rvsm.in/2011/10/2011_26.html

அழகான ஆண்களை கடத்தும் கதை.  இவருக்கு விவரணைகள் நன்றாக வருகிறது.  ஆனால் இந்தக் கதையில் சமபவங்கள் என்றுமே எதுவுமே இல்லை.  டீக்கடை வாசலில் இருக்கும் இளைஞனை ஏமாற்றி தவறான வழிக்கு திருப்பி விடுகிறார்களாம்.  இந்த மாதிரி தீம்களுக்கு இன்னும் ஷார்பாக எழுதியிருக்க வேண்டும்.

***

36    முடியலை ஆனால் முடியும்..    -ஆசியா உமர்   

http://asiyaomar.blogspot.com/2011/10/2011.html

தலைப்பைப் போல முடியாத கதைதான்.  சவால் சூழலைச் சுற்றி பாத்திரங்களை அடுக்கிக் கொண்டே கதையை ஜாங்கிரி சுற்றி விடுகிறார்.  எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்ற சிக்கல்.  கடைசியில் புதிய பாத்திரத்தை அறிமுகப்படுத்தி கதையை இன்னும் நீட்டித்துக் கொண்டே போகிறார். குழப்பமான கதை.

***

37    மீண்ட சொர்க்கம்        -ஷர்மி   

http://sharmmi.blogspot.com/2011/10/2011.html

சிம்பிளான சுயசரிதை பாணியில் ஒரு கதை.  சவால் சூழல் மூலம் சின்ன திருப்பமும் முயற்சித்திருக்கிறார்.  கதைக்குத் துணையாக ஒரு படமும் போட்டிருக்கிறார். அதென்ன சுவிஸ் பாங்கில் சிறுகச் சிறுக சேமிப்பது என்றுதான் புரியவில்லை. 

***

.

17 comments:

rufina rajkumar said...

ஐந்தாவது சிட்டிங்கில் தான் கதை ஆரம்பிக்கிறது ஆதி, அதை இன்னும் தெளிவாக சொல்லி இருக்கணும் என்று நினைக்கிறேன். நறுக்' கென நல்ல விமர்சனங்கள்

பார்வையாளன் said...

மிக அருமையான விமர்சனங்கள்.

நல்லதொரு அணியினர் நடத்திய போட்டியில் பங்கேற்றதே , பரிசு கிடைத்ததைபோன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நண்பர் ஆதியை( சென்ற முறை பரிசு கிடைத்தபோது ) அவர் இல்லத்தில் பார்த்து பேசியது மனதில் இனிய நினைவாக இன்றும் இருக்கிறது.

இம்முறை போட்டி முடிவுகள் வெளிவந்ததும் , என்க்கு பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்,குழுவினர் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். இதற்கு வாய்ப்பு அமைத்து தருமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன்

பறக்கும் குதிரை said...

வெற்றிபெற்ற கதைகளை அறிவிப்பது மட்டுமலாமல், எல்லாக் கதைகளைப் பற்றியும் விமர்சனம் தருவது மிகவும் பயனுள்ள ஒன்று.

இது அந்தந்தப் படைப்பாளிகளுக்கு உதவுவதோடு, என்னைப் போன்ற சோம்பேறிகளும் எல்லாக் கதைகளையும் படிக்க உந்துதலாக இருக்கிறது.

ஷர்மி said...

ஆதி சார், அவன் அவன் வலி அவன் அவனுக்குத் தான் தெரியும். கதையின் நாயகன் சில சில லட்சம் கோடியாக சிறுக சிறுக சேமித்ததைத் தான் அப்படி சொல்கிறான்...

என் கதை நன்றாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லவேயில்லையே...சார்.

பரிசு பெறுவது என் நோக்கமில்லை. உங்கள் கமெண்ட் தான் முக்கியம். இது நான் எழுதிய இரண்டாவது கதை.

asiya omar said...

விமர்சனமெல்லாம் ஓ.கே.நிஜமாகவே முடியாம முடியும்னு எழுதிய கதை தான் அது.

வெண்பூ said...

இந்த பதிவை படிக்கவே இவ்ளோ டைம் எடுக்குது. நடுவர்கள் அத்தனை கதைகளையும் படிச்சி, ஒவ்வொரு கதைக்கும் விமர்சனம் எழுதியிருக்குறதைப் பாக்குறப்ப அவங்க போட்டிருக்குற உழைப்பு தெரியுது. நடுவர்களின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.

ஆதி & பரிசல்.. இந்த முறையும் கலக்கிட்டீங்க. முடிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

raji said...

எனது கதை பற்றிய தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.விமர்சனங்கள்தான் கலைஞனை வளர்க்கும் முதல் கருவி.பிற விமர்சனங்களையும் படித்ததன் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன்.பகிர்விற்கு நன்றி

ஜேகே said...

நறுக்கென்ற விமர்சனங்கள்... என்னுடைய கதையின் விமர்சனத்தை நன்றாக ரசித்தேன், எழுத தூண்டியமைக்கு முதற்கண் நன்றிகள்.. எழுத்தை இந்த அளவுக்கு அலசியதற்கு முப்பொழுதுகளும் நன்றிகள்..

முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

முத்துசிவா said...

http://muthusiva.blogspot.com/2011/10/2011.html


விமர்சனத்திற்கு நன்றி...

//அந்த ரகசிய குறியீட்டிற்காக போலீஸ், ஆதி என்று எல்லாரும் அடித்துக் கொள்ளும்போது விஷ்ணு எதற்காக அதை போலிஸிடம் கொடுக்க வேண்டும்?//

விஷ்ணு அந்த் ரகசிய குறியீட்டை கண்டுபிடிக்கும் பணியில் அமர்த்தப்பட்ட போலீஸ் இன்ஃபார்மர் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன். எனவே அவர் குறியீட்டை போலீசிடம் கொடுக்க நினைப்பதில் என்ன சந்தேகம். கோகுல் அந்த பணத்திற்கு ஆசைப்படுகிறார் என்பது விஷ்ணுவுக்கோ ஆதிக்கோ அல்லது IG க்கோ தெரியாதது போலவே எழுதியிருக்கிறேன்... கடைசி பத்தியை சரியாக படித்தால் விஷ்ணு நேர்மையான இன்ஃபார்மர் என்பதும் ஆதியிடம் விஷ்ணு போல் பேசியது சுரேந்தர் என்பதும் தெரியும்...

பல கதைகளை ஒரே நேரத்தில் படித்ததால் வந்த குழப்பம் என நினைக்கிறேன்....

மழை said...

இந்த விமர்சனத்துலையே எனக்கு பிடிச்சது என்னன்னா?////
கதை என்று ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. சும்மா ஜாலியாக போட்டிக்கு அனுப்பியிருப்பார் போல.. ///

இந்த கமெண்ட்தான்..பயபுள்ள என்ன மாதிரியே ஒருத்தன் இருந்துருக்கான் பாரேன்!!!:)

நவநீதன் said...

என்னுடைய கதையையும் (??? அப்டி சொல்லலாமா?) கணக்கில் எடுத்துக் கொண்டு அதையும் விமர்சித்த விமர்சன குழுவிற்கு நன்றிகள் பல :)

V.Radhakrishnan said...

//மாறுபட்ட கதைக்களன். ஆனால் ரொம்பவும் சுத்தி வளைத்து கதைக்குள் வருவதற்கு ரொம்பவும் தாமதமாகிறது. சவால் சூழல் காணப்பட்டாலும், வலியப் பொருத்தியது போலத்தான் இருக்கிறது. தலைப்பிற்கு ஏற்றபடி போங்காட்டம்தான்.//

அட! கதைதான் போட்டாவப் போட்டு ஆரம்பிச்சோம்ல. எடுத்த எடுப்பிலேயே போட்டோ பத்தி பேசிட்டோம்ல ;)

நீங்க சொல்ற மாதிரி வலியப் பொருத்தினாலும் ஒரு வழியாய் பொருத்தி அழகு பார்த்துடோம்ல.

-----

கதைகள் அனைத்தையும் பொறுமையாக படித்து உங்கள் ரசனைக்கு ஏற்ப, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இப்படித்தான் சிறுகதை இருக்க வேண்டும் எனும் ஒரு இலக்கண வரையறை வைத்துக் கொண்டு எழுதியவர்களின் மனம் புண்படாமல் மிகவும் நன்றாகவே விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். சென்ற வருடம் நான் எழுதிய கதைக்கான விமர்சனமும், இந்த வருட கதைக்கான விமர்சனமும் ஒப்பிட்டு பார்க்கையில் எனது சிறுகதை சொல்லும் திறன் இன்னும் பண்படவில்லை என்பது தெளிவு.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்கள் சிறுகதைப் போட்டி மீண்டும் என்னை தமிழில் தொடர்ந்து எழுத வைத்தது என சொன்னால் மிகையாகாது.

வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பங்கு பெற்றோர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் தெரிவித்து கொள்கிறேன். இத்தருணத்தில், தங்களுக்கும், பரிசலுக்கும் நடுவர்களுக்கும், யுடான்ஸ் குழுமத்திற்கும் நன்றி.

ponraj ramu said...

எனது கதைபற்றிய விமர்சனத்திற்கு நன்றி! 1500க்குள் முடிக்கவேண்டுமே என சுருக்கமாய் எழுத வேண்டியதாயிற்று!போட்டியில் பங்கேற்று,எழுதியதே மகிழ்வளிக்கிறது! நன்றிகள்:)

IlayaDhasan said...

//சவால் போட்டிக்கான படம் சரியானபடி உபயோகிக்கப் படவில்லை.
//
Rule says:
{இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.
}

நாட்டாமை இது நியாயமா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நண்பர்களே, விமர்சனம் குறித்த உங்கள் பாராட்டுகளும், கண்டனங்களும் நடுவர்களைச் சென்றடையவேண்டியது. அவற்றிற்கு நாங்கள் பொறுப்பல்ல.!

ரிஸல்டுக்காக காக்கவைப்பது நோக்கமல்ல, சிறிய தாமதத்திற்கு வருந்துகிறோம். இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் யுடான்ஸில் வெளியாகும். பின்னர் இங்கும்.!

நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@வெண்பூ,

பாம்பின் கால் பாம்பறியும் என்பதாய் சென்ற ஆண்டு தாங்கள் பட்ட கஷ்டம் நினைவில் வந்து இப்போதைய நடுவர்களை மனமார பாராட்டியிருக்கிறீர்கள் என நம்புகிறேன். :-)))

நன்றி.

RAMVI said...

எனது கதை பற்றிய தங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி,ஆதி.
இது எனது முதல் கதை.