Monday, November 14, 2011

சவால் சிறுகதைப்போட்டிக் கதைகள் : விமர்சனம் -2

அன்பு நண்பர்களே, சவால் சிறுகதைப்போட்டிக்கான நடுவர் குழு, அதன் பணியை நிறைவுசெய்துவிட்டார்கள். முடிவுகள் நாளை வெளியாகும். 3 பேர்கள் உள்ள அந்தக் குழு இணைந்தளித்த சிறிய நறுக் விமர்சனங்களின் இரண்டாம் பகுதி இதோ இங்கே.. உங்களுக்காக. இதன் முதல் பகுதியைக் காண முந்தைய பதிவுக்குச் செல்லுங்கள். விமர்சனங்கள் உங்கள் மீதானதல்ல, உங்களுடைய இந்த தனிப்பட்ட படைப்பின் மீதானதுதான். அவற்றை ஆரோக்கியமான நோக்கத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கவும், வெற்றிநடை போடவும் குழுவின் சார்பாக வாழ்த்துகள்.!

____________________________________________________________________

 

38    அர்த்தமுள்ள குறியீடு        -ஸ்ரீ மாதவன்   

http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html

கடத்தல், போலிஸ் கதைதான்.  சூப்பரிண்டெண்ட் ரேங்கில் இருப்பவரை பிரத்யேக செக்யூரிட்டி ரேஞ்சில் கேரக்ட்ரைசேஷன் செய்திருக்க வேண்டாம்.  குறியீடு என்பது யூசர்நேமையும் குறிக்கும் என்று கதையிலேயே குறிப்பாக சொல்லிவிட்டார்.  லாப்டாப்பிலிருக்கும் டேட்டாவை பாதுகாக்க ஏகப்பட்ட டெக்னிகல் விஷயங்கள் கதை படிப்பதை அந்நியபடுத்திவிடுகின்றன.

*****

39    தொலைநோக்கிப் பார்வை    -ராதாகிருஷ்ணன்   

http://www.greatestdreams.com/2011/10/2011.html

அஸ்ட்ரானமி, நட்சத்திரம் என்று புதிய கதைக் களன்.  ஆனால் அம்புலிமாமா கதைகளை நினைவூட்டும் நடை கொஞ்சம் தடங்கலாக இருக்கிறது.  ஏதோ குறியீடு, புத்தகம், கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்படும் சங்கேதங்கள் என்றெல்லாம் வருகிறது. அவை என்னவென்று சொல்லாமல் கதை பயணிப்பதால் அழுத்தம் இல்லை.

*****

40    சார் என்கிற சாரங்கன்    -ஷைலஜா   

http://shylajan.blogspot.com/2011/10/2011.html

கோவில் நகைக் கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.  லாக்கர் பாஸ்வேர்டை மிரட்டி வாங்குகிறார்கள்.  இன்னொருபக்கம் விஷ்ணுபிரியாவே கொண்டு போய் கொடுக்கிறார். பாஸ்வேர்ட் தெரிந்த முகுந்த் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கோகுல் கொள்ளையடிக்க எதற்கு இத்தனை சுற்றல் என்று தோன்றியது.  விஷ்ணுவை விஷ்ணுப்ரியாவாக்கி, Sir என்பதை சாரங்கனாக்கி ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்.  நல்ல முயற்சிதான். ஆனால் த்ரில்லருக்கான வடிவமைப்பு வரவில்லை கதையில்.

*****

41    சேலன்ஜ்            -பழ மாதேசு   

http://kavithaimathesu.blogspot.com/2011/10/blog-post_27.html

பொண்ணுங்க கடத்தல் பத்தின கதை. ஏகப்பட்ட போலிஸ்காரர்கள் வருகிறார்கள்.  கடத்தல் கூட்டத்தை கைது செய்து விடுகிறார்கள்.  சங்கேத குறியீடு அனுப்புகிற இன்ஃபார்மர், பின்பு ஃபோன் செய்து அவரே அதை விளக்கியும் விடுகிறார்.  பின் எதற்கு சங்கேதம் எல்லாம்?
"

*****

42    கதை விடலாமா?        -சூர்யா ஜீவா   

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011_28.html

சவால் போட்டிக்காக கதை எழுதுவதையே கதையாக கொடுத்திருக்கிறார். கதாசிரியரின் நண்பர் நிறைய ஓட்டுகள் போடுவதாக உறுதி அளித்திருந்ததால் கதையை போட்டிக்கு அனுப்பிவிட்டாராம்.  நல்லது.

*****

43    ஐ.டி            -சூர்யா ஜீவா   

http://kathaikkiren.blogspot.com/2011/10/2011_31.html

தொடக்கத்தில் ஏதோ பெரிய ரகசிய அமைப்பை பற்றி வருகிறது.  ஒரு சங்கேதம் பேப்பரில் கொடுக்கப்பட்டு, அதற்கு வீடியோ கான்ஃபரன்சிங்கில் விளக்கம் சொல்லப்பட்டு, அதையொட்டி ரேடியோவில் தொடர்பு கொண்டு... தலை சுற்றுகிறது.  கடைசியில் பார்த்தால் ஆளுங்கட்சி சதி என்று முடிகிறது.

*****

44    கனவில் எழுதப்படும் கதை    -நந்தாகுமாரன்   

http://nundhaa.blogspot.com/2011/10/2011.html

Recursive தொடர் கனவுகளாக சவால் சூழல் சித்திரிக்கப்படுகிறது.  அருமையான உத்தி.  முடிவிலிருந்து தொடக்கத்திற்கு சர்க்குலர் லிங்க் இருக்கிறது.  ஆனால் முதல் காட்சியும் இரண்டாம் காட்சியும் சரியாக இணையவில்லை.  புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள்.   ஸ்பெஷல் பாராட்டுகள்.

*****

45    வினை            -நம்பிக்கை பாண்டியன்   

http://npandian.blogspot.com/2011/10/2011.html

மற்றொரு துப்பறியும் கதை. ஃபோன் வேலை செய்யாததால் நண்பன் மூலம் கடிதத்தில் சங்கேத குறியீடுகளை கொடுத்தனுப்புகிறார் துப்பறிபவர். ஹ்ம்ம்... கெடுவான் கேடு நினைப்பான் என்ற மாரலோடு முடிகிறது கதை. அழுத்தமான  திருப்பங்கள் இல்லை.

*****

46    ஒரு கிராம் சொர்க்கம்    -மனோ   

http://feelthesmile.blogspot.com/2011/10/2011_29.html

போதை பொருள் கடத்த சங்கேத மொழி பயன்படுத்துகிறார்கள் என்று பில்டப் கொடுத்துவிட்டு சாதாரண அரசு பேருந்தில் கடத்துகிறார்கள்.  போலிஸ், இன்ஃபார்மர், டபுள் கிராஸிங் எல்லாம் தாண்டி கடைசியில் மாணவர் கலவரத்தினால் போதை மருந்து அழிந்து போகிறது.  போலிஸ் துறையின் உள்ளடி வேலைகள் இன்னும் நம்பும்படியாக சித்திரித்து இருக்கலாம்.

*****

47    நீதானே என் பொன்வசந்தம்..    -மனோ   

http://feelthesmile.blogspot.com/2011/10/2011_30.html

இன்ஃபார்மர் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கும் கடத்தல் கதை.  அதனால் சவால் சூழல் சரியானபடிக்கு பொருந்தவில்லை.  ஆனாலும் அது பேக்ட்ராப்பில் எங்கேயோ நிகழ்ந்திருக்கின்றது என்று புரிகிறது.  இன்ஃபார்மர் என்பது ஒரு நெட்வொர்க்கிலிருந்து கொண்டு தகவல்களை வெளியே கசிய விடுவது.  மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு எந்தமாதிரியான நிழல் அமைப்புகளிலிருந்து தகவல் பெறுகிறார் என்பது தெரியாததால் கதையின் நம்பகத்தன்மை குறைகிறது.  மற்றபடி நல்ல முயற்சி.

*****

48    பொறி            -பரிவை. சே.குமார்   

http://vayalaan.blogspot.com/2011/10/2011.html

துப்பறியும் கதைக்கு ஏற்ற தலைப்பு. கிட்னி திருடும் கும்பலின் இருப்பிடத்தை சங்கேதமாக போலிஸுக்கு அனுப்புகிற இடம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.  ப்ரிண்ட் அவுட் எடுத்து, பிறகு நேரில் போய்ச் சொல்லி, சவால் சூழல் எந்த இடத்தில் பொருந்துகிறது என்று புரியவில்லை.

*****

49    பீமனின் பராக்ரமம்        -இராஜராஜேஸ்வரி   

http://jaghamani.blogspot.com/2011/10/2011.html

தொன்ம வரலாற்றின் பின்னணியில் புதிய கதைக்களன்.  மஹாவிஷ்ணுவின் அவதாரமாக சாரங்கபாணி எஸ்பி கோகுலாக வருகிறார். பிறகு அவருக்கே விஷ்ணு ஃபோன் செய்கிறார் என்னும்போது லாஜிக் இடர்கிறது. தவறான குறியீட்டால் பீமன் பாதி சிக்கிக் கொள்கிறான் என்னும் கற்பனை ரசிக்க வைக்கிறது.  நல்ல முயற்சி.

*****

50    உளவுத்துறை        -பன்னிக்குட்டி ராம்சாமி   

http://shilppakumar.blogspot.com/2011/10/2011.html

கம்ப்யூட்டர் கேம் பிரியரான எஸ்பிக்கும் இன்ஃபார்மர் விஷ்ணுவிற்கும் நடக்கும் கம்யூனிகேஷன் பற்றி போலிஸார் குழம்புகிறார்கள்.  சவால் சூழலுக்கு பொருத்தமாகவே கதை இருக்கிறது.  முடிவில் வாசகர்களிடம் புதிரையெல்லாம் விடுவித்து விளக்கம் சொல்லிவிடுகிறார்.  சுவாரசியத்தை இன்னும் அதிகபடுத்தியிருக்கலாம்.

*****

51    சித்தரின் எழுத்துக்கள்        -பழ மாதேசு   

http://kavithaimathesu.blogspot.com/2011/10/blog-post_29.html

சித்தர் பூமி, ஹெச்ஐவி என்று புதுக் கதைக்களன்.  குறியீட்டை தப்பாக தரச் சொல்லும் ஐஜி ஒரே நிமிடத்தில் மனம் மாறுவது சற்று இடறல்தான்.  நடுநடுவே தமிழையே ஆங்கிலத்தில் எழுதி வைத்திருப்பது அசிரத்தையை காட்டுகிறது. 

*****

52    களைகள் இங்கு கொல்லப்படும்    -வைகை   

http://unmai-sudum.blogspot.com/2011/10/2011.html

ஆயுத கடத்தல் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது.  ஒரு க்ளூவை மாற்றி, அதை மீண்டும் மாற்றி என்று டபுள் ட்ரிபிள் கேம்கள்.  முடிவில் கெட்ட போலீஸ்காரரை இன்னொரு போலிஸ்காரர் என்கௌண்ட்டர் செய்துவிட போலிஸ் டிபார்ட்மெண்ட்டின் மானம் காப்பாற்றப்படுகிறது. ஆனால் அழுத்தமாக வரவில்லை.

*****

53    கதையின் கதை..        -பன்னிக்குட்டி ராம்சாமி   

http://shilppakumar.blogspot.com/2011/10/2011_30.html

சவால் சூழலின் புகைப்படத்தையே துப்புதுலக்கி கதையாக செய்திருக்கிறார். போட்டோவில் இருக்கும் எஸ்பியை மெய்யாகவே கண்டுபிடிக்கிறார்கள்.  அந்த சரடு நன்றாக இருந்தது.  ஆனால் அதற்குள் கதை முடிந்துவிட்டது.

*****

54    புத்தர் சிரிக்கிறார்        -பார்வையாளன்   

http://pichaikaaran.blogspot.com/2011/10/2011_30.html

அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகளின் பின்புலனில் சவால் சூழலை பொருத்தி எழுதப்பட்ட கதை.  நீளமாக இருந்தாலும் 1500 வார்த்தைகளுக்கு மிகவில்லை.  இன்ஃபார்மர் என்பது ஒரு சிற்றிதழ் என்பது நல்ல கற்பனை. கடித பரிமாற்றங்கள் மற்றும் டைரி குறிப்புகளில் கதை சொல்லப்படுகிறது.  கொஞ்சம் பிரச்சார நெடி தூக்கலாக இருப்பதால் கதையம்சம் மட்டுப்பட்டு விடுகிறது.

*****

55    போட்டி     -மிடில்கிளாஸ் மாதவி   

http://middleclassmadhavi.blogspot.com/2011/10/2011.html

ட்ரெஷர் ஹண்ட் பின்னணியில் கதை நடக்கிறது. அட்லாஸை வைத்து புதிரை அவிழ்க்கிறார்கள். புதிரில் அதிக கவனம் செலுத்தியதால் மற்ற சம்பவங்கள் எலலாம் அழுத்தமில்லாமல் நடக்கின்றன.  முடிவில் காதலர்கள் இணைந்து சுபமாக முடிகிறது.

*****

56    கத்தியின்றி ரத்தமின்றி    -பார்வையாளன்   

http://pichaikaaran.blogspot.com/2011/10/2011_3324.html

ஃபோன் மூலமாக அமானுஷ்ய கட்டளைகள் என்று தொடங்கி, முடிவில் அணுசக்திக்கு ஆதரவான சதியாக முடிகிறது.  கதையின் தொடக்கத்தில் வரும் அடல்ட்ஸ் ஒன்லி கதை ஒட்டாமல் நெருடலாக இருக்கிறது.  முடிவில் இன்னும் நம்பும்படி அமைந்திருந்தால் சிறப்பான கதையாக அமைந்திருக்கும்.

*****

57    குறியீடு            -ப. அருண்   

http://aalunga.blogspot.com/2011/10/2011.html

நல்ல லாஜிக்.  பாஸ்வேர்ட் கேட்டவன் உண்மையில் கேட்டானா, இல்ல தவறாக நோக்கத்தில் கேட்டானா என்பதை கண்டுபிடிக்க நல்ல திட்டம்.  இதற்கு மாதவனிடமே கேட்டு சரி பார்த்திருக்கலாமே என்று தோன்றாமலும் இல்லை.  இன்னும் விரிவாக எடுத்து சென்றிருந்தால் நல்ல கதையாக உருவெடுத்திருக்கும்.

*****

58    மாயை            -செல்வகணபதி   

http://selvasword.blogspot.com/2011/10/blog-post.html

அலுவலக பாலிடிக்ஸால் தவறான பாஸ்வேர்டு கொடுக்கப்பட அதை அதிர்ஷ்டவசமாக முறியடிக்கிறார்கள்.  யார் செய்த சதி என்பது நல்ல ட்விஸ்ட்.  ஆனால் மெலெழுந்தவாரியாக நடக்கிற சம்பவங்களால் சுவாரசியம் அதிகம் இல்லை.

*****

59    கத்தியின்றி.. ரத்தமின்றி..    -அருண்காந்தி   

http://enviruppam.blogspot.com/2011/10/2011_31.html

பயோ வேஸ்ட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்கப் போடும் திட்டம்.  நல்ல முயற்சி என்று சொல்லலாம்.  ஆனால் கதையமைப்பு கொஞ்சம் காலை வாரி விடுகிறது.  இன்னும் 'நறுக்'கென வந்திருக்கலாம்.

*****

60    கண்ணாமூச்சி        -கார்த்திக்   

http://karthiguy.blogspot.com/2011/10/2011.html

அணுசக்தி போராட்ட குழுவிற்கு ஆதரவாக பாற்கடல் விஷ்ணுவே வந்து பாஸ்வேர்டை மாற்றிவிடுவதாக ஒரு கதை.  கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான். ஆனால் அப்படிப்பட்ட குறிப்பு ஏன் வரவேண்டும் என்ற கேள்விக்கு விடையில்லை. 

*****

61    காவல்துறை கருப்பு ஆடு    -ரஹீம் கஸாலி   

http://ragariz.blogspot.com/2011/10/2011compedition-short-story.html

மற்றொரு கடத்தல், கருப்பு ஆடு கதை.  கதை முழுவதும் உரையாடல்களாக வருகிறது.  அப்பட்டமாக தகவல் சொல்லும் பாணியில் அமையாமல் யதார்த்த உரையாடல்களில் கதை சொன்னால்தான் சுவாரசியம் இருக்கும்.  அதுவும் தூரப் போய் செல்ஃபோன் பேசியதால் சந்தேகப்பட்டு மாட்டும் அப்பாவியாக இன்ஃபார்மர் இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

*****

62    பூங்காவுக்குள்ளே புயல்    -பரிவை. சே.குமார்   

http://vayalaan.blogspot.com/2011/10/2011_31.html

ஒரு ரொமான்ஸ் காதல் கதையின் இடையே ஆங்காங்கே சிறுகதைப் போட்டி பற்றியும் வருகிறது.

*****

63    விண்டேஜ்            -பினாத்தல் சுரேஷ்   

http://penathal.blogspot.com/2011/10/vintage-2011.html

விண்டேஜ் கார் வாங்க நடக்கும் போட்டி.  சார், கோகுல், ரெட்டி என்று பலரும் ஏலத்தில் போட்டி போட விஷ்ணு யாருக்கு வேலை செய்கிறான் என்ற சஸ்பென்ஸ். கதை வெகு சுவாரசியம்.  ஆனால் சங்கேத கோட் எதற்கு பரிமாறிக் கொள்கிறார்கள் என்றுதான் புரியவேயில்லை.

*****

64    போர்க்களத்தில் சாய்ந்தால் கூட    -சன்   

http://writersun.blogspot.com/2011/10/2011.html

மந்திரவாதம், ஊடு மாந்த்ரீகம் என்று வித்தியாசமான பின்னணி.  ஆங்கில குறியீட்டை எப்படியோ மாந்த்ரீகத்திற்கு கொண்டு சென்று விட்டார்.  நல்ல சரடு.  முதலில் வரும் காதல் சம்பவங்கள் கதையில் ஒட்டுவதில்லை.  முடிவில் அமானுஷ்யமான திருப்பம்.  நல்ல முயற்சி. 

*****

65    மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும்    -சன்   

http://writersun.blogspot.com/2011/10/2011_31.html

ஜென் மற்றும் ஆர்ட் ஆஃப் மோட்டார் சைக்கிள் பாணியில் எழுதப்பட்ட சிறுகதை.  நல்ல முயற்சி. சவால் சூழலையும் பொருத்துவதற்காக சற்று வளர்த்திருக்கிறார்.  அதற்கப்புறம் ஹெட் மெக்கானிக்கை சந்தித்தப் பிறகுதான் பம்ப் கதையே துவங்குகிறது.  ஆனால் கதையாக பரிமளிக்காமல் ஒரு சுயமுன்னேற்ற கட்டுரையாக நின்றுவிட்டது.

*****

66    காதல் ஒரு பட்டாம்பூச்சி    -விஜயஷங்கர்   

http://vijayashankar.blogspot.com/2011/10/blog-post_31.html

காதல் கதை.  முடிவில் தன் காதலிக்காக அவள் வருங்கால மாப்பிள்ளையை காப்பாற்றப் போகிறான்.  அப்புறம்? என்று பார்க்கும்போதே முற்றும் போட்டுவிட்டார்.

*****

67    சவால் சிறுகதை        -இளா   

http://vivasaayi.blogspot.com/2011/10/2011.html

குழந்தைகளின் கள்ளன் போலிஸ் விளையாட்டில் சவால் சூழலை பொருத்தியிருக்கற வித்தியாசமான கதை. சங்கேத மொழி, ஃபோன் வருவதெல்லாம் குழந்தையின் கற்பனையில் நடப்பதாக அழகாக காட்டி விடுகிறார். போட்டியின் விதிப்படி அது இருக்க வேண்டுமே. கோகுல் மற்றும் கிருஷ் இருவரா இல்லை ஒருவரா என்ற குழப்பம் இருக்கிறது. கதைக்கு உதவியாக சில படங்கள் காட்டப்படுகிறது.  ஆனால் சவால் படம் காணவில்லை. 

*****

68    இரட்டைப்பிறவி விஷ்ணு    -நக்கீரன் ஜெயராமன்   

http://naai-nakks.blogspot.com/2011/10/2011.html

சங்கேத குறிப்பிற்கு கூகுள் மூலமாக பல விவரங்களை சேகரித்து போட்டிருக்கிறார். டெரர் கும்மி போட்டியில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது இவருக்கு.  கதை எழுதும் ஆர்வம் விடாது துரத்திக் கொண்டிருக்கிறது.  சீக்கிரமே கதை எழுதிவிடுவார் என்று நம்புகிறோம்.

*****

69    ஆறாம் அறிவு        -நிஷா   

http://forcenisha.blogspot.com/2011/10/blog-post_31.html

பெண்ணை ப்ளாக்மெயில் செய்பவரை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள்.  அப்புறம் ஒட்டாக சவால் சூழலுக்கான ஃபோட்டோவை சேர்த்து விடுகிறார் கதாசிரியர்.  ஒருவேளை அடுத்த கதையில் சவால் சூழலை வைத்து தொடர்ந்து எழுதுவாராக இருக்கும்.

*****

70    அணு அணுவாய்..        -கதிரவன்   

http://kathir-tamil.blogspot.com/2011/10/2011.html

சங்கேத குறியீட்டின் மூலமாக வீட்டு விலாசம் கண்டுபிடித்து துப்பறியும் கதை.  கொலை செய்தவரின் வீட்டுக்குப் போனால் அணுசக்தி எதிர்ப்பு பிரச்சாரமாக முடிகிறது.  த்ரில்லராக தொடங்கி பெரிய சஸ்பென்ஸ் இல்லாமல் சப்பென முடிந்துவிட்டது போல் இருந்தது.

*****

71    பிரபல எழுத்தாளன் எழுதியது    -பறக்கும் குதிரை   

http://parakkumkuthirai.blogspot.com/2011/10/2011.html

"
இணையத்தில் நடந்த பிரபல தமிழ் எழுத்தாளர்களிடையேயான விவாதத்தை அப்படியே கதை செய்திருக்கிறார்.  விஷ்ணுதர வட்டம், எழுத்தாளர் ஜெயராமன், எழுத்தாளர் ஆறு என்றெல்லாம் வருகிறது.  நல்ல முயற்சி."

*****

72    அகம்            -அகல்விளக்கு   

http://agalvilakku.blogspot.com/2011/10/2011.html

சவால் சூழலை சுற்றி எழுதப்பட்ட கடத்தல் கதை.  நடையை இன்னும் மெருகேற்றியிருந்தால் நன்றாக வந்திருக்கும். குறியீட்டுத் தகவலை கொரியர் டெலிவரியிடமிருந்து கைப்பற்றுவது தவிர வேறு சஸ்பென்ஸ் இல்லாததால் சற்று டல்லடிக்கிறது.

*****

73    வாழ்க்க ஒரு வட்டம்டா -2    -ரவி   

http://mcxu.blogspot.com/2011/10/2-2011.html

கடத்தல், போலிஸ் கதாபாத்திரங்களை வைத்து சைக்ளிக் சம்பவங்களை சித்திரித்திருக்கிறார். நடுவில் சற்று பெயர்க் குழப்பம் வந்துவிடுகிறது.  சம்பந்தபட்டவர்கள் எல்லாரும் இறந்து விடுகிறார்கள்.  இரண்டு கொலை செய்த வின்செண்ட் மட்டும் இருபது கோடியோடு தப்பித்து விடுகிறார்.  வாழ்க்கஒரு வட்டம்டா- 3ல் அவருக்கு தண்டனை கிடைக்குமோ?

*****

74    மூன்றாம் விதி        -ஸ்ரீராம்   

http://engalblog.blogspot.com/2011/10/2011.html

குழப்பங்களின் விதி போல் வரிசையாக எல்லாரும் பணத்தை கண்டெடுக்கிறார்கள். வேறு வழியில் திருட்டு கொடுக்கிறார்கள்.  இறுதியில் வரும் குருமூர்த்தி பாட்டியின் மருமகனா?  பணத்தை முதலில் தவறவிட்டவரோ? அந்தரத்தில் நின்றுவிடுகிறது கதை.  சவால் சூழல் சம்பந்தமில்லாமல் ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது.

*****

75    போலீஸா கொக்கா?        -பெசொவி   

http://ulagamahauthamar.blogspot.com/2011/10/2011.html

க்ளூ கொடுத்த பேப்பரிலிருந்து இன்னொரு க்ளூ எடுத்து துப்பு துலக்கிவிடுகிறார்கள்.  நல்ல கற்பனை.  ஆனால் பாத்திரங்கள் எல்லாரும் Confess செய்வது போலவே தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்வதால் கதை போரடிக்கிறது."

*****

76    காக்கும் விஷ்ணு        -பெசொவி   

http://ulagamahauthamar.blogspot.com/2011/10/2011_31.html

சவால் சூழலை வைத்து கம்ப்யூட்டர், டேட்டாபேஸ், பாஸ்வேர்டுன்னு எழுதப்பட்ட கதை.  இறுதியில் தவறான பாஸ்வேர்டையே தப்புந்தவறுமாக உள்ளிட்டால் சரியான பாஸ்வேர்டாகிவிடுகிற கற்பனை நன்றாக இருந்தது.  இறுதியில் வேறொரு விஷ்ணு ப்ரியா வேறு ஃபோன் செய்வதாக முடித்துவிடுகிறார்.  அதனால் சவால் சூழல் முழுவதுமாக பொருந்தாமல் போய்விடுகிறது.  டேட்டாபேசில் சேமித்து வைக்க ஃபாண்ட் கலரெல்லாமா தேவைப்படும்?

*****

77    ரங்கு குரங்கு ஆன கதை    -வெண்புரவி   

http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

கொஞ்சம் நீளமான கதை.  1600 வார்த்தைகளுக்கு மேலே போகிறது.  அங்கங்கே சில நல்ல நகைச்ச்சுவையும் இருக்கிறது.  கதைக்களனாக திருப்பரங்குன்றம் வருகிறது.  நண்பர்கள் தண்ணியடித்துவிட்டு, திறந்தவெளியில் படிகளில் ஏறிப் போய் வாந்தி எடுப்பதாக சொல்லப்படுகிறது.  திருப்பரங்குன்றம் கோவில் குடவறை முறையில் குன்றின் உள்ளிருந்து ஏறிப்போகும் முறையில் கட்டப்பட்டது என்று தெரியாமல் எழுதிவிட்டாரோ.  குரங்கு கடித்துவிட டாக்டர் சிகிச்சை, கடித்த குரங்கு செத்து போகிறது என்று போய் முடிவில் டாக்டர் மங்களேஸ்வரன் என்னும் மங்கியோடு முடிகிறது.  கொஞ்சம் எடிட் செய்திருந்தால் நல்ல கதையாக வந்திருக்கும்.

*****

78    குழப்பம்            -வெளங்காதவன்   

http://velangaathavan.blogspot.com/2011/10/2011.html

கல்லூரிக் காதல் பின்னணியில் எழுதப்பட்ட கதை.  குறியீட்டிற்கு ஜாலியான ஒரு விளக்கமும் சொல்லபடுகிறது.  ஆனால் கதையோடு பொருந்தவில்லை.  சும்மா ஜாலியாக எழுதப்பட்ட கதை.

.

20 comments:

middleclassmadhavi said...

விமர்சனத்துக்கு நன்றி!

ரஹீம் கஸாலி said...

காவல்துறை கருப்பு ஆடு -ரஹீம் கஸாலி

http://ragariz.blogspot.com/2011/10/2011compedition-short-story.html

மற்றொரு கடத்தல், கருப்பு ஆடு கதை. கதை முழுவதும் உரையாடல்களாக வருகிறது. அப்பட்டமாக தகவல் சொல்லும் பாணியில் அமையாமல் யதார்த்த உரையாடல்களில் கதை சொன்னால்தான் சுவாரசியம் இருக்கும். அதுவும் தூரப் போய் செல்ஃபோன் பேசியதால் சந்தேகப்பட்டு மாட்டும் அப்பாவியாக இன்ஃபார்மர் இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ////
நன்றி நண்பரே...என் கதைக்கான ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இதை எடுத்துக்கொள்கிறேன்.

writersun said...

"முதலில் வரும் காதல் சம்பவங்கள் கதையில் ஒட்டுவதில்லை "

படித்து முடித்ததும் காதல்தான் மனதில் நிற்க வேண்டும் என்பதே என் முயற்சி .. ஆனால் மாந்திரீக விஷயங்கள் காதலை பின்னுக்கு தள்ளி இருப்பதை உணர்கிறேன்.
விமர்சநத்திற்கு நன்றி. பங்கேற்ற ஒவ்வொரு கதைக்கும் vimarsanam என்பது naan பார்த்திராத ஒன்று. naduvarkalin உழைப்புக்கு தலை வணங்கி paaraattukiren

writersun said...

"ஆனால் கதையாக பரிமளிக்காமல் ஒரு சுயமுன்னேற்ற கட்டுரையாக நின்றுவிட்டது. '

பெருபான்மை inam சிறுபான்மையை ஆக்கிரமித்தல் ullitta பல விஷயங்களை thota muyarsiththen, verum சுய munnetra கட்டுரையாக தோன்றுகிறது என்றால் , ezuththu இன்னும் வலுவாக irunthirukka வேடனும் என்பதை ஏற்கிறேன். naduvarkal கருத்தை தலை வணங்கி ஏற்கிறேன்

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Madhavan Srinivasagopalan said...

தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

// பிரத்யேக செக்யூரிட்டி ரேஞ்சில் கேரக்ட்ரைசேஷன் செய்திருக்க வேண்டாம். //

இங்கு செக்கியூரிட்டி என்பது, அரசியல்வாதிகளின் உயிரைப் பாதுகாக்க வரும் black-cats அல்ல. ராணுவ ரகசியங்கள் கணணி டேட்டாக்களை பாதுக்காக்க உயர் ரக செக்கியூரிட்டி ஆபீர்சர்கள் தான் தேவை. இதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். -- நன்றி

பார்வையாளன் said...

"அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகளின் பின்புலனில் சவால் சூழலை பொருத்தி எழுதப்பட்ட கதை.''

அணுக்கதிர்வீச்சு ஆபத்தானதுதான்.. ஆனால் இதை விட மோசமானது நம் ஒவ்வொருவரின் மெத்தனம் , பொறுப்பின்மை போன்றவையே என்பதை , அதீத கற்ப்னைகள் ஏதும் இன்றி நம் அன்றாடம் காணும் சம்பவங்கள் மூலம் உறுத்தாமல் சொல்ல நினைத்தேன்..

இதை சொல்ல மேடை அமைத்து கொடுத்த போட்டி நடத்துனர்களுக்கு நன்றி.

பார்வையாளன் said...

"அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகளின் பின்புலனில் சவால் சூழலை பொருத்தி எழுதப்பட்ட கதை.''

அணுக்கதிர்வீச்சு ஆபத்தானதுதான்.. ஆனால் இதை விட மோசமானது நம் ஒவ்வொருவரின் மெத்தனம் , பொறுப்பின்மை போன்றவையே என்பதை , அதீத கற்ப்னைகள் ஏதும் இன்றி நம் அன்றாடம் காணும் சம்பவங்கள் மூலம் உறுத்தாமல் சொல்ல நினைத்தேன்..

இதை சொல்ல மேடை அமைத்து கொடுத்த போட்டி நடத்துனர்களுக்கு நன்றி.

பார்வையாளன் said...

" நீளமாக இருந்தாலும் 1500 வார்த்தைகளுக்கு மிகவில்லை"

ஒவ்வொரு கதையையும் படிப்பது, முக்கிய பாயிண்ட்களை நினைவில் கொள்வது போன்ற பெரும் பணிகளுக்கிடையே, போட்டி விதியான 1500 வார்த்தைகள் என்பதிலும் கவனம் செலுத்தும் நடுவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

பறக்கும் குதிரை said...

என் கதையைப் பற்றிய விமர்சனம் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி :)

ILA(@)இளா said...

கலக்கல். இப்பவே ஓரளவுக்கு முடிவை எதிர்பார்க்கலாம் போல

rufina rajkumar said...

டென்ஷன் ஐ ஏத்துறீங்கப்பா 15 ஆம்தேதி னா பகல்லயே முடிவு அறிவிக்க மாட்டீங்க, ராத்திரி வரை காத்திருக்கணுமா?

வெளங்காதவன் said...

//குழப்பம் -வெளங்காதவன்

http://velangaathavan.blogspot.com/2011/10/2011.html

கல்லூரிக் காதல் பின்னணியில் எழுதப்பட்ட கதை. குறியீட்டிற்கு ஜாலியான ஒரு விளக்கமும் சொல்லபடுகிறது. ஆனால் கதையோடு பொருந்தவில்லை. சும்மா ஜாலியாக எழுதப்பட்ட கதை. ///

:)

தேங்க்ஸ் ஆதி... இதெல்லாம் ஒரு கதைன்னு ஒரு அஞ்சு நிமிஷம் வேஸ்ட் பண்ணி படிச்சதுக்கு...

:)

Madhavan Srinivasagopalan said...

// "லாப்டாப்பிலிருக்கும் டேட்டாவை பாதுகாக்க ஏகப்பட்ட டெக்னிகல் விஷயங்கள் கதை படிப்பதை அந்நியபடுத்திவிடுகின்றன." //

இது அறிவியல் கற்பனைக்கதை அல்ல. சாத்தியமாகக் கூடிய முறைதான். விவரம் தெரிந்தவர்கள் ஆழ்ந்து படிக்கலாம். விவரம் புரியாதவர்கள் மேலோட்டமாக அப்படி ஒரு முறை இருப்பதை புரிந்துகொள்ளக் கூடிய வகையில் தான் கதை சென்றுள்ளதாக நான் நினைக்கிறேன்.

Those who can't follow the technical details, I am sure they can understand the theme qualitatively atleast.

சே.குமார் said...

எனது கதை பற்றிய தங்கள் விமர்சனத்திற்கு நன்றி...

Guru pala mathesu said...

dear sir, thanks for your comment

V.Radhakrishnan said...

//அஸ்ட்ரானமி, நட்சத்திரம் என்று புதிய கதைக் களன். ஆனால் அம்புலிமாமா கதைகளை நினைவூட்டும் நடை கொஞ்சம் தடங்கலாக இருக்கிறது. ஏதோ குறியீடு, புத்தகம், கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்படும் சங்கேதங்கள் என்றெல்லாம் வருகிறது. அவை என்னவென்று சொல்லாமல் கதை பயணிப்பதால் அழுத்தம் இல்லை.//

அம்புலி மாமா கதைகளுக்கான நடை இதுதானா? அழுத்தமில்லாத கதைதான் எனினும் சவாலுல ஜெயிச்சிட்டோம்ல. ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நண்பர்களே, விமர்சனம் குறித்த உங்கள் பாராட்டுகளும், கண்டனங்களும் நடுவர்களைச் சென்றடையவேண்டியது. அவற்றிற்கு நாங்கள் பொறுப்பல்ல.!

ரிஸல்டுக்காக காக்கவைப்பது நோக்கமல்ல, சிறிய தாமதத்திற்கு வருந்துகிறோம். இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் யுடான்ஸில் வெளியாகும். பின்னர் இங்கும்.!

நன்றி.

Nundhaa said...

என் கதை பற்றிய விமர்ச்னத்தின் இந்த வரி குறித்து: ‘ஆனால் முதல் காட்சியும் இரண்டாம் காட்சியும் சரியாக இணையவில்லை. ’ - ’இன்னுமா புரியவில்லை ... Paradise Inn - Room No.603’ என்று ஒரு வரி எழுதாதற்கு காரணம் இது கனவு என்றால் scene continuity அவசியமில்லை மேலும் இந்த recursionக்குக் காரணம் ‘மறதி’ - அது கனவுக்கு உள்ளோ ... வெளியிலோ ... :)

எனினும் இந்தக் கதையை நான் இன்னும் betterஆக எழுதியிருக்க முடியும் தான்.

நடுவர்களுக்கு இதை தெரியப்படுத்தவும்.

இராஜராஜேஸ்வரி said...

பிறகு அவருக்கே விஷ்ணு ஃபோன் செய்கிறார் என்னும்போது லாஜிக் இடர்கிறது./

அனுமனுக்கே அவரது பலத்தை நினைவூட்டவேண்டியிருக்கிறதே!

இறைவன் முன்னால் அவரது புகழை ஆயிரம் நாமங்களால் நினைவூட்டியே நமது பிரார்த்தனைகளை வேண்டுகிறோம்!

மனிதனாக அவதாரமெடுத்ததால் அவசியப்பட்டது..

எனது முதல் சிறுகதைக்கு பரிசும் கொடுத்து சிறப்பித்தமைக்கு நன்றி..
கதைக்கான விமர்சனத்திற்கு நன்றி.