Friday, December 9, 2011

செழியனின் ‘உலக சினிமா’


எதெல்லாம் பார்த்துட்டோம்.. எதெல்லாம் இன்னும் பார்க்கலை.. எதெல்லாம் டிவிடி இருக்குன்னு செக் பண்றதுக்காக ஒரு லிஸ்ட் போட்டேன். உங்களுக்கும் ஒருவேளை உதவியா இருக்கலாமே என்று இங்கே தர்றேன். என்ன? அட.. நான் போட்ட லிஸ்ட் இல்லீங்க, நான் அம்மாம்பெரிய அப்பாடக்கர்லாம் இல்லைங்க. ’உலக சினிமா’ங்கிற விகடன் பிரசுர புத்தகத்தில் செழியன் அறிமுகப்படுத்தியிருந்த உலக சினிமாக்களின் வரிசைதான் இது..

1. Children of Heaven -1997
2. Life is Beautiful - 1997
3. The Way Home - 2002
4. The Road Home - 1999
5. Cinema Paradiso - 1988
6. Run Lola Run - 1998
7. Maria Full of Grace - 2004
8. Together - 2002
9. Central Station - 1998
10. Pickpocket - 1959
11. The Pianist - 2002
12. Hotel Rwanda - 2004
13. The Cyclist - 1987
14. City Lights - 1931
15. The Return - 2003
16. Meghe Dhake Tara - 1960
17. A Short film about Love -1988
18. Rabbit Proof Fence - 2002
19. The Battle of Algiers - 1966
20. Carandiru - 2003
21. Citizen Kane - 1941
22. Good bye Lenin - 2003
23. Rashomon - 1950
24. Postmen in The Mountains - 1999
25. La Strada - 1954
26. The Day I Became a Woman - 2000
27. E.T - 1982
28. The 400 Blows - 1959
29. Khamosh Pani - 2003
30. The Last Emperor - 1987
31. Kikujiro - 1999
32. Death on a Full Moon Day - 1997
33. Talk to Her - 2002
34. At Five in the Afternoon - 2003
35. City of God - 2002
36. In the Mood for Love - 2000
37. Moolaade - 2004
38. Pather Panchali - 1955
39. No Man's Land - 2001
40. Gandhi - 1982
41. Battleship Potemkin - 1925
42. Salaam Bombay - 1988
43. Osama - 2003
44. Raging Bull - 1980
45. Where is My Friend's Home - 1987
46. Ballad of a Soldier - 1959
47. Landscape in the Mist - 1988
48. Be with Me - 2005
49. The Postman - 1994
50. Dancer in the Dark - 2000
51. Cries and Whispers - 1972
52. The Runner - 1985
53. Tokyo Story - 1953
54. Blow-up - 1966
55. Spring, Summer, Fall, Winter and Spring - 2003
56. Ali Zaoua - 2000
57. Hiroshima My Love - 1959
58. The Colour of Pomegranates - 1968
59. Paradise Now - 2005

லிஸ்ட் போட்டதுதான் போட்டேன்.. புக்கு எப்படி இருக்குனும் கையோட சொல்லிடறேன்..

கொஞ்ச நாளைக்கு முன்னாலயே படிச்சதுதான். ஒவ்வொரு கட்டுரையின் துவக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது. படங்கள் ஏற்படுத்திய உணர்வுகளை விவரிப்பார் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தால் செழியன், படத்தின் கதையை மட்டும் விளக்கமாக எழுதிவிட்டு படம் மற்றும் இயக்குனர் பற்றிய தகவல்களை தந்து தன் கடமையை முடித்துக்கொண்டுள்ளார். அவை நிச்சயமாக பயனுள்ள தகவல்கள்தான் எனினும் ஒரு வாசிப்பனுவத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். ஒருவேளை கதைகளைப் படித்து, படத்தைக் கண்டு அதன் தாக்கத்தை வாசகர்கள் அவர்களே அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டாரா தெரியவில்லை.

லிஸ்டின் சில படங்களைப் பார்த்திருக்கிறேன். அவை தந்த உணர்வுகளை, இன்னொரு பார்வையாளன் எப்படி உணர்ந்திருக்கிறான் என்று ஆவலோடு புத்தகத்தைப் புரட்டிய எனக்கு கதை விவரிப்பும், தகவல்களும் போதவில்லைதான்.. இருப்பினும் இப்படியொரு அரிதான லிஸ்டுக்கும், சீரிய முயற்சிக்கும், உழைப்புக்கும் செழியனுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.!

.

7 comments:

gunzchennai said...

ஆதி,
ஜக்கி வாசுதேவ் மாதிரி நீங்க அத்தனைக்கும் நிறைய ஆசைப்படுகிறீர்கள் - பேராசை அல்ல - அது ஏழாம் அறிவு படத்தைப்பற்றியதாக இருக்கட்டும், இல்லை உலக சினிமாக்களுக்கான பட்டியலும் அதன் விளக்க முன்னுரையாகட்டும், எல்லாவற்றிலும் ஒரு பர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கிறீர்கள். ஏழாம் அறிவு படத்திற்கான தங்களின் விமர்சனத்தை படிக்க இப்போது கிடைத்தது. பி மற்றும் சி சென்டர்களை முன்னிலைப்படுத்தி அவர்களின் திருப்திக்கு படம் கொண்டுசெல்லப்பட்டிருப்பது ஏ சென்டர்வாசியான உங்களின் ஆறாம் அறிவுக்கு உவர்ப்பாகவே அமைந்துவிட்டது ஆச்சர்யமில்லை. உங்களின் எல்லா தேடல்கள்/வாசிப்புக்களின் முடிவிலும் நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்காத ஏமாற்றத்திற்குள்ளானதை உங்களின் வார்த்தைகள் காட்டிகொடுக்கின்றன. நல்ல விஷயம்தான். உங்களின் திருப்திகேற்ற பதிவுகள் திரையிலும் புத்தகங்களிலும் கிடைக்க உங்களின் தேடல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஊசிகுறிப்பு (‘பின்’குறிப்புதான், நாங்கல்லாம் செந்தமிழங்க):
உங்க பிளாக்கை ஃபாலோபண்ணிருக்கேன். உங்களைப்பத்தி நல்லவிதமா எழுதியிருக்கேன். புது பிளாக்கரான எனக்கு ட்ரீட் எதுவும் கிடையாதா? ஒரு குவார்ட்டர் சொல்லுங்களேன்

சுசி said...

:))

Rishvan said...

nice collections... www.rishvan.com

இனியன் பாலாஜி said...

இந்த சிடி எல்லாம் எங்கே கிடைக்கும் என்று தெரியப்படுத்தினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.


இனியன் பாலாஜி

Rajkumar Elango said...

I hav more then 10 films above that list if you want contact me. Rajkumar 9489051832

Rajkumar Elango said...

இவர்ட்ட்ரில் பத்துக்கும் மேலான படங்கள் நல்ல தரத்துடன் என்னிடம் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். ராஜ்குமார். மின் அஞ்சல் . ezharaj@gmail.com

Rajkumar Elango said...

விருப்பம் உள்ளவர்கள் முதலில் இப்படி தேர்வு செய்து பாருங்கள்..
1. Children of Heaven -1997
2. Cinema Paradiso - 1988
3.The Way Home - 2002
4.The Return - 2003
5.Salaam Bombay - 1988