Pages

Ads 468x60px

Sunday, December 25, 2011

ராஜபாட்டை -விமர்சனம்

இந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடான்னுதான் முதல்ல தோணுச்சு. இருந்தாலும் தரணி போன்ற ஆசாமிகளைக் கூட விட்டுவிடலாம். ஆனால் சுசீந்திரன் மாதிரி ஆட்கள் ஏமாற்றி வழிப்பறி பண்ணும்போது அதைக் கண்டிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒன்று, ’அழகர்சாமியின் குதிரை’ பண்ண வேண்டும்.. அல்லது என் பணம்யா.. உங்களை நம்பி படம் பண்ண பயமாயிருக்குன்னா ‘நான் மகான் அல்ல’ பண்ண வேண்டும். இரண்டிலும் தன்னை நிரூபித்துவிட்டு.. அப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் என்று நம்பி திரையரங்குக்கு வரும் ரசிகன் மூஞ்சியில் கரியைப் பூசிச் சிரித்தால் எப்படிக் கடுப்பாகும் நமக்கு?

அலட்சியம். ரசிகன் மீது கொண்டிருக்கும் அலட்சியம். சில வெற்றிகள் உங்களுக்குத் தருகிறதா அவனை இப்படி அவமரியாதை செய்யும் தைரியத்தை.. சுசீந்திரன்?. உங்கள் அவசரம், உங்கள் தயாரிப்பாளரின் அவசரம்.. பெரிய ஹீரோவின் கால்ஷீட்டை, கிடைத்திருக்கும் நற்பெயரை வேகமாக பணமாக்கிவிடலாம் என்ற அவசரம். முதல் படத்தை பண்ணும் போது இவ்வளவு துணிச்சலும், அலட்சியமும் இருந்ததா சுசீந்திரன் உங்களுக்கு?

’இப்படி ஒரு திரைக்கதைக்கு நான் தேவையில்லையே.. அடுத்த படத்தில் பார்க்கலாமே சுசீ..’ என்று சொல்லும் நேர்மை ஏன் பாஸ்கர் சக்திக்கு இல்லை? பணமா? நட்பா?

விக்ரம் என்ன செய்வார் பாவம்? என்னதான் அசுர மொக்கை என்றாலும் பலவித கெட்டப்புகள் என்ற சுவாரசியம் இருக்கிறதே.. அதை வைத்து ஏதேனும் பண்ணியிருப்பார்கள்தானே.. முட்டையை எவ்வளவு மோசமான ஆட்கள் சமைத்தாலும் அதன் டேஸ்டைக் கெடுக்கவே முடியாது அல்லவா? ஆனால் அதைக்கெடுக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியே இதிலும். சில பல ஆங்கிலப்படங்களின் ஹீரோக்கள், வில்லன்களின் கெட்டப்புகளை ஒரே பாடலில் சும்மானாச்சுக்கும் போட்டுக் காண்பிக்கிறார் விக்ரம், அவ்வளவே. பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இதை எதிர்பார்த்துவரும் ரசிகர்கள் டென்ஷனாகக்கூடும் என்று பயந்து கிளைமாக்ஸில் பிடித்துவைத்த வில்லனை விசாரிக்க சில வயதான கேரக்டர்களில் விக்ரம் சில நிமிடங்கள் வருகிறார். அதற்கு அவர் எந்தவிதமான மேக்கப்பும் போடாமல் வந்திருந்தாலே அவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். இவ்வளவுக்கும் அந்த வில்லன், கெட்டப்புக்கு எல்லாம் பயப்படாமல் நன்றாக உதைத்த பின்னர்தான் வாக்குமூலம் தருகிறார். அதை முதலிலேயே செய்து தொலைத்திருக்க வேண்டியதுதானே.!


பாடல்கள் அத்தனையும் அவ்வளவு மொக்கை என்றாலும் படம் அதைவிட மொக்கையாய் அமைந்து இயக்குனரும், இசையமைப்பாளரும் நீயா நானா நடத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதிலும் ஒரு பாடல் விக்ரம் பாடியது. செம்மை மொக்கை என்று தெரிந்ததாலும், படத்தில் எங்கே வைப்பது என்று தெரியாததாலும் கிளைமாக்ஸ் முடிந்து கிட்டத்தட்ட டைட்டில் போட்டபின் போடுகிறார்கள். எல்லாப் பாடல்களையுமே அப்படிப் பண்ணியிருக்கலாம். இது இந்தப் படத்தில் ஒரு நல்ல விஷயமாக தோன்றுகிறது. இதை அனைத்து சினிமாக்களும் தயவுசெய்து பின்பற்றி ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினால் எல்லோருக்கும் புண்ணியமாய்ப் போகும். டைடில் போட்டபிறகு மொத்தமாக பாடல்களை திரையிட்டால் வேண்டுமென்பவர்கள் உட்கார்ந்து பார்த்துக்கொள்ளலாம், மற்றவர்கள் போய்த் தொலையலாம் பாருங்கள்.

.

9 comments:

ராம்ஜி_யாஹூ said...

இப்படி ஒரு திரைக்கதைக்கு நான் தேவையில்லையே.. அடுத்த படத்தில் பார்க்கலாமே சுசீ..’ என்று சொல்லும் நேர்மை ஏன் பாஸ்கர் சக்திக்கு இல்லை? பணமா? நட்பா?

மேவி .. said...

நீங்க இவ்வளவு கடுப்பா விமர்சனம் எழுதி நான் படிச்சதே இல்லை. இதை சுசீந்திரன் தான் இயக்குனரான்னு டவுட்டாவே இருக்கு எனக்கு

உண்மைத்தமிழன் said...

ஆதீயையே டென்ஷனாக்கிட்டாரே சுசீந்திரன்..

வாழ்க சுசீந்திரன்.. வளர்க விக்ரம்..!

வவ்வால் said...

//இப்படி ஒரு திரைக்கதைக்கு நான் தேவையில்லையே.. அடுத்த படத்தில் பார்க்கலாமே சுசீ..’ என்று சொல்லும் நேர்மை ஏன் பாஸ்கர் சக்திக்கு இல்லை? பணமா? நட்பா?//


ஹி..ஹி... ரெட்டை குழியோ ,,சுழியோனு ஏதோ ஒரு படம் அதுல பாலசந்தர், பாரதிராசா எல்லாம் வந்து போனாங்க அவங்களும் இப்படி ஒரு திரைக்கதைக்கு நாங்களாம் தேவையில்லை அடுத்த படத்தில் பார்க்கலாமே என்று சொல்லும் நேர்மை ஏன் அவர்களுக்கு இல்லாமல் போச்சோ இல்லை இயக்குநருக்கே அப்படி சொல்லும் நேர்மை இல்லாம போச்சோ யார் அறிவார்?

ராம்ஜி_யாஹூ said...

நண்பர் வவ்வால்

பாலச்ச்சந்தரோ , பாரதிராசாவோ , கே விஸ்வநாத்தோ என்றுமே வணிகப் படங்களை (கில்லி, மங்காத்தா, பாட்ச, ராஜாதிராஜ, அபூர்வ சகோதரர்கள், அந்நியன்.....) குறை சொன்னது இல்லை.

வணிக நோக்கின்றி கலைப் படங்கள் மட்டும்தான் எடுப்போம், ஆதரிப்போம் என்று அவர்கள் என்றுமே சொன்னதில்லை.

ஆனால் பாஸ்கர் சக்தி, நல்ல கலைப் படங்கள் மட்டும் வந்தால் தான் தமிழ் திரை உலகம் முன்னேறும் என்று கூறியவர்.
அதற்காக ஓ ஞானி உருவாக்கிய ' வீடு தேடி வரும் சினிமா' என்ற திட்டத்திற்கு பெரிதும் துணை நின்றவர்.

அப்படிப் பட்ட பாஸ்கர் சக்தி, இம்மாதிரி வணிகப் படங்களை ஊக்குவிப்பது அறச் செயல் அன்று.

சுசி said...

டைரட்ரே..

! சிவகுமார் ! said...

//மற்றவர்கள் போய்த் தொலையலாம் பாருங்கள்.//

பார்த்து தொலைந்தவர்கள் பலர். :-)

KSGOA said...

ரொம்ப நொந்து போய்டீங்கபோல
இருக்கு!!

KSGOA said...

அப்புறம்....சினிமா விமர்சனம் தவிர
வேறு ஏதும் எழுதுவது இல்லை என்று முடிவு பண்ணிடீங்களா?