Tuesday, January 3, 2012

ஷெரீன் -1


கொல்கத்தா, சால்ட்லேக் சிட்டியின் இரண்டாவது செக்டர். முழுவதும் கண்ணாடியினாலேயே கட்டப்பட்டதோ என்று வியக்கவைக்கும் முகப்பைக் கொண்டிருந்தது அந்தக் கட்டிடம். அதனுள்ளே ஷெரீன் நுழையும் போது மணி காலை 8.20. தாமதமாகிவிட்டதால் ஏற்பட்ட ஒரு சின்ன எரிச்சல் அவள் முகத்தில் இருந்தது. அது போன்ற சின்ன எரிச்சல், கோபமெல்லாம் அவளது அழகைக் குறைத்துவிட முடியாதபடிக்கு பேரழகியாக அவள் இருந்தாள். ப்ளூ ஜீன்ஸும், இறுக்கமான வெண்ணிற டாப்ஸும், இந்த டிஸம்பர் குளிருக்கு ஆண்களைப் போன்ற ஒரு செக்டு ஜெர்கினும் அணிந்திருந்தாள். ஜெர்கினின் ஸிப் முழுதும் திறந்தே கிடந்தது. அடர்த்தியான கூந்தலை கொஞ்சம் வித்தியாசமாக மூன்று இடங்களில் இறுக்கமாக கிளிப்பிட்டு அடக்கியிருந்தாள். செதுக்கியதைப் போன்ற மூக்கு, இதழ்கள். வேறு மேக்கப் எதுவுமில்லாவிட்டாலும், ஒருமுறை பார்த்தவர்கள் அவளை மறுமுறை பார்க்காமல் தப்பிவிட முடியாதபடி செய்துகொண்டிருந்தன அவளது கண்கள். அவை மட்டுமே கொஞ்சமாய் மையிடப்பட்டிருந்தன. அவள் தென்னிந்தியாவில் பிறந்த தேவதை என்பதை அந்த வட்ட முகமும், மாநிறமும் தயக்கமாய் பறைசாற்றிக்கொண்டிருந்தன.

தாமதமாகிவிட்ட பரபரப்பில் வேகமாக மெயின் எண்ட்ரி டோரில் கார்டை ஸ்வைப் செய்துவிட்டு விறுவிறுவென முதல் மாடியிலிருந்த அவளது கேபினை அடைந்தாள். சில ‘ஹாய்’, சில குட்மார்னிங்களை எதிர்கொண்டவாறே அவளது இருக்கையில் அமரப்போனவள் சற்று வலப்புறம் திரும்பி பார்ப்பதைப்போல தெரியாமல் மேனேஜர் கேபினைப் பார்த்தாள்.. “யப்..என்று வாய்விட்டுச் சொன்னவள், மெலிதாக ’தேங்க் காட்..என்றவாறே லாப்டாப்பை எடுத்து அதனிடத்தில் பொருத்தி லானில் கனெக்ட் செய்தாள்.

“என்ன இன்னைக்கு மட்டம் போட்டுட்டேயோனு நினைச்சேன்..பக்கத்து இருக்கையின் மகேஷ். இவளைத் தவிர்த்து இவளது டிபார்ட்மெண்டிலிருக்கும் ஒரே தமிழன்.

“நீ வேற கடுப்பேத்தாத. ரூட் 3யில என்னை பிக்கப் பண்ணாம வந்துட்டானுங்க மடையனுங்க.. டாக்ஸியில வர்றேன்.. எழுந்தவள் அங்கிருந்து மூன்றாவது கேபினருகே நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் நோக்கி, “ஒரு ட்டூ மினிட்ஸ் வெயிட்பண்ண முடியாதா? யாரு கிறிஸ்தானே அப்படிப் பண்ணினது? வச்சுக்கறேன் அவனை..என்று பொய்க்கோபத்தில் கத்தினாள். இவளது சத்தத்தில் இடையிலிருந்து ஒன்றிரண்டு பேர் கவனம் கலைந்து சிரிக்க, அவர்கள் சற்று தூரத்தில் இருந்ததால் பதிலுக்கு கத்தாமல், ‘ஸாரிபா..என்பது போல கண்களாலேயே சைகை காண்பித்துவிட்டு அவர்களின் பேச்சை தொடர்ந்தனர்.

“சரி அதை விடு. பிஎஸ் வந்தாச்சா? சீட்டுல காணோம்

“அதெல்லாம் வந்தாச்சு. வீக்லி ரிவ்யூவாம். அதுக்குள்ள உள்ள போயிட்டானுங்க..

“அதானே பார்த்தேன். அதெல்லாம் என்னைக்கு லீவைப் போட்டுது, நாம நிம்மதியா இருக்க?

“நமக்கு 10 மணிக்கு மீட்டிங்ஹால் புக் பண்ணியிருக்கேன். பிளான்லாம் ரெடிதானே..

“ரெடியா இருக்கேன். ஓவர்வ்யூவிலதான் அடுத்த மார்ச் போர்காஸ்ட் கொடுத்தானுங்களா தெரியலை, அதுமட்டும் காலியா இருக்கு, சமாளிச்சுக்கலாம்..

“என்ன இன்னிக்கு ஒயிட் டாப்ஸுல ஃப்ரெஷ்ஷா இருக்குற மாதிரி இருக்குது..

“ஏண்டா எல்லாவனும் ஒரே மாதிரி இருக்கீங்க.. உன் பொண்டாட்டிக்கு போனைப் போடணுமா?

“வேணாம் தாயி..கும்பிட்டவன்.. மெலிதாக ‘ஸிப்பைப் போட்டா நாங்க ஏன் கேக்குறோம்?என்று முனகினான்.

அவள் சிரித்துக்கொண்டே அலுவலக மெயில்களைத் திறந்து வேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, உடனே ஜிமெயிலையும் ஓபன் செய்தாள். கடைசியாக நேற்றிரவு செக் பண்ணியது, அதற்குள் ஃபேஸ்புக்கிலிருந்தும், குரூப்களிலிருந்தும், வேறு சிலரிடமிருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட மெயில்கள் குவிந்திருந்தன. அதில் வேகமாக கண்களை ஓட்டினாள். யெஸ்.. விஜயிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. அதற்குள்ளாகவே சாட் பாக்ஸ் பாப் அப் ஆகி யாரிடமிருந்தோ ஒரு ஹாய்வந்தது. வேகமாய் அதை மூடிவிட்டு, ஸ்டேடஸை இன்விஸிபிளில் போட்டுவிட்டு விஜயின் மெயிலை மட்டும் கிளிக்கினாள்..

Shhhherin,
Got mad since its getting too long to the next meet. Misssss youuu..
-Viji’

சில கிளுகிளுப்பான சம்பவங்கள் நினைவிலாடி உள்ளூர ஒரு பரபரப்பு ஓடியது அவளுக்குள். தட்ஸ் அமேஸிங். அவளுக்கும் அவனைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. சென்னை போய் இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது.

அவனுக்கு என்ன பதில் அடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே முதுகுக்குப் பின்னால் பிஎஸ்ஸின் குரல் கேட்டது. திரும்பினாள். பாதி மீட்டிங்கில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.

“யெஸ் பிஎஸ்..

“தெரிஸ் அன் இம்பார்ட்டண்ட் கஸ்டமர் மீட் அட் பெங்களூர் ஜிஎஃப் பிளாண்ட் டே ஆஃப்டர் டுமாரோ. கேன் ஐ ப்ரொபோஸ் யூ டு அட்டெண்ட் தட் ஆன் பிகாஃப் ஆஃப் மீ. ஐ ஹேவ் சம் அதர் கமிட்மெண்ட்ஸ்..

கேட்ட தொனியே போகிறாயா என்பதாக இல்லாமல், உடனே கிளம்புறியா என்பதாக இருந்தது..

“ஷ்யூர்..

“தென், பிரிப்பேர் அண்ட் பேக்கப்.. ஐல் கிவ் டீடெயில்ஸ் பை மெயில்சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் மீண்டும் கான்பரன்ஸ் அறைக்குள் போய்விட்டார்.

மகேஷைப் பார்த்தாள். பெங்களூர் போக விருப்பமில்லாதவள் போல சற்றே போலியான சலிப்போடு,

“இவனுங்களுக்கு வேற வேலையில்ல.. அங்க போ, இங்க போன்னு.. நினைச்சா கிளம்பிடணும். முன்னாடியே சொல்லித் தொலைக்கிறதுக்கென்ன? நமக்கு மட்டும் கமிட்மெண்ட்ஸ் இருக்காதா?

அட.. இங்க உக்காந்து தேய்க்கிறதுக்கு எங்கனா வெளியே போனா ஒரு ரிலீஃப்தானே.. அதுவும் அவன் போக வேண்டிய வேலைங்கிறான். அப்படின்னா ஒரு புண்ணாக்கு வேலையும் இருக்காது. தலையை காமிச்சிட்டு வரவேண்டியிருக்கும். கிளம்பு, ஜமாய்..

பின்னர் கிளம்புவதற்குரிய ஃபார்மாலிடிஸைப் பார்க்கத் துவங்கி, அடுத்த ஒரு மணி நேரத்தில் மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள் ஷெரின்.

பின்பு கஃபேக்கு சென்று மகேஷுடன் ஒரு டீயைக் குடித்துக்கொண்டிருக்கும் போதே விஜயிடம் இருந்து SMS வந்தது.

r u free”

“wait.. will come online” என்று ஒரு பதிலை இன்ஸ்டண்டாக தட்டிவிட்டு சீட்டை நோக்கிச்சென்றாள். அதற்குள் எதிர்ப்பட்ட ஆஸாத், அவளை இடிப்பது போல நெருங்கிவந்து விளையாட்டுக் காட்டிவிட்டு கிசுகிசுத்தான்.

“ஷல் வி கோ அவுட் திஸ் வீக்கெண்ட் ஷெரின்?

விலகிச் சிரித்துக்கொண்டே ‘ஷ்ஷ்ஷ்..என்று காற்றில் கைகளை அளைந்து, “மூவிங் டுவர்ட்ஸ் பெங்களூர்..சொல்லிவிட்டு சீட்டுக்கு வந்து உட்கார்ந்தாள்.

விடாமல் அவளைத் தொடர்ந்து வந்தவன், சற்று ஏமாற்றமாக.. “யூ ஷ்யூர்.?

“அட, ஆமாடா..என்று தமிழில் சொல்லி அவனை அனுப்பிவிட்டு மெயிலைத் திறந்து சாட்டில் காத்துக்கொண்டிருந்த விஜயைப் பிடித்தாள்.

10:45 me: yes viji?
   ivijay: chummaathan. Mailkku reply? Hy u seen that?
me: yaa..
   ivijay: ippo enna panre?
me: Office velaiya vituttu unnoda chat pannren?

 ivijay: great J jolly mood..
me: enna venum unakku?
 10:46  ivijay: ம்னு சொல்லு. இப்பவே கிளம்பி வர்றேன் அங்க. J
me: reel vidatha
   ivijay: nijam
me: ok. day after tomrow I’m in bangalore. Anga vaa.
   ivijay: அடச்சே.. அன்னிக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கே..
me: thats u L
   ivijay : அங்கிருந்து எப்ப கிளம்புவ? அடுத்த நாள் ஈவினிங் வரவா?
me: no. im leaving to kolkatta the next day evening.
  10:47 ivijay: great.. L
me: L
  10:48  ivijay: ok. Fine. I’l b there day after tomrow eve. But I’l leave to chennai in the same day night. check the flight timings and come to you. Ok?
10:49 me: ok.


கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்யும்முன் ஒரு அடிக்‌ஷனைப் போல கை பரபரத்தது. டிவிட்டரை ஓபன் பண்ணினாள்.


என்று டைப் செய்து டிவிட்பட்டனை கிளிக்கினாள்.

--தொடரும்.

(தொடர்கதை எழுதி ரொம்ப நாளாச்சுதா? அதான் ஒரு ட்ரை. தொடர்னா ரொம்ப நீளமால்லாம் இல்லை, மினி தொடர்தான். 4 அ 5 எபிஸோட்ல முடிச்சுடறேன். கருத்தைச் சொல்லிட்டுப்போங்கோ.!)
.

13 comments:

ILA(@)இளா said...

ஆரம்பமே அசத்தல்

சுசி said...

செம்ம்ம்ம்ம டைரட்ரே செம்ம்ம்ம :))

பரிசல்காரன் said...

Wow! Great start friend!!!

Chat, tweet... Ennavo Nadakkuthu..!!! Mmmmm... :)

தராசு said...

இது தமிங்கிலீஷ் கதையா தலைவா????

கலக்குங்க

♠ ராஜு ♠ said...

அப்போ, 4 அல்லது 5-ம் பாகத்துல வந்து மொத்தமா படிச்சுக்கறேன்.

Jeeves said...

எனக்கென்னமோ எக்ஸைல எழுத முயற்சிக்கிற மாதிரி இருக்கு. நான் வேணும்னா ரெண்டு ரெசிப்பி, மேல்மருவத்தூர் பக்தி பாடல்கள் அனுப்பி வைக்கவா ?

கார்க்கி said...

speeeeeeeeeed

Vadivelan R. V said...

தல பெங்களூர்ல கொலையா காதலா இல்லை காமமா எதுனு தெரியல ரொம்ப வேகமா இருக்குது. இரண்டு அல்லது நாலு எபிசோட் சொல்லிருக்கிங்க தினமும் எழுதிருங்க தல. உங்க தொடர்கதைக்கு தான் வெயிட்டிங். வாழ்த்துக்கள் தாமிரா அங்கிள்

Vadivelan R. V said...

வாழ்த்துக்கள் தாமிரா அங்கிள்

ஸ்வர்ணரேக்கா said...

//ஏண்டா எல்லாவனும் ஒரே மாதிரி இருக்கீங்க//

//பெங்களூர் போக விருப்பமில்லாதவள் போல சற்றே போலியான சலிப்போடு//

//அடிக்‌ஷனைப் போல கை பரபரத்தது. டிவிட்டரை // - ரசித்த வரிகள்

good try... 'என்ன செய்ய போகிறாய் மினி' மாதிரி short & sweet ஆ எதிர்பார்க்கிறோம்..

KSGOA said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

Poomani said...

Nice start, cant wait to read the rest of the episodes :)

வித்யா said...

gud start..