Saturday, January 7, 2012

சீக்ரெட்ஸ் ஆஃப் தி உடல்மொழி


சென்னை புக்ஃபேர்- 2012

கடந்த 05.01.12ல் துவங்கிய 35வது சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடந்துகொண்டிருப்பதை அறிவீர்கள். புத்தக விரும்பிகள் மறக்காமல் சென்று வாருங்கள். நான் கடந்த 12 வருடங்களாக தவறாது சென்று வந்திருக்கிறேன். இன்றும் போய் வந்தாயிற்று. ஒவ்வொரு ஆண்டும் விழாவின் பிரம்மாண்டம் அதிகரித்துக்கொண்டே செல்வதை தவறாது சென்று வருபவர்கள் உணர்வார்கள். இந்த முறை உச்சம் என்றே சொல்லலாம். ஏராளமான ஸ்டால்கள், கோடிக்கணக்கில் புத்தகங்கள் என்று பிரமிப்பு கொஞ்சம் அதிகம்தான். அத்தனை தெருக்களையும் நடந்து கடப்பதற்கே ‘அக்கடா’ என்று ஆகிவிட்டது.. அப்படியிருக்க நிதானமாக புத்தகங்களை தேடிப்பிடித்து, புரட்டிப்பார்த்து வாங்குவது சாத்தியமா என்பது கேள்வியே. புத்தகங்களை வாங்குவோர் என்னவோ குறைவாக இருப்பதாகத் தெரிந்தாலும் கூட்டத்துக்கு மட்டும் குறைவே இல்லை. மூச்சு முட்டுகிறது. பீச், பார்க்குகள் என்று எத்தனை நாட்கள்தான் செல்வது.? இது மாதிரி செலவில்லாத பிக்னிக் ஸ்பாட் கிடைத்தால் மொய்த்துத் தள்ளிவிட ஒரு வர்க்கமே காத்திருக்கிறது. அதோடு டிராஃபிக்... கொடுமை.

போகலாம் என்று ஐடியா இருப்பவர்கள் தயவுசெய்து சனி, ஞாயிறுகளில் போகாதீர்கள். கூடவே மறந்தும் மனைவிகள், புள்ளை குட்டிகளை அழைத்துச் சென்றுவிடாதீர்கள். அது உங்களுக்கும் நல்லதல்ல, ஊருக்கும் நல்லதல்ல. புக் ஃபேர் ஒன்றும் சுற்றுலாப் பொருட்காட்சியோ, பிக்னிக் ஸ்பாட்டோ அல்ல. பெண்கள் தாராளமாக போகலாம். பெண்களை அழைத்தும் போகலாம். நான் வேண்டாம் என்று சொல்வது மனைவியரைத்தான். வித்தியாசம் புரிகிறது அல்லவா? அப்புறம் சண்டைக்கு வரப்போகிறீர்கள்.!


உருப்படியாகப் பார்த்தது. ஸ்டால் எண் 372. முத்து காமிக்ஸ். அவர்கள்தான் வரவேற்பை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் போல. ஏதாவது பெட்டிக்கடையில் ஒரு ஓரத்தில் வருடக்கணக்கில் தொங்கிக்கொண்டே கிடக்கும் 10 ரூபாய் காமிக்ஸை பார்த்து அதற்கான காலங்கள் போய்விட்டதோ என்று தோன்றியிருக்கிறது. போய்விட்டதுதான் என்பது உண்மைதான். ஆனால் என்னைப்போன்ற 30த் தாண்டியவர்கள் தங்கள் பால்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், ஆசையில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று நினைக்கிறேன். 900 ரூபாய் மெகா பண்டல்கள் உட்பட கடையையே காலி செய்துவிட்டார்கள். மிஞ்சிய கடையில் எதை வைப்பது எனத் தெரியாமல் கடைக்காரர்கள் இருந்த ஒன்றிரண்டு பண்டல்களை அவிழ்த்து, சீட்டுக்கட்டை கட்டாக வைக்காமல் ஒவ்வொரு சீட்டாக வைப்பது போல நிரப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றையும் கூட ஒரு தெரு சுற்றி வந்து பார்ப்பதற்குள் மக்கள் காலிசெய்துவிட்டார்கள். வருகிறவர்களிடமெல்லாம் இதோ அடுத்த பார்சல் வந்துகொண்டிருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பதிவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பதிவர்ஸ் புக்ஸை வாங்கலாம்னு பார்த்தேன். கொஞ்சம் வாங்கிக்கொண்டு ‘பட்டாம்பூச்சி’ ஸ்டாலுக்குச் சென்றேன். செல்வேந்திரனின் ‘முடியலத்துவம்’ இருக்கான்னு கேட்டேன். ஒருவர், ‘என்ன பதிப்பகம்?’ என்றார். ‘யோவ், உங்க பதிப்பகம்தான்யா..’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து இன்னொருவர் ஓடிவந்து, ‘சார், வந்ததே 50 காப்பிதான் சார், போய்டுச்சு, ஈவினிங் வந்துடும்’னார். ’என்ன.. ஓவர் பில்டப்பாக இருக்கிறதே..’ என்று சந்தேகப்பட்டுக்கொண்டே வெளியே வந்தேன். ஹிஹி.

*******

உடல்மொழியின் ரகசியங்கள்

டிஸ்கவரி, ஹிஸ்டரி போன்ற ஆங்கிலச்சேனல்களின் தமிழ் ஒளிபரப்பு வந்ததில் இருந்து நல்லவேளையாக இந்த தமிழ்ச்சானல்களிடமிருந்து தப்ப முடிந்திருக்கிறது. நெட் போக மற்ற டிவி நேரங்களில் இப்போதெல்லாம் இவையும் இரண்டு ஆங்கில மூவி சேனல்கள் மட்டுமே. இந்தச் சேனல்களில் ஒரு பிரச்சினை என்னவென்றால் மீண்டும் மீண்டும் ரிப்பீட்டு போட்டு சாகடிப்பார்கள். கொஞ்சம் போரடிக்கிற சில நிகழ்ச்சிகளும் கூட இருக்கும். ஆனால் எக்ஸலண்டான நிகழ்ச்சிகளைக் காணவேண்டுமானால் அவ்வப்போது இவற்றை மேய்ந்துகொண்டேயிருக்கவேண்டும். அப்படியான சமீபத்திய ’ஹிஸ்டரி’ நிகழ்ச்சி ஒன்று ‘டாப் ஷாட்’ உலகின் தலைசிறந்த துப்பாக்கி வீரர்கள் சிலரிடையே நடந்த ஒரு துப்பாக்கி சுடும் போட்டி. கேம் ஷோக்களின் உச்சம் எனலாம். 

இன்றைக்கு ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. ‘சீக்ரெட்ஸ் ஆஃப் தி பாடிலேங்குவேஜஸ்’. இப்படி அருமையான நிகழ்ச்சிக்கான கருக்கள் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது? பாடி லேங்குவேஜஸில் இருக்கும் ரகசியங்கள் பற்றிய அறிவியல். அந்தக்கால நிக்ஸன், கென்னடி, ஸ்டாலின் துவங்கி இப்போதைய ஒபாமா, டோனி ப்ளேர் வரைக்கும் உலக அரசியல் தலைவர்கள், சினிமா விஐபிகள் போன்றோர் பொது மேடைகளில், நிருபர்களின் முன்னால் எப்படி நடந்துகொண்டார்கள்? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கும் போது தங்களை முன்னிறுத்திக்கொள்ள என்ன செய்தார்கள்? பொய்களை சொல்லமுடிந்திருக்கிறதா? சிக்கலான தருணங்களை, நிருபர்களின் கேள்விகளை எப்படி சந்தித்தார்கள் என்பது பற்றிய சுவாரசியமான தொகுப்பு. விஐபிக்கள் மட்டுமல்லாமல் வேறு தளங்களிலும் மனிதர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது பற்றியும் தொகுப்பு பேசியது. உதாரணமாக, யுஎஸ்ஸில் ஒரு பெண் டிவிக்கு மிகுந்த சோகத்துடன் பேட்டி தருகிறார். தன் குழந்தைகள் காணாமல் போய்விட்டனர். அவர்களை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று அழுகிறார். ஆனால் உண்மையில் அவர்தான் அவரது குழந்தைகளையே கொலைசெய்த குற்றவாளி. சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கப்படுகிறார். சந்தேகத்துக்கான துவக்கமாக இருந்தது, அவரது உடல்மொழியும், முகபாவனைகளும். எவ்வளவு சிறப்பான நடிப்பாக இருந்தாலும் மைக்ரோ எக்ஸ்பிரஷன்ஸ் அது நடிப்பு என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

******

சுபா அப்டேட்

சுபா ஹோம் ஒர்க் எழுதிகிட்டிருந்தான். ரமா மாடிக்கு துணி காயப்போட போயிருந்தார். 

நான் (ரமாவுடன் பேச்சுவார்த்தை 2 நாட்களாக தோல்வியில் இருந்தது) : அம்மாகிட்டப் போய் டீ போட்டுத்தரச்சொல்லு.. போ
சுபா (சமாதான தூதுவர் ஆகுமளவு தயாராகிவிட்டார்) : மாடில போய் ட்ரெஷ் காயைவைக்க போயிருக்காங்க. அங்க போய் சொல்லணுமா?
நான் : ஆமா, போ.. போய் நம்ப ரெண்டு பேருக்கும் வேணும்னு சொல்லு.
சுபா : அப்பன்னா ஷேரி.. போய் சொல்லிட்டு வரேன் என்ன.. அதுரைக்கும் ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க என்ன.. இத (ஹோம் ஒர்க் நோட்) ஒண்ணும் பண்ணிடாதீங்க என்ன.. எதும் கிறிக்கிறாடதீங்க என்ன.. பாத்துக்குங்க என்ன..

(எதச்சொன்னாலும் ஒருநிமிஷம் வெயிட் பண்ணுங்க என்ன..ன்னு சொல்லிட்டுப்போவான். இன்னிக்கு ஹோம் ஒர்க் நோட்டுல கிறுக்கிடாதீங்களாம். முடியல.)

போய்ட்டு வந்து..

சுபா : டீத் தூளு இல்லேயாம்.
நான் : (கொஞ்சம் எரிச்சலில்) அப்ப கடலை மாவை வச்சு போடச்சொல்லு.
சுபா : மாவா? கலல மாவா? அப்பன்னா ஷேரி. போய் சொல்லிட்டு வாரேன் என்ன.. ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க என்ன..

*******

நேசம்- புற்றுநோய் விழிப்புணர்வுப் போட்டிகள்

நேசம் அமைப்பும், யுடான்ஸும் நடத்தும் ‘புற்றுநோய் விழிப்புணர்வு’ போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கதைகள், கட்டுரைகள், குறும்படங்கள். இணைய உலக வரலாற்றிலேயே மிக அதிக பரிசுத்தொகை என்று நினைக்கிறேன். 40000 ரூபாய்க்கும் அதிகமாக. பரிசுத்தொகையை விடவும் போட்டிகளின் நோக்கம் போற்றுதலுக்குரியது. அந்த வகையிலும் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பியுங்கள்.

விபரங்களுக்கு இங்கே க்ளிக்குங்கள்.


*

12 comments:

அருண்மொழித்தேவன் said...

இந்த குழந்தைகளை புரிஞ்சிக்கவே முடியாது பாஸ்.. எங்க ஊட்டுல இருக்கிற வாண்டு எதை சொன்னாலும் கொடுத்தாலும் போதும் போதும்ன்னு கையை காமிக்கிறான். டேய் ஆய் போயிட்டீயான்னு கேட்ட கூட போதும் போதும்ன்னு சைகைலையே காமிக்கிறான் :)))

Rathnavel said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

மின்னுது மின்னல் said...

குழந்தைகள் உலகமே தனி தான்

SELVENTHIRAN said...

யோவ்...50 காப்பி வித்துப்போச்சுன்னா வாழ்த்துக்கள் சொல்லாம... நக்கல் பண்றீயா...

முகில் said...

பதிவு நல்லா இருக்கு. ஆனா "ஷெரீன்" அடுத்த பார்ட்டை எதிர்பார்த்து வந்தேன். சீக்கிரமே அதையும் எழுதுங்கள்.

KSGOA said...

அதுக்குள்ள புத்தக கண்காட்சி போய்ட்டு
வந்தாச்சா?என்ன புத்தகம் வாங்கினீங்க?

அறிவிலி said...

மைதா மாவுல போட்ட டீ எப்படி இருந்துது?

Unknown said...

தல, ரொம்ப நாளா உங்க ப்ளாக் அப்படியே இருக்கு. எதாச்சும் புதுசா எழுதுங்க பாஸ். இன்னும் நண்பன் படம் பாக்கலியா? அத பத்தியாவது எழுதுங்க.
இப்படிக்கு,
உங்க எழுத்தை படிச்சு பித்து புடிச்சு போன, ஆனால் பல நாளா படிக்காம மன உளைச்சலுக்கு ஆளான ஒருவன்.

ஆதி தாமிரா said...

@unknown

ஜாலி ரிப்ளை :

1. குடுக்குற காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யா..

2. இங்கனக்குள்ள சுத்திகிட்டிருக்கிறவன் மாதிரிதான் தெரியுது. மெனக்கெட்டு ப்ரொபைல் கிரியேட் பண்ணி கலாய்ச்சிருக்க.. மருவாதையா யார்னு சொல்லிரு.. முட்டை மந்திரிச்சு வைச்சிருவேன்.

3. படிக்கிற உனக்கே இம்மா மன உளைச்சல்னா எயிதுற எனக்கு எப்பிடி இருக்கும்? மருவாதையா ஓடிரு.

சீரியஸ் ரிப்ளை :

1. பணிப்புயல் காரணமாக கால வரையற்ற தளத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

2. என்னை விட நல்லா எழுதுறவங்க நிறைய பேர் இருக்காங்க. சும்மா நெஞ்சை நக்காமல், www.thamirafavorites.blogspot.com போய் படித்து இன்புறலாம்.

நன்றி ஹை.!

அமர பாரதி said...

நல்ல பதிவு.

//சுபா ஹோம் ஒர்க் எழுதிகிட்டிருந்தான்// இது எனக்கு பிடித்திருந்தது. குழந்தைகளை அவன் இவன் என்று எழுதுவதே பொருத்தம். சில பதிவுகளில் குழந்தைகளை அவர் இவர் என்றும் மாப்பிள்ளப் பையர் என்றும் எழுதுவதைப் பார்க்கும் போது எரிச்சல் மண்டும்.

அமர பாரதி said...

//கால வரையற்ற தளத்துக்கு //

கால வரையற்ற தளம் அப்படின்னா என்ன?

Mathiv said...

Thank you for your info on Body languages show on TV:)...

http://www.youtube.com/watch?v=D8n9HJOFjdU

I've enjoyed the documentary...provided link for others if required...