Tuesday, February 14, 2012

65வது ஆர்ட்

நான் மட்டுமே அறிந்த
அறுபத்துஐந்தாவது ஆர்ட் நீ.


*****


வியக்க வியக்க.. 
மிதப்பதைச்
சாத்தியமாக்கியவள் நீ.


*****


உன் முதல் தழுவலிலிருந்து
இன்னும் நான் விடுபடவேயில்லை 
என்றைக்கேனும்
அது நிகழுமென்று கூட தோன்றவில்லை.


*****


காலங்கள்
கடந்தும்
காட்சிகள்
கலைந்தும்
உன்னை நினைத்தாலே
துள்ளலாகும் இந்த உள்ளம்
நீ தந்தது.


*****


காதலிடமிருந்து 
தப்பமுடியாதவர்கள்
நீங்காத தவிப்பிலிருந்தும் தப்பமுடிவதில்லை.


*****


ஸ்பரிசத்தைத் தவிர
எல்லாமே 
சாத்தியமாகியிருக்கிறது இன்று.
அன்றே
தொலைவிலிருந்தே முயங்குவதைச்
சொல்லித்தந்தவள் நீ.


*****


என்னை வியக்கச்செய்யும் 
அழகைத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.
உச்சமான டார்கெட்டை 
ஏற்கனவே
ஃபிக்ஸ் செய்துவிட்டாய் நீ.


*****


சொல்லேதுமில்லாமையால்
உன் குழந்தையை
என் கைகளில் தருகிறாய்
முயற்சிக்காதே..
இது போதாது இருவருக்குமே.


*****


சொற்கள் குரல்வளையை நெறிக்கின்றன
பதற்றப்படாதே.. 
நீ இனி பேசவேண்டியதில்லை.
நானும் அந்தச் சிக்கலில்தான் இருக்கிறேன்.


*****


மூச்சுக்காற்றை
சுவாசிக்கும்
நெருக்கத்தில்தான்
இருந்துகொண்டிருக்கிறோம்
இன்னும் இந்த நெருக்கம் போதவில்லை எனக்கு.


*****


இந்த வாழ்க்கையில்
எட்டிப்பிடிக்க முடியாத தூரத்துக்குச்
சென்றுவிட்டாய்.
ஜென்மங்களாய் துரத்தி வந்திருக்கிறேன்
இன்னும் எனக்கு வாய்ப்புகள் இருக்கின்றன.


*****


உன் சொல்
உன் முத்தம்
உன் பார்வை
உன் ஸ்பரிசம்
எதுவுமே வேறு வேறல்ல.


*****


வாழ்வு
ரசனை
காதல்
நீ
எதுவுமே வேறு வேறல்ல.


*****புரிதல் பிழைகளையெல்லாம்
காலம் போன காலத்தில்
உணர்ந்த உன்னால்
தரமுடிந்தது ஒரு துளி கண்ணீர்.


*****அந்த முதல் முத்தத்தில் 
மூழ்கியவன்
பின்னெப்போதோ 
விழித்தபோதுதான் அறிந்தேன்
என் வாழ்க்கை முழுதுக்குமான பரிசு அது என்பதை.


*****


என் கவிதைப் பர்ஸில் இருப்பது
ஒரே ஒரு காதல் காசு.


________________________________________________________________

பி.கு :

நேற்று நண்பர்களோடு கூகிள்+ல் கொஞ்ச நேரம் காதல் குட்டையில் கவிதைப் படகு ஓட்டிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்துதான் மேலே நீங்கள் பார்ப்பது. ஏற்கனவே கூகிள்+ல், டிவிட்டரில் பார்த்துவிட்டவர்கள் ஓரமாகப் போய்விடவும். நமக்குன்னு எக்ஸ்க்ளூஸிவா ஒரே ஒரு பிளாக் வாசகர் இருந்தாலும் அவருக்காக காப்பியாத்த வேண்டியது ஒரு நல்ல பதிவரின் கடமை. ஹிஹி.. அதைத்தான் செய்திருக்கிறேன்.

.

6 comments:

சமுத்ரா said...

நன்று

KSGOA said...

ரொம்ப சீரியசா படிச்சிட்டே வந்து லேபில் பார்த்தா மொக்கைன்னு இருக்கு.
ஆனா நல்லா இருக்கு.

Azhagesan Jayaseelan said...

வலிக்க வலிக்க..
மிதிப்பதைச்
சாத்தியமாக்கியவள் நீ.

கார்க்கி said...

ஒரு போஸ்ட் போட்டிருந்தா நானும் க‌ள‌த்தில் இற‌ங்கியிருப்பேனே..

அப்புற‌ம் நாமும் இன்னைக்கு இதே டீதான்.. சேம்பிள்
"மீசைதான் உன்னை குத்தும்.
தாடி என்னைத்தான்.

"

சுசி said...

டை ரட் ரே.. கலக்கிட்டேள் போங்கோ.. அத்தனையும் நல்லாருக்கு..

அப்பாதுரை said...

..எதுவுமே வேறு வேறல்ல.. நிறைய யோசிக்க வைத்தது.