Monday, May 14, 2012

தாஜ்மஹாலிலிருந்து ஒரு காதலன்


வலைப்பூ எழுதத் துவங்கிய காலங்களில் பக்கத்திலிருக்கும் கூடுவாஞ்சேரிக்கு போய்வந்தால் கூட பயண அனுபவங்களை இடுகையாக எழுதி தள்ளிக்கொண்டிருந்தோம். இப்போது கொஞ்சம் சீனியர் ஆகிவிட்டபடியால் அப்படியெல்லாம் வாசகர்களை இம்சிக்க மனம் வருவதில்லை. ஆயினும் இத்தாத்தொலைவு வந்துமல்லாமல் ஒரு மாதத்துக்கு இங்கு குப்பை கொட்டிய பிறகும் சண்டிகர் பயண அனுபவங்கள் எதையும் எழுதவில்லையென்றால் அது நியாயமாகாது. ஆகவே இதோ..

-----

எட்டு நாட்கள் பயணத்திட்டமிட்டு அதன்படியே நடத்தி முடிக்கத் தீவிரமாக முயற்சித்தும், இருபத்துநான்கு நாட்கள் வரை வேலையைச் செய்ய்ய்ய்து ஒருவழியாக நல்லபடியாக முடித்து, எங்கள் நிறுவனத்தின் பழம்பெருமையையும், வழக்கத்தையும் குலைக்காமல் நடந்துகொண்டேன். ஊஹூம்.. முடியல..

-----

சண்டிகர் ஒரு தனி மாநிலமாக இருப்பதோடு மட்டுமல்லாது, பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் தலைநகராகவும் இருப்பதால் இது ‘ட்ரைசிட்டி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதுபோல வேறெந்த நகரமும் இருப்பது போல தெரியவில்லை. இந்தக்குறிப்பு பொது அறிவு நிறைந்தவர்களுக்கு தெரிந்த விஷயமாகத்தான் இருக்கும் எனினும் என்னை மாதிரி லேட்டாக தெரிந்துகொண்டு மெலிதாக ஆச்சரியப்படும் பேக்குகளுக்காக எழுதப்படுகிறது.

மேலும் சண்டிகர் தன்னைப்போல உருவான நகரமாக இல்லாமல் உருவாக்கப்பட்ட நகரமாக இருக்கிறது. இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்கள் இன்னும் நிறையவே இருப்பினும் இதுவே அவற்றில் முதலில் உருவான பெருமைக்குரியதாகும். (இன்னொரு நகரமான நவி மும்பையானது, இந்தியாவில் மட்டுமல்லாது இவ்வகையில் உலகிலேயே மிகப்பெரியது என்பதை அறிவீர்கள். -ஹிஹி.. கூகிள் உதவியால் நான் இப்போதுதான் அறிந்தேன்). இருந்தாலும் நவி மும்பை, நியூ டெல்லி போல அல்லாமல் சண்டிகர் ஒரு பெரிய கேக்கை சதுரம் சதுரமாக வெட்டியதுபோல செக்டர்களாக அகலமான சாலைகளால் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு செக்டர்களும் முறையே சகல வசதிகளுடன் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும் கட்டிடங்கள் இல்லாமலிருப்பதும், ஒரு மேம்பாலம் கூட இல்லாத நிலையும், காணும் இடமெங்கும் அடர்த்தியாய் மரங்கள் நிறைந்திருப்பதும் இது உருவாக்கப்பட்ட நகரம் என்பதை இயல்பாகவே நமக்குள் ஏற்படுத்துகின்றன.

இதுபோல ஒரு நீட் அண்ட் க்ளீன் வேறெங்கும் நான் கண்டதில்லை.

-----

நான் பார்த்த வரை சீக்கியர்களும், இங்குள்ள பிறரும் பழக இனிமையானவர்களாக இருந்தனர். சீக்கியர்கள் நம் தமிழ் சினிமாவில் பார்ப்பது போல ஜைஜாண்டிக்காக எல்லாம் இல்லை. நம்மைப் போலத்தான் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இன்னுமொன்று. மற்ற மாநிலத்தவர்களிடமெல்லாம் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டியிருக்கும் நான் இன்ன மாநிலம் என்று. ஆனால் சீக்கியர்களை தாடியையும், டர்பனையும் நீக்கிவிட்டுப்பார்த்தால் அப்படியே தமிழர்களைப் போலவே இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒரு சீக்கிய நண்பரிடம், எங்கே கோச்சுக்கப்போறாரோ என்று பயந்துகொண்டே நைஸாக விசாரித்தேன். ’இந்த டர்பன் தொப்பி மாதிரி தைச்சதா? இல்லைனா தினமும் கட்டிப்பீங்களா?’. சிரித்துக்கொண்டே தினமும் கட்டிக்கொள்வோம் என்றார். அடேங்கப்பா, மண்டை மேல ஒரு பெரிய பெட்டி போல எவ்ளோ பெரிய டர்பன். அதை தினமும் வேறே சொய்ங் சொய்ங்னு சுத்திச் சுத்திக் கட்டிக்கிறதா.. பெரிய விஷயம்தான். அதுவும் இந்த ஒரு மாதத்தில் பார்த்த நூற்றுக்கணக்கான டர்பன்களில் ஒன்று கூட அவிழ்ந்தோ, லூஸாகவோ நான் பார்க்கவில்லை. என்னால் தக்கனூண்டு கர்ச்சீப்பையே சரியாக மடித்துவைத்துக்கொள்ள முடிவதில்லை.

இந்த டர்பன் நினைப்பிலேயே தாடி வைத்திருந்த இன்னொரு நண்பரிடம், ’நீங்க டர்பன் கட்டிக்கலை?’னு கேட்டு வைக்க, ‘யோவ், நான் முஸ்லிம்யா..’ என்று அவர் சிரிக்க, அப்புறம்தான் அவர் பெயர் ‘அன்வர் அலி’ங்கிறது ஞாபகம் வந்து வழிந்துவைத்தேன்.

-----

பெண்களுக்கென்ன மதம்? யார் சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்று தெரியவில்லை. அத்தனை ஆண்களும் நம்ப ஊரைப்போல நடுவாந்திரமாக இருக்க, இங்கே இந்தப் பெண்கள்தான் அலங்காரப் பிரியர்களாகவும், நாகரீக உடையணிபவர்களாகவும் இருக்கின்றனர். இளம்பெண்கள் சினிமா நாயகிகள் போன்ற பெயர் தெரியாத உடைகளில் ஆபத்தான முறையில் வலம் வருகின்றனர். சாலையோரப் பெண்மணி முதலாக பென்ஸ் கார் பெண்மணி வரை அழுத்தமான உதட்டுச்சாயம் இல்லாத உதடுகளை காணவே முடியவில்லை. வயது வித்தியாசமின்றி, ஏழை, பணக்கார பேதமின்றி இங்குள்ள அனைத்துப் பெண்களிடமும் இன்னொரு பொதுவான ஒரு அம்சத்தையும் காண நேர்ந்தது... அது.. தொப்பை!

-----

இங்கேதான் சில சப்-காண்ட்ராக்டர்களோடு போராடுவது நம் வேலை என்றால், இங்கு வந்தும் அப்படி ஒரு நிலை வந்துவிட்டது. கஸ்டமருக்காக ஒரு பொருளின் பாகங்கள் வேண்டி ஒரு சீக்கிய சப்-காண்ட்ராக்டரைப் பிடித்தேன். பிடித்தேன் என்ன பிடித்தேன்? கஸ்ட்மர் அதிகாரி ஒருவரே முன்மொழிந்தார். நானும் சுமார் இருபது பாகங்கள் வேண்டியிருக்க, ‘அது ஆனையாக்கும், அப்படியாக்கும், இப்படியாக்கும்’னு சொல்லி முதல் இரண்டு பாகங்களை பக்கத்திலிருந்தே வாங்கிக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது அப்படி ஒரு பர்ஃபெக்ஷன். ஆனால் அது ஓகே ஆகிவிட்ட செய்திக்குப் பின் வந்த பாகங்களைப் பார்க்கவேண்டுமே...

அம்பத்தூர், கிண்டி ஆட்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல நம்ப சீக்கியர்கள். ஹும்!

-----

இந்தாக் கிடக்குற டெல்லிக்கு நாமும் இரண்டு மூன்று தடவைகள் வந்துவிட்டாலும், இந்த ஆக்ராவில் இறங்க ஒரு முறையும் வாய்க்கவில்லை. இந்த முறை வரும்போதே, டெல்லி-சண்டிகர் தொடர்வண்டியைப் பிடிக்க நடுவே சில பல மணி நேரங்கள் பிரேக் இருந்ததால், ஆனது ஆகட்டும்னு ஆக்ராவிலேயே இறங்கிவிட்டேன்.

நாம் ஏற்கனவே சும்மா ’லவ்வு’ன்னு சொன்னாவே சிலிர்த்துக்குவோம். விடிய விடிய உக்காந்து ஃபீல் பண்ணுவோம். ஓவரா லவ்வு ஃபீல் பண்ணியே லவ்வரை கடுப்பேத்தி விரட்டிவிட்ட ஒரு பேக்கு காதலன் ஒருத்தன் இந்த உலகத்துல இருக்கான்னா அது நானாகத்தான் இருப்பேன்னு நினைக்குறேன். இந்த அழகுல தாஜ்மகாலை வேற பாக்கப்போறேன். மூலையில உக்காந்து ரொம்ப ஃபீல் பண்ணிட்டேன்னா என்ன பண்றதுனு மனதின் ஒரு மூலையில அப்பியிருந்த கொஞ்சம் கவலையோடுதான் போனேன். நல்லவேளையாக அப்படி ஏதும் இல்லாமல், நல்லபடியாக சுற்றிப்பார்த்துவிட்டு வந்தேன். ஒண்ணும் ஃபீலிங்லாம் ஆவலை. திருமலை நாயக்கர் மஹாலை சுத்தியதுபோல ஒரு ஃபீலிங்கும், அம்மாந்தூரம் நடந்த கால்வலியும்தான் இருந்தது.

இருந்தாலும் அதெப்படி போச்சுனு விடாம வலுவில் கொஞ்சம் ஃபீலிங்கை வரவைத்துக்கொண்டு அங்கிருந்துகொண்டே ரமாவுக்கு போனைப்போட்டேன். மணி காலை 6.45.‘இப்போ எங்கிருக்கேனு சொல்லு பாப்போம்?’

‘எங்க இருந்தா என்ன? ஏன் காலையிலயே போனைப்போட்டு உயிரவாங்குதீங்க?’

‘தாஜ்மஹால்ல இருக்கேம்மா..’

‘ஹாவ்.. அதுக்கென்ன இப்போ?’

----- 

23 comments:

துளசி கோபால் said...

சண்டிகரில் 15 மாசம் குப்பை கொட்டிக்கிட்டு இருந்த சமயம் ஒரு பதிவராவது தலை காட்டலை:( இப்போ நான் தொலைஞ்ச பிறகு போய் இருக்கீங்க......


சண்டிகர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டுறதைப் பார்த்தீங்களா?

இன்னும் பதிவைப் படிக்கலை. முதல் பாரா படிச்சவுடன் பின்னூட்டம் போடறேன்.

அப்பாலிக்கா வருவேன் மீண்டும்.

இராகவன் நைஜிரியா said...

கமெண்ட் இல்லாமல கஷ்டப்படக்கூடாதுன்னு... நானும் ஒரு கமெண்ட் போட்டு இருக்கேன்.

பார்த்து போட்டு கொடுங்க சாமி...:-))

இராகவன் நைஜிரியா said...

// இப்போ எங்கிருக்கேனு சொல்லு பாப்போம்?’
‘எங்க இருந்தா என்ன? ஏன் காலையிலயே போனைப்போட்டு உயிரவாங்குதீங்க?’
‘தாஜ்மஹால்ல இருக்கேம்மா..’
‘ஹாவ்.. அதுக்கென்ன இப்போ?’ //

:-))))

இராகவன் நைஜிரியா said...

// இப்போது கொஞ்சம் சீனியர் ஆகிவிட்டபடியால் //

பாருங்க உங்களை பத்தி நீங்களே சொல்லிக்க வேண்டிய நிலைமை ஆயிடுச்சே...:-))

இராகவன் நைஜிரியா said...

// வாசகர்களை இம்சிக்க மனம் வருவதில்லை.//

அப்படியெல்லாம் சொல்லாதீங்க ஆதி....

இதுக்கு நீங்க கவிதை எழுதிட்டு போயிடலாம்..:-))

இராகவன் நைஜிரியா said...

// ஒரு மாதத்துக்கு இங்கு குப்பை கொட்டிய பிறகும் //

அங்க போயும் அதைத்தான் செஞ்சீங்களா? :-))

இராகவன் நைஜிரியா said...

// எட்டு நாட்கள் பயணத்திட்டமிட்டு அதன்படியே நடத்தி முடிக்கத் தீவிரமாக முயற்சித்தும், இருபத்துநான்கு நாட்கள் வரை வேலையைச் செய்ய்ய்ய்து //

எதை திட்டமிட்டு நமக்கெல்லாம் சரியா முடிஞ்சு இருக்கு..

நீங்க நிறைய வேலை செஞ்சீங்க அப்படிங்கறதுக்காக...செய்ய்ய்ய்து என்று எழுதணுமா?...:-))

இராகவன் நைஜிரியா said...

// அஹம் ரஸனையாஸ்மி! //

:-))

எப்படிங்க இதெல்லாம்..

KSGOA said...

காலைலேயே படிச்சிட்டேன்.
கமெண்ட் எழுதுறதுக்குள்ள கரண்ட் போயிடுச்சு.நல்லா எழுதியிருக்கீங்க.

சிங்கை நாதன்/SingaiNathan said...

:))))

ஹுஸைனம்மா said...

//பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் தலைநகராகவும் இருப்பதால் //

ஒரு அணை, நதி இதுக்கே ரெண்டு மாநிலங்கள் எப்படியெப்பிடியோ அடிச்சுக்கும்போது, எப்படியிப்பிடி ஒரு தலைநகரைச் சண்டையில்லாம ஷேர் பண்ணிக்கிறாங்கன்னும் (கேட்டு) எழுதிருக்கலாம்.

//ஹாவ்..//
எழுத்துப் பிழை இருக்கும்னு தோணுது, சரிபாருங்க..... (உங்க முந்தைய ”திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை” பதிவுகளின் எஃபெக்ட்!!)

குசும்பன் said...

//ஆனால் சீக்கியர்களை தாடியையும், டர்பனையும் நீக்கிவிட்டுப்பார்த்தால் அப்படியே தமிழர்களைப் போலவே இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.//

இப்படி எல்லாம் டக்குன்னு ஒரு முடிவுக்கு வந்துடாத மாமா...சட்டை, பேண்ட் எல்லாத்தையும் நீக்கிப்பார்த்துட்டு யாரு மாதிரின்னு சரியா சொல்லு.

குசும்பன் said...

//ஹாவ்.. அதுக்கென்ன இப்போ//

இப்படி பேசின பிறகு எடுத்த போட்டோவா மாமா அது? முகத்தில் அவ்வளோ சந்தோசம்:))

ஆதி தாமிரா said...

டேய் எருமை. பப்ளிக்கா கெட்ட கெட்ட வார்த்தை ஓவரா பேச ஆரம்பிச்சுட்ட. குறைச்சுக்கோ.. :-)))

பரிதி முத்துராசன் said...

உண்மையில் நானும் சண்டிகார் போய்வந்த அனுபவம் உமது பதிவை படித்தப்பிறகு வாழ்த்துக்கள்

கோவை நேரம் said...

சண்டிகர் பத்தின தகவல் அருமை...

ILA(@)இளா said...

படிச்சிட்டு அப்படியே போயிடலாம்னு நினைச்சேன். கடைசி அப்படி விடலை :))

சுசி said...

அட அவங்க அப்டித்தான் சொல்வாங்க டைரட்ரே.. என்னதான் வேலை விஷயமா போயிருந்தாலும் அவங்கள கூட்டிட்டு போலைன்ற ச்செல்லக் கோவம் :)

sekar said...

இப்போ எங்கிருக்கேனு சொல்லு பாப்போம்?’

‘எங்க இருந்தா என்ன? ஏன் காலையிலயே போனைப்போட்டு உயிரவாங்குதீங்க?’

‘தாஜ்மஹால்ல இருக்கேம்மா..’

‘ஹாவ்.. அதுக்கென்ன இப்போ?


மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றது . இதில் அவர்களின் ஆற்றாமை ( பார்க்கமுடியவில்லையே என்று) தெரிகின்றது . நன்றி

புதுகைத் தென்றல் said...

ஃப்ரெண்ட் தாஜ்மஹால் போட்டோ சூப்பர்.

பதிவில் உங்க வார்த்தைகளை மறக்கவிடாமல் இராகவன் கமெண்ட்ஸ் சூப்பர்.

தாஜ்மஹாலிலிருந்து ரமாவுக்கு போன் போட்டதுக்கு பதில் கூட அவிகளையும் கூட்டிகிட்டு போயிருந்தா அங்க போய் திட்டு வாங்கிருக்க வேண்டாம்ல.:)) (ஏதோ ஃப்ரெண்டாச்சேன்னு சொன்னேன்)

புதுகைத் தென்றல் said...

தொடர்வதற்கு :))

sakthi said...

வழக்கம்போல அருமை..நெறைய எழுதுங்க sir, please...

பாலா அறம்வளர்த்தான் said...

Vintage Aadhi!!!!


வாரம் ஒரு முறையாவது எழுதும்யா!!!