Saturday, September 22, 2012

கிரியேடிவான காப்பியும், இன்ஸ்பைரிங்கான ட்ரிப்யூட்டும்.


கிரியேஷன் (Creation) என்பது சாத்தியமா? இன்ஸ்பைரேஷன் (Inspiration) என்பது மட்டும்தான் சரியா? ஒரு படைப்பாளி, அவனது எல்லா படைப்புகளையுமே அவனது வாழ்க்கையிலிருந்தேதான் எடுக்கிறான். அதிகற்பனை எனப்படும் வகை கூட வாழ்க்கை அவனுக்கு அமைத்துத்தந்த சூழல் தந்த வாய்ப்பினாலேயே அமைகிறது. ஒவ்வொரு படைப்பாளியின் வாழ்க்கையும், ஒவ்வொரு மனிதனுடையதைப்போல தனித்துவம் கொண்டது. ஆகவே ஒருவன் தன்னை இன்ஸ்பையர் செய்த ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்டவற்றை கலந்தோ உருவாக்கும் படைப்பு என்பது நிச்சயம் கிரியேஷன்தான். அது பிறரை வசீகரிப்பதாக, பாதிப்பதாக அமைகையில், தனித்துவமானதாகவும் ஆகிறது. #தீர்ப்பு-1

ஆயின் ஏதோ ஒரு கலை வடிவத்தில் உருவாக்கப்பட்டுவிட்ட ஒரு படைப்பிலிருந்தே இன்ஸ்பையர் ஆவதும், அதன் தொடர்ச்சியாக படைப்புகள் உருவாவதும் சரியா? நிச்சயமாக சரியே! அவை அவற்றின் தொடர்ச்சியாக மட்டுமின்றி அந்தப் படைப்பிலிருந்தும் மேம்பட்ட சிந்தனையைத் தருவதாக, பயனைத் தருவதாக அமையவேண்டும். பறவையைக் கண்டு உருவாக்கப்பட்ட கிளைடர், வாழ்க்கை தந்த இன்ஸ்பிரேஷனில் உருவான ஒரு படைப்பு எனில், அதன் தொடர்ச்சியான விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராக்கெட்டுகளும் கூட தனித்துவமான படைப்புகளே! மேலும் அவை ஆதார படைப்புக்கு நியாயத்தையும், பெருமையையும் செய்கின்றன. #தீர்ப்பு-2

அப்படியானால் காப்பி (Copy) என்பது என்ன? காப்பி என்பது படைப்பாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? படைப்பின் மேம்பட்ட தொடர்ச்சியை உருவாக்காத எவையும் நிச்சயம் காப்பியே. கற்பனை வறட்சியில், லாப நோக்கில் செய்யப்படும் இந்தக் காரியத்தின் பொறுப்பாளி, படைப்பாளி அல்லன். மேலும் அவை விரைவில் வெளுத்துப்போவதாகவும், முழுமையற்றதாகவும் இருக்கின்றன. ஒரு பயிற்சிக்காக செய்யப்படுவதாக இருப்பினும் காப்பிகள் கூட என்றும் மரியாதையைப் பெறுவதில்லை. மாறாக அவை படைப்பின் மீது சேறிறைக்கின்றன. காப்பிகள் ஒருபோதும் படைப்பாக முடியாது. #தீர்ப்பு-3

ட்ரிப்யூட் (Tribute) என்பது என்ன? எது ஒரு படைப்புக்கு ட்ரிப்யூட் செய்யமுடியும்? டிஜிடல் (Digital) தொழில்நுட்பத்தால் ஃபிலிம் (Film) தொழில்நுட்பம் இறக்கும் தருவாயில் இருக்கிறது. ஆயினும் டிஜிடல், பிலிமுக்குச் செய்வது ஒருவகையில் ட்ரிப்யூட்டே. ஃபிலிம் தந்துகொண்டிருந்த காட்சியனுபவத்தை, அதிலும் பன்மடங்காக தருகின்ற டிஜிடலின் இன்ஸ்பைரேஷன் ஃபிலிம் என்பது அதன் பெருமையாகிறது. இன்ஸ்பைரேஷனில் விளையும் ஒவ்வொரு படைப்புமே மூலத்துக்கான பெருமையைச் செய்வதாகத்தான் இருக்கமுடியும். அரிதான ஒரு படைப்பு, எந்த வெளிக்கலப்புமின்றி மீண்டும் நவீனப்படுவது ட்ரிப்யூட். கிங்காங் 2005 என்பது ஒரு படைப்பு என்பதையும் விட, பீட்டர் ஜாக்ஸன், கிங்காங் 1933க்கு செய்த ஒரு ட்ரிப்யூட் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். #தீர்ப்பு-4

அப்டீனா..

*முகமூடி ஒரு காப்பியா? அல்லது அது பேட்மேனுக்கு மிஷ்கின் செய்த ட்ரிபியூட்டா?
*காப்பிகளை ட்ரிப்யூட் என்று யாரேனும் சொன்னால் அவர்களை என்ன செய்யலாம்?
*கமல்ஹாஸன், மணிரத்னம்கள் செய்துகொண்டிருந்தவை இன்ஸ்பைரேஷனா? காப்பியா?
*விக்ரம், டைரக்டர் விஜய் வைகையறாக்கள் செய்வது காப்பியா? கிரியேஷனா?
*காப்பிகளை செய்துவிட்டு ஒளிந்துகொண்டாலும் கூட பரவாயில்லை, ’பல்லு கூட விளக்காம இதைச்செய்தோம்’னு பெருமை பீத்துபவர்களை என்ன செய்யலாம்?

இதுக்கெல்லாம் நேரமிருந்தா நீங்களே தீர்ப்பு சொல்லுங்க.. ஹிஹி.. ஒர்க் காலிங், மீ கோயிங்!
.

7 comments:

KSGOA said...

சூப்பருங்க!!!!தலையே சுத்துது!!எனிவே மிக்க நன்றி.இது தொடரட்டும்.

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமையான பகிர்வு....உங்கள் பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

அதிஷா said...

பிரியாவின் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்.

அருமை பிரியா

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தீர்ப்புக்கள்... எல்லாம் பணம் செய்யும் மாயம்...

Armstrong Vijay said...

ஏங்க.. இப்ப என்ன சொல்ல வரிங்க.. முகமூடி காப்பியா இல்லையா?..சொன்னாத்தான் விடுவோம். உங்களுக்கே சரியா தெரியலைனா.. வாங்க மறுபடியும் அந்தப்படத்திற்கு போவோம்..

ஆனா இந்த தீர்ப்புகள் அற்புதம். எதிலிருந்து இன்ஸ்பயர் ஆனிங்க..?

ஆதி தாமிரா said...

உங்களுக்கே சரியா தெரியலைனா.. வாங்க மறுபடியும் அந்தப்படத்திற்கு போவோம்..//

ஆம்ஸ்ட்ராங்.. :-)))))))) சிரிச்சி உருண்டுகிட்டிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமே கிடையாதா?

எதிலிருந்து இன்ஸ்பயர் ஆனிங்க..?//
லேபிள் பார்க்குறதில்லையா? ஹிஹி.. நானே சிந்திச்சேன்!!

Ibrahim A said...

கொஞ்ச நாளுக்கு முன் நான் காப்பி-இன்ஸ்பிரேஷன் வித்தியாசங்களை லேசாக பிரித்து எடுத்திருந்தேன்.
படித்து பார்க்கவும்.

http://www.ibbuonline.com/2012/10/i-am-sam-2001_11.html