Monday, February 18, 2013

வீட்டுக்கு வந்த மயில் குட்டி

(கீழே தொகுக்கப்பட்டவை சமீபத்தில் கூகிள்+ல் எழுதியவை..)

***

இன்று கொஞ்சம் அலுவலகத்தில் ஓய்வாக இருந்தபோது ஒரு வயதான அலுவலக ஊழியர் கணினி கற்க எண்ண, சற்று நேரம் சொல்லிக்கொடுக்க நேர்ந்தது. அப்போது என் அப்பாவை நினைத்துக்கொண்டேன்.

சரியான வயதில் B.Com முடித்த என் அப்பா, பின்பு நேரமில்லாமல், பிள்ளைகள் மூவரும் படித்து முடித்து வேலைக்கெல்லாம் போக ஆரம்பித்தபின்னர் 30 வருடங்களுக்குப் பின்னர் தனது 50களின் துவக்கத்தில் தொலைக்கல்வி முறையில் M.Com முடித்தார். அதில் பிரமோஷன் என்ற சுயநல நோக்கமெல்லாம் இல்லை. ஆர்வம் மட்டுமே இருந்தது.

பேரன்கள் கணினியில் விளையாடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலிலும், தயங்காது எங்களிடம் அமர்ந்து கணினி இயக்கக் கற்றுக்கொண்டு, இப்போது ஓய்வு பெற்ற பிறகும் பிரைவேட்டாக சில அலுவல்களை 2 வருடங்களாக செய்துகொண்டிருக்கிறார். இதில் எனக்குச் சற்று பெருமைதான்.

#தன் அப்பா காக்கா, பொன் காக்கா :-))

***

Stunning, Breath taking, Mind blowing.. இப்படியெல்லாம் காதால் மட்டும்தான் கேட்டிருக்கிறோம். தமிழ் சினிமாவில் முதல் தடவையாக ஒரு காட்சி இந்த உணர்வுகளையெல்லாம் தந்தது எனில் அது விஸ்வரூபம் முதல் சண்டைக்காட்சிதான். சண்டைக்காட்சிகளில் ஒரு தனிப்பட்ட நடிகரின் Performanceக்கு பெரிய வேலை இல்லை எனினும் உணர்ச்சிப்பிழம்பாக, ஓலமாக திருக்குரான் ஓதும் கமல்ஹாஸனின் குரலே பின்தொடரும் காட்சியை முழுமைப்படுத்தவும், அந்த Stunning Feel-ஐ உருவாக்கவும் துணைபுரிந்தது என்றால் அது மிகையாகாது. அந்தச் சண்டை துவங்கி முடியும் வரையான விநாடிகள் உடம்பு இறுக்கமாகி, முடியும் போது தளர்ந்து பெருமூச்சு விட்டேன். அதைத்தான் Stunning என்று குறிப்பிட விளைகிறேன்.

முக்கிய பின்குறிப்பு: எவ்வித கற்பிதங்களையும் கொள்ளாமல், பொழுதுபோக்கிற்கான வெற்று ஆக்‌ஷன் படமாகவே நான் விஸ்வரூபத்தைப் பார்க்கிறேன்.

***

பழைய காதலியை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பும், அவளுடன் பேசும் சந்தர்ப்பமும், அவளுக்கு கடிதம் எழுதும்  சூழலும் உங்களுக்கு கிடைக்காமலேயே போகட்டும்!

#பிப்.14 தத்துவம்! :-))

***

ராய்ப்பூரில் ஒரு ஹோட்டலில்..

நான்: சிக்கன் ஃபிரைட் ரைஸ் கொடுங்க..

சர்வர்: ஃபுல் ப்ளேட்டா, ஹாஃப் ப்ளேட்டா?

நான்: ஓஹோ.. அப்ப ஹாஃப் ப்ளேட்டே கொடுங்க..

சர்வர்: ஹாஃப் ப்ளேட்லாம் கிடையாது. ஃபுல் மட்டும்தான் உண்டு.

நான்: ங்ஙே!!

***

நம்மில் பலரும் கணினியில் தமிழ் எழுத பயன்படுத்திக்கொண்டிருக்கும் Phonetic முறையை விட தமிழ்99 எந்த வகையில் சிறந்தது? அதன் அவசியம் என்ன? என்பது பற்றிய அழகான சில கட்டுரைகளைக் கண்டேன். தமிழ்99 என்பது டைப்ரைட்டர் கற்றவர்களுக்கான தனி விசைப்பலகை என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் Phonetic முறைக்கான சிறந்த மாற்று என்பதே இப்போதுதான் புரிகிறது.

வாசிக்கவும்:

http://blog.ravidreams.net/tamil99/
இதன் தொடர்ச்சியான ‘ஏன் தமிழ்99?’ என்ற கட்டுரையையும் தவறவிடவேண்டாம்.

***

நேற்று மாலை பால்கனியில் நின்றுகொண்டிருந்த சுபா திடீரென கத்தினான்,

“அப்பா, இங்க வாங்க வாங்க.. மயில் குட்டி.. மயில் குட்டி..”

இங்க எங்கடா மயில்குட்டி வந்தது என ஆச்சரியப்பட்டுக்கொண்டே போனேன், “எங்கம்மா மயிலைக் காணோம்?”

“அதுக்குள்ள மரத்து மேல ஓடிருச்சு..” என்றவன் முகத்தில் ’சம்திங் ஏதோ மிஸ்டேக்’ என்ற சிந்தனை ஓட, நான் அதை பிக்கப் செய்து இன்னதென்று கணிக்கும் முன்னரே பிடித்துவிட்டான்.

“ஆங்.. ஸாரிப்பா.. அது அனில்குட்டி.. அனில்குட்டி.. தூங்கிமுழிச்ச பிறகு (அதாவது நாளைக்கு) வரும். வாங்க போலாம்”

***

அதிஷாவின் சமீபத்திய கட்டுரை ஒன்றை வாசித்தபோது பராசக்தி போன்ற ஒரு படம் இன்றைக்கு ஏன் அவசியமாகிறது என்ற கேள்வி எழுந்தது, பின் அதைச்சார்ந்து ஏராளமான சிந்தனைகளை அது எழுப்பியது. நேரமிருப்பின் பிறிதொரு சமயம் அவற்றைப் பகிர முனைகிறேன்.

கட்டுரை உங்கள் பார்வைக்கு:

http://www.athishaonline.com/2013/01/60.html

***

நேத்து நான் வடபழனியில ஒரு டாஸ்மாக்கை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது ஒருத்தன் என்னருகே வந்தான்.

‘எஸ்க்யூஸ்மீ ஒரு 5 ரூபா கிடைக்குமா’ 

‘இல்லை’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்து நடந்தேன்.

’ஈயென இரத்தல்..’ நினைவிலாடி, இங்கே எங்கள் இருவரில் யார் பிச்சைக்காரன் என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டது.

டாஸ்மாக்கிலிருந்து நான் வெளியேறுகையில் மீண்டும் அவன் எதிரில் வர, சற்றே குற்ற உணர்வுடன் இப்போது நான் 20 ரூபாயை அவனிடம் நீட்டினேன்.

‘இப்போ எனக்குத் தேவையில்லை’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். 

இப்போதும் ’ஈயென இரத்தல்..’ ஞாபகம் வந்து, இப்போது எங்களுள் யார் வள்ளல் என்ற சந்தேகம் எழுந்தது.

-ரமேஷ் வைத்யா (பேசுகையில் கூறியது). 

*

6 comments:

river livejobs said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

river livejobs said...

வள்ளலார் பற்றிய சிறு தகவல்
http://www.tamilkadal.com/?p=1819
வள்ளலாரின் நிஜப்பெயர் ராமலிங்க அடிகளார். அவரது மாணவர் தொழூர் வேலாயுதம், ஒளியான அருளைத் தரும் வள்ளல் என்ற பொருளில், திருஅருள்பிரகாச வள்ளலார் என தன் குருவைக் குறிப்பிட்டார். இதன்பிறகே வள்ளலார் என்ற பெயர் ஏற்பட்டது.
வள்ளலாரின் உண்மையான படம் எடுக்கப் பட்டதில்லை. திருக்காப்பிட்ட அறையில் ஜோதி தேகத்துடன் கூடிய .............
http://www.tamilkadal.com/?p=1819

s suresh said...

சுவையான பகிர்வு! நன்றி!

வல்லவன் said...

அது குறள் இல்லங்க புறநானுறு (கழைதின் யானையார்)

ஆதி தாமிரா said...

@வல்லவன்,

திருத்தத்துக்கு நன்றி. கட்டுரையிலும் திருத்திவிட்டேன். தவறு அதைச்சொன்ன ரமேஷ் வைத்யாவுடையது அன்று, எழுதிய எனது. மன்னிக்க!

பரிசல்காரன் said...

:-)