Monday, April 7, 2014

மேக்னம் ஸ்பெஷல்


”நான் எப்போ புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சேன்னா?.. ஆறாப்பு படிக்கச்சொல்லோ..” என்று நான் கொசுவத்தியை சுழற்ற ஆரம்பித்தால் நீங்கள் “ஆவ்வ்வ்..” என்று கொட்டாவி விட ஆரம்பிப்பீர்கள்! அதனால் நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம்!

வாசிப்பின் துவக்கம் காமிக்ஸ், காமிக்ஸைத் தாண்டிய இலக்கிய உலகம் இலக்கு என்பதாய் நண்பர்கள் கருத்துப் பகிர்வதுண்டு. இலக்கை விட அதற்காக மேற்கொள்ளும் பயணம் இன்னும் அலாதியானது என்பது என் கருத்து. எழுத்தில் கதை சொல்வதைப்போல, மூவியில் கதை சொல்வதைப் போல ஓவியத்தில் கதை சொல்வது என்பது அத்தனை எளிதான காரியமா என்ன? பிரமிப்பு! பகிரவொண்ணா ரசனை அது!


2012ல் மறு எழுச்சியை வெற்றிகரமாக நிகழ்த்திய லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இதழ்கள், தற்போது பெரிய அளவுகளில், உயர்தரக் காகிதங்களில், பளபளக்கும் வண்ணக் கதைகளை மாதம் குறைந்தது இரண்டு இதழ்கள், மூன்று கதைகள் என்ற அளவில் எடுத்துச்சென்று ராஜநடை நடந்து கொண்டிருக்கிறது! சிறார் கதைகள் மட்டுமின்றி, ஆக்‌ஷன், அட்வென்ச்சர் போன்ற எவர்கிரீன் வகைகளோடு கிராஃபிக் நாவல்கள் எனும் ஆழ்ந்த வாழ்வியல் கதைகள் என உலக காமிக்ஸ் இலக்கியத்தின் சிறப்பான ஒரு பகுதி இப்போது தமிழுக்கும் சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது. வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டுமே என்ற நற்கவலை கொண்டவர்கள், இளமையில் விட்டுவந்த காமிக்ஸ் நாட்களை மீண்டும் வாழ்ந்து பார்க்க ஆசை துளிர்ப்பவர்கள், ஓவிய ரசத்தை அள்ளிப் பருகும் பேராவல் கொண்டவர்கள் என அனைவரும் சற்றே செவி சாயுங்கள்! இந்த ஆண்டும் மாதம் தவறா திட்டமிடலுடன் கூடிய ஒரு கதைக்குவியலை லயன் காமிக்ஸ் வழங்கிக்கொண்டிருக்கிறது/வழங்கவிருக்கிறது. அதோடு இது லயன் காமிக்ஸின் 30வது ஆண்டுக் கொண்டாட்டமும் கூட! சுமார் 900+ பக்கங்களுடன் ஒரு மெகா இதழகாக லயனின் 30வது ஆண்டு சிறப்பிதழ், ‘தி லயன் மேக்னம் ஸ்பெஷல்’ வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!


2014க்கான வழக்கமான மாதாந்திர இதழ்கள், சூப்பர் 6 எனப்படும் 2014க்கான சிறப்பிதழ்கள், 2014க்கான கிராஃபிக் நாவல்கள் எனும் பிரிவுகளில் சந்தாக்களை மொத்தமாகவோ, தங்கள் தேர்வுக்கேற்பவோ செலுத்தலாம். வங்கி விபரங்கள், சந்தா விலைகள், இதழ்களைப் பற்றிய அறிவிப்புகள் போன்ற தகவல்களுக்கு லயன் காமிக்ஸின்....


.....ஆகியவற்றுக்குச் செல்லுங்கள். ஏற்கனவே வெளியான இதழ்களை ஆன்லைன் ஸ்டோரிலும் வாங்கலாம். விரைவில் எதிர்பார்க்கலாம் எனினும் இன்னும் கடைகள் தோறும் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் நிலை ஏற்படவில்லை. சந்தாதாரராகிவிடுவதே இப்போதைக்கு சிறப்பு எனும் நிலைமை நிலவுகிறது. அதுவே, லயன் காமிக்ஸை ஸ்திரப்படுத்தவும் உதவும் எனும் போது நாம் ஒவ்வொருவரும் அதைச் செய்யவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! 

.

8 comments:

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

யப்பா எவ்ளோ பெரிய பதிவு

Erode VIJAY said...

கடுகு சிறுத்திருந்தாலும் காரம் குறையவில்லை என்பதை உணருங்கள் ஷல்லூம்!

Erode VIJAY said...

வீரியமான, அவசியமான, அழகான பதிவு!
காமிக்ஸ் உலகின் நன்றிகள் உரித்தாகட்டும் ஆதி அவர்களே...!

ஆதி தாமிரா said...

என்னதிது? அவர்களே.. இவர்களேனு ஏதோ கட்சிக் காரன் ஓட்டுக்கேக்கிற மாதிரி இருக்கு.. ஹிஹி! நன்றி!

ஆதி தாமிரா said...

வரவுக்கு நன்றி ஷல்லூம்!

இதுபோல செய்திப்பகிர்வு, அறிவிப்புகள் இதெல்லாம் நீட்டி முழக்கினால் வாசிக்க ஒருத்தரும் இருக்கமாட்டார்கள். ஆஃப் டாபிக் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வாசகன் தலைதெறிக்க ஓடுகிறான் என்று பதிவுலக மூத்த நண்பர் ஒருவர் சொன்னது இன்னும் காதிலேயே கேட்டுக்கொண்டிருக்கிறது. ஹிஹி! எழுதுவதில் நான் ஒன்றும் அப்படி பர்பெக்ட் பரமசிவம் இல்லைதான் எனினும், எனக்குப் பிடித்த விஷயங்கள் எனில் ஈவு இரக்கம் பார்க்காமல் அடித்து நிமிர்த்திவிடுவேன். இப்போ ஒரு பின்னூட்டம் கூட போட நேரமில்லாமல் ஆணிபுடுங்கிக்கொண்டிருப்பதால் இந்தப்பதிவு குட்டியாகிவிட்டது. ஸாரி!

பின்னோக்கி said...

உங்களைப் போன்ற பெரிய வாசகர் வட்டம் இருக்கும் ஒருவர் காமிக்ஸ் பற்றி தன் பதிவுகளில் எழுதுவது, காமிக்ஸை பலரிடம் சென்றடைய வழி வகுக்கும். நன்றிகள். அப்படியே.. புத்தகம் வந்த உடன், உங்கள் மொழி நடையில் ஒரு கண்ணோட்டத்தையும் எழுதிடுங்கள்.

ஆதி தாமிரா said...

வாசகர் வட்டம்? அதுவும் பெருசு? யாருக்கு? எனக்குதான? அட போங்கங்க.. நக்கல் பண்ணிகிட்டு!! ஹிஹி!!

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் said...

//வாசகர் வட்டம்? அதுவும் பெருசு? யாருக்கு? எனக்குதான? அட போங்கங்க.. நக்கல் பண்ணிகிட்டு!! ஹிஹி!!//

ஏன் ஆதி நீங்களே அப்படி நினைக்கலாம் ... நம்ம வாசக வட்டம் பெரியதே ....

நல்ல பதிவு ... போட்டு தாங்குங்க :)